இராசிபுரம் – கொளத்தூரில் திராவிட இயக்க சாதனை விளக்கக் கூட்டங்கள்

கழகம் சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவருகிறது.

கொளத்தூர் : கொளத்தூர் ஒன்றியக் கழக சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டம் 11-12-2023 அன்று மாலை 5மணிக்கு 9வது தெருமுனைக் கூட்டம் கோவிந்தப்பாடியிலும், 10வது தெருமுனைக் கூட்டம் கத்திரிப்பட்டி மலையாள தெருவிலும் நடைபெற்றது.

டி.கே.ஆர் இசைக் குழுவின் பகுத்தறிவுப் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது.

திமுக கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார், மாணவர் அணி துணை அமைப்பாளர் சதாசிவம், முன்னாள் தலைவர் முனுசாமி, கிளைச் செயலாளர் கணேசன், செட்டிப்பட்டி கிளைச் செயலாளர் பழனிச்சாமி, குள்ளவீரன்பட்டி ஈஸ்வரன், கண்ணன் நெசவாளர் அணி, சுப்பிரமணி, தேவராஜ், பரத், இளங்கோ, கார்த்தி, குமார், கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொளத்தூர் நகரத் தலைவர் இராமமூர்த்தி, தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், வழக்கறிஞர் கண்ணகி, நாகராஜ் ஆகியோர் தெருமுனைக் கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கி சிறப்புரையாற்றினர்.

நிறைவாக கத்திரிப்பட்டி பழனியப்பன் நன்றி கூறினார். கபிலன் ஸ்டுடியோ விஜய்குமார் கூட்டத்தை ஒருங்கிணைத்தார். கத்திரிப்பட்டி பழனியப்பன் – கோவிந்தப்பாடி சென்னியப்பன் ஆகியோர் இரவு உணவை ஏற்பாடு செய்தனர்.

11வது தெருமுனைக் கூட்டம் 12-12-2023 அன்று மாலை 5 மணிக்கு கொளத்தூர் டெம்போ ஸ்டேண்ட் அருகிலும், 12வது கூட்டம் கொசக்கரட்டூரிலும் நடைபெற்றது.

கொளத்தூர் சூரிய குமார், கொளத்தூர் இராமமூர்த்தி, காவை ஈஸ்வரன், ஆசிரியர் செல்வம், தோழர் சேட்டு குமார், ஆர்.எஸ்.நாகராஜ் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.

நங்கவள்ளி பொறுப்பாளர் கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

நாமக்கல் : நாமக்கல் மாவட்டக் கழக  சார்பில் வைக்கம் நூற்றாண்டு மற்றும் எது திராவிடம்? எது சனாதனம்?  தெருமுனைக் கூட்டமானது 13.12.2013 அன்று பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளிலும், 14-12-2023 அன்று திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர் பகுதிகளிலும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நிறைவுப் பொதுக்கூட்டம் மாலை 6:30 மணியளவில் இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு இராசிபுரம் நகரச் செயலாளர் பிடல் சேகுவேரா தலைமை தாங்கினார், நகர அமைப்பாளர் சுமதி மதிவதனி வரவேற்புரையாற்றினார்.

கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு முன்னாள் உறுப்பினர் மணிவேல், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கைலாஷ், திமுக மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளர் V.பாலு Ex. MC, விசிக மண்டலச் செயலாளர் அரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நாமக்கல் கழக மாவட்டச் செயலாளர் சரவணன், பொருளாளர் முத்துப்பாண்டி, ராசிபுரம் நகரத் தலைவர் அன்பரசன், தூய்மைத் தொழிலாளர் பேரவை, பெருமாள், சி.பி.ஐ. நகரச் செயலாளர் மணிமாறன், வி.சி.க. வெண்ணந்தூர் பேரூர் செயலாளர் நடராஜன், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் மீனா, திராவிடர் கழக மின்னல் செல்வம், திவிக வெண்ணந்தூர் ஒன்றிய பொறுப்பாளர் ராமச்சந்திரன், விசிக பட்டணம் பேரூர் நிர்வாகிகள் ராமன், இளையராஜா, சிபிஐ நிர்வாகிகள் சாதிக், பயஸ், வேம்பு, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிறைவாக மல்லசமுத்திரம் ஒன்றியப் பொறுப்பாளர் பெரியண்ணன் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 21.12.2023 இதழ்

You may also like...