சைமனுக்கு பார்ப்பனர்களின் விருந்து
ஸ்ரீமான் சர்.சி.பி.ராமசாமி அய்யர் என்கின்ற பார்ப்பனர் சைமன் கமிஷனுக்கு ஒரு விருந்து வைத்து பார்ப்பனர்களுக்கும் அழைப்பு அனுப்பி எல்லா பார்ப்பனர்களையும் அறிமுகம் செய்து வைத்ததோடு அவரிடம் பார்ப்பனப் பிரசாரமும் செய்யப்பட்டு விட்டது. இதைப்பற்றி பேசுவோர் யாருமில்லை. தேசீய வீரர்களும் தேசீயப் பத்திரிகைகளும் தங்களை மறைத்துக் கொண்டன. பார்ப்பனரல்லாதார் யாராவது பகிஷ்காரப் புரட்டில் கலவாவிட்டால் அல்லது பகிஷ்கார புரட்டர்களின் யோக்கியதையை வெளியாக்கினால் அதற்கு பெயர் பக்தர்கள் பரவசமாம், அல்லது சர்க்கார் தாசர்களாம். என்னே அரசியல் அயோக்கியத்தனம்!
குடி அரசு – செய்திக் குறிப்பு – 04.03.1928