அணுஉலைகளுக்கான அமெரிக்க ஒப்பந்தத்தை மோடி கைவிட வேண்டும்

மேட்டூரில் கூடிய  கழகச் செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

ஆபத்துகளை உருவாக்கிடும் அணுஉலைகளைப் பயன்படுத்து வதை உலகநாடுகள் கைவிட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் மின் உற்பத்திக்கு என்று அணுஉலைகளைப் பயன் படுத்துவதில் நடுவண் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது மக்கள் விரோத செயல்பாடா கும்.  அண்மையில் அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி “வெஸ்டிங் ஹவுஸ்” என்ற தனியார் நிறுவனத்திடம்

6 அணு உலைகளை இந்தியாவில் நிறுவிடும் ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.  இந்த நிறு வனம் தரமற்ற ஆபத்தான எந்தி ரங்களை வழங்கிய குற்றச் சாட்டு களுக்குள்ளான நிறுவனம்ஆகும்.

அறிவியலில் வளர்ந்ததாகக் கூறப்படும் அமெரிக்காவே அணுஉலை ஆபத்துகளை கருத்தில் கொண்டு 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 40 ஆண்டுகளாக அணுமின் நிலையங்களைத் தொடங்க வில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கலிபோர்னியா மாகாணத்தில் செயல்பட்டு வந்த கடைசி அணுமின் நிலையமும் மூடப்படவிருக்கிறது. ஆனால் அதே அமெரிக்காவில் பிரதமர் மோடி அணுமின் ஒப்பந்தங் களை செய்திருக்கிறார்.  மோடி யின் சொந்த மாநிலமான குஜராத்தில் அணுமின் நிலைய அமைக்கும் முயற்சியை மக்கள் எதிர்த்து அம் மாநிலத்திலிருந்து விரட்டி அடித்து விட்டார்கள்.  ஆனால் தமிழ்நாட்டில் கூடங் குளத்தில் முதல் அணுஉலையே இன்னும் வணிகரீதியாக மின் உற்பத்தியை செய்ய இயலாத நிலையில் இரண்டாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிகள் நடக்கின்றன. இந்த நிலையில் 3 மற்றும் 4வது அணு உலைகளை நிறுவுவதற்கும் ஆணைகள் பிறப்பிக்கப்பட் டுள்ளன. குஜராத் மக்கள் ஏற்காத ஆபத்தான அணுமின் திட்டங்களை தமிழ்நாட்டு மக்கள் மீது மக்களின் கடுமையான தொடர் எதிர்ப்பையும் மீறி திணிக்கப்படுகின்றன.

அணுசக்தி தொடர்பான திட்டங்களை மக்கள்மீது திணிக் கும் ஆபத்தான கொள்கையை நடுவண் ஆட்சி கைவிட வேண்டும் என்றும், மாநில அரசும் தமிழகத்தை ஓர் அணு உலைப் பூங்காவாக மாற்றும் இதுபோன்ற நடவடிக்கைகளை யாவது தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கழகம் வலியுறுத்துகிறது.

பெரியார் முழக்கம் 30062016 இதழ்

You may also like...