முடியுமா?

இவ்வருஷம் நடைபெறப்போகும் காங்கிரஸ் மகாநாட்டில் காங்கிரஸ் கொள்கையில் ஒரு திருத்தம் செய்ய வேண்டும் என்பதாக சேலம் மகா நாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நேயர்களுக்கு நினைவிருக் கலாம். அதன் கருத்தாவது:-

“இந்திய சமூக வளர்ச்சிக்கும் சுயராஜ்யம் விரைவில் பெருதற்கும் ஜாதி வித்தியாசம் முதலிய சமூக ஊழல்கள் விரோதமாயிருப்பதால் அவற்றையும் ஒழிப்பது காங்கிரசின் முக்கிய கொள்கையாக இருக்க வேண்டும். இது அடுத்த காங்கிரசில் திருத்தப்படவேண்டும்” என்பதே.

ஆகையால் இத்தீர்மானங்களை பிரேரேபிக்கவேண்டும் என்பதாக ஸ்ரீ ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் அவர்களை பலர் கேட்டுக் கொண்டுமிருக் கிறார்கள். அவரும் ஆகட்டும் என்று வாக்களித்திருக்கின்றார். ஆனால் அவர் இவ்வருஷம் எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தெரிந்தெடுக் கப்பட்டால் தான் இதை பிரேரேபிக்க முடியும். இந்த உளவு தெரிந்த பார்ப்ப னர்கள் கண்டிப்பாய் இவ்விஷயத்தில் சூழ்ச்சி செய்வதாயிருந்தாலும் பார்ப் பனரல்லாத மாகாணக் கமிட்டி மெம்பர்களாவது அவரை தெரிந்தெடுத்து இந்த விஷயத்தைப் பற்றி பேசவாவது சந்தர்ப்பம் அளிப்பார்களா என்பது உறுதி சொல்லமுடியாததாகவே இருக்கின்றது.

குடி அரசு – செய்தி விளக்கம் – 18.12.1927

You may also like...

Leave a Reply