Tagged: கண்டன பொதுக்கூட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை – மன்னார்குடியில் கண்டன பொதுக்கூட்டம்
“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை வாக்கு அரசியலுக்காக தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது” மன்னார்குடியில் மதிமுக மாநில பேச்சாளர் தஞ்சை விடுதலைவேந்தன் பேச்சு! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என அறிவித்துள்ள மத்திய அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் மன்னார்குடியில் திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார்தலைமையில் நடைபெற்றது. சிறப்புரையாற்றிய மதிமுக மாநில பேச்சாளர் தஞ்சை விடுதலைவேந்தன் பேசியபோது, ‘இதுவரை இந்தியாவை ஆட்சி செய்த எந்தஒரு மத்திய அரசும், ஒரு மாநிலத்திற்கெதிராக வெளிப்படையாக செயல்பட்டதில்லை ஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசு மட்டும் தான் காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க உத்திரவிட்டும், அத்தீர்ப்பினை மதிக்காமல் கர்நாடத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அங்கு பாஜக ஆட்சியை பிடிக்க...
பேராவூரணி கழக ஆர்ப்பாட்டத்தில் ‘எவிடென்ஸ்’ கதிர் பேச்சு
ஜாதி ஆணவ படுகொலை வழக்குகளில் குற்றவாளிகளைக் காப்பாற்றும் காவல்துறை ஜாதி மறுப்பு திருமணம் செய்த சங்கர் உடுமலைப்பேட்டையில் ஜாதிய வெறியர்களால் ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பேராவூரணி அண்ணா சிலை அருகில் திராவிடர் விடுதலைக் கழக தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில் மார்ச் 25ம் தேதி மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். அவர் தனது உரையில் – தமிழகத்தில் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் மீது அவர்களை ஒடுக்கு வதற்காக, அவர்களின் குரல்களை நசுக்கு வதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தை போராளிகள் மீது அரசு பாய்ச்சுகிறது. நியாயப்படி ஜாதியின் பெயரால் ஆணவ படு கொலை செய்பவர்களையும், கொலையை தூண்டுபவர்களையும் தான் அந்த சட்டத் தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். ஆணவ கொலையாளிகள் மீது குற்றவியல் நடைமுறை சட்டம் 174...