Tagged: இஸ்லாமியர்

‘இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க!’

‘இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க!’

9-9-2016 அன்று பிற்பகல் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், தமிழக மக்கள் ஜனயாகக் கட்சியின் ஒருங்கிணைப்பில், அக்கட்சியின் தலைவர் புதுக்கோட்டை ஷெரீப் தலைமையில், பத்து ஆண்டுகள் சிறைவாசம் முடித்த அனைத்து சிறைவாசிகளையும், மத பேதம் இன பேதம் பார்க்காமல் விடுதலை செய் என்ற ஒற்றைக் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவ்வார்ப்பாட்டத்தில் அனைத்துக் கட்சி, அமைப்புகள், ஜனநாயக சக்திகளும் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 13102016 இதழ்

சிறைவாசிகளை விடுதலை செய்வதில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டுவது ஏன்? கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேள்வி

  பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் நீண்டகால சிறைவாசிகளையும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட் டோரை அரசியல் அமைப்பு சட்டம் 161வது பிரிவை பயன்படுத்தி தமிழக அரசு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை, மதுரை, கோவை நகரங்களில் மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை பிப்ரவரி 7ஆம் தேதியன்று நடத்தியது. மதுரை பழங்காநத்தம் பகுதியில் பிப்ரவரி 7ம் தேதி மாலை 4 மணியளவில் மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஐதர்அலி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ம.ம.க. பொதுச் செயலாளர் அப்துல் சமது, மனித உரிமை அமைப்பு சார்பில் ஹென்றி டிபேன், புகழேந்தி, அருண்சோரி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தனது உரையில், “இந்த நாட்டை ஒரு ஜனநாயக...

வெள்ளத்தில் மூழ்கியது, மதவெறியும்தான்!

வெள்ளத்தில் மூழ்கியது, மதவெறியும்தான்!

மனிதர்களின் வாழ்வை சூறையாடி விட்டது வெள்ளம்; இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு; இயற்கையின் இந்த சீற்றம், பல்வேறு உண்மைகளை உணர்த்தி விட்டுச் சென்றிருக்கிறது. இயற்கையின் உலகிலிருந்து பல்வேறு பரிணாமங்கள் பெற்று படிப்படியான உருமாற்றங்களுக்குப் பிறகு உருவாகி யவன் மனிதன். ஆனால் இந்த இயற்கை யின் நியதி மதம், ஜாதி, ஏழை, பணக்காரன் என்ற பேதங்களை உருவாக்கவில்லை. மக்களைப் பிளவுபடுத்தும் இந்த அடை யாளங்களை உருவாக்கியது மனிதன் தான். இயற்கையின் சீற்றம் அனைத்து மத, ஜாதியினரையும் பாதிக்கச் செய்துவிட்டது. எனவே தான் கூறுகிறோம், இயற்கையின் நியதியில் மதம், ஜாதி, கடவுளுக்கு கிஞ்சித்தும் இடம் கிடையாது. நான் யார்? நான் எப்படி வந்தேன்? என்ற கேள்விகளுக்கு விடை தேடத் தொடங்கிய மனிதன், தனக்கு மேலாக ஒரு உலகம், ஒரு சக்தி இருப்பதாகவும், அந்த உலகத்தை அடைவதற்காகவே இந்த பூமியில் நாம் வாழ வேண்டும் என்றும் நம்பினான். இயற்கையின் புதிர்களுக்கு அவனுக்கு விடை கிடைக்கவில்லை. கால...