தோழர்களின் மக்கள் சந்திப்பு இயக்கம் வெற்றி நடை போடுகிறது

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், மக்கள் சந்திப்புத் திட்டத்தின் கீழ் முனைப்போடு மக்களை சந்தித்து, கழகத்தின் செயல்பாடுகளை விளக்கும் துண்டறிக்கைகளை வழங்கி, 10 ரூபாய் நன்கொடை திரட்டும் இயக்கத்தை நடத்தி வருகிறார்கள்.

ஈரோட்டில் தோழர் சிவானந்தம்  600க்கும் அதிகமான மக்களை சந்தித்துள்ளார். மக்கள் ஆதரவு தருவதாகவும், கொடுக்கப்பட்ட இலக்கைவிட அதிகமாக மக்களை சந்திப்போம் என்றும் தெரிவித்துள்ளார். முதல் தவணையாக ரூ.5000, பொருளாளரிடம் கொடுத்துள்ளார்.

பவானியில் தோழர் வேல்முருகன், மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடர்ச்சியாக செய்து வருகின்றார். தி.க. தலைவர் வீரமணி தாக்கப்பட்டபோது, கண்டனம் தெரிவித்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் அணுகுமுறையை பாராட்டியதோடு உண்மையான பெரியாரியக்கம் என தெரிவித்து தோழர்கள் நன்கொடை அளித்தனர்.

கோபி கோட்டாம்பாளைய தோழர் கார்த்திக்,  திருப்பூர் பேருந்து நிலையத்தில் 1 மணி நேரத்தில் 100 பேரை சந்தித்து முடித்தார். மேலும் நன்கொடை ரசீது புத்தகம் கேட்டு பொறுப்பாளர்களிடம் தொலைபேசியில் பேசினார்.

திருவாரூரில் காளிதாஸ், செந்தமிழன், முருகன் ஆகிய தோழர்கள் மக்களை சந்தித்து வருகிறார்கள். மக்கள் பேரதாரவு தருகிறார்கள். ஆயிரக்கணக்கில் நன்கொடை கேட்கும் காலத்தில் ரூ.10 நன்கொடை என இயக்கம் நடத்துவதை மக்கள் வியப்புடன் பார்த்தனர். பாராட்டினர். தாராளமாக நன்கொடை அளித்தனர்.

கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் இத்தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

பெரியார் முழக்கம் 02012014 இதழ்

You may also like...