Tagged: அரசு பள்ளி

‘எவிடென்சு’ அமைப்பு வெளியிடும் அதிர்ச்சி உண்மைகள் தமிழகப் பள்ளிகளில் தீண்டாமைக் கொடுமைகள்

‘எவிடென்சு’ அமைப்பு வெளியிடும் அதிர்ச்சி உண்மைகள் தமிழகப் பள்ளிகளில் தீண்டாமைக் கொடுமைகள்

2ஆவது வகுப்பு படிக்கும் ஒரு தலித் சிறுவனை, மலம் எடுக்கச் சொன்ன விஜயலட்சுமி என்ற ஆசிரியை கைது செய்யப்பட்டிருக்கிறார். இது நாமக்கல் மாவட்டத்தில் இராமபுரம் நகராட்சிப் பள்ளியில் நடந்த சம்பவம். இது வெளியே தெரிய வந்த நிகழ்வு, அவ்வளவுதான். மதுரையில் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கூறையூர். இங்கே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 1970ஆம் ஆண்டிலிருந்து 40 ஆண்டுகளாக ஒரு தலித் மாணவர்கூட சேர்க்கப்பட்ட தில்லை. 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்தப் பள்ளி. ஒவ்வொரு ஆண்டும் எத்தனை மாணவர்கள் எந்தெந்த ஜாதிப் பிரிவுகளிலிருந்து சேர்க்கப்பட்டனர் என்ற தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற்றுள்ளது ‘எவிடென்சு அரசு சாரா நிறுவனம்’. குறிப்பாக இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தலித் மாணவர்களை தலித் அல்லாத ஆசிரியர்கள் தங்களுக்குத் தேவையான எடுபிடி வேலைகளுக்கும் துப்புரவுப் பணி களுக்கும் பயன்படுத்துவது நடைமுறையாகிவிட்டது. நெல்லை மாவட்டம் வேடம்குளம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில்...