திரு. வேதாசலம்
திரு. வேதாசலம் அவர்களின் சென்னை ராயபேட்டை குகாநந்த நிலைய ஆண்டு விழா வைபவத்தின் அக்கிராசனப் பிரசங்கத்திலும் திருவாளர் தண்டபாணிபிள்ளை, கண்ணப்பர், ராமனாதன் ஆகியோர்களின் வாதங்களின் போதும் பேசிய விஷயங்களைப்பற்றி வெளியான “தமிழ்நாடு” “திராவிடன்” பத்திரிகையில் கண்ட விஷயங்களுக்கு திரு வேதாசலம் அவர்களின் சமாதானமோ மறுப்போ ஒரு வாரத்தில் வராத பக்ஷத்தில் நாம் அதன் ஆராய்ச்சியை தெரிவிப்பதாக எழுதியிருந்தோம், அந்தப்படி இதுவரை அவரால் யாதொரு மறுப்போ சமாதானமோ இதுவரை வராததால் திரு. வேதாசலம் என்னும் தலைப்பில் அவற்றை ஆராய்ந்து எழுதி வருவோம் என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறோம். இந்த நிலையில் மற்றவர்கள் எழுதும் வியாசங்களுக்கு போதிய இடமளிக்க முடியாமைக்கும் வருந்துகின்றோம்.
குடி அரசு – அறிவிப்பு – 19.08.1928