திரு. வேதாசலம் அவர்களின் கடிதம்

பல்லாவரம் திரு. வேதாசலம் அவர்கள் திரு.ஈ.வெ. இராமசாமி நாயக்கருக்கு திரு. விஸ்வநாதம் பிள்ளை அவர்கள் மூலம் எழுதிய கடிதம்:-

அன்புள்ள ஐயா,
நலம், தங்கள் நலத்தைத் தெரிவித்தல் வேண்டும். என்னைப் பற்றிய ஒரு குறிப்பு ‘குடி அரசு’ பத்திரிகையில் வெளிவந்திருப்பதாக திருச்சி திரு. விஸ்வநாத பிள்ளை வாயிலாக இன்று அறிந்தேன். சென்னை குகானந்த நிலையத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி முறையைப்பற்றித் ‘திராவிடன்’ ‘தமிழ் நாடு’ பத்திரிகைகளிற் போந்துள்ள சிலவுரைகளை நம்பி, அக்குறிப்புத் தங்களால் வரையப்பட்டதென அறிகின்றேன். தங்களுக்காவது, தங்கள் இயக் கத்தைச் சார்ந்த அன்பர்கட்காவது எவ்வகையான தீங்கும் செய்ய அல்லது செய்விக்க வேண்டுமென்று யான் எண்ணியதுமில்லை, யாண்டும் சொல்லி யதுமில்லை. தாங்கள் என்னை வேறாக நினைத்து என்மீது வருந்துதல் வேண் டாம். என்றாலும், கடவுளைப்பற்றியும் அடியார்களைப் பற்றியும் தாங்கள் கொண்டுள்ள கோட்பாடுகளில் மட்டும் யான் கருத்து உடன்பாடுடை யேன்னல்லேன். பத்திரிகைகளில் வெளிவந்த சிலவற்றைப் பார்த்து தாங்கள் வருந்தியிருந்தால், அவ்வருத்தத்தை தாங்கள் அன்பு கூர்ந்து நீக்கிவிடல் வேண்டும். தமிழ்மக்கள் முன்னேற்றத்தின் பொருட்டுத் தாங்கள் செய்துவரும் நன் முயற்சிகள் இனிது நடைபெறுக.

அன்புள்ள,

24-8-28 சு.வேதாசலம்

You may also like...

Leave a Reply