வேண்டுகோள்

 

தோழர் சாமி வேதாசலம் அவர்கள் எழுதிய “”அறிவுக்கொத்து” என்னும் நூலை சென்னை சர்வகலாசாலை இண்டர்மிடியேட் வகுப்பு மாணவர்களுக்குப் பாட புத்தகமாக வைத்திருப்பது கண்டு பார்ப்பனர்கள் அற்பத்தன கிளர்ச்சிகளும், விஷமப் பிரசாரங்களும் செய்து கொண்டு வருகிறார்கள். அதற்குக் காரணம் அந்நூலில் “”தமிழ்நாட்டவரும், மேல் நாட்டவரும்” என்ற கட்டுரையில் பார்ப்பனர்களுடைய குற்றங் குறைகளைப் பற்றிக் கூறியிருப்பதாகும். ஆனால் அக்கட்டுரையில் பெரும்பான்மையான ஏழை மக்களின் வறுமையையும், அறியாமையையும் நீங்குவதற்கு வேண்டியன செய்யாமல் வாளாவிருப்பது கண்டு, கண்டித்து எழுதப்பட்டிருக்கிறது.

ஆதலால் ஒவ்வொரு ஊரிலுள்ள சுயமரியாதைச் சங்கங்களும் பார்ப்பனரல்லாத சங்கங்களும் பார்ப்பனர்களுடைய விஷமப் பிரசாரத்தைக் கண்டித்து சர்க்காருக்குத் தீர்மானங்கள் அனுப்பும்படி வேண்டுகிறோம்.

குடி அரசு  வேண்டுகோள்  11.08.1935

You may also like...