ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்கள்

 

இம்மாதம் (ஏப்ரல்) 30ந் தேதி தமிழ் நாடெங்கும் முனிசிபல் தேர்தல்கள் நடக்கப் போகின்றன. அதில் காங்கரஸ்காரர்கள் போட்டி போட முனைந்து அபேட்சகர்களை நிறுத்தி இருக்கிறார்கள். இன்று முதல் 15 நாள்களுக்கும் தமிழ்நாட்டின் முக்கிய பட்டணங்கள் எல்லாம் கலவரமாகவும், குழப்பமாகவுமே இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. இது ஒருபுறம் இருக்க தேர்தல் பலாபலன்களைப் பற்றியும் நமக்கு கவலையில்லை.

ஆனால் காங்கரஸ்காரர்களுக்கு முனிசிபாலிட்டிகளில் வேலை செய்ய ஒருவித திட்டமும் இல்லை என்பது யாவரும் அறிந்ததேயாகும். பின் ஏன் காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டி தேர்தல்களில் பிரவேசிக்கிறார்கள் என்பதற்கு அவர்கள் சொல்லும் சமாதானம் என்னவென்றால்,

  1. முனிசிபாலிட்டிகளில் லஞ்சம் தாண்டவமாடுகிறதாம்.
  2. முனிசிபாலிட்டிகளில் கண்டிராக்டர்கள் ராஜ்யம் நடக்கின்றதாம்.
  3. முனிசிபாலிட்டிகளில் வகுப்புவாதம் தாண்டவமாடுகின்றதாம்.
  4. முனிசிபாலிட்டிகளில் பணக்காரர்கள் ஆட்சி நடக்கிறதாம்.
  5. முனிசிபாலிட்டிகளை காங்கரஸ்காரர் அல்லாதார் கைப்பற்றி விடுவதால் சுயராஜ்யம் கிடைப்பது தாமதப்பட்டு விடுகிறதாம்.

ஆகிய இந்த ஐந்து காரணங்களுக்காக காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டியை காங்கரஸ் கைப்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இன்று தமிழ் நாட்டில் எந்த முனிசிபாலிட்டியிலாவது கண்டிராக்ட் ராஜ்யம் நடக்கின்றது என்றால் அது காங்கரஸ் கைப்பற்றிய முனிசிபாலிட்டியாகிய சென்னை கார்ப்பரேஷனிலும், சேலம் முனிசிபாலிட்டியிலும் மற்றும் சில காங்கரஸ் ஆதிக்கத்தில் உள்ள இடங்களிலும்தான் நடைபெற்று வருகிறது என்று சந்தேகமறக் கூறலாம்.

~subhead

லஞ்சத்துக்கு காரணம்

~shend

இந்த மாதிரியாக கார்ப்பரேஷனில் லஞ்சம் தாண்டவமாடக் காரணம் என்னவென்போமானால் கார்ப்பரேஷன் கவுன்சில் ஸ்தானத்துக்கு காங்கரஸ்காரர்கள் ஆட்களை பொறுக்கும்போது மனதார தெரிந்தே ஜீவனத்துக்கு பொதுவாழ்வைத் தவிர வேறு வழியில்லாத, மார்க்க மில்லாதவர்களைப் பொறுக்கினார்கள். அப்படி பொறுக்கி எடுத்தவர்களுக்கு சட்டசபையில் செய்தது போல் வெற்றிபெற்ற பின்பு அவர்களுக்கு ஏதாவது மாதச் சம்பளம் போட்டு முனிசிபாலிட்டி பணத்தையாவது மாதாமாதம் கொடுத்து வந்திருந்தால் அந்த கவுன்சிலர்களுக்கு லஞ்சத்தினால் பிழைக்க வேண்டியதான அவசியம் வந்திருக்காது. அப்படிக்கில்லாமல் ஜெயிலுக்குப் போனவர் என்றும், கூட்டத்தில் பாடக்கூடியவர் என்றும், பிரசாரம் செய்யத் தகுந்தவர் என்றும், மேடைகளில் பேசத் தகுந்தவர் என்றும், காலித்தனத்தில் கெட்டிக்காரர் என்றும், மற்றவர்களை வைவதில் வீரர் என்றும் இப்படியாகப் பல காரணங்களைக் கருதியும் சில தொண்டர்களின் காலித்தனத்துக்குப் பயந்தும், கண்டபடி அபேக்ஷகர்களைப் பொறுக்கி எடுத்ததால் அவர்கள் கண்டிப்பாய் லஞ்சம் வாங்கி லஞ்சத்தால் பிழைத்து லஞ்சத்துக்கு தக்கபடி நிர்வாகத்தில் அபிப்பிராயம் கொடுத்துத் தீர வேண்டிய அவசியத்திற் குள்ளாய்விட்டார்கள். கார்ப்பரேஷனில் லஞ்சம் தாண்டவமாடினதற்கும், தாண்டவமாடுவதற்கும் காங்கரஸ்காரர்கள் இந்த உண்மையான காரணத்தை ஒப்புக் கொள்ளாமல் “ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து ஆட்களை காங்கரசில் சேர்த்து காங்கரஸ் அபேட்சகர்களாக அவர்களை நிறுத்தியதால் காங்கரஸ் கவுன்சிலர்கள் லஞ்சம் வாங்கினார்கள்” என்று காங்கரஸ் பத்திரிகையான “தினமணி” காரணம் எழுதி லஞ்சத்தை ஒப்புக்கொண்டு இருக்கிறது. அப்படி இருந்தும் இன்றும் கூடத்தான் காங்கரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தவர்களை பொறுக்கி இருக்கிறார்கள். லஞ்சம் வாங்குவது கட்சியைப் பொறுத்ததா, ஆளைப் பொறுத்ததா என்பதை ஓட்டர்கள் கவனித்துப் பார்க்க வேண்டும். கட்சியைப் பொறுத்ததென்றால் காங்கரசுக்கு வந்தும் ஏன் ஒருவன் லஞ்சம் வாங்க வேண்டும்? ஆளைப் பொறுத்ததென்றால் கட்சியைப் பற்றி ஏன் பேசவேண்டும்? அப்படியானாலும் “காங்கரசுக்கு கால் ரூபாய் கொடுத்துவிட்டால் எப்படிப்பட்ட அயோக்கியனும் யோக்கியனாய் விடுவான்” என்று கனம் சி.ஆர். ஆச்சாரியார் சொன்னது என்ன ஆயிற்று?

~subhead

லஞ்சத்தை ஆதரிப்போருண்டா?

~shend

நிற்க, முனிசிபாலிட்டிகளில் ஜில்லா போர்டுகளில் லஞ்சம் கூடாது என்பது நாட்டில் எல்லாக் கட்சியாருடையவும், எல்லாத் தனிப்பட்ட மனிதருடையவும் அபிப்பிராயமேயாகும். எந்த கட்சியிலும் லஞ்சம் வாங்குவது ஒரு திட்டமாக இல்லை. ஆனால் இதுவரை காங்கரஸ் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சி கவுன்சில் மெம்பர்களும் லஞ்சம் வாங்கியதாக எதிரிகளால் கூடச் சொல்லப்படவில்லை. இப்படி இருக்க காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டிகளில் லஞ்சத்தை ஒழிப்பதற்கு ஆக போகிறோம் என்று சொல்லுவதில் ஏதாவது நாணையமிருக்க முடியுமா என்று கேட்கிறோம்.

ஒவ்வொரு ஊர்களிலும் காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டிக்கு நிறுத்தி இருக்கும் ஆட்களின் ஜாப்தாவைப் பார்த்தால் அந்த ஆட்களில் பலர் லஞ்சம் வாங்காமல் அவர்கள் எப்படி ஜீவனம் செய்ய முடியும் என்று யோசித்தால் காங்கரசால் லஞ்சம் நிறுத்தப்பட்டுவிடுமா என்பது விளங்கிவிடும்.

~subhead

லஞ்சம் ஒழிய வேண்டுமானால்

~shend

மற்றும் மனைவி இருக்கிற காங்கரஸ் கவுன்சிலர்களே சிலர் சென்னை கார்ப்பரேஷனில் பெண் சிப்பந்திகளிடம் ஒழுக்க குறைவாக நடக்க ஆரம்பித்தார்கள் என்று சொல்லப்படுமானால் மனைவி யில்லாத கவுன்சில் மெம்பர்கள் நாணையமாக நடந்து கொள்வார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் சொல்ல முடியும்? பெரிய மனிதர்களாகவும், சமுதாயத்தில் மரியாதையும் கண்ணியமும் விரும்பி மதிக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்க்க வேண்டியவர்களுமான கனவான்கள் என்கின்றவர்களை விட சமுதாயத்தில் எவ்வித மரியாதையும் பொறுப்பும் இல்லாத சாதாரண மனிதர்கள் மெம்பர்களாவார்களானால் அவர்கள் எந்த விதத்தில் யோக்கியர்களாகவும், நாணையமுள்ளவர்களாகவும் கனவான்கள் போலவும் நடந்து கொள்ள முடியும் என்று கேட்கிறோம். ஆகவே காங்கரசானது உண்மையில் முனிசிபாலிட்டியில் லஞ்சத்தையும், ஒழுக்க ஈனத்தையும் ஒழிக்க வேண்டுமென்று கருதுமாகில் அது முதலில் காங்கரசில் அப்படிப்பட்ட ஆட்கள் இல்லாமலும் நிறுத்தும் ஆட்களில் அம்மாதிரியான ஆட்களாவதற்கு இடமில்லாதவர்களாகவும் பார்த்து நியமித்து இருக்க வேண்டும்.

இதுவரை பல இடங்களிலிருந்தும் நமக்கு வந்திருக்கும் காங்கரஸ் அபேட்சகர் லிஸ்டுகளிலிருந்து பார்ப்போமானால் காங்கரசின் பேரால் போடப்பட்டிருக்கும் நபர்களில் பலர் தாங்கள் நாணையக் குறைவாகவும் ஒழுக்க ஈனமாகவும் நடந்து கொள்ளுவதுடன் மற்ற யோக்கியமான ஆட்கள் யாராவது இருந்தால் அவர்களையும் கெடுத்துவிடக் கூடியவர்கள் என்றே காணப்படுகின்றனர். ஆதலால் காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டி களுக்கு லஞ்சத்தை ஒழிப்பதற்காக போகிறோம் என்பது சுத்த ஹம்பக் என்பதோடு பலர் லஞ்சம் வாங்கிப் பிழைப்பதற்காகவே இப்படிச் சொல்லி கொண்டு போகிறார்கள் என்று கூற வேண்டியிருக்கிறது.

~subhead

கண்டிராக்ட் ராஜ்யம் எது?

~shend

இனி கண்டிராக்ட் ராஜ்யத்தை ஒழிக்கும் யோக்கியத்தைப்பற்றி சிறிது யோசிப்போம். காங்கரஸ் ஆதிக்கத்தில் உள்ள எந்த ஸ்தாபனத்தில் இன்று கண்டிராக்ட் ராஜ்யம் இல்லை என்று சொல்ல முடியும்? சென்னை கார்ப்பரேஷன் மேயராய் இருந்த தோழர் சாமி வெங்கிடாசலம் செட்டியார் அவர்களுக்கு கார்ப்பரேஷனில் கண்ட்றாக்ட் சம்மந்தமிருந்தது என்பது ரிக்கார்டுகள் மூலமாய் ருசு செய்யப்பட்டு அது அவருக்காகக் கொடுக்கப்பட்ட இரசீது மூலமாய் ருஜúவாகி அந்த இரசீதுகளும் பிரசுரிக்கப்பட்டு செட்டியார் சென்றவிடமெல்லாம் இதைப்பற்றி கேள்வி கேட்கப்பட்டு செட்டியார் அவர்களும் பதில் சொல்ல முடியாமல் ஒவ்வொரு கூட்டங்களிலிருந்தும் பின்புறமாய் ஓடினதோடு அன்று முதல் இன்று வரை அவர் பாவம் எந்தப் பொதுக் கூட்டங்களிலும் தலை காட்டக்கூட பயப்படும்படியான நிலைமை ஏற்பட்டு இருக்கிறதை யாரும் எந்த காங்கரஸ்வாதியும் மறுக்க முடியாது.

~subhead

சென்னைக் கதை

~shend

மற்றும் சென்னை கார்ப்பரேஷனில் அரிசி கண்றாக்டில் ஒரு சாயபு கவுன்சிலர் கலந்திருந்ததாயும் புத்தகக் கண்டிறாக்ட்டில் ஒரு பார்ப்பன கவுன்சிலர் அதுவும் சட்டசபை மெம்பர் கவுன்சிலர் சம்மந்தம் வைத்திருந்ததாயும், ஸ்டேஷனரி சாமான்களிலும், மாட்டுக்கு தீவனம் முதலியவைகளிலும் வேறு பல காரியங்களிலும் ஜாதிக்கொருவர் என்று சொல்லத்தக்க வண்ணம் கார்ப்பரேஷன் கவுன்சிலர்களுக்கு சம்மந்தமிருப்பதும் அவர்களுக்குள்ளாகவே ஒருவருக்கொருவர் சொல்லிக் காட்டிக் கொள்ளுவதும் காங்கரஸ் பத்திரிகைகளான “தமிழ்மணி” “நம் நாடு” “வினோதினி” முதலாகிய பத்திரிகைகளில் அவ்வப்போது வெளிப்படையாயும், சூசனையாகவும் வருவதை யார்தான் இல்லை என்று மறுக்க முடியும்? இவைகள் எல்லாம், காங்கரஸ் கமிட்டியார் லஞ்சம் வாங்கின கவுன்சிலர்களை விசாரித்தபோது பல வழிகளில் வெளியாகவில்லையா?

~subhead

போர்டு பிரசிடெண்டுகள் ஒழுக்கம்

~shend

காங்கரஸ் ஜில்லா போர்டு பிரசிடெண்டுகளில் கண்டிராக்ட் ராஜ்யமில்லாமல் யார் ஒழுங்காய் நடந்து கொண்டார்கள் என்று எந்த காங்கரஸ்வாதியாவது சொல்ல முடியுமா என்று கேட்கிறோம். போர்டிலுள்ள காங்கரஸ் மெம்பர்களுக்கு கண்ட்றாக்ட் கொடுக்கவில்லை என்றுதானே திருநெல்வேலி, திருவண்ணாமலை போர்ட் பிரசிடெண்டுகள் மீது காங்கரஸ்காரர்கள் நம்பிக்கைஇல்லாத் தீர்மானம் கொண்டு வந்தது? மெம்பர்களும், மேயர்களும், பிரசிடெண்டுகளும் நடந்து கொள்ளும் யோக்கியதைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். காங்கரஸ் மந்திரிகளின் யோக்கியதை என்ன என்று சவால் விடுகிறோம்.

~subhead

மந்திரிகள் யோக்கியதை என்ன?

~shend

காங்கரஸ் மந்திரிகளுக்கு சர்க்கார் பணத்தில் மோட்டார்கார் வாங்கினார்களே அதில் அவர்கள் நடந்து கொண்ட யோக்கியதை என்ன என்று பார்ப்போம். முதலாவது கார்களுக்காக டெண்டர் கேட்கவில்லை என்பதோடு அவை மந்திரிகளுக்கு வேண்டியவர்கள் என்பவர்களான பார்ப்பனர்களிடமே வாங்கப்பட்டிருக்கின்றன. இதைப்பற்றி சட்டசபையில் கேள்வி வந்தபோது ஒரு மந்திரியார் அன்று வரை அதாவது அந்த கேள்வி கேட்கப்படும் வரை அந்த மோட்டார்கார் சப்ளை செய்த கம்பெனியார் யார் என்று எனக்குத் தெரியாது என்று பதில் சொன்னாராம். இது உண்மையாக இருக்க முடியுமா என்று கேட்கிறோம். ஒரு சமயம் கார் வாங்கும்போது அந்த கம்பெனியார் யார் என்று தெரியாமல் இருந்தாலும் இருக்க நியாயமுண்டு. கார் வாங்கிய பிறகு 6 மாத காலமாய் அதைப் பற்றி பத்திரிகைகளில் புகார்களும், மந்திரிகளின் மீது குறைகளும் பறந்து கொண்டிருந்த காலத்தில்கூட அந்த மந்திரியாருக்கு அவை எந்தக் கம்பெனியில் வாங்கியது என்று அதுவரையில் தெரியாமல் இருந்தது என்றால் அவரும் அது வரையில் அதைப்பற்றிய விஷயம் தமக்கு எட்டமுடியாமல்படி அவ்வளவு தூரம் காதை அடைத்துக் கொண்டிருந்தார் என்றால் இதை உலகத்தில் எட்டாவது அதிசயமெனத்தானே சொல்ல வேண்டி இருக்கிறது?

~subhead

சேலம் நாற்றம்

~shend

அதுதான் போகட்டும். சேலம் வாட்டர்வர்க்ஸ் குழாய் வேலை கண்டிராக்டில், மந்திரி சபையும், கண்டிராக்ட் ராஜ்யம் ஆய்விட்டதற்கு காங்கரஸ்காரர்கள் இதுவரை என்ன பதில் சொன்னார்கள் சொல்லுகிறார்கள் என்று கேட்கிறோம்.

இது கூட மந்திரிகளுக்கு தெரியாமல் போன கம்பெனியா அல்லது தங்களுக்கு அக்கரை இல்லாமல் முடிவு செய்யப்பட வேண்டிய விஷயமாய் இருந்ததா என்று கேட்கிறோம்.

“பார்ப்பானுக்கு பைத்தியம் பிடித்தால் வெளியில் கிடக்கும் சாமான்களைத்தான் வீட்டுக்குள் எடுத்து எறியும்படி செய்யுமே தவிர வீட்டுக்குள் இருக்கும் சாமானை வெளியில் எறியச் செய்யாது” என்று ஒரு பழமொழி உண்டு.

அதுபோல் நமது பார்ப்பன மந்திரிகள் தெரியாமலும் லட்சியம் இல்லாமலும் கவனிக்காமலும் எந்த காரியம் தூக்க வெறியில் செய்தாலும் அவையெல்லாம் பார்ப்பனர்களுக்குத்தான் அனுகூலமாகவும் பார்ப்பனர்களைத் தேடிப் போகக் கூடியதாகவும்தான் இருக்குமே தவிர அவை ஒன்றுகூட பொதுவாகவோ, பார்ப்பனரல்லாதார் ஒருவருக்காவது பயன்படக் கூடியதாகவோ இருப்பதில்லை.

ஆகவே இப்படிப்பட்ட மந்திரிகளையும், மேயர்களையும், பிரசிடெண்டுகளையும், காங்கரஸ் மெம்பர்களையும் கொண்ட காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டியில் கண்டிராக்ட் ராஜ்ஜியத்தை ஒழிக்கிறோம் என்பது ” எனக்கு பயித்தியம் தெளிந்துபோய்விட்டது. உலக்கை எடுத்துக்கொடு அதை கோவணமாய் கட்டிக்கொண்டு வெளியில் வருகிறேன்” என்று அடைப்பட்டுக் கிடக்கும் ஒரு பயித்தியக்காரன் கேட்பது போல் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. அடுத்தாப்போல் முனிசிபாலிட்டியில் பணக்காரர்கள் வராமல் தடுக்க வேண்டும் எனப்படுவதைப் பற்றி யோசிப்போம்.

~subhead

பணக்காரனை எப்படித் தடுப்பது?

~shend

எந்த ஸ்தாபனத்திலாவது பணக்காரர்கள் வராமல் தடுக்க யாராலாவது முடியுமா என்று கேட்கின்றோம். அன்றியும் பணக்காரன் ஏன் தடுக்கப்பட வேண்டும்? பணக்காரன் ஏற்கனவே சம்பாதித்துக் கொண்டதால் இனி பாப்பர்கள் முனிசிபாலிட்டிக்கு சென்று சம்பாதிக்கட்டும் என்கிற ஒரு மாறுதலுக்கு ஆகவா? என்று கேட்கிறோம். காங்கரசால் நிறுத்தப்பட்டவர்களுக்குள் பணக்காரர்கள் இல்லையா? அல்லது சுயேச்சையாய் நின்று இருக்கிறவர்களுக்குள் பணக்காரர்கள் அல்லாதவர்கள் இல்லையா? என்று கேட்கிறோம்.

அப்படிக்கிருக்க சில பணக்காரர்களிடம் மாத்திரம் இந்த காங்கரஸ் பரிசுத்தவான்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வருவானேன் என்று யோசித்துப் பார்த்தால் காங்கரஸ்காரர்கள் சில பணக்காரர்களை வேண்டாம் என்பதற்கு காரணம் விளங்காமல் போகாது.

சர்க்காரோ காங்கிரஸ்காரர்களோ நாட்டின் சகல தொழிலையும், வர்த்தகத்தையும் ஏற்றுக்கொண்டால் மாத்திரம் முனிசிபாலிட்டியிலிருந்து பணக்காரர்களை விலக்க முடியுமே ஒழிய மற்றபடி இதில் காங்கரஸ்காரர்கள் பணக்காரர்களைப் பற்றிப் பேசுவது, கடைந்தெடுத்த காலித்தனமும் அயோக்கியத்தனமுமேயாகும். ஏனெனில் தாங்கள் செய்ய முடியாததைப் பேசுகிறார்கள் என்பதோடு இப்படிப் பேசும் காங்கரஸ்காரர்களிலேயே பலர் ஒவ்வொருவர் ஒவ்வொரு பணக்காரர் வீட்டு எச்சில் தொட்டிகளை காத்துக் கொண்டிருக்கிறவர்கள் என்றும் ஒவ்வொருவர் ஒவ்வொரு பணக்காரரால் உதைத்து விரட்டி அடிக்கப்பட்டவர்கள் என்றும் அறியக் கிடப்பதாலேயே சொல்லுகிறோம். உதாரணமாக தஞ்சாவூர் காங்கரஸ் பாப்பர் பக்தர்கள் தோழர் நாடிமுத்து பிள்ளையிடம் ஏழாயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டுதான் தோழர் சாமியப்ப முதலியாரின் “பணக்கார ராஜ்யத்தை” ஒழித்தார்கள். இப்படியே தான் இருக்கும் மற்றும் தமிழ் நாட்டில் “பணக்காரர்கள் ராஜ்யம்” ஒழிக்கப்பட்ட யோக்கியதை. ஆகவே இந்த சாக்கும் அருத்தமும், பொருத்தமும், நாணையமும் மற்றதென்றே சொல்லுவோம். பிறகு முனிசிபாலிட்டிகளில் வகுப்பு வாதம் ஒழிப்பது என்பது பற்றி யோசிப்போம்.

~subhead

வகுப்புவாதம் எங்கு இல்லை?

~shend

இன்று இந்தியாவில் எங்கு வகுப்பு வாதம் இல்லை என்று சொல்ல முடியும்? காங்கரஸ் சட்டசபைகள் பூராவும் வகுப்புவாத சபைகளாகவே இருக்கின்றன.

காங்கரஸ் “வெற்றி” பெற்ற பிறகே நாட்டில் வகுப்பு வாதம் நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாய் வளர்ந்து வருகிறது. வகுப்பு வாதம் இல்லாவிட்டால் சென்னை அசம்பளியில் தோழர் கனம் முனிசாமிபிள்ளையைக் காட்டி முக்கால் கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் கண்களிலும் தோழர் யாகூப் ஹாசன் சேட்டைக்காட்டி ஒரு கோடி முஸ்லிம்கள் கண்களிலும் தோழர் ராமநாதனைக் காட்டி இரண்டுகோடி தமிழ் மக்கள் கண்களிலும் இந்தப் பார்ப்பனர்கள் மண்ணைப் போட்டிருக்க முடியுமா? என்று கேட்கிறோம். வகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு இவர்கள்தான் பிரதிநிதிகளாக இருந்திருக்க முடியுமா என்று கேட்கிறோம்.

வகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் சென்னை இரண்டு சட்ட சபைக்கும் பார்ப்பனர்களே தலைவராக ஆகி இருக்க முடியுமா என்று கேட்கிறோம்.

வகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் தமிழ்நாட்டில் பிரதம மந்திரியும், பிரதம காரியதரிசியாரும் பார்ப்பனர்களாய் வந்திருக்க முடியுமா என்று கேட்கிறோம்.

வகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் இந்தியாவில் காங்கரஸ் காரர்கள் கைப்பற்றிய ஆறு மாகாணங்களிலும் பிரதம மந்திரிகள் ஆறு பேரும் பார்ப்பனர்களாகவே வந்திருக்க முடியுமா என்று கேட்கிறோம்.

வகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் தமிழ்நாட்டில் பெரிய பட்டங்கள் விட்ட பார்ப்பனரல்லாதார் அனுபவம் பெற்றவர்களும் 10, 20 வருஷம் பொது வாழ்வில் உழைத்து மதிப்பு பெற்றவர்களுமிருக்கும்போது காங்கரஸ் துரோகிகளுக்கு மந்திரி வேலை கிடைத்து இருக்குமா? என்று கேட்கின்றோம்.

வகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் தமிழ்நாட்டில் மந்திரிகளான 5 தமிழ் மெம்பர்களில் 4 பேர்கள் காங்கரஸ் துரோகிகளாகவும் வகுப்புவாதிகளாகவும் இருந்தவர்களே மந்திரிகளாக வந்திருக்க முடியுமா?

கடைசியாக ஒன்று குறிப்பிடுகிறோம். காங்கரசில் வகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் காங்கரசுக்காக எவ்வளவோ உழைத்தவரும் எவ்வளவோ தியாகம் செய்தவரும் கல்வி விஷயத்தில் சென்னை மாகாணத்தில் நிபுணரும், கல்வி இலாக்கா தலைவராய் இருந்து அனுபவம் பெற்றவருமான தோழர் சி.ஆர். ரெட்டியார் இருக்க கல்வி இலாக்கா (யூனிவர்சிட்டி) தொகுதிக்கு சி.ஆர். ஆச்சாரியார் நிறுத்தப்பட்டு மந்திரி பதவியும் பெற்றிருக்க முடியுமா என்று கேட்கிறோம்.

~subhead

ஸ்தல ஸ்தாபனங்களில் வகுப்புவாதம்

~shend

இப்படியே காங்கரசின் வகுப்புவாதத்துக்கு இனியும் ஆயிரக்கணக்கான ஆதாரங்கள் எடுத்துக் காட்டலாம்.

ஸ்தல ஸ்தாபனங்களில் வகுப்புவாதம் இல்லையா என்பதற்கு கார்ப்பரேஷன் கல்வி அதிகாரி கட்சியாக, கார்ப்பரேஷன் காங்கரஸ் மீட்டிங்கில் 3 தடவை தெரிந்தெடுக்கப்பட்டவரும் கார்ப்பரேஷன் பொது மீட்டிங்கில் தெரிந்தெடுக்கப்பட்டவருமான தோழர் சிவசைலம் பிள்ளைக்கு பதவி கொடுக்காமல் ஒழுக்கத்துக்கும் நாணையத்துக்கும் விரோதமாக ஒரு பார்ப்பனருக்கு அந்த பதவி கிடைத்திருக்குமா என்பதும் கார்ப்பரேஷன் தலைமை உபாத்தியாயர் வேலைகள் காலியாவதெல்லாம் பார்ப்பனருக்கே போய்க் கொண்டிருக்குமா என்பதுவுமே போதுமான ஆதாரமாகும்.

இவ்வளவு சமாதானமும் போறாது என்று வைத்துக்கொண்டாலும் ஒவ்வொரு ஊரிலும் அட்ஹாக் கமிட்டியார் அபேக்ஷகர்களை தெரிந்தெடுக்கும் போது பார்ப்பனர்களை மாத்திரம் அவர்களது எண்ணிக்கைக்கு மேல் 100க்கு 200 – வீதம் 300- வீதம் சில இடங்களில் 500 வீதம் அதிகமாக தெரிந்தெடுக்கப்படுவதின் காரணம் என்னவென்று கேட்கின்றோம். இனியும் காங்கரஸ்காரர்கள் பதவிபெற்றால் தங்களுக்குள் வகுப்பு வாதம் கிடையாதென்றும் ஆனால் பார்ப்பனர் என்கின்ற ஒரு வகுப்பார்தான் யெல்லாவற்றிற்கும் தகுதி உள்ளவர்கள் என்று சொல்லிக்கொண்டு சர்வம் பார்ப்பனமயமாய் ஆக்கிவிடுவார்களா இல்லையா என்று கேட்கின்றோம்.

~subhead

சுயராஜ்யம் எது

~shend

இனிக் கடைசியாக காங்கரஸ் எதிரிகள் ஸ்தல ஸ்தாபனங்களை கைப்பற்ற விட்டு விட்டால் சுயராஜ்யம் தடைபட்டு போகும் என்பதைப் பற்றி யோசிப்போம்.

சுயராஜ்யம் என்பதற்கும் முனிசிபாலிட்டிக்கும் என்ன சம்மந்தமிருக்கிறது என்பது முதலில் கவனிக்கப்படத் தக்கதாகும்.

சட்டசபை என்பது ஒரு நாட்டில் ஆட்சி நடக்க சட்டம் செய்யும் ஸ்தாபனமாகும். ஆதலால் அங்கு சட்ட வல்லவர்கள் சென்று சுயராஜ்யத்துக்கு சட்டம் செய்யலாம். அதுவும் அதற்கென்று ஏற்கெனவே ஏற்பட்டுள்ள சட்டத்திற்கு அடங்கி சட்டம் செய்யவேண்டும். ஆனால் முனிசிபாலிட்டிகளோ அப்படி அல்ல. அவை ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டப்படி நடப்பதற்கு ஆக ஏற்பட்ட ஸ்தாபனங்களாகும். அங்கு சுயராஜ்ய சம்மந்தமாகவோ, வேறு எந்த விதமாகவோ ஒரு சட்டமும் செய்ய முடியாது. செய்தாலும் செல்லாது.

~subhead

முனிசிப்பாலிட்டி வேலை

~shend

முனிசிபாலிட்டியில் செய்யக் கூடியதெல்லாம் சர்க்கார் கட்டளைப்படி வரிவிதித்து சர்க்கார் மிரட்டலுக்கு பயந்து வரி வசூலித்து ஊருக்குள் உள்ள ரோடுகளை பராமரிக்கவும், தெருக்கள் கக்கூசுகள் சுத்தம் செய்யவும், சுகாதாரம், கல்வி ஆகியவைகளை நிர்வகிக்கவுமே ஏற்பட்ட ஸ்தாபனங்களாகும். அதற்கும்கூட முனிசிபாலிட்டிகளுக்கு ஜவாப்தாரிகளல்லாத மேல் அதிகாரிகளும் நிபுணர்களும் உண்டு. அவ்விஷயங்களில் அவர்கள் சொன்னபடிதான் முனிசிபல் கவுன்சிலர்கள் கேட்க வேண்டுமேயொழிய முனிசிபல் கவுன்சிலர்கள் சொல்லுகிறபடி அவர்கள் கேட்கமாட்டார்கள்.

இவை தவிர நேரிட்டு நிர்வாகம் நடத்த சர்க்காருக்கு ஜவாப்தாரி ஆனவரும், கவுன்சிலர்க்கு ஜவாப்தாரி அல்லாதவருமான நிர்வாக அதிகாரி ஒருவர் ஒவ்வொரு முனிசிபாலிட்டிக்கும் உண்டு. அப்படி இருக்க முனிசிபாலிட்டியில் என்ன சுயராஜ்யம் பெற முடியும். இப்படிப்பட்ட முனிசிபாலிட்டியில் யார் போனால்தான் எப்படிப்பட்ட சுயராஜ்யம் எப்படி தடைப்பட்டு விடும் என்று கேட்கிறோம்.

~subhead

காங்கரஸ் கைப்பற்றும் மர்மம்

~shend

முனிசிபல் கவுன்சிலராவதற்கு தகுதியான யோக்கியதா பக்ஷமும் தனிப்பட்ட நாணையமும் ஒழுக்கமும் இல்லாத அயோக்கியர்களும் கவுன்சிலர்களாவதற்காக செய்துகொண்ட சூழ்ச்சிகளும் இழிவான தந்திரங்களும்தான் முனிசிபாலிட்டியை காங்கரஸ் கைப்பற்ற வேண்டும் என்று சொல்லும் காரணமாகுமே தவிர மற்றபடி அதில் சிறிதும் நாணையமில்லை என்று உறுதியாகச் சொல்லுவோம்.

பொதுவாக மேற்கண்ட எல்லாவற்றையும்விட முனிசிபாலிட்டியில் காங்கரஸ்காரர்களல்லாதவர்கள் செல்ல இடம் கொடுத்தால் சுயராஜ்யம் வருவது தடைப்பட்டுப் போகும் என்று சொல்வது மகா மகா அற்பத்தனமும் அயோக்கியத்தனமும் மனதறிந்து பேசும் போக்கிரித்தனமான பேச்சாகும் என்று மறுபடியும் சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகிறோம். ஏனெனில்,

~subhead

பார்ப்பனர் தோற்றம்

~shend

இந்தச் சாக்கினால்தான் பார்ப்பனர்கள் முனிசிபாலிட்டிகளில் தங்களை யோக்கியதைக்கு மீறி உள் நுழைய முடிகின்றது. உதாரணமாக ஈரோட்டை எடுத்துக் கொள்ளுவோம். இந்த 20 வருஷகாலமாக பார்ப்பனர்கள் ஈரோடு முனிசிபாலிட்டிக்கு ஒருவர் மாத்திரமே புக முடிந்தது. இப்போது சுயராஜ்யத்தை அவசரப்படுத்துவது என்னும் பேரால் 3, 4 பார்ப்பனர்கள் அபேக்ஷகர்களாய் முன்வந்து விட்டார்கள். மற்ற பல ஊர்களில் இதைவிட அதிகம் பேர் இந்தச் சாக்கில் உள்ளே புகப் பார்க்கிறார்கள். இதை கருத்தில் கொண்டே பார்ப்பனப் பத்திரிக்கைகள் பல இந்த அயோக்கியத்தனமான சாக்கினை சொல்லுகின்றன.

ஆகவே இந்தக் காரணத்தால்தான், இதுவே பார்ப்பனர்கள் பொது ஸ்தாபனங்களுக்கு அருகதை அற்றவர்கள் என்பதையும் பொதுநலங்களில் நாணையமற்றவர்கள் என்பதையும் காட்டுவதற்கு போதுமான ஆதாரங்களாகும்.

ஆகையால் அவ்வவ்விடங்களிலுள்ள முனிசிபல் ஓட்டர்கள் ஒவ்வொருவரும் பார்ப்பனர்களாய் இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட தகுதியையும் நாணையத்தையும் உரிமையையும் நன்றாய் ஆராய்ச்சி செய்து பார்த்து தங்கள் ஓட்டுகளை அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். அப்படிக்கு இல்லாத பக்ஷம் முனிசிபாலிட்டிகள் கட்சிச் சண்டைகளுக்கு இடமாகவும், காலிகள் வயிற்றுப் பிழைப்புக்கு புகலிடமாக அதிக வரிகள் கொள்ளை போவதுடன் முனிசிபல் வாழ்க்கையும் நாசமாகிவிடும் என்று வணக்கமாய் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 17.04.1938

~cstart

காங்கரஸ் வகுப்புவாத விளக்கம்

~cmatter

தோழர்களே! அதிக நேரமாய் விட்டது. மணி இப்போது 9.30. நான் 10.30 மணி வண்டிக்குப் போக வேண்டும். அபிராமத்தில் நாளை இது போலவே பல ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருப்பார்கள். ஆதலால் நான் அதிகம் பேச நேரமில்லை. நாங்கள் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் உடல் அசெளகரியத்தில் இங்கு வந்தும் பகல் 12 மணியிலிருந்து கூட்டத்தை 5 மணிக்கே கூட்ட வேண்டுமென்று சொல்லியும் ஒருவரும் லட்சியம் செய்யாமல் ஏதேதோ பாட்டு, பிரார்த்தனை, வரவேற்பு, தொழுகை என்னும் பேரால் 7லீ மணி ஆக்கி விட்டீர்கள். பிறகு இருவர் பேச மணி 9-30 ஆகிவிட்டது. நாங்கள் இங்கு வருவதின் கருத்து என்ன? ஏதாவது பேசிவிட்டு போக வேண்டுமென்பதேயல்லாமல் விளம்பரம் செய்து எங்கள் முகங்களைக் காட்டிவிட்டுப் போவதற்காக அல்ல. அநேகமாய் நம்மவர்கள் பொதுக் கூட்டங்களை இப்படித்தான் செய்து விடுகிறார்கள். இம்மாதிரி கூட்டத்தை ஒரு பண்டிகை மாதிரி ஆடம்பரம் செய்து விடுகிறார்களே தவிர எங்களைச் சரியானபடி பயன்படுத்திக் கொள்வதில்லை. நம் நிலை காங்கரஸ்காரர்கள் பொய்யும் பித்தலாட்டமும் பேசி வெளி மாகாணக்காரர்களைக் கூட்டி வந்து பொறுப்பற்ற முறையில் ஏமாற்றுவதல்ல. தகுந்த ஆதாரங்களுடன் எதிரிகளுடன் போராடுவதேயாகும்.

ஆதலால் எனது அதிருப்தியைக் காட்டிக் கொள்வதற்காகவே நான் இன்று பேசுவதில்லை என்று முடிவு செய்து கொண்டிருக்கிறேன். என்றாலும் 5 மணி முதல் இந்த 9.30 மணி வரை பல மக்கள் நான் ஏதோ பேசுவேன் என்று எதிர்பார்த்திருப்பதாக சில தோழர்கள் சொல்லுவதாலும் சில காலிகள் தோழர் கலீபுல்லா சாயபு பேசும்போது இடையில் குறுக்கிட்டு கேள்வியும் மறுப்பும் செய்ததாலும் நான் 10, 15 நிமிஷமாவது ஏதோ இரண்டு வார்த்தை சொல்ல ஆசைப்படுகிறேன்.

அதுவும் இப்போது எங்கும் பேச்சாயிருக்கும் முனிசிபல் தேர்தலைப் பற்றி பேசுகிறேன்.

காங்கரசுக்கு முனிசிபாலிட்டியில் என்ன வேலை?

தோழர்களே! சமீபத்தில் தமிழ் நாட்டில் எங்கும் முனிசிபல் தேர்தல் நடக்கப் போகிறது. அதில் காங்கரஸ்காரர்கள் போட்டி போடுகிறார்களாம். காங்கரஸ்காரர்களுக்கு முனிசிபாலிட்டியில் என்ன வேலை இருக்கிறது. அங்கு முனிசிபாலிட்டியில் இந்த வீரர்கள் எந்தச் சட்டத்தை உடைக்கப்போகிறார்கள்? முனிசிபாலிட்டியில் எந்த ஏகாதிபத்தியத்தை ஒழிக்கப்போகிறார்கள்? முனிசிபாலிட்டியில் எந்த வெள்ளையனை அன்னியனை விரட்டி அடிக்கப் போகிறார்கள்? அங்கு இவர்களுக்கு காங்கரஸ் திட்டத்தில் ஒரு வேலையும் குறிப்பிட்டில்லை. வெறும் காலிகளுக்கு ஒரு வயிற்றுப் பிழைப்பை உண்டாக்கிக் கொள்ளவும், அயோக்கியர்கள் பொறுக்கித் தின்னவுமே காங்கரசின் பேரால் சிலர் உள்ளே நுழையப் பார்க்கிறார்கள். சிலர் உண்மையாகவே போகிறவர்களாக இருக்கலாம். ஆனால் காங்கரசுக்காரர்கள் இதுவரை கைப்பற்றிய சகல ஸ்தல ஸ்தாபனங்களின் யோக்கியதைகளையும் பாருங்கள். எது நாணையமாய் யோக்கியமாய் நடக்கின்றது.

~subhead

சென்னை கார்ப்பரேஷன்

~shend

சென்னை கார்ப்பரேஷனை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு கவர்னர் இருக்கிறார். மந்திரிகள் இருக்கிறார்கள். இ.ஐ.ஈ. புலிகள் இருக்கின்றன. அப்படி இருந்தும் அங்கேயே காங்கிரஸ் கவுன்சிலர்கள் லஞ்சம் வாங்கினதாக காங்கரஸ் பத்திரிகைகளே “தினமணி” உட்பட கூறுகின்றன. காங்கரஸ் கவுன்சிலர்கள் சிலர் பெண் உபாத்தியாயர்களிடமும் நர்சுகளிடமும் எவ்வளவோ அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டதாக சென்னையில் பிரசுரங்கள் பறந்தன. அங்கு கார்ப்பரேஷன் அதிகாரங்களை சர்க்காருக்கு விட்டுக் கொடுத்ததாகவும் முனிசிபாலிட்டிகளுக்கே மானக்கேட்டை உண்டுபண்ணி விட்டதாகவும் குறைகள் கூறப்பட்டன. முனிசிபல் கண்டராக்டுகளை கவுன்சிலர்களே எடுத்ததாக புள்ளி விவரங்கள் காட்டப்பட்டன. சில கவுன்சிலர்கள் இன்னமும் அந்த வேலையால் பிழைக்கிறார்கள் என்று காங்கரஸ் கவுன்சிலர்களே கூறினார்கள். சில கவுன்சிலர்கள் மீது லஞ்சம் முதலிய குற்றத்திற்கு காங்கரஸ் கமிட்டி நடவடிக்கை எடுத்து தண்டித்து இருக்கின்றன. அப்படித் தண்டிக்கப்பட்டவர்களும் இன்னமும் காங்கரஸ் கவுன்சிலராக இருக்கிறார்கள். மறுபடியும் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

அங்கு வகுப்பு வாதம் தாண்டவமாடுவதாகவும் மெஜாரிட்டிகளாக உள்ள சிலருடைய அபிப்பிராயம். பார்ப்பனர் அல்லாதார் என்பதற்கு ஆக புறக்கணிக்கப்படுவதாகவும், பார்ப்பன ஆதிக்கமும், பார்ப்பன சலுகையும் தலைவிரித்தாடுவதாகவும் ஆதலால், பார்ப்பனரல்லாத கவுன்சிலர்கள் அபிப்பிராயம் புறக்கணிக்கப்படுவதாகவும் கூக்குரல்கள் இடப்படுகின்றன.

முனிசிபாலிட்டிகளைக் கைப்பற்றுவதற்கு காங்கரசுக்கு யோக்கியதை இல்லை என்று சொல்லுவதற்கு உங்களுக்கு இனி என்ன ஆதாரம் வேண்டும்.

~subhead

கல்வி அதிகாரி

~shend

கார்ப்பரேஷன் கல்வி அதிகாரி வேலைக்குத் தோழர் சிவசைலம்பிள்ளை பி.எ.எல்.டி., டிப்டி இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல் காங்கரஸ் மெம்பர்களால் அதிக மெஜாரிட்டியால் 3 தரம் தெரிந்தெடுக்கப்பட்டார். கடைசியில் என்ன ஆயிற்று? அது செல்லுபடியற்றதாக்கப்பட்டுவிட்டது. காரணம் காங்கரஸ் கவுன்சிலர்கள் லஞ்சம் வாங்குகிறவர்களாம். ஆனால் இதில் லஞ்சம் வாங்கவில்லையாம். சிவசைலம் பிள்ளையும் லஞ்சம் கொடுக்கவில்லையாம். அவர் மிகுதியும் தகுதியுடையவர்தானாம். இவற்றைத் “தினமணி”யும், “ஆனந்தவிகடனு”மே எழுதியிருக்கிறது. ஆனால் கடைசியில் ஒரு பார்ப்பனர்தான் அந்த வேலைக்கு நியமிக்கப்பட்டுவிட்டார். அங்கு இனியும் மற்ற பெரிய வேலைகளுக்கும் பார்ப்பனர்களே நியமிக்கப்படுகிறார்கள். நியமிக்கப்படவும் போகிறார்கள். சின்ன வேலைகளுக்கும் அதாவது கார்ப்பரேஷன் பள்ளிக்கூட தலைமை உபாத்தியாயர்கள் வேலைக்கும் 100க்கு 100 பார்ப்பனர்களுக்கே கொடுக்கப்படுகின்றன. இதுதான் முனிசிபாலிட்டிகளில் காங்கரஸ் செய்யப்போகும் வேலைத் திட்டம் என்பதோடு பெறப்போகும் சுயராஜ்யமா என்று கேட்கிறேன்.

~subhead

திருச்சி யோக்கியதை

~shend

இனி அடுத்தாப் போல் திருச்சி முனிசிபாலிட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கும் காங்கரஸ் மெஜாரிட்டியாய் வந்தது. ஆனால் அங்கு காங்கரஸ் பெற்ற சுயராஜ்யம் என்ன? ஒரு காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் (தோழர் தேவர்) சேர்மனாய் வரக்கூடாது என்று பார்ப்பனர்களால் கட்டுப்பாடாய் சூழ்ச்சி செய்து யோக்கியதைக்கும், நாணையத்துக்கும், காங்கிரஸ் கட்டுப்பாட்டுக்கும் விரோதமாய் காங்கரஸ் அல்லாத – காங்கரசுக்கு விரோதமாய் போட்டி போட்ட ஒருவருக்கு காங்கரஸ் பார்ப்பனர்கள் ஓட்டுக் கொடுத்து தோழர் தேவரை கவிழ்த்ததல்லாமல் வேறு நன்மை என்ன செய்யப்பட்டது? இந்த மாதிரியாக நடந்த ஒரு பார்ப்பன காங்கரஸ் மெம்பரை காங்கரஸ் கடைசியாக என்ன செய்தது? காங்கரசால் குற்றம் சாட்டப்பட்ட அப்படிப்பட்ட “துரோகிக்கு” காங்கரஸ் மந்திரி வேலை கொடுத்ததே அல்லாமல் மற்றபடி காங்கரஸ் ஒழுக்கமாக நடந்து கொண்டதா? என்று பாருங்கள். அந்த மாதிரி ஒழுக்கம் கெட்ட துரோகமான காரியம் ஒரு பார்ப்பனரல்லாதார் செய்திருந்தால் அவன் கதி என்ன ஆயிருக்கும்? காங்கரசுக்கு உழைத்து திருச்சியில் ஜஸ்டிஸ் கட்சியை “புதைத்த” தோழர் தேவர் இன்று எங்கே? அவர் விலாசம் உங்களுக்கு தெரியுமா? ஜில்லா போர்டிலாவது அவரை தலையெடுக்க விட்டார்களா? ஆளையே ஒழித்து விட்டார்களே!

~subhead

காங்கரஸ் வகுப்புவாதம்

~shend

ஸ்தல ஸ்தாபனங்களில் வகுப்பு வாதத்தை ஒழிக்கப் போகிறோம் என்று சொன்ன யோக்கியர்களை, இன்று எந்த ஸ்தல ஸ்தாபனத்தில் வகுப்பு வாதம் இல்லை என்று கேட்கிறேன்.

ஜஸ்டிஸ் கட்சியார் ஏற்படுத்தி வைத்திருந்த எல்லா வகுப்பிலும் உத்தியோக நியமன முறையை ஒழித்துவிட்டு காலி ஏற்படும் ஸ்தானங்களுக்கெல்லாம் ஒரு வகுப்பாரை அல்லது பார்ப்பனர்களைப் போடவே சூழ்ச்சியும், செளகரியமும் செய்யப்பட்டு வருகிறது.

~subhead

தேசீயக்கொடி பறக்கவிடுதல்

~shend

காங்கரஸ் ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்ற சொல்லப்பட்ட காரணங்களில் முனிசிபாலிட்டிகளின் மீது தேசீயக்கொடி பறக்க விடுவதாய் ஜம்பம் சொன்னது ஒன்று. இன்று தேசீயக் கொடி எங்கு பறக்கிறது? முதலாவது தேசீயக் கொடி என்று ஒன்று இருக்கிறதா? கவர்னர் காங்கரஸ் கொடியை தேசீயக் கொடி என்று கூறக்கூடாது என்று சொன்னவுடன் சரணாகதி மந்திரிகள் தலைவணங்கி ஒப்புக்கொண்டு தங்களுக்கு தேசீயக் கொடி இல்லை என்று அறிக்கை வெளியிட்டு விட்டார்கள். மூவர்ணக் கொடி – காங்கரஸ் கட்சியின் சின்னமேயொழிய அது ஒரு தேசத்தையோ, தேசீயத்தையோ குறிப்பதாகாதென்று காங்கரஸ் மந்திரிகள் ஒப்புக் கொண்டு அறிக்கை விட்டு விட்டார்கள். அந்தக் கொடியையும் அரசியல் விசேஷக் காலங்களில் கட்டக்கூடாதென்று கவர்னர் சொன்னதை ஒப்புக் கொண்டு விட்டார்கள். மற்றும் சர்க்காருக்கு தேசீயக் கொடி கட்ட வேண்டிய அவசியம் வரும்போது யூனியன் ஜாக் கொடிதான் கட்ட வேண்டுமென்றும் காங்கரஸ் கொடியை அவிழ்த்துவிட வேண்டுமென்றும் சர்க்கார் தேசீயக் கொடி பறக்கும்போது எந்த சமயத்திலும் காங்கரஸ் கொடி பறக்கக் கூடாது என்று சொன்னதையும் காங்கரஸ் தலைவணங்கி ஒப்புக்கொண்டு சர்க்கார் பேரால் காங்கரசே அறிக்கை வெளியிட்டு விட்டு சிறிதும் மானம், வெட்கம், ஒழுக்கம், நாணையம் இல்லாமல் பாமர மக்களிடத்தில் காங்கரஸ்காரர்கள் மூவர்ணக் கொடியை தேசீயக்கொடி என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

~subhead

வரி குறைப்பு எங்கே? சுங்கம் ஏற்படுத்துவதா?

~shend

மற்றபடி காங்கரஸ் ஸ்தல ஸ்தாபனங்களில் எந்த ஐட்டத்தில் வரி குறைத்தது என்று கேட்கின்றேன். புது வரிகள் போட யோசனை கூறுகிறதுடன் சர்க்கார் கொடுத்து வந்த கிராண்டு (உதவித் தொகைகளை) நிறுத்திக் கொள்ள யோசனை செய்து வருகிறது. பள்ளிக்கூடமும் ஆஸ்பத்திரிகளும் செத்துக் கொண்டு வருகின்றன. அப்படி இருந்தும் டோல்கேட்டுகள் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

~subhead

கண்ட்ராக்ட் ராஜ்யம் சேலம் முனிசிபாலிட்டி

~shend

மற்றும் ஸ்தல ஸ்தாபன கண்ட்ராக்ட் விஷயத்திலும் காங்கரஸ் காரர்களும், காங்கரஸ் மந்திரிகளும் ஒழுக்கத்தையும் நாணையத்தையும் லட்சியம் செய்யாமல் முனிசிபல் பணங்கள் நாசமாக்கப்படுகின்றன.

உதாரணமாக சேலம் முனிசிபாலிட்டி வாட்டர் வர்க்ஸ் கண்ட்ராக்டை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் காங்கரஸ் மந்திரிகள் நடந்து கொண்ட ஒழுக்கம் கெட்ட – முறைகெட்ட நடத்தை போல் வெள்ளைக்கார மந்திரிகளாவது, ஜஸ்டிஸ் மந்திரிகளாவது, இடைக்கால மந்திரிகளாவது நடந்து கொண்டதாக ஒரு சிறு ஆதாரம் காட்ட முடியுமா என்று பந்தயம் கட்டிக் கேட்கின்றேன்.

ஸ்தல ஸ்தாபனங்களுக்கு காங்கரஸ் மந்திரி சபை கொடுத்த சுதந்திரம் என்ன என்று கேட்கின்றேன். ஸ்தல ஸ்தாபன அதிகாரத்தில் மந்திரிகள் குறுக்கிட்டு அவர்கள் அதிகாரத்தைப் பிடுங்கி துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள். முறையற்ற – லாபமற்ற நன்மையற்ற தனங்களோடு நிபுணர்கள் இலாகாத் தலைவர்கள் அபிப்பிராயங்களுக்கு விரோதமாக மந்திரிகள் டெண்டர்களைப் புதிதாகக் கற்பித்துத் திருத்தச் செய்து அதுவும் ஒன்றுக்கு ஒன்றே முக்கால் ஆக விலை சேர்த்து திருத்தி எழுதிக் கொடுத்த டெண்டர்காரர்களுக்கு – முனிசிபல் தீர்மானங்களுக்கு விரோதமாய் மந்திரிகள் கண்ட்ராக்டு கொடுக்கச் செய்தார்கள்.

இதற்குக் காரணம் ஒரு மந்திரியின் மருமகன் அந்த முறையற்ற டெண்டர்காரர் கம்பெனியில் அக்கரை உள்ளவர் என்றும் இதனால் அவருக்கு ஏராளமான பலன் கிடைக்கலாம் என்றும் பொது ஜனங்களால் கருதப்படும் பேசப்படும் அபிப்பிராயத்துக்கு எந்த மந்திரியும் நாளது வரை சமாதானம் சொல்லாமலும் சேலம் கவுன்சிலர்களும், சேர்மெனும் சேர்ந்து செய்த தீர்மானத்துக்கு விரோதமாய் ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தரை அதுவும் கிரிமினல் அதிகாரம் உள்ள உத்தியோகஸ்தரை சேர்மெனாக நியமித்து பலாத்காரத்தில் தீர்மானம் செய்யச் செய்து அதுவும் சர்க்காரின் இப்படிப்பட்ட ஒழுக்கங்கெட்ட காரியத்துக்கு ஆக பொது ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 கவுன்சிலர்களும், சேர்மெனும் வைஸ்சேர்மெனும் ராஜிநாமா கொடுத்த பிறகு இம்மாதிரி பார்ப்பன பலாத்காரத் தீர்மானம் சர்க்கார் அதிகாரி முயற்சியில் செய்யப்பட்டது என்றால் இது ஜனநாயகமா? காட்டுமிராண்டி, காட்டுராஜா ராஜ்யமா அல்லது கண்ட்ராக்ட் ராஜ்யத்தை ஒழிக்கும் ராஜ்யமா? என்று யோசித்துப் பாருங்கள்.

~subhead

அவசரமென்ன?

~shend

மறுபடியும் தேர்தலும் புதிய கவுன்சிலும் ஏற்பட ஒரு மாதம் இருக்கும்போது இவ்வளவு அவசரமாக அந்த டெண்டர் விஷயம் இந்த முறையில் முடிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று யோசித்துப் பாருங்கள். இந்த நடவடிக்கையில் துர்நாற்றம் வீசுகிறதா? இல்லையா என்று யோசித்துப் பாருங்கள். மந்திரிகள் முயற்சியால் மந்திரிகளின் வேண்டுகோளின் பேரில் டெண்டர் கொடுத்து கம்பெனிக்காரன் என்று சொல்லப்பட்ட அதே கம்பெனிக்காரர் அதே சாக்கை அதாவது வார்ப்பட குழாயை அந்தர் 1-க்கு 5 ரூபா வீதம் கொடுப்பதாக வேறு ஒரு கம்பெனிக்கு டெண்டர் கொடுத்துவிட்டு மந்திரிகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வேண்டியவர்கள் என்ற தைரியத்தில் சேலம் வேலைக்கு அந்தர் ஒன்றுக்கு 8 ரூபாய் வீதம் டெண்டர் கொடுத்ததை பொது ஜனங்கள் எடுத்துக்காட்டிய பிறகும் மந்திரிகள் அந்த டெண்டரை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அதையே சேலம் கவுன்சிலர்களின் பிடரியின் மீது பலாத்காரமாய் ஏற்றியிருக்கிறார்கள் என்றும் தெரிந்தால் இந்த மந்திரிகள் நாணயத்தில் யாராவது சந்தேகப்படாமல் இருக்க முடியுமா என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். அல்லது எனது தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியாரே இது ஒழுங்கான காரியமா என்று சொல்லட்டும். மந்திரிமார்களே இவ்வளவு தைரியமாக டெண்டர்கள் விஷயத்தில் நடந்து வழிகாட்டுவார்களானால் அப்புறம் சாதாரண கவுன்சிலர்களும், சேர்மெனும் இம்மாதிரி நடக்கவோ, டெண்டர்களில் ஒழுங்கீனமாய் நடந்து பணம் சம்பாதிக்கவோ பயப்படுவார்களா என்று கேட்கிறேன். இலாக்கா அதிகாரிக்குத்தான் இவர்களிடம் எப்படி மதிப்பு இருக்கும்? தோழர் ராஜகோபாலாச்சாரியார் இதில் பணம் சம்பாதித்திருக்க மாட்டார் என்றுதான் நான் எண்ணுகிறேன். ஆனால் மற்ற மந்திரிகளோ அல்லது அவர்களுக்கு சேர்ந்தவர்களோ பணம் சம்பாதிக்க இடம் கொடுத்தால் சம்பாதித்தார்கள் என்று கருதும்படி இடம் கொடுத்ததால் பொது அரசியல் நாணயத்துக்கும் ஒழுக்கத்துக்குமே கேடு ஏற்படவில்லையா என்று கேட்கிறேன்.

~subhead

ஜஸ்டிஸ் மந்திரிகள் காலத்து இப்படியா நடந்தது?

~shend

இவ்விஷயங்களில் மந்திரிகள் சிறிதும் சந்தேகத்துக்கிடமில்லாமல் நடந்து கொள்ள வேண்டாமா? ஜஸ்டிஸ் மந்திரிகளின் 17 வருஷம் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் ஏதாவது ஒன்றை எடுத்துக்காட்ட யாராவது முடியுமா? என்று பந்தயம் கட்டிக் கேட்கிறேன். இப்படிப்பட்ட யோக்கியதையில் உள்ள காங்கரஸ்காரர்கள் எந்த முகத்தைக் கொண்டு ஸ்தல ஸ்தாபனங்களில் லஞ்சத்தையும், கண்ட்ராக்ட் ராஜ்யத்தையும் நிறுத்தப்போகிறோம் என்றும் சொல்லுகிறார்களென்பதும் எந்த முகத்தைக் கொண்டு மறுபடியும் ஸ்தல ஸ்தாபனங்களில் பிரவேசிக்கப் போகிறார்கள் என்பதும் எனக்கு விளங்கவில்லை. அவர்களுக்கு சற்றாவது மானம் வெட்கம் இருந்தால் ஸ்தல ஸ்தாபனத்தைப்பற்றி நினைப்பார்களா? என்று கேட்கிறேன். பொது ஜனங்களுக்குதான் ஆகட்டும், சிறிதாவது பொறுப்போ புத்தியோ இருந்தால் இவர்கள் ஓட்டு கேட்க வாசப்படி மிதிப்பார்களா என்று கேட்கிறேன்.

~subhead

ஸ்தாபனங்களுக்கு கெளரவம் வேண்டாமா?

~shend

நிர்வாகம் நடத்துவதும், லஞ்சம் வாங்குவதும் கண்ட்ராக்டில் சுயநலம் குறுக்கிட்டு ஒழுக்க ஈனமாய் நடப்பதும், உத்தியோகத்தில் பார்ப்பனர்களையே புகுத்துவதுமான காரியங்கள் செய்வதையாவது செய்து நாசமாய்ப் போகட்டும் என்றாலும் அந்த ஸ்தாபனங்களுக்காவது ஒரு மரியாதை இருக்கும்படி நடந்து கொள்ள வேண்டாமா என்று கேட்கிறேன்.

ஸ்தல ஸ்தாபனங்கள் வரவர கஞ்சித்தொட்டிகளுக்கும், காலாடிகளுக்கும், காவடிகளுக்கும் புகலிடமாய் – பிழைப்புக்கிடமாய் ஆவது என்றால் யார்தான் சம்மதிப்பார்கள்?

~subhead

காலாடி ராஜ்யமா?

~shend

இது என்ன காலாடி ராஜ்யமா என்று கேட்கிறேன். சிலவித பிரசாரத்தையும் அதற்காக செய்யப்படும் காலித்தனத்தையும் பார்க்கிறபோது வயிறு பற்றி எரிகிறது. பணக்கார ஆட்சி ஒழிக்கப்படுவது என்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அதற்கு பதில் எச்சக்கலை ஆட்சியும், திருட்டுப்பசங்கள்- அதிலேயே பொறுக்கித் தின்று வயிறு வளர்த்துத் தீரவேண்டிய சோம்பேறிகள் ஆட்சியைத்தான் ஏற்படுத்த வேண்டுமா என்று கேட்கிறேன். அப்படியானால் ஸ்தல ஸ்தாபனங்களில் சென்னை கார்ப்பரேஷனை விட சட்டசபை, மந்திரிசபை ஆகியவைகளை விட மிக மிக மோசமான ஆட்சி ஏற்பட்டு விடாதா என்று கேட்கிறேன்.

பொது ஜனங்கள் வரிப்பணத்தில் நடக்கும் ஸ்தாபனங்கள் கொள்ளை போகாமலும் ஒழுக்க ஈனங்கள் நடக்காமலும் கவுரவம் குறையாமலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட பொது ஜனங்களுக்குத் தானாகட்டும் உரிமை யில்லையா என்று கேட்கிறேன்.

~subhead

குடிக்க முடியாவிட்டால் கவிழ்ப்பதா?

~shend

பார்ப்பனர்களுடைய எண்ணம் நாடு ஒன்றாய் தங்களுடைய ஆதிக்கத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் காலிகள் கூலிகள் கையில் ஒப்புவித்துக் கவிழ்த்துவிட வேண்டும் என்று கருதி இருக்கிறதாகத் தெரிகிறது.

நம் நாடு சமதர்ம நாடாகிவிட்டதா? அல்லது பொது உடமை நாடாகிவிட்டதா? அப்படி இருந்தால் சொத்தில்லாதவன் ஆட்சி புரிவது நியாயமாய் இருக்கலாம். அதிலும் பாடுபடுபவன் ஆட்சிபுரிவதுதான் நியாயமாக இருக்கலாம். அப்படிக்கூட இல்லாமல் இந்தத் தனி உடமை ராஜ்ஜியத்தில் சோத்துக்கு வேறு வழியில்லாதவன், வேறு வகையில் பிழைக்க முடியாதவன், பாடுபட முடியாத சோம்பேறி ஆகியவர்கள் சட்ட சபையையும், ஸ்தல ஸ்தாபனங்களையும் கைப்பற்றுவதுதான் காங்கரஸ் முறை என்றால் அப்புறம் அவர்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்? என்ற கேள்விக்கு பதில் சொல்லட்டும். சென்னை கார்ப்பரேஷன் பேரால் ஸ்தல ஸ்தாபனங்களில் பொறுக்கித் தின்னவும் சென்னை அசம்பிளியில் போய் ஒரு வேலையும் செய்யாமல் கைகட்டி வாய்பொத்திக் கொண்டு கண் ஜாடை காட்டியவுடன் கை தூக்குவதற்கு ஆக மாதச் சம்பளம் எடுத்துக் கொள்ளவும் சம்பந்தப்பட்ட இலாக்காக்களிலெல்லாம் கண்றாக்ட்டில் ஒழுக்க ஈனமாய் நடக்கவும்தானே முடியும்.

இந்த வார ஆனந்தவிகடன் என்னும் பத்திரிகையில் 3 அசம்பிளி மெம்பரை அசம்பிளியில் கைகட்டி வாய்பொத்தி பள்ளிக்கூட பிள்ளைபோல் உட்காரவைத்துக் காட்டி இருக்கிறது. இதன் அருத்தம் என்ன? மாதம் 75 ரூபாய் கூலிக்கு அடித்து உதைத்து அடக்கிவைக்கப்பட்ட பள்ளிக்கூட பிள்ளைகள் போல் பார்ப்பனரல்லாத அசம்பளி மெம்பர்களை உட்காரவைத்து ஆச்சாரியார் ஆதிக்கம் செலுத்துகிறார் என்பதைக் காட்டுவதாகத் தானே அருத்தம். நம் நாட்டு அரசியல் வாழ்வுக்கும் பார்ப்பனரல்லாதார் யோக்கியதைக்கும் இதைவிட இழிவும் ஈனத்தனமும் வேறு வேண்டுமா என்று கேட்கிறேன்.

பணக்காரனாகவும், பாடுபட்டு வயிறுவளர்க்கத் திறமையுடையவ னாகவும் இருக்கிறவர்களே பலர் ஸ்தல ஸ்தாபனங்களில் சட்டசபைகளில் நாணையமாய் நடந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றால் இன்னும் தகரப் போகிணிகள் சங்கதி கேட்க வேண்டுமா என்று யோசித்துப் பாருங்கள். நான் ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால் இந்த தகரப்போகிணிகள் ஸ்தல ஸ்தாபனங்களில் ஸ்தானம் பெறுவதற்கு ஆதாரமாகவே மக்களிடம் போய் “பணக்காரர்கள் ராஜ்யத்தை ஒழிக்கப் போகிறோம். ஆதலால் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று கேட்கிறார்களாம். தெருவில் எச்சிலை பொறுக்கும் பிள்ளைகளுக்கும் பரிசுத்த ஆவி மக்களுக்கும் காசு கொடுத்து கொடி கொடுத்து பணக்கார ஆட்சி ஒழிய, பணக்காரர் ஒழிய, காங்கரசுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கத்தச் சொல்லுகிறார்கள். காங்கரசில் பணக்காரர் இல்லையா? எல்லோருமா இன்சால்வெண்டு பேர்வழிகள்? தோழர்கள் வெள்ளியங்கிரிக் கவுண்டர், ராமலிங்கஞ் செட்டியார், நாடிமுத்து, கோபால் ரெட்டி இவர்கள் யார் தகரப் போகிணிகளா மஞ்சள் காகிதங்களா? இந்த ஊரிலும் இதே பேச்சாயிருக்கிறதாம்.

~subhead

பணக்காரர் ராஜ்யம் ஏன் ஒழிய வேண்டும்

~shend

சட்டத்தில் பணக்காரன் இருக்க இடம் வைத்துக்கொண்டு அவனிடம் வருஷம் 1000, 2000, 5000, 10000 ரூபாய்களை பூமிவரி, வீட்டுவரி, வருமானவரி முதலிய பல வரிகளாக வாங்கிக் கொண்டு அவனை ஒழிக்க வேண்டுமென்றால் அது ஒரு காசு வரி இல்லாத – ஒரு சதுர அங்குல இடமில்லாத – ஒரு நாழி உழைப்பதற்குக் கூட ஒரு சிறிதும் சக்தியும், அனுபவமும், இஷ்டமும் இல்லாத – ஊர் உழைப்பில், ஏமாற்றுதலில் ஒழுக்க ஈனமான காரியத்தில் வயிறு வளர்க்கும் அயோக்கியர்களும், அன்னக்காவடிகளும், ஆட்சி செலுத்தி பொறுக்கித் தின்று வயிறு வளர்ப்பதற்குத்தான் (பணக்கார ஆட்சி) ஒழிக்கப்படுவதா என்று கேட்கிறேன்.

~subhead

காலிகள் ஆட்சிதான் ஜனநாயகமா?

~shend

இப்பொழுது பஞ்சாப் மந்திரியும் தோழர் திரு.வி. கலியாணசுந்தர முதலியாரும் சொன்னது போல் ஜனநாயகம் என்னும் பேரால் இந்தியா காலிகள் ராஜ்யமாகி வருகிறது. அரசியலில் திருட்டு, புரட்டு, ஏமாற்றுதல், கொள்ளை அடித்தல் முதலாகிய மானங்கெட்ட காரியங்கள் சர்வ சாதாரணமாக அனுமதிக்கப்படுகிறது. இனி சர்வமும் காலிகள் மயமாகி விட்டால் இந்நாட்டில் மானமுள்ளவர்கள் மரியாதைக்காரர்கள் வாழ்வதா சாவதா? அவர்களது பெண்டு பிள்ளை சொத்துக்குப் பத்திரம் வேண்டாமா என்று கேட்க வேண்டியதாய் விடாதா?

~subhead

நாணையமற்றவனை ஒழியுங்கள்

~shend

இந்த உடுமல் பேட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். தோழர் சிவசுப்பிரமணியக் கவுண்டர் 10 லக்ஷக்கணக்கான சொத்துக்கு உடையவர். அதற்கு ஆக அதாவது, அவர் பணக்காரராய் இருப்பதற்காக அவர் முனிசிபாலிட்டியில் பொது வாழ்வில் இருந்து விரட்டப்பட வேண்டுமா? அவர் வரி கொடுக்கவில்லையா? அவர் முனிசிபாலிட்டியில் பணம் திருடி இருந்தால் உதைத்துத் துரத்துங்கள். அல்லது அவர் முனிசிபாலிட்டி மெம்பர் பதவியாலோ சேர்மென் பதவியாலோ வயிறு வளர்ப்பதாய் இருந்தாலாவது அல்லது அவருக்கு வயிறு வளர்க்க அதைத் தவிர வேறு யோக்கியமான வழியில்லா விட்டாலாவது அடித்துத் துரத்துங்கள். அப்படிப்பட்டவர்கள் யாராயிருந்தாலும் அடித்துத் துரத்துங்கள். இதையெல்லாம் விட்டு விட்டு அவர் பணக்காரராய் இருக்கிறார் என்பதற்காக அவரை முனிசிபாலிட்டியிலிருந்து விரட்ட வேண்டுமென்றால் அதுவும் விரட்டுகிறவர்கள் பாப்பராய் இதில் பிழைக்க வேண்டியவர்களாய் இருக்கிறார்கள் என்று நீங்கள் கண்ணியமாய் உணர்ந்தால் அப்படிப்பட்ட அன்னக்காவடிகளை நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அது விஷயத்தில் உங்கள் கடமை என்ன என்று கேட்கின்றேன்.

ஏழைகள் வேறு சோம்பேறி வயிற்றுப் பிழைப்புக்காரர் வேறு

ஏழைகள் என்பதற்காக நாம் யாரையும் கேவலமாய் நினைக்க வேண்டாம். அவர்களுக்கு மரியாதை செய்வோம். அவர்கள் ஏழ்மைத் தன்மை ஒழியவும் அதற்கு அவசியமான பணக்காரத் தன்மை ஒழியவும் கூட நாம் பாடுவோம். பொதுவுடமை ஏற்படவும் முயலுவோம். பணக்காரர் பணங்களை பறிமுதல் செய்து சகல மக்களுக்கும் சரிசமமாய் பங்கிடவும் சட்டம் செய்ய ஆசைப்படுவோம். ஆனால் காலிகள் ராஜ்யமும் பதவியின் பேரால் ஒழுக்க ஈனமாய் பொறுக்கித் தின்பவர்கள் ராஜ்யமும் சோம்பேறிகள் ராஜ்யமும் ஏற்பட சிறிதும் நாம் இடம் கொடுக்கக்கூடாது. அந்த சாக்கை வைத்துக் கொண்டு காலிகளும், கூலிகளும், பணக்காரர்கள் என்பவர்களை வையவோ காலித்தனம் செய்யவோ கூட நாம் இடம் கொடுக்கக் கூடாது. ஏழைகள் வேறு. வயிற்றுப் பிழைப்புச் சோம்பேறிகள் வேறு. இருவரையும் ஒன்றாய்ப் பார்க்கக் கூடாது என்பது எனது கருத்து.

பணக்காரன் என்றால் யார்? வயிற்றுப் பிழைப்புக்கு பொது ஸ்தாபனங்களை எதிர்பாராமல் யோக்கியமான முறையில் மானத்தோடு பாடுபட்டு உழைப்பவனும் மரியாதையாக வாழ்பவனும் சட்டப்படி நாணைய ஒழுக்கத்தால் செல்வம் தேடி சாப்பிட்டு சிறிதாவது மீதி வைத்திருப்பவனும் எல்லோரும் பணக்காரர்கள்தான். அவன் 10 ரூபாய் உடையவனாயிருந்தாலும் பல லக்ஷ ரூபாய் உடையவனாயிருந்தாலும் ஒன்றுதான். அதிக பணம் ஒருவனிடம் சேரக்கூடாதென்றால் நல்ல வரிபோட்டு கரைக்கப் பார்ப்போம். அதற்கு ஆக சட்டம் செய்வோம். அதை விட்டு விட்டு அவர்கள் பொது வாழ்விலேயே தலைகாட்டக் கூடாதென்றால் அதுவும் நாளை சாப்பாட்டுக்கு வகையற்றவர்கள் சொல்வதென்றால் இது என்ன கொள்ளைக்காரர்கள் ராஜ்யமா என்று கேட்கிறேன். இதுதான் காந்தியாருடைய ராமராஜ்யமா என்று கேட்கிறேன்.

~subhead

காங்கரஸ் ஆட்சியில் மரியாதை இல்லை

~shend

இன்று காங்கரஸ் ஆட்சியால் பொது வாழ்வில் மரியாதை அற்றுப் போய்விட்டது. மக்களுக்குப் பத்திரம், பந்தோபஸ்து அற்றுப் போய் விட்டது. மரியாதைக்கும் மானத்துக்கும் பயப்படுபவர்களுக்கு வெளியில் தலை நீட்ட இடமில்லாமல் போய்விட்டது. மரியாதைக்காரர்கள் தங்களுக்கென ஒரு கூட்டம் போட்டு விஷயம் எடுத்துச் சொல்ல இடம் இல்லாமல் போய்விட்டது. இங்கேயே பாருங்கள். நாங்கள் என்ன சொல்லுகிறோம் என்று கேட்பதற்கு முன்பே பேசப் பேச குறுக்கிட ஆரம்பித்து விட்டார்கள். நான் நாடெல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு வந்து உண்மையைப் பேசுகிறேன்.

~subhead

ஜெயில் திறக்கப்பட்டு விட்டது

~shend

கனம் ஆச்சாரியார் ராஜ்யத்தில் போதாக்குறைக்கு ஜெயிலை நிர்வகிக்கப் பணம் இல்லையென்று காரணம் சொல்லி ஜெயிலில் இருக்கிற கருப்புக் குல்லாய் கேடி, கொலைக்காரர்கள், கொள்ளைக்காரர்கள், தொல்லைக்காரர்கள், போர்ஜரி, பொய்சாட்சி, நம்பிக்கைத் துரோகக்காரர் முதலியவர்கள் எல்லாம் ஜெயிலிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள். விடுதலையாகும்போது “காங்கரஸ் – காந்தி ராஜ்யம் வந்து உங்களை விடுதலை செய்திருக்கிறது. ஆதலால் காங்கரசில் சேருங்கள்” என்று உபதேசம் செய்து விடுதலை செய்யப்படுகிறதாம். இனி அதுபோலவே இவர்களும் காங்கரசில் சேர்ந்து விட்டால் அப்புறம் மக்கள் கதி என்ன ஆவது. நீங்களே யோசித்துப் பாருங்கள். யோக்கியர்கள் கூட காங்கரசில் சேர்ந்தால் இந்த கதி ஆகும் போது இவர்கள் சேர்ந்தால் என்ன ஆவார்கள்? இதுதானா நீதியும், அமைதியும், ஒழுக்கமும் நிலவும்படியான ராஜ்யமா என்று கேட்கிறேன். தோழர்களே!

துஷ்டர்களை நிபந்தனை யில்லாமல் விடுதலை செய்து அவர்களை காங்கரசிலும் சேர்த்துக் கொண்டால் நாட்டு மக்கள் கதி என்ன ஆவது.

எங்களுக்கு உண்மையில் ஒரு பதவியும் வேண்டாம். ஜனங்களுக்கும் அவர்கள் பாடுபட்டுத் தேடிக்கொடுக்கும் வரிப்பணத்துக்கும், நியாயமும் யோக்கியமான வாழ்வுக்கும் இடமும் வேண்டாமா என்பதற்காகத்தான் நாங்கள் உழைக்கிறோம்.

ஆகவே காங்கரஸ் ஆட்சியில் ஜனங்களுக்கு இன்று சகிக்க முடியாத கஷ்டம், தொல்லை, துயரம், நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இவற்றை நீங்கள் சரியானபடி நிதானமாய் யோசித்துப் பார்த்து நாங்கள் சொல்லுவது சரியா தப்பா என்று தெரிந்து இதற்குக் காங்கரஸ்காரர்கள் சொல்லும் சமாதானத்தையும் பொறுமையோடு கேட்டு பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள்.

குறிப்பு: 11.04.1938 ஆம் நாள் உடுமலைப் பேட்டை அலிச் சவுக்கில் நடைபெற்ற முஸ்லீம் லீக் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.

குடி அரசு – சொற்பொழிவு – 24.04.1938

~cstart

மொண்டிச் சாக்கு

~cmatter

காங்கிரஸ்காரர்கள் பதவி ஏற்ற பிறகு அவர்களுக்குப் பாமர மக்களிடம் இருந்து வந்த செல்வாக்கு இயற்கையிலேயே குறையத் தொடங்கி விட்டது ஒரு புறமிருக்க புண்ணில் ஊசியை விட்டுக் கிளறுவது போல் வயிரெறிந்து கிடக்கும் முஸ்லிம் சமூகத்தை பரிகாசம் செய்வதுபோல் யாரோ ஒரு முஸ்லீமைப் பிடித்து அவருக்கு முஸ்லிம் பிரதிநிதி என்று பெயரைக் கொடுத்து, ஊர் ஊராக அழைத்துப் போய் வேடிக்கைக் காட்டி முஸ்லிம்களின் ஆத்திரத்தைக் கிளப்பி விடுவதும், அதுபோலவே தாழ்த்தப்பட்ட மக்கள் என்கின்ற கூட்டத்தாரும் மனவேதனைப்பட்டுக் கொண்டிருக்கையில் அவர்களையும் பரிகாசம் செய்வதுபோல் அவர்கள் சமூகத்திலும் மதிப்பற்ற ஒருவரை பிடித்துக் கொண்டு அவரையே தாழ்த்தப்பட்ட சமூகப் பிரதிநிதி என்று ஊர் ஊராய் அழைத்துப் போய் நடிப்புக் காட்டுவதுமான காரியத்தையே காங்கரசுக்காரர்கள் ஒரு பெரிய தேசாபிமானமென்றும், தேசிய கைங்கரியமென்றும் கருதிச் செய்து வருவதால் பொதுவாக காங்கரஸ்காரர்களுக்கு இவ்விரு சமூகத்தாரிடையும் செல்வாக்கில்லாமல் போனதோடு அதிருப்தியும், ஆத்திரமும் இருந்து வருகிறது என்பதை யாவரும் மறுக்க முடியாது.

~subhead

உடும்புப் பிடிவாதம்

~shend

இந்த அதிருப்தியையும், ஆத்திரத்தையும் இவ்விரு சமூகமும் தங்களது ஆயிரக்கணக்கான சமூக பொதுக் கூட்டங்களில் எடுத்துக் காட்டியிருப்பதோடு இவர்களில் காங்கரசில் கலந்திருந்தவர்களில் பெரும்பாலோர் காங்கரசிலிருந்து விலகியும் விட்டார்கள்.

இந்த நிலையில் காங்கரஸ்காரர்களுக்கு அறிவும், சமயோசித ஞானமும் இருந்திருக்குமானால், இவ்விரு சமூகத்துக்கும் தங்களிடம் பிரதிநிதிகள் இருப்பதாக நடித்து பொது ஜனங்களை ஏமாற்றும் வேலையை தற்காலீகமாகவாவது கைவிட்டு விட்டு வேறு காரியத்தில் மக்களை ஏமாற்றும் வேலையிலாவது முனைந்திருக்கலாம். அல்லது ஒன்று, இரண்டு, மூன்று, பத்து இடங்களில் ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டாவது படிப்பினை பெற்று சமயோசிதமாக நடந்திருக்கலாம். அதைவிட்டு முதலையும் உடும்பும் தான் பிடித்ததை விடாது என்பதாக பிடிவாதமாக திரும்பத் திரும்ப அதே காரியம் செய்வதால் பொது ஜனங்களுக்கு மேலும் மேலும் ஆத்திரம் வரவும் தொத்து வியாதிபோல் ஒரு ஊரில் நடந்த காரியம் மற்றொரு ஊருக்கு உற்சாகத்தைக் காட்டி அதைவிட அதிகமாக காரியங்கள் நடக்கும்படியான நிலை ஏற்பட்டு வருகிறதானது உண்மையிலேயே வருந்தத்தக்கதாகும்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் பொதுக்கூட்டங்களில் குழப்பம் நடப்பதோ, சிலசில விஷமங்கள் செய்யப்படுவதோ பலாத்காரமான காரியங்கள் செய்யப்படுவதோ, காலித்தனம் நடைபெறுவதோ நமக்கு மிகவும் வெறுக்கத்தக்க காரியமேயாகும். இதை இன்று நேற்றல்ல 15, 20 வருஷகாலமாகவே சொல்லியும், பொது மக்களுக்கு அறிவுறுத்தியும் வருகிறோம்.

~subhead

காங்கரஸ் காலித்தனம்

~shend

ஆனால் அஹிம்சை, நீதி, சமாதானம் என்கின்ற பொய்ப் பெயர்களை வைத்துக் கொண்டு காங்கரஸ்காரர்கள் சட்டம் மீறுவது, உத்திரவை மறுப்பது, பலாத்காரம் ஏற்படும்படியான நிலைமையை வலுவில் வரவழைத்து அடிபடுவது, சமாதானத்துக்கும் நீதிக்கும் விரோதமாய் நடந்து வலிய ஜெயிலுக்கு போவது என்பதான காரியங்களை சுயராஜ்ஜிய கொள்கைகளாகவும், எதிரிகளுக்கு மேடையில்லாமல் செய்யவேண்டும் என்பதற்காக காலிகளுக்கே பெரிதும் காங்கரசில் செல்வாக்கும், இடமும், பதவியும் கொடுத்து அவர்களில் பெரும்பாலோர்க்கு இதிலேயே வயிற்றுப் பிழைப்புக்கு மார்க்கத்தையும் நிலையாக்கி எதிரிகளது சகல பொதுக் கூட்டங்களிலும் அது எப்படிப்பட்ட பொறுப்பும் பெருமையும் உள்ள பதவியாளர்கள் பேசும் கூட்டமானாலும் அவமரியாதை செய்வதும், குறுக்கிடுவதும், “ஜே” கூச்சல் போடுவதும், கல் மண் வாரி இறைப்பது, சில்லரைத்தனம் செய்வது போன்ற காரியங்களில் இறங்கவைத்து கூட்டங்களைக் கலைக்கச் செய்துவிட்டு பிறகு பத்திரிகைகளில் “பொது ஜனங்கள் ஆத்திரம்” “ராமசாமி நாயக்கர் புத்தி கற்பிக்கப்பட்டார்”, “பொப்பிலி ராஜா கூட்டத்தில் குழப்பம்,” “குமாரசாமி ரெட்டியார் விரட்டி அடிக்கப்பட்டார்”, “பி.டி.ராஜன் மீது பொது ஜனங்களுக்கு ஏற்பட்ட ஆத்திரம்”, “சவுந்திர பாண்டியனால் கூட்டம் கூட்ட முடியவில்லை” என்பது போன்ற தலைப்புகள் கொடுத்து எழுதுவதுடன், இக்காரியங்கள் செய்த காலிகளையே பொது ஜனங்கள் என்றும் அக்காலித்தனங்களை பொது ஜன நடவடிக்கைகள் என்றும் எழுதி அவர்களுக்கு சபாஷ் பட்டம் கொடுத்து உற்சாகப்படுத்தி, ஒவ்வொரு ஊரிலும் இக்காலித்தனங்கள் நடக்கும்படி தூண்டிவிட்டு உற்சாகப்படுத்தி வந்தால் இப்போது நடைபெறும் கடைந்தெடுத்த காலித்தனமே கடைந்தெடுத்த அசல் தேசாபிமானமாகவும், தேசிய வீரமாகவும், சுயராஜ்ய பாதையாகவும் ஆக்கப்பட்டு விட்டது.

~subhead

குடி அரசு “ஜோஸியம்”

~shend

காங்கரஸ்காரர்களின் இப்படிப்பட்ட இந்த காரியத்தைக் கண்டித்து வெறுப்புற்று சுமார் 10, 15 வருஷங்களுக்கு முன்பு “குடி அரசி”ல் எழுதும் போதே காங்கரஸ்காரர்களின் காலித்தனம் பாண்டிச்சேரி எலக்ஷன் போது நடப்பது போன்ற பலாத்காரத்தில் நாட்டைக் கொண்டு வந்து விட்டுவிடப் போகிறது என்று அழுது அழுது குறிப்பிட்டிருந்தோம். யாரும் லட்சியம் செய்யவில்லை. சர்க்கார் அதிகாரிகளும் கவலை எடுத்துக் கொள்ளவில்லை. பொதுக் கூட்டங்களுக்கு எவ்வித வரையறை என்பதும் ஏற்படுத்தவில்லை. ஆகவே, அது இன்று ஒவ்வொரு சாதாரண மனிதனுடைய உள்ளத்திலும் தேச சேவை, கட்சிசேவை, பொதுநல சேவை என்றால் காலித்தனம்தான் என்பதான உணர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.

~subhead

தற்கால நிலை

~shend

எந்தப் பொதுக் கூட்டமானாலும் காலித்தனத்தை சமாளிக்கும் முஸ்தீபுடனும், துணிவுடனும் சென்றால்தான் வீடு திரும்ப முடியும் என்கின்ற நிலை நம் நாட்டில் எங்கும் காணக்கிடக்கின்றது. இதற்கு காங்கரஸ்காரர்கள் தான் காரணம் என்பதை இனியாவது உணர்ந்து கட்சியும், கட்சிக்கொள்கையும் எப்படி இருந்தாலும் பேச்சுச் சுதந்திரம், பொதுக்கூட்ட சுதந்திரம் இன்னவிதமாய் இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை ஏற்படுத்தி பல கட்சி, பல சமூக பிரமுகர்கள், தலைவர்கள் என்பவர்கள் ஆகியவர்கள் கலந்து ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது எந்தக் காரணத்தாலாவது அப்படி செய்வது காங்கரஸ் கவுரவத்திற்குக் குறைவு என்று கருதுவார்களானால் பொதுக் கூட்டம் பொது இடத்தில் போட சர்க்காரிடம் அனுமதி பெறவும், தக்க பந்தோபஸ்தும், தக்க அடக்கு முறையும் இருக்கும்படி சட்டம் செய்ய வேண்டும். அப்படிக்கில்லாமல் தங்களுக்கே சொந்தமான காலித்தனத்தை மற்றவர்களும் கையாளுகிறார்கள் என்று கண்டவுடன் அதை அடக்க தங்களுக்கு யோக்கியதை இல்லை என்று அறிந்தவுடன் ஊரார் மீது பழிசொல்வதென்பது சுத்த கோழைத்தனமேயாகும்.

~subhead

கல்வி மந்திரி பூச்சாண்டி

~shend

இதை ஏன் எழுதுகிறோமென்றால், நமது தோழர் கனம் டாக்டர் சுப்பராயன் அவர்கள் சமீபத்தில் ஓமலூருக்குச் சென்றிருந்த பொழுது அங்கு ஏதோ காலித்தனம் நடந்ததில் டாக்டர் சுப்பராயன் அவர்கள் அதைக் கண்டிக்கும் முறையில்

“இந்த மாதிரி கலாட்டாவும் காலித்தனமும் நடக்கக் காரணம் எனது நண்பர் ஈரோடு ஈ.வெ.ராமசாமி நாயக்கர்தான்; அவரது தூண்டுதலால் தான், நான் செல்லுமிடங்களிலெல்லாம் இப்படியே கலாட்டா நடக்கின்றது. இனி இதை அரை க்ஷணமும் பொருக்கமாட்டேன். இதை அடக்க போலீசையும், ராணுவத்தையும் தாராளமாய் உபயோகித்து அவரை நசுக்கிவிட்டு வேறு வேலை பார்க்கிறேன்”

என்று சொன்னாராம். இவர் இப்படிப் பேசியதை நிருபர்கள் நமக்கு எழுதி இருப்பதோடு, பக்கத்தில் இருந்த ஒரு பார்ப்பனரும் இது உண்மை என்றும் டாக்டர் சுப்பராயன் அவர்கள் மிக்க ஆவேசத்தோடும், கோபத்தோடும் இப்படிப் பேசினது உண்டு என்றும், ஈரோட்டுக்கு வந்து சொன்னதோடு தனது அபிப்பிராயம் அப்படி இல்லாவிட்டாலும் தோழர் ஈ.வெ.ராமசாமி முஸ்லிம்களுக்கு இவ்வளவு இடம் கொடுத்ததால் இப்படி ஏற்படுகிறது என்று அப்பிராயப்படுவதாகச் சொல்லிப் போனார்.

~subhead

ராமசாமிக்குப் பெருமையே!

~shend

இந்த சம்பவம் உண்மையாயிருந்தாலும், உண்மையற்றதாயிருந்தாலும், டாக்டர் அவர்கள் கருதியது சரியாயிருந்தாலும் தவறாய் இருந்தாலும், ஏதோ சமாளிப்பதற்காக வீரம் பேசுவதற்கும் வைவதற்கும் ஒரு ஆள் வேண்டுமே என்று தோழர் ராமசாமி பெயரை டாக்டர் அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், எப்படி ஆன போதிலும் டாக்டர் சுப்பராயன் அவர்கள் அவ்வளவு பெரிய கூட்டத்திலும் மற்றும் அவர்கள் செல்லுமிடங்களிலும் இம்மாதிரி பேசி வருவதன் மூலம் தோழர் ராமசாமி மீது சிலருக்காவது வெறுப்போ “துவேஷமோ” ஆத்திரமோ ஏற்படக் கூடுமாயினும் பொதுவில் இது தோழர் ராமசாமிக்கு ஒரு பெருமையை அளித்தது போலவேதான் என நாம் கருதுகிறோம். ஏனெனில் தோழர் ராமசாமிக்கு, தமிழ்நாடு பூராவும் அவ்வளவு பெரிய செல்வாக்கு இருப்பதாகவும், அவர் தூண்டி விடுவதால் டாக்டர் போன்ற பெரியார்கள் கூட்டங்களில் அவராலும், அவரது அரசாங்கத்தின் கீழ் உள்ள போலீசாராலும், அவரது தலைமையின் கீழ் உள்ள தேசிய வீரர்களாலும் சமாளிக்க முடியாத குழப்பம் செய்ய சக்தி ஏற்பட்டிருப்பதாக டாக்டர் அவர்களே ஒப்புக் கொண்டு இதை அடக்க ராணுவத்தைப் பயன்படுத்தப் போவதாகச் சொல்லுவதென்றால் அது உண்மையில் “ஒரு சாதாரண, பொது ஜனங்களிடம் செல்வாக்கில்லாத, தேச நலத்துக்கு விரோதமாகப் பாடுபடுகிற ஒரு வகுப்புவாத சுயநலக்காரர்” என்பவருக்கு உண்மையிலேயே ஒரு பெருமை அல்லவா என்று கேட்கின்றோம். இது போலவே தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியார்.

~subhead

ஆச்சாரியார் கவுரவம்

~shend

அவர்களும் ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக வேண்டி ஒரு “சாதாரணமான குறிப்பிடவோ, லட்சியம் செய்யவோ தகுதி இல்லாத ஒரு பிற்போக்கான மனிதன் என்பவனுக்கு” பிரதானம் கொடுக்கிறோமே என்று கூடக் கருதாமல்

“ஹிந்தி எதிர்ப்பு என்பது ஒரு தனிப்பட்ட நபராகிய எனது நண்பர் ஈரோடு ஈ.வெ.ராமசாமியால் நடத்தப்படுகிறதே தவிர இது பொதுஜன எதிர்ப்பல்ல”

என்று சட்டசபைக் கூட்டத்தில் சொல்லி சமாளித்துக் கொண்டார். இதுவும் உண்மை எப்படி இருந்தாலும் இப்படிச் சொன்னது தோழர் ராமசாமிக்கு கனம் ஆச்சாரியார் கொடுத்த கவுரவமேயாகும்.

ஆனால் இந்த இரண்டு தோழர்களும் இப்படி சொல்லிவிட்டதாலேயே இவர்கள் சமாளித்துக் கொள்ளலாம் என்றோ அல்லது இந்த நொண்டிச் சாக்கைக் கொண்டே தங்களுடைய உத்தேசங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றோ கருதுவார்களானால் கண்டிப்பாக இரு பெரியார்களும் ஏமாற்றமடைவார்கள் என்று உறுதியாகக் கூறுவோம்.

~subhead

ஒரு சவால்

~shend

சாதாரணமாக காங்கரஸ்காரர்கள் தமிழ்நாட்டில் அஹிம்சை, சமாதானம், நீதி என்கின்ற பெயரால் என்றைய தினம் ஒத்துழையாமை என்று ஒரு கிளர்ச்சி நடத்தினார்களோ அன்று முதல் ஏற்பட்ட காலித்தனத்திற்கு தோழர் ராமசாமி பொறுப்பாளி என்று சொல்லுவது எப்படிப் பொருந்தும் என்பது நமக்கு விளங்கவில்லை. 15 – வருஷ காலமாக நடந்து வரும் “குடி அரசு” பத்திரிக்கையிலாவது அல்லது தோழர் ராமசாமியால் இந்த 20-வருஷ காலமாக நடத்தப்பட்டு வரும் பல ஆயிரக்கணக்கான பொதுக் கூட்டங்களிலாவது பலாத்காரத்தை தூண்டக் கூடியதாகவோ பலாத்காரத்துக்கு இடம் கொடுக்கக் கூடியதாகவோ ஒரு எழுத்தோ ஒரு வார்த்தையோ இருந்தது என்று யாராவது எடுத்துக் காட்டமுடியுமா என்று கேட்கின்றோம்.

~subhead

நஷ்டம் யாருக்கு?

~shend

தோழர் ராமசாமி அவர்கள் சாதாரண பேச்சிலும் கூட உதைத்தல், அடித்தல் என்கின்ற பதங்களை உபயோகித்தார் என்பதாக யாராலுமே சொல்ல முடியாது. பொதுக் கூட்டங்களில் கலவரம் செய்வதில் யார் ஜெயித்தாலும் தோழர் ராமசாமிக்குத்தான் நஷ்டம். என்னவென்றால் தோழர் ராமசாமி எப்போதும் எதிர்ப்புக் கட்சியில் இருப்பவர். எதிர் கட்சியின் வண்டவாளங்களை எடுத்துச் சொல்லி பாமர மக்களைத் திருத்த வேண்டுமென்று கருதி இருப்பவர். அப்படிப்பட்டவர் கூட்டத்தில் குழப்பத்திற்கு இடம் கொடுத்தால் அவரது கருத்து நிறைவேறுவதுதான் குந்தகப்பட்டுப் போகுமே யொழிய, லாபம் ஒன்றும் ஏற்படப்போவதில்லை. எதிர்க்கட்சியாராகிய காங்கரஸ்காரர்கள் பிரசாரம் நடப்பதை நிறுத்துவதிலும் அவருக்கு ஒன்றும் பயனில்லை. ஏனெனில் எதிர்கட்சியின் பிரசாரம், புராண பிரசங்கமும் காந்திப் புராண பிரசாரமுமாகும். மக்களுக்கு புரியாத சங்கதியாகிய சுயராஜ்யம், வெள்ளைக்காரனை விரட்டல் போன்ற நம்பப்பார்வதிபதே மாதிரியான அளப்புகள் தானே தவிர அவர்களிடம் சரக்கு வேறு இல்லை என்பது யாவரும் அறிந்ததாகும். இந்த அளப்புகளும் 8 நாளில் புரட்டு, ஏமாற்றல் என்பது விளங்கிவிடக்கூடியதாகவே இருந்து வருவதால் அதைப்பற்றி அவர் கவலைப்படுவதில்லை.

ஆதலால் கூட்டங்களில் நடக்கும் குழப்பங்களுக்கும், நாட்டில் நடக்கும் கிளர்ச்சிகளுக்கும் தோழர் ஈ.வெ.ராமசாமி காரணம் என்றும், ராணுவத்தை உபயோகித்து அதை அடக்க வேண்டும் என்றும் ஒரு கவுரவமான பதவியில் இருந்து பேசுவது என்றால் அவர் அப்பதவிக்கு லாயக்கில்லை என்பதற்கும், அவருக்கும் போதிய ஞானமில்லை என்பதற்கும் இந்தக் காரணமே போதும் என்போம்.

அன்றியும் டாக்டர் சுப்பராயன் அவர்கள் மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் ராமசாமி பயப்படக் கூடியவராகவோ, பின்வாங்கிக் கொண்டு ஓடுபவராகவோ இருப்பாரானால் அவர் இன்று ஒரு மந்திரியாகவும் அவருடைய டிரைவர் ஒரு மந்திரி அதுவும் போலீஸ் இலாக்காவை நிர்வகிக்கும் மந்திரியாகவும் இருந்திருப்பார். அவரிடம் அந்தக் கோழைத்தனமும் சுயநலத் தன்மையும் இல்லாததாலேயே அவ்வளவு சிறிய மனிதரை இன்று இவ்வளவு பெரியார்கள் ராணுவத்தை பயன்படுத்தி அடக்கப் போகிறேன் என்று சபதங்கூறவும் அவரை எப்படி ஒழிப்பது என்பதற்கு சர்க்கார் கோட்டையில் (ஊணிணூt ண்t. எஞுணிணூஞ்ஞு)ல் 10-மந்திரிகள் கூடி சதா சதியாலோசனை செய்யவுமான முயற்சிகள் நடைபெற வேண்டியதாகிவிட்டன.

~subhead

ராமசாமி பூச்சாண்டிக்குப் பயப்படார்

~shend

தோழர் ராமசாமி இந்தப் பூச்சாண்டிக்குப் பயப்பட்டவரல்ல. எதிர்த்தால் எதிர்ப்பவன் பலமும் எதிர்க்கப்படுகிறவனுக்கே வந்துசேரும் என்கின்ற ஒரு கட்டுக்கதை தோழர் ராமசாமி விஷயத்தில் மெய்க்கதையே ஆகிவிடும் என்கின்ற உறுதியின் பேரிலேயே அவரது ரதத்தை ஒண்டியாக இருந்து ஓட்டிக்கொண்டிருக்கிறார். காலிதனத்துக்கும், குழப்பத்துக்கும் உண்மையில் தோழர் ராமசாமி ஒரு பயங்காளியே ஆவார். ஆனால் ஏற்பட்டு விட்டால் அது கண்ணியமான முடிவு அடைவதில் ஒரு கை பார்க்காமல் திரும்புகிற – ஓட்டமெடுக்கும் – காரியம் அவரது அகராதியிலேயே கிடையாது.

~subhead

ராணுவப் போலீஸ் வரட்டுமே!

~shend

ஆகவே டாக்டர் சுப்பராயன் அவர்கள் அறிவுடையவரானால் காலிதனத்துக்கும், குழப்பத்துக்கும் காரணம் என்ன வென்பதையும் இதுவரை ஜஸ்டிஸ் மந்திரிகளிடம் செலாவணியாய்க் கொண்டிருந்த காரணம் இந்த தேசாபிமான மந்திரிகளிடம் செலாவணி ஆவதற்குக் காரணம் என்ன என்பதையும் கவனித்துப் பார்த்துத் திருத்திக் கொள்ளட்டும். அல்லது அதைப்பற்றிக் கவலை இல்லாவிட்டால், உண்மையில் அவருக்கு ஆண்மை இருந்தால் அவரது போலீசையும், அவரது ராணுவத்தையும் பயன்படுத்திப் பார்க்கட்டும். இரண்டையும் வரவேற்கிறோம். ராணுவ இரத்தம் யார் சரீரத்தில் ஓடுகிறது என்பதைப் பரீட்சிக்க டாக்டர் அவர்களிடம் ஏதாவது கருவி இருக்குமானால் பரீட்சித்துப் பார்த்து பிறகு ராணுவத்தைப் பற்றி நினைக்கட்டும் என்றுகூட வாய்தா கொடுக்கத் தயாராயிருக்கிறோம்.

~subhead

ஒரு வேண்டுகோள்

~shend

பொதுவாக ஒரு வேண்டுகோள் என்னவென்றால் சுயமரியாதைக் காரர்களோ, அல்லது முஸ்லிம் லீக் காரர்களோ தங்களுடைய பிரதிநிதிகள் என்பவர்கள் அல்லாதவர்கள் என்பதாக யாரையாவது கருதி அத்தாட்சி (காட்டவேண்டிய அவசியமில்லை) காட்ட வேண்டுமென்று கருதினால் காட்டட்டும். ஆனால் கலவரம், குழப்பம், காலித்தனம் அல்லது அப்படிப்பட்டவர்கள் கூட்டத்தில் ஏதாவது ஒரு சிறிய அசெளகரியம், குறுக்கிடல், கேள்வி கேட்டல் முதலாகிய காரியங்களைக் கண்டிப்பாக செய்யக்கூடாது என்று வணக்கமாக கேட்டுக் கொள்கிறோம்.

அநேகமாக அவர்கள் எதிரிகள் கூட்டத்துக்கு போகக் கூடாது என்பதே நமது பிரார்த்தனை. விஷயம் அறிய உண்மையில் ஆசையிருந்தால் கூடிய மட்டும் அடையாளம் தெரியாமல் இருந்துவிட்டு வந்துவிடவேண்டும் என்றே வணக்கமாக கேட்டுக் கொள்கிறோம். இது தோழர் டாக்டர் சுப்பராயன் மிரட்டுவதற்காக பயந்து கொண்டு சொல்வது அல்ல நாம் இந்த 15, 20 வருஷங்களாக கையாண்டு வந்த கொள்கையே இது. ஆதலாலும் இதை கண்டிப்பாக அனுசரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

முஸ்லிம் தோழர்களுக்கு தனியாக ஒரு வார்த்தை என்னவென்றால் நமது பிரசாரம் இன்னும் தீவிரமாக நடைபெற வேண்டுமானால் எதிரி கூட்டமானாலும் சரி கண்டிப்பாக கலவரத்துக்கு இடமில்லாத முறையில் நடத்தும் படியாக நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதேயாகும்.

மற்றப்படி டாக்டர் சுப்பராயன் அவர்கள் பூச்சாண்டியை எதிர்பார்க்கிறோம் என்பதையும் மறுமுறையும் காட்டி இதை முடிக்கிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 24.04.1938

You may also like...