வினாக்கள்… விடைகள்…!
‘தில்லை நடராஜன்’ கோயில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். – செய்தி
கோயில் உரிமை ‘அவாளு’க்கு மட்டும்; தேர் இழுக்கும் உரிமை ‘சூத்திராளுக்கு’ மட்டும்! ‘இந்து ஒற்றுமை’ ஓங்குக…
பிற மதத்திலிருந்து ‘தாய் மதத்துக்கு’ திருப்பும் இயக்கத்தை விசுவ இந்து பரிஷத் தீவிரமாக நடத்துகிறது. – செய்தி
அமெரிக்கா, இலண்டன்னு ‘பிற தேசம்’ போன இந்துக்களை ‘தாய் தேசம்’ நோக்கித் திருப்பும் இயக்கத்தையும் நடத்துவேளா?
‘மிஸ்டு கால்’ போட்டால் பா.ஜ.க.வில் உறுப்பின ராக முடியும். – செய்தி
10 ‘மிஸ்டு கால்’ வந்தால் ‘டாக்டைம்’ சலுகை உண்டுன்னு அறிவிச்சுப் பாருங்க, இன்னும் ஆதரவு பெருகும்!
ஸ்ரீரங்கம் ‘சொர்க்க வாசல்’ திறப்பின்போது பக்தர்களுக்கு உதவிட 108 ஆம்புலன்ஸ். – செய்தி
நியாயம்தான். உண்மையாகவே எந்த பக்தராவது சொர்க்கத்துக்குப் போயிடாம தடுக்க வேண்டியது கோயிலின் கடமையாச்சே! கடமை தவறுவது, ‘கடவுளுக்கே’ ஆகாது.
டெல்லி – தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற ஆம் ஆத்மி பா.ஜ.க. தலைவர்கள் கைகலப்பு. – செய்தி
இப்படியே போனா – தொலைக்காட்சி விவாதத் துக்கும் காவல்துறை அனுமதி வழங்கும் நிலை வந்துடும்போல!
ரிக்வேதத்தில் நமது மூதாதையர்கள் விமானம் ஓட்டியதற்கான சான்றுகள் உண்டு என்று மும்பையில் விஞ்ஞானிகள் மாநாட்டில் பேச்சு. – செய்தி
அப்ப, ஏன், ‘பிராமணாள்’ கடல் தாண்டுவது பாவம்னு சொன்னீங்க?
அமெரிக்காவில் மதுபாட்டிலில் காந்தி படம். – செய்தி
பாவம் காந்தி! அவரு படத்தை எடுத்துட்டு இராமன் படம் போடுங்க. அவன் தாங்க ‘சுராபானத்தை’ சுவைத்துக் குடிச்சவன்!
பெரியார் முழக்கம் 08012015 இதழ்