திருப்பூர் கழகச் செயலவையில்…

  • திருப்பூர் செயலவையில் பங்கேற்ற தோழர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கருத்துகளை முன் வைத்தனர்.
  • செயலவைக் கூட்டங்களில் கழகத் தலைவருக்கு வணக்கம் கூறுவதற்கு பதிலாக நன்கொடை வழங்கி உரையைத் தொடர வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்து, மடத்துக்குளம் மோகன் தலைவருக்கு ரூ.500/- வழங்கி உரையைத் தொடர்ந்தார். தோழர்கள் ஆர்வமாக வரவேற்றனர். சிலர் அதேபோல் ரூ.100, ரூ.200 என்று தலைவரிடம் வணக்கம் கூறி நன்கொடை வழங்கினர்.
  • மதிய உணவாக சுவையான மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது.
  • சாக்கோட்டை இளங்கோவன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்களைப் பாடி தோழர்களை மகிழ்வித்தார்.
  • தலைமைக்குழு மற்றும் செயலவைக் கூட்டங்களுக்கு திருப்பூர் மாவட்டக் கழகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது.
  • கழகக் கட்டமைப்பு நிதி – கழக ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பில் மாவட்டங்களின் பங்களிப்பைத் தோழர்கள் அறிவித்தனர்.
  • நிமிர்வோம் இதழுக்கு மாதம் 1000 நன்கொடை தருவதாக அறிவித்த ஆசிரியர் சிவகாமி, முதல் தவணையாக ரூ.5,000 வழங்கினார். சென்னை அன்பு தனசேகர் மாதம் ரூ.1000 வழங்குவதாக அறிவித்தார்.

கழக செயலவையில் உரையாற்றிய தோழர்கள்

தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), சிவக்குமார் (தமிழ்நாடு மாணவர் கழகம்), வீ. சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அய்யனார் ( தலைமைக் கழக உறுப்பினர்), விஜயகுமார் (இணையதளப் பொறுப்பாளர்), பரிமளராசன் (முகநூல் பொறுப்பாளர்), மடத்துக்குளம் மோகன், ஈஸ்வரன் (காவலாண்டியூர்), உமாபதி (சென்னை), சூலூர் பன்னீர்செல்வம்.

பிற்பகல் அமர்வு : அன்பு தனசேகர் (சென்னை), செந்தில் (குனுடு), வேழவேந்தன் (சென்னை), இராமர் (விழுப்புரம்), அகிலன் (திருப்பூர்), தினேஷ் (காஞ்சிபுரம்), சூரியகுமார் (சேலம் மேற்கு), நாமக்கல் – சாமிநாதன், முத்துப்பாண்டி, நேருதாஸ் (கோவை), இராமச்சந்திரன் (கோவை), சங்கீதா (திருப்பூர்), நாத்திகஜோதி (ஈரோடு வடக்கு), செல்லப்பன் (ஈரோடு தெற்கு), மாப்பிள்ளைச்சாமி (மதுரை), செந்தில் (விருதுநகர்), பால்வண்ணன் (திருநெல்வேலி), ரவிசங்கர் (தூத்துக்குடி), முத்து (சிவகங்கை), ஆரோக்கியசாமி (திருச்சி), கோபால் இராமகிருஷ்ணன் (அரியலூர்), பாரதிதாசன் (கடலூர்), சாக்கோட்டை இளங்கோவன் (தஞ்சை), மகேஷ் (நாகை),  முகில்ராசு (திருப்பூர்), வெள்ளியங்கிரி (பொள்ளாச்சி), நிர்மல் (கோவை), இராம.இளங்கோவன் (வெளியீட்டுப் பிரிவு செயலாளர்), துரைசாமி (பொருளாளர்), கழகத் தலைவர் கொளத்தூர் மணி.

பெரியார் முழக்கம் 18102018 இதழ்

You may also like...