சுப்பிரமணியசாமிக்காக பதவி பறிக்கப்பட்ட ஐ.ஐ.டி. இயக்குநர்
சுப்ரமணிய சாமியின் கருத்து – தங்களுக்கு உடன்பாடானது அல்ல என்றும், அவர் கருத்துகள் பா.ஜ.க. வின் கருத்து அல்ல என்றும் தமிழிசை சவுந்தர்ராஜன், பொன்னப்பர் போன்ற பா.ஜ.க.வின் ‘சூத்திர’ தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், பா.ஜ.க.வில் சுப்ரமணியசாமி செல்வாக்குள்ள நபராகவே உலவுகிறார் என்பதற்கு சான்றாக அண்மையில் ஒரு செய்தி வந்துள்ளது.
டெல்லி அய்.அய்.டி. (இந்திய தொழில்நுட்ப நிறுவனம்) உயர் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் இரகுநாத். கே.செவ்கவோன்கர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அய்.அய்.டி. – குடி யரசுத் தலைவரின் நேரடி கட்டுப்பாட் டிலுள்ள ஒரு தன்னாட்சி அமைப்பு. ஆனால், இவரது பதவி விலகல் கடிதம், மனித வளத் துறை அமைச்சரால் ஏற்கப்பட்டிருக்கிறது. கட்டாயப் படுத்தப்படுத்தி மோடி ஆட்சி இவரிடமிருந்து விலகல் கடிதத்தை வாங்கியுள்ளதாக தலைநகரில் செய்திகள் உலா வருவதாக ‘இந்து’ நாளேடு (டிச.29) கூறுகிறது.
காரணம், சுப்ரமணிய சாமியின் பிரச்சினைதான் 1969ஆம் ஆண்டு சுப்ரமணியசாமி, இந்த நிறுவனத்தில் பொருளாதார பேராசிரியராக இருந்து, பிறகு இந்திரா காந்தியால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பதவியிலிருந்த காலத்தில் தனக்கு வர வேண்டிய ரூ.70 இலட்சத்தை திருப்பித் தரக் கோரி, சுப்ரமணியசாமி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், மத்திய வேலைவாய்ப்புத் துறை, அமைச்சகம் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள போது, சுப்பிர மணியசாமிக்கு பணத்தைத் திருப்பித் தர முடிவெடுத்தது. இதற்கு அய்.அய்.டி. இயக்குனர் உடன்படாததால் அவரிட மிருந்து கட்டாயப்படுத்தி, விலகல் கடிதம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.
அத்துடன் அய்.அய்.டி. வளாகத் துக்குள்ளேயே சச்சின் டென்டுல்கர் பெயரில் ‘கிரிக்கெட் மய்யம்’ (அகாடமி) ஒன்றை நிறுவும் அரசின் முயற்சியை இந்த இயக்குனர் எதிர்த்ததும் மற்றொரு காரணம் என்று கூறப்படுகிறது. அரசு நிர்ப்பந்தத்தால் பதவி விலகியதாக வதந்தியைப் பரப்பி வருவதாக அந்த இயக்குனர் மீது சுப்ரமணியசாமி ‘மான இழப்பு’ வழக்கு தொடரப் போவதாக கூறியிருக் கிறார்.
அய்.அய்.டி. முன்னாள் மாணவர் அமைப்பு, அரசின் தலையீட்டைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி யிருக்கிறது. இதில் சுப்ரமணியசாமி மூக்கை நுழைப்பதிலிருந்து சுப்ர மணியசாமி தான் பிரச்சினைக்கு காரணம் என்பது அம்பலத்துக்கு வந்து விடுகிறது. மோடி ஆட்சியில் பார்ப் பனர்கள் கொடி கட்டிப் பறக்கிறார்கள்.
‘கொலை வழக்கு’ காஞ்சி சங்கரன் கூட சுப்ரமணியசாமிக்கு சரிசமமாக இருக்கைப்போட்டு பேசுகிறார். அமைச்சராக இருந்தாலும் பொன்னப்பர் ‘சூத்திரர்’ என்பதால் தரையில் உட்கார வைத்துப் பேசுகிறார்.
இந்த ‘இழிவுகள்’ படங்களாக பத்திரிகைகளில் வந்து கொண்டிருந்தா லும் ‘சூத்திரர்கள்’ மானமற்றவர் களாகவே இருப்பது கேவலம் அல்லவா?
பெரியார் முழக்கம் 01012015 இதழ்