Tagged: சுயமரியாதை ஜாதி மறுப்பு மணவிழா

படிப்பகத்தில் சுயமரியாதை, ஜாதி மறுப்புத் திருமணம்

படிப்பகத்தில் சுயமரியாதை, ஜாதி மறுப்புத் திருமணம்

20.1.2017 காலை 10 மணிக்கு மேட்டூர் தந்தை பெரியார் படிப்பகத்தில் ஈரோடு மாவட்டம் சித்தோடு வட்டத்தைச் சேர்ந்த கழக ஆதரவாளர் தங்கவேலு-பங்கஜவள்ளி ஆகியோரின் மகன் த.அருண் பிரச்சன்னாவுக்கும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் சாலியந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்-உஷாராணி ஆகியோரது மகள் ஆ.சுபமங்களத் துக்கும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுயமரியாதைத் திருமணம் நடத்தி வைத்தார். திருமண விழாவில் கழகத் தோழர்களும், மணமக்களின் பெற்றோர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர். மணமக்கள் சார்பாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதியாக ரூ.3000/- கழகத் தலைவரிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 09022017 இதழ்

தலைமைக் கழகத்தில் நடந்த சாதி மறுப்பு மணவிழா

தலைமைக் கழகத்தில் நடந்த சாதி மறுப்பு மணவிழா

திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 15.12.13 அன்று காலை அமெரிக்காவில் ஆராய்ச்சிப் பட்டம் முடித்த தோழர் இராசசேகர குமார், ஆராய்ச்சியாளர் தோழியர் சிறீதேவி ஆகியோரின் சுயமரியாதை ஜாதி மறுப்பு மணவிழா சிறப்புடன் நடந்தது. இராசசேகர குமார், திருநெல்வேலியையும், சிறீதேவி கோவையையும் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்து பிரான்சிலும், அமெரிக்காவிலும் ஆராய்ச்சி மேற்படிப்பை மேற்கொண்டவர்கள். தமிழச்சி (பிரான்°) அவர்களின் பெரியாரின் பதிவுகளை இணையத்தில் படித்து பெரியாரை உள்வாங்கிக் கொண்ட இவர்கள், நான்கு ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலேயே இரு குடும்பத்தினரின் சம்மதமும் பெற்று இணையர்களாக வாழ்ந்து வருகின்றனர். இப்போது, பெரியாரின் சுயமரியாதை திருமண வழியில் திருமணத்தைப் பதிவு செய்ய விரும்பினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திருமணத்தை தலைமை அலுவலகத்தில் நடத்தி வைத்தார். நிகழ்வில் மணமக்கள் இருவரும் பெரியாரியல் கொள்கைக்கு எப்படி வந்தோம் என்பதை அனுபவங்களின் வழியாக விளக்கி உரையாற்றினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பெரி யார்...