“தமிழ்நாடு” பத்திரிகையின் புரட்டு
‘தமிழ்நாடு’ பத்திரிகை 6000 பிரதி வெளியாகின்றது என்று சூழ்ச்சி அறிக்கை வெளியானதைப் பற்றி நாம் முன்னமேயே அச் சூழ்ச்சிக்கு ஆதர வாய் இருந்த சர்க்கார் அதிகாரிகளையும் கண்டித்து எழுதியிருந்தோம். இப்போது சர்க்காரார் இனி அம்மாதிரி நடந்து கொள்ளுவதில்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்கள்.
மேற்படி அறிக்கை வெளியிடப்பட்ட காலத்தில் ‘தமிழ்நாடு’ தினசரிப் பத்திரிகை ஆரம்பிக்கவே இல்லை. வாரப் பத்திரிகை அவ்வளவு இருந்ததாக அவர்களே சொல்லுவதும் இல்லை. ஆகவே இப்புரட்டு சர்க்காருக்கு தாராளமாய் வெளிப்படுத்தப்பட்டுவிட்டதால் சர்க்கார் 23.3.28ல் ஒரு அறிக்கை வெளியிட்டு அதில் ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகை இந்த இரண்டு வருஷ மாய் அதிகமாய்க் கொண்டு வருவதை ஒப்புக் கொண்டு இனிமேல் விவகாரத் திற்கு இடம் கொடுக்கத் தக்கதான பத்திரிகைகளின் எண்ணிக்கை களைப் பற்றி வெளிப்படுத்துவதில்லை என்றும் தெரிவித்து விட்டார்கள். இதிலிருந்து ஸ்ரீ வரதராஜுலுவின் சூழ்ச்சி நிஜமா அல்லது நாயக்கரின் கண்ணப்பரின் பொறாமை நிஜமா? என்பதை முடிவு செய்யும் வேலையை பொது ஜனங் களுக்கே விட்டு விடுகின்றோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 01.04.1928