பாலிய விவாகம்
குழந்தை : என்னடி அம்மா நேற்று அவன் கழுத்தில் போட்டிருந்த நகையைக் காணோமே! அதை யார் எடுத்தார்கள்?
தாயார் : அடி பாவி அது நகையல்ல ; தாலி அதை ராத்திரி அறுத் தாய்விட்டது.
குழந்தை : எனக்குத் தெரியவில்லையே.
தாயார்: ராத்திரி 11 -மணி இருக்கும் நீ அப்போது தூங்கி விழுந்து கொண்டிருந்தாய். ஆதலால் உனக்குத் தெரியவில்லை.
குழந்தை : அதை ஏன் அறுத்தார்கள்
தாயார்: அத்தாலியைக் கட்டின உன் புருஷன் இறந்துபோய் விட்டா னல்லவா. அதனால் அறுத்துவிட்டார்கள்.
குழந்தை : அவன் போனால் போகட்டுமே. வேறு யாரையாவது கட்டச் சொல்வதுதானே, அதையேன் எனக்குத் தெரியாமல் கழட்டிக் கொண்டாய், அதை மறுபடியும் என் கழுத்தில் போட்டால் தான் சாப்பிடுவேன். ஊ! .ஊ!! .ஊ!!!
குடி அரசு – உரையாடல் – 01.04.1928