சிறப்புக் கட்டுரை – மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களின் எழுச்சி

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் மாவட்டந்தோறும் கழகத் தோழர்களை மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்று சந்தித்து வருகிறார்கள். கழக அமைப்புகளின் பணிகளை மேலும் தீவிரப்படுத்தவும், “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் தலைமுறைக்கு வேலை வேண்டும்”  பரப்புரை இயக்கத்துக்கு திட்டமிடவும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு மேலும் சந்தாக்களை சேர்ப்பது குறித்தும் கூட்டங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு கூட்டத்திலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி தொடக்க உரை நிகழ்த்தினார். பெரியாரியம் சந்திக்கும் புதிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க பெரியாரியலை வளர்த்தெடுக்க வேண்டிய தேவைகள் குறித்தும், ஜாதி-தீண்டாமை வெறியை தூண்டிவிட்டு குளிர் காய நினைக்கும் ஜாதி சங்கத் தலைவர்கள் தூண்டிவிடும் ஜாதி வெறியை முறியடிப்பது குறித்தும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உரிமைகளை உறுதி செய்வதற்கான சமூக நீதிப் போராட்டத்தை முன்னெடுப்பதன் அவசியம் குறித்தும் தனது முன்னுரையில் விளக்கினார்.

மாவட்டக் கலந்துரையாடலின் இரண்டாம் கட்டப் பயணம் ஆகஸ்ட் 5ஆம் தேதி சேலம் மேற்கு மாவட்டம், மேட்டூரிலிருந்து தொடங்கியது. மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் நடந்த கூட்டத்தில் தோழர் கோவிந்தராஜ் – கடவுள், ஆத்மா மறுப்புகளைக் கூறினார். தொடர்ந்து மாவட்டத் தலைவர் சூரிய குமார், மே.கா. கிட்டு, காவை இளவரசன், காவலாண் டியூர் ஈசுவரன், கொளத்தூர் டைகர் பாலன், காவலாண்டியூர் விஜயன், சக்தி வேல், மாணவர்கள் விவேக், நாகராஜன், நகரத் தலைவர் மார்ட்டின், தாரமங்கலம் பாலு, அய்யாத்துரை, நகர செயலாளர் சுரேசு, கொளத்தூர் நகர செயலாளர் இராமமூர்த்தி, சக்திவேல், சம்பத், ஆர்.எஸ். பகுதி இராமச்சந்திரன், காவேரி, கிராஸ் மகேந்திரன், பழனி, நங்கவல்லி கிருஷ்ணன், குஞ்சாண்டியூர் சொக்க லிங்கம், செந்தில், குமரன் நகர் சீனி, கோவிந்தராஜ், பெரியார் பெரும் தொண்டர் சதாசிவம், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றி கழகப் பொறுப்பாளர்களை அறிவித்தார்.

கழகத் தோழர்கள் முன் வைத்த கருத்துகள்: “கழகத்தால் ஜாதி மறுப்புத் திருமணம் நடத்தி வைக்கப்பட்ட இணையர்கள் பற்றிய தகவல்களை நூலாக வெளியிட வேண்டும். கழக அமைப்பு-பரப்புரை தொடர்பான பணிகளில் தோழர்களுக்கு தனித்தனியே பொறுப்பு களை பிரித்து ஒப்படைக்க வேண்டும். தங்கள் பங்களிப்பை வழங்குவதற்கு தோழர்கள் முன் வரவேண்டும். ஜாதி எதிர்ப்புப் பரப்புரை இயக்கங்களை ஜாதிவெறி சக்திகள் அதிகம் உள்ள பகுதிகளில் நடத்தலாம். புதிய இளைஞர் களை கழகத்தை நோக்கிக் கொண்டுவர வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு பெரியார் பிறந்த நாள் விழாவையொட்டி பெரியார் குறித்த பேச்சு-கட்டுரைப் போட்டிகளை நடத்த வேண்டும். கழகப் பரப்புரைக் கூட்டங்களைப் பயன்படுத்தி, தோழர்களை ஒருங்கிணைக்க வேண்டும்” என்ற கருத்துகள் முன் வைக்கப் பட்டன.

மேட்டூர் நகர செயலாளர் சுரேஷ், “நகர கழகம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு 10 கிராமப் பரப்புரைக் கூட்டங்கள், இரண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டதை சுட்டிக் காட்டினார். மூடநம்பிக்கை ஒழிப்பு விளக்கப் பரப்புரைக்கான கருவிகள் மற்றும் ஒலி பெருக்கி வசதியுடன் கூடிய பரப்புரை வாகனத்தை தோழர் சதாசிவம், இயக்கத்துக்கு வழங்கி, பரப்புரைப் பணிகளை ஊக்கப்படுத்தி வருவதை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். அம்ஜத்கான் நன்றி கூறலுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

            சேலம்

ஆகஸ்டு 5ஆம் தேதியன்று மாலை 5 மணியளவில் சேலம் கிழக்கு மாவட்டக் கலந் துரையாடல் கூட்டம், சேலத்தில் மாவட்டத் தலைவர் கருப்பூர் சக்திவேல் இல்லத்தில், தோழர் பரமேசுவரன், கடவுள்- ஆத்மா மறுப்புடன் தொடங்கியது. மாவட்ட செயலாளர் டேவிட் வரவேற்புரையைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கூட்டத்தின் நோக்கத்தை விளக்கினார். சேலம் நகர கழகத் தோழர்கள் பரமேசுவரன், பிரபு, பாலு, இரும்பாலை பழனிச் சாமி, அம்பிகாபதி, செல்வமணி, ஆத்தூர் தோழர்கள் மகேந்திரன், காளிதாசு, கணபதி, இளம்பிள்ளை தோழர்கள் தனசேகர், சவுந்தர், சவுந்தரராசன், ஏற்காடு தோழர்கள் சரவணன், கார்த்திக், உலக நாதன், பெருமாள், பிரகாசு, செம்மாண்டபட்டி சின்னத்துரை, வெற்றி முருகன், ஆத்தூர் $ராமுலு, ராகுல், சேலம் ராஜ சேகரன், அமைப்புச் செயலாளர் இரத்தின சாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் கருத்துகளை முன் வைத்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறை வுரையாற்றி, கழகப் பொறுப்பாளர்களை அறிவித்தார்.

           திருச்செங்கோடு

நாமக்கல் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், ஆகஸ்டு 7ஆம் தேதி பகல் 11 மணியளவில் திருச்செங்கோட்டில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் நடந்தது. இரா. பிரகாசு, ‘கடவுள்-ஆத்மா மறுப்பு’ கூறினார். மாவட்டத் தலைவர் குமாரபாளையம் சாமிநாதன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் வைரம், பள்ளிப்பாளையம் சரவணன், முத்துப் பாண்டி, நாமக்கல் முத்துச்சாமி, குமாரபாளையம் தண்டபாணி, திருச்செங்கோடு கவுதமன், மல்ல சமுத்திரம் கண்ணன், பள்ளிப்பாளையம் தோழர்கள் தியாகு, மு. சரவணன், பிரகாசு, சரவணன், யுவராஜ், திருச்செங்கோடு சோமசுந்தரம், கோரிப்பட்டி பெரியண்ணன், சதீஷ் குமார், பிரகாசு, வெங்கிடு, நித்யானந்தம், தன லட்சுமி, ராஜலட்சுமி, மனோஜ் மோகன் ஆகி யோரைத் தொடர்ந்து, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றி பொறுப்பாளர்களை அறிவித்தார்.

கரூர்

திருச்செங்கோட்டைத் தொடர்ந்து கரூரில் மாலை 5 மணியளவில் ‘அரெஸ்ட்’ தொண்டு நிறுவனக் கட்டிடத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் காமராசர் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் கழகப் பரப்புரைப் பயணம் நடத்தும் ஊர்கள் முடிவு செய்யப்பட்டன. பரப்புரை இயக்கத்துக்கு முன் மீண்டும் மாவட்டக் கழகக்கூட்டத்தைக் கூட்டுவது என்றும், அப்போது கழகத் தலைவரை அழைத்து பொதுக் கூட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தைத் தொடர்ந்து கழகத்துக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வரும் ‘அரெஸ்ட்’ தொண்டு நிறுவன நிர்வாகிகள் கிறிஸ்டி, சாமி ஆகியோரை கழகத் தலைவர், பொதுச் செயலாளர் தோழர்களுடன், ‘கட்டளை’ கிராமத்திலுள்ள அவர்கள் இல்லம் சென்று சந்தித்து உரையாடினர். அனைவருக்கும் கிறிஸ்டி, சாமி இணையர் இரவு உணவு வழங்கினர்.

பெரியார் முழக்கம் 13082015 இதழ்

You may also like...

Leave a Reply