Tagged: அணுவுலை

அணுஉலைகளுக்கான அமெரிக்க ஒப்பந்தத்தை மோடி கைவிட வேண்டும்

அணுஉலைகளுக்கான அமெரிக்க ஒப்பந்தத்தை மோடி கைவிட வேண்டும்

மேட்டூரில் கூடிய  கழகச் செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். ஆபத்துகளை உருவாக்கிடும் அணுஉலைகளைப் பயன்படுத்து வதை உலகநாடுகள் கைவிட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் மின் உற்பத்திக்கு என்று அணுஉலைகளைப் பயன் படுத்துவதில் நடுவண் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது மக்கள் விரோத செயல்பாடா கும்.  அண்மையில் அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி “வெஸ்டிங் ஹவுஸ்” என்ற தனியார் நிறுவனத்திடம் 6 அணு உலைகளை இந்தியாவில் நிறுவிடும் ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.  இந்த நிறு வனம் தரமற்ற ஆபத்தான எந்தி ரங்களை வழங்கிய குற்றச் சாட்டு களுக்குள்ளான நிறுவனம்ஆகும். அறிவியலில் வளர்ந்ததாகக் கூறப்படும் அமெரிக்காவே அணுஉலை ஆபத்துகளை கருத்தில் கொண்டு 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 40 ஆண்டுகளாக அணுமின் நிலையங்களைத் தொடங்க வில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கலிபோர்னியா மாகாணத்தில் செயல்பட்டு வந்த கடைசி அணுமின் நிலையமும் மூடப்படவிருக்கிறது. ஆனால் அதே...

இரண்டு மாதம் மூடப்பட்ட கூடங்குளம் அணுஉலைக்கு 5 இலட்சம் லிட்டர் டீசல் வாங்கியது ஏன்?

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் சுப. உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை. கூடங்குளத்தில் இன்னும் கூடுதல் அணுஉலைகள் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்திருக்கிற நிலையில், கூடங்குளம் அணுத்திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்பது, தடுப்பது என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் முடிவு செய்திருக்கிறது. இந்தப் பிரச்சினை தொடர்பான எங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும், அடுத்தக் கட்டத் திட்டங்களையும் இங்கே பதிவு செய்கிறோம். தரமற்ற உபகரணங்களாலும், உதிரிப் பாகங்களாலும் கட்டப்பட்டிருக்கும், மோசடிகள் நிறைந்த கூடங்குளம் அணுஉலை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடிப் போடப்பட்டிருந்தது. அந்தக் காலக்கட்டத்திலும் கூடங்குளம் அணுஉலை நிர்வாகத்தினர் ஐந்து இலட்சம் லிட்டர் டீசல் வாங்கியிருக்கிற தகவல் இப்போது வெளிவந்திருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக கூடங்குளத்தில் திடீரென மின்சார உற்பத்தி துவங்கியது இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பாது காப்பதற்கும், அவரது வருகையை நியாயப்படுத்துவதற்கும் தான். கூடங்குளம் அணுஉலை உண்மையிலேயே அற்புதமாக இயங்குகிறது என்றால், விளாடிமிர் புடினும்,...

மாபெரும் சிக்கலில் ஊழல்மிகு கூடங்குளம் அணுமின் நிலையம் – சுப. உதயகுமார்

மாபெரும் சிக்கலில் ஊழல்மிகு கூடங்குளம் அணுமின் நிலையம் – சுப. உதயகுமார்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகிலுள்ள நீராவி தயாரிப்பான் சரியாக வேலை செய்யவில்லை எனத் தெரிகிறது. இது ரஷ்யாவிலுள்ள மோசடி நிறுவனமான சியோ பொடால்°க் எனும் கம்பெனியிடமிருந்து வாங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் கொள்முதல் இயக்குனர் செர்கே ஷுட்டோவ் தரமற்ற எஃகினை வாங்கி உதரிப்பாகங்கள் தயாரித்த ஊழல் குற்றச்சாட்டுக்களால் 2012ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப் பட்டார். இந்திய மக்களிடம் உண்மையைச் சொல்லி நம்மை பாதுகாப்பதற்கு பதிலாக, வருடாந்திர பராமரிப்பு, எரிகோல்கள் மாற்றம் என்று என்னென்னவோ கதைகளை யார் யாரையெல்லாமோ வைத்து சொல்லிக் கொண்டிருக்கிறது அணுசக்தித் துறை. கூடங்குளம் அணுஉலை அக்டோபர் 22, 2013 அன்று மின்தொகுப்பில் இணைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. பின்னர் டிசம்பர் 31, 2014 அன்று வணிக ரீதியிலான மின்உற்பத்தி துவங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மே 31, 2015 வரையிலான 586 நாட்களில் அணுஉலை 226 நாட்கள் ஓடவில்லை. மொத்தம் 64 நாட்கள் அணுஉலை பராமரிப்புக்காக மூடப்பட்டது. டர்பைனில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காகவும், டர்பைனை...