கொளத்தூரில் பறை பயிற்சிப் பட்டறை

15.09.2018 அன்று கழகத் தலைவர்  கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் தலைமையில் ஈரோட்டில் நடைபெற்ற தமிழர் கல்வி உரிமை மீட்புப் பயணம் குறித்த தலைமைக் குழு – பயண ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் –  இயக்கக் கொள்கைப் பரப்புரைக்கும்,  மக்களிடையே கருத்துகளை எளிமையாகக் கொண்டு சேர்ப்பதற்கும் கலைக்குழுக்களின் தேவை குறித்து விரிவாக  விவாதிக்கப்பட்டது.

அதனை செயல்படுத்தும் முதல் முன்னெடுப்பாக தமிழ்நாடு மாணவர் கழகமும், மாற்றம் பகுத்தறிவு கலைக் குழுவும் இணைந்து சேலம் மாவட்டம் கொளத்தூர், உக்கம்பருத்திக்காடு பெரியார் படிப்பகத்தில் இரண்டு நாள் பறை பயிற்சிப் பட்டறையை எதிர்வரும் 3.11.2018,  4.11.2018 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாள்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களுக்கு மட்டும் நுழைவுக் கட்டணமாக ரூ.500 (பயிற்சி, உணவு செலவுகள் உட்பட) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கான பயிற்சிக் கட்டணம்  ரூ.1200 ஆகும்.

பயிற்சி பெற விரும்பும்  கழகத் தோழர்கள் கீழ்க்கண்ட கைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு 20.10.2018க்குள் முன்பதிவு செய்து கொள்ளுமாறும், பயிற்சிக்கு வரும்போது கழகப்  பொறுப்பாளர்களிடம்  கட்டாயம் அனுமதிக் கடிதம் பெற்று வருமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

முன்பதிவு தொடர்புக்கு:  90431 1515 2,     999 44 77 623,  812 48 48 288

பெரியார் முழக்கம் 27092018 இதழ்

You may also like...