மாநாட்டு மேடையில் சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற ”ஜாதி மறுப்புத்திருமணங்கள்’

மாநாட்டு மேடையில் சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற
”ஜாதி மறுப்புத்திருமணங்கள்”

12-3-2018 திருப்பூரில் நடைபெற்ற மகளிர் தின மாநாட்டில் இரண்டு ஜாதிமறுப்புத் திருமணங்கள் நடைபெற்றன. வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்தத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவேற்றிவைத்தார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், ஆவணியூர், வி.என்.பாளையம் தங்கம்மாள்-அண்ணாமலை ஆகியோரின் மகன் செல்வகுமார் – எடப்பாடி வட்டம்,ஜலகண்டபுரம் சாலை காவலர் குடியிருப்பில் வசிக்கும் சின்னராசு-மயில் ஆகியோரின் மகள் ஸ்வாதிப்பிரியா ஆகியோருக்கும்,

சேலம்,உடையாப்பட்டி, சாந்தி-கிருஷ்ணன் ஆகியோரின் மகன் பிரபு – பழனியில் வசிக்கும் செல்வி-வடிவேல் ஆகியோரின் மகள் பிரியதர்ஷினி ஆகியோருக்கும் மாநாட்டு மேடையில் வாழ்க்கை இணையேற்பு நிகழ்ந்தது.

இரண்டு இணையேற்பும் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் இடையே நிகழ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Image may contain: 7 people, people smiling, people standing
Image may contain: 4 people, people standing and outdoor

You may also like...