“சாமி சிலையை தொட உங்களுக்கு அருகதை இல்லை!”
‘பூணூல் அறுப்பு’ குறித்து ‘நக்கீரன்’ (ஏப்.25-28) ஏடு வெளியிட்ட செய்தி கட்டுரையின் சில பகுதிகள்:
ஆள் அரவமற்று இருந்தது முதியவர் தாக்கப்பட்ட அந்த சின்ன முண்டக்கன்னி கோயில் தெரு. வரிசை வீடுகளின் வாசல்கள் வெறிச்சோடி கிடக்க, நாம் அப்படியே காரணீ°வரர் கோயில் நோக்கிச் சென்றோம். சில தேநீர் கடைகள், ஆட்டோ °டாண்ட் கண்ணுக்குத் தென்பட அங்கே விசாரித்தோம்.
“தாக்கியது பெரியார் கட்சிக்காரங்க இல்ல. வேற ஆட்கள் இங்க இந்த கோயில்ல குருக்களா இருக்குற அவங்க பையன் சண்முக குருக்களை குறி வச்சுதான் வந்தாங்க. அதுல விசுவநாதன் மாட்டிக் கிட்டாரு” என்றார் ஒருவர். ‘இது என்ன புதிய திருப்பமாக இருக்கிறதே?’ என்ற ஒருவரிடம் மேலும் பேச்சு கொடுத்தோம்.
“இங்க இந்த காரணீ°வரர் கோயிலுக்கு எதிர்க்க ஆட்டோ °டாண்டுல சின்னதா ஒரு பிள்ளையார் சிலை இருக்கு. ஆட்டோக் காரங்களே இதுக்கு பூஜை போடுவோம். அப்படிதான் ஒருநாள் காலையில ஒரு டிரைவர், சிலைக்கு சந்தனக் காப்பு போட்டுக்கிட்டு இருந்தார். அதை இங்க காரணீ°வரர் கோயில்ல உள்ள சண்முக குருக்கள் பார்த்துட்டு, ‘சாமி சிலையை தொட உங்களுக்கு அருகதையில்லை’ன்னு எல்லோர் முன்னாடியும் ரொம்ப மோசமா திட்டிட்டாரு. கோப மானாலும் அப்போ மாலை போட்டு இருந்ததால அந்த டிரைவர் அமைதியா போயிட்டாரு. பின்னாடி மலைக்கு போயிட்டு திரும்பியதும் ஆளுங்கள கூட்டிக்கிட்டு வந்து நியாயம் கேட்கப் போயிருக்காரு. அப்போதான் இந்த பெரிய குருக்கள் சிக்கவும் சண்முக குருக்கள்னு நினச்சு தாக்கியிருக்காங்க…” என்றார் விரிவாக. நாம் இதை அங்குள்ள கடைக்காரர்களிடம், அக்கம் பக்கத்தினரிடம் விசாரிக்க, ‘ஆமா இங்க ஒரு நாள் கோயில் முன்னாடி வாக்குவாதம் நடந்தது’ என்றனர்.
சண்முக குருக்களிடம் நம்மிடம் ஆட்டோ தோழர்கள் சொன்னதைப் பற்றிக் கேட்டோம்:
“காரணீ°வரர் கோயில் மட்டுமில்லாம வெளியே உள்ள பிள்ளையாருக்கு புரோகித பணி செய்வதும் நான்தான். சாமி விக்கிரகங்களை மத்தவா தொடக் கூடாது. நாங்க மட்டும்தான் தொட்டு பூஜை செய்ய முடியும்னு வேதம் சொல்லுது. இத நாங்க ஏத்துண்டு இருக்கோம். அப்படியிருக்க அன்னிக்கு மத்தவாளான அவா (ஆட்டோ டிரைவர்) பிள்ளையாரை தொட்டு சந்தனக் காப்பு செஞ்சதால ‘தப்பு’ன்னு சத்தம் போட்டேன். அவா அவாக்கு என்ன இந்துமதம் ஒதுக்கியிருக்கோ அத செய்றது தான் முறையான இறைப்பணி” என்றார்.
……………. ……………. ……………
……………. ……………. ……………
“கருப்பு சட்டைக்காரங்க இந்த °டேட்ல மொத்தம் நூறு, நூத்தம்பது பேர்தான் இருப்பா. பிராமணாள் நாங்க 40 இலட்சம் பேர் இருக்கோம். எல்லா உயர் பதவியிலிலயும் அதிகாரத்துலயும் நாங்க தான் இருக்கோம். நாங்க கோபப்பட்டா அவாளாம் தாங்க மாட்டா” என்றார் விசுவநாத குருக்கள் ஆவேசமாக.
பெரியார் முழக்கம் 30042015 இதழ்