சங்கராச்சாரிக்கு அவமரியாதையா? டிப்டி கலைக்டர் தர்பார்
சென்ற 22-9-33 வெள்ளிக்கிழமை இரவு தஞ்சையில் முகாமிட்டுள்ள சங்கராச்சாரியைப் பார்க்க அவ்வூர் டிப்டி சூப்ரெண்டெண்டான ஒரு பிராமணரல்லாத கனவான் குடும்ப சமேதராய் சென்றிருந்தார். அது சமயம் சங்கராச்சாரியாரின் முகாமில் நின்று கொண்டிருந்த – தஞ்சை டிவிஷன் ஹெட் குவார்ட்டர் டிப்டி கலைக்டர் அவர்கள் ³யாரை அழைத்து எவ்வாறு மேலே ஷர்ட் போட்டுக்கொண்டு போகலாமென்று வினவினார். அதன் பேரில் இருவர்களுக்கும் சில வாக்கு வாதங்கள் நிகழ்ந்தது.
இதுவிஷயமாக தஞ்சையில் பெருத்த பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சங்கராச்சாரியின் முன்பு சட்டை போட்டுக்கொண்டு போகக்கூடாதென்பது பழக்கத்தில் இருப்பதாகவே ஒத்துக்கொண்ட போதிலும், அதை அமுல் நடத்த (நுகேடிசஉந) டிப்டி கலைக்டருக்கு என்ன சம்மந்தமுன்டென்பதும், அதற்கு சங்கராச்சாரிக்கு ஆள் மாகாணம் இல்லையா என்றும், ³ டிப்டி கலைக்டர் அந்த வேலையைத்தானே வகித்துக் கொண்டு சங்கராச்சாரியா லும் அவர் சிப்பந்திகளாலும் செய்ய சாத்தியப்படாததான காரியத்தை தான் தன் அதிகார பதவியை கொண்டு அமுல் நடத்தி, மதத்தைக் காப்பாற்ற செய்யும் சூழ்ச்சி யாயென்றும் நமக்கு விளங்கவில்லை.
எந்த பிரத்தியேக அதிகாரத்தைக் கொண்டு டிப்டி கலைக்டர் நடந்து கொண்டார் என்கிற விஷயத்திற்கு வல்லத்திற்கு விஜயமாகியிருக்கும் ஜில்லா கலைக்டருக்கு ரிப்போர்ட் செய்யப் பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது. (ஒருநிரூபர்)
குடி அரசு – செய்தி விளக்கம் – 01.10.1933