கழகத்தின் புதிய இணையதளம் dvkperiyar.com

kolathur mani கொளத்தூர் மணி

நமது இயக்கத்தின் இணைதளம் dvkperiyar.com செயல்பட தொடங்கியுள்ளது. இந்த இணையதளத்தில் தலைமை கழகத்தின் அறிக்கை, ‘புரட்சி பெரியார் முழக்கத்தின் தலையங்கம், சிறப்பு கட்டுரை, மற்றும் குடிஅரசு செய்தி, ஏதேனும் ஒன்று முகப்பு பக்கத்தில் வாராவாரம் தகவல் உள்ளீடு செய்யப்படும்

செயற்களம் பகுதியில் அந்தந்த மாவட்ட செய்திகள் மற்றும் நிகழ்வுகள் அட்டவணை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செய்திகள் மற்றும் நடைபெற உள்ள நிகழ்வுகளை மற்றவர்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த dvkperiyar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். அனுப்பும் புகைப்படங்களில் ஏதேனும் ஒன்று landscape இருப்பது சிறப்பு. மேலும் காணொளிகள் ஏதேனும் இருந்தால் youtube ஏற்றி உரலி (link) அனுப்பவும். எந்த மாவட்டத்தின் கீழ் செய்தி வரவேண்டும் என்பதையும் தெரியப்படுத்தினால் உள்ளீடு செய்ய உதவியாக இருக்கும்.

கழக மின்னூல்கள், குடிஅரசு மின்னூல்கள் மற்றும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மின்னூல்கள் வரும் நாட்களில் இணையத்திலேயே முழுதுமாக ஏற்றப்படும். குடிஅரசு யூனிக்கோடாகவும் படிக்க, காணொளிகள் மற்றும் பாடல்கள் ஏற்றவும் பணிகள் நடைபெற்று வருகிறது.

– தலைமை நிலையம்

 

பெரியார் முழக்கம் 06082015 இதழ்

You may also like...

Leave a Reply