கொச்சி திவானின் சமதர்மத் தீர்ப்பு
கொச்சி சமஸ்தானம் திருச்சூரில் ஒரு குளம் சம்பந்தமாக மேல் ஜாதிக்காரர் என்பவர்களுக்கும், கீழ் ஜாதிக்காரர் என்பவர்களுக்கும் ஏற்பட்ட பிரவேசத் தகராரில், திவான் சர். கீ.ஓ. ஷண்முகம் அவர்கள், அக்குளம் சர்க்கார் பராமரிப்பில் இருப்பதால் மகாராஜாவின் பிரஜைகள் எல்லோருக்கும் அதை உபயோகித்துக் கொள்ள சரிசமமான உரிமை உண்டு என்று தீர்ப்புக் கூறிவிட்டார்.
இது சம்பந்தமாக மேல் ஜாதிக்காரர்கள் இது “”வழக்கத்துக்கு விரோதமாயிருக்கிறது” என்று எவ்வளவோ கிளர்ச்சி செய்தும் தூதுகள் நடந்தும் ஒன்றும் பயன்படவில்லை.
திவான் அவர்கள், தூதுக் கோஷ்டிக்குச் சமாதானம் சொல்லுகையில், “”வழக்கத்தையே பிரதானமாக வைத்துப் பார்த்தால், நான்கூட இங்கு திவானாய் இருக்கக் கூடாது என்று தான் ஏற்படும்” என்று சொன்னாராம். பிறகு, இப்போது அதைப் பற்றி எவ்வித பிரஸ்தாபமும் இல்லாமல் அக் குளத்தில் எல்லோரும் சமமாய்ப் புழங்குகிறார்கள்.
குடி அரசு செய்தித் துணுக்கு 23.06.1935