சென்னையில் மத்திய அரசு ஊழியர்கள் நடத்திய இடஒதுக்கீடு கருத்தரங்கம்
2015, செப்.8ஆம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை ‘இக்ஷா’ அரங்கில் “இடஒதுக்கீடும்-பார்ப்பன சூழ்ச்சிகளும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. எல்.அய்.சி. முற்போக்கு ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்த கருத்தரங்கத்தில் அய்யனார் தலைமையில் அன்பு தனசேகரன் உரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், இடஒதுக்கீடு கேட்டு குஜராத்தில் பட்டேல்கள் நடத்தும் போராட்டத்தின் சூழ்ச்சிகளை விளக்கியும் அதைத் தொடர்ந்து பார்ப்பன ஊடகங்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக முன் வைக்கும் திசை திருப்பும் வாதங்களுக்கு பதிலளித்தும் ஒரு மணி நேரம் பேசினார். தோழர் கமலக்கண்ணன் நன்றி கூறினார். மத்திய அரசு ஊழியர்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர்.
பெரியார் முழக்கம் 24092015 இதழ்