மோடி ஆட்சிக்கு உச்சநீதிமன்றம் குட்டு

பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசு முறைகேடாக வழங்கிய சலுகைகள், அந் நிறுவனங்களின் வரி ஏய்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழியாக அம்பலப்படுத்திய அமைப்பு ‘கிரீன் பீஸ்’ என்ற தொண்டு நிறுவனம், பன்னாட்டு நிறுவனங்களை திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு மோடி அரசு இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் அதன் தலைமை அமைப்பு வழங்கிய ரூ.1.87 கோடியை முடக்கியது. இந்த நடவடிக்கையை எதிர்த்து, ‘கிரீன் பீஸ்’ அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தது. வழக்கை விசாரித்த நீதிபதி சக்தார், அரசின் நடவடிக்கையை இரத்து செய்தார். அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படு வதால் ஒரு அமைப்பின் நிதியை முடக்கிட முடியாது. இது தேச விரோத நடவடிக்கை என்றும் கூற முடியாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறி யுள்ளார். ‘கிரீன் பீஸ்’ நிறுவனத்தின் வங்கிக் கணக்கை முடக்குவதற்கான ஆவணங்கள் ஏதும் அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட வில்லை. உள்துறை அமைச்சகம் முதலில் விசாரணைகளை நடத்தி, தேவைப்பட்டால் கணக்கை முடக்க வேண்டும். ஆனால், இங்கே தலை கீழாக செயல்பட்டிருக்கிறது” என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். கிரீன்பீஸ் நிறுவனத்தின் இந்திய செயல்பாட்டாளர் பிரியாபிள்ளை, கடந்த ஜனவரி 11ஆம் தேதி பிரிட்டன் நாடாளுமன்ற உறுப் பினர்கள் கூட்டத் தில் பங்கேற்க இலண்டன் செல்ல முயன்றபோது, புதுடில்லி விமான நிலையத்தில் விமானத் திலிருந்து கீழே இறக்கி விடப்பட்டு, அதிகாரிகளால் தடுக்கப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் மாகன் பகுதியில் இலண்டனில் பதிவு செய்த தொழில் நிறுவனம், சுற்றுச் சூழலைப் பாதிக்கும் ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரு கிறார்கள். இது குறித்து இலண்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுத் துரைக்கவே அவர் பயணம் மேற்கொண் டார். இப்படி விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட அடுத்த நாள் தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளி வந்தது. பன்னாட்டு நிறுவனங்களுக்காக, மோடி ஆட்சி மேற்கொண்ட இந்த நடவடிக்கை, நீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது, ஆட்சிக்கு மிகப் பெரும் பின்னடைவாகும்.
காந்தி சிலையை அவமதித்த காவிக் கும்பல்
திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் நகராட்சி சார்பில் அமைக்கப் பட்டிருக்கும் காந்தி சிலைக்கு, காவிக் கும்பல் காவித் துண்டு மற்றும் ருத்ராட்ச மாலை அணிவித்து அவமதித்திருக்கிறது. 1970ஆம் ஆண்டு வைக்கப்பட்ட சிலை இது. செய்தியறிந்து, கழக மாவட்ட செய லாளர் காளிதாசு, தி.மு.க. நகர அவைத் தலைவர் முருகையன், திராவிடர் கழகத்தைச் சார்ந்த சந்திரபோஸ், த.மு.மு.க.வைச் சார்ந்த நிசார் அகமது உள்ளிட்டோர், காவல்துறை யினரிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத் தினர். காங்கிரஸ் கட்சியினர், பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட் டம் நடத்தினர். இதேபோல் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி பெரியார் சிலைக்கு காவிக் கும்பல் எலுமிச்சம் பழ மாலை போட்டு அவமதித்தது. 40 நாட்கள் ஆகியும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வில்லை. தொடரும் காவிக் கும்பலின் அட்ட காசத்தைக் கண்டித்து ஜன.30ஆம் தேதி மன்னையில் கண்டனக் கூட்டம் நடைபெறவிருக்கிறது என்று காளிதாசு அறிவித்துள்ளார்.

பெரியார் முழக்கம் 29012015 இதழ்

You may also like...

Leave a Reply