பார்ப்பனர்களின் அறிவு ‘விபச்சாரம்’ – அம்பேத்கர்
பார்ப்பனர்களின் சங்பரிவார் களும், இந்து தேசியப் பா.ஜ.க. வினரும் அம்பேத்கருக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். பார்ப்பனர் பற்றி அம்பேத்கர் ஆழமாக முன் வைத்த வரலாற்று சித்திரம் இது.
பார்ப்பனர்களை எடுத்துக் கொள்வோம். வரலாற்று வழியில் இவர்கள்தான் மொத்த இந்து மக்கள் தொகையில் சுமார் எண்பது சதவீதமாக அமைந்துள்ள அடிமை வகுப்புகளுக்கு (சூத்திரர்களும் தீண்டாதார்களுக்கும்) பரம வைரியாக இருந்துள்ளார்கள். இன்று இந்தியாவில் அடிமை வகுப்புகளைச் சேர்ந்த சாமானிய மனிதனின் இவ்வளவு இழிந்த வனாக, இவ்வளவு தாழ்ந்தவனாக, இப்படிக் கொஞ்சம்கூட நம்பிக்கை யும் ஆவலும் அற்றவனாக இருக் கிறான் என்றால், பார்ப்பனர்களும் அவர்களின் தத்துவமும்தான் இதற்கெல்லாம் முழுக் காரணம்.
இந்தப் பார்ப்பனிய தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் ஐந்து:
(1) வெவ்வேறு வகுப்புகளிடையே படிப்படியான ஏற்றத் தாழ்வு;
(2) சூத்திரர்களையும் தீண்டாதார் களையும் அறவே ஆயுத நீக்கம் செய்தல்;
(3) சூத்திரர்களும் தீண்டாதார்களும் கல்வி பெறுவதை அடியோடு தடை செய்தல்;
(4) சூத்திரர்களும் தீண்டாதார்களும் அதிகாரம் வாய்ந்த இடங்களைக் கைப்பற்றுவதற்குத் தடை;
(5) சூத்திரர்களும் தீண்டாதார்களும் சொத்துடைமை பெறுவதற்குத் தடை;
(6) பெண்களை அறவே அடக்கி ஒடுக்குதல். ஏற்றத்தாழ்வு தான் பார்ப்பனியத்தின் அதிகாரப் பூர்வக் கொள்கை. சமத்துவ நாட்டம் கொள்ளும் கீழ் வகுப்பு களை அடக்கி ஒடுக்குவதை அவர்கள் தங்களின் இன்றியமை யாக் கடமையாகக் கருதி, எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி அதைச் செய்து வந்துள்ளார்கள்.
கல்வி என்பது ஒரு சிலரைத் தாண்டிப் பரவாத நாடுகள் உண்டு. ஆனால், இந்திய நாட்டில் மட்டும் தான் அறிவாளி வகுப்பினர், அதாவது பார்ப்பனர்கள் கல்வியைத் தங்கள் ஏகபோகம் ஆக்கிக் கொண்டதோடு, கீழ் வகுப்புகள் கல்விப் பெறுவதைக் குற்றச் செயல் என்றும் அறிவித்தார்கள். இக் குற்றத் துக்குத் தண்டனையாக நாக்கை அறுக்கலாம் அல்லது ஈயத்தைக் காய்ச்சிக் காதில் ஊற்றலாம். பிரிட்டிஷ் இந்திய மக்களை ஒட்டு மொத்தமாய் நிராயுதபாணிகளாக்கி இந்தியாவை ஆண்டு வருவதாக காங்கிர° அரசியல்வாதிகள் குறை சொல்கிறார்கள். ஆனால், சூத்திரர் களையும் தீண்டாதார்களையும் நிராயுதபாணியாக்குவதுதான் பார்ப்பனர்கள் பிறப்பித்த சட்டத் தின் ஆட்சியாக இருந்தது என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். சொல்லப் போனால், சூத்திரர் களையும் தீண்டத்தகாதவர்களை யும் நிராயுதபாணியாக்குவதுதான் பார்ப்பனர்கள் பிறப்பித்த சட்டத் தின் ஆட்சியாக இருந்தது என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். சூத்திரர்களையும் தீண்டத் தகாதவர் களையும் நிராயுத பாணிகளாக்கு வதில் பார்ப்பனர்கள் கொண் டிருந்த நம்பிக்கை எவ்வளவு வலு வானது தெரியுமா? பார்ப்பனர்கள் தங்கள் சிறப்புரிமைகளைப் பாது காத்துக் கொள்வதற்காக ஆயுதம் ஏந்துவதற்கு வசதியாக சட்டத்தில் திருத்தம் செய்தபோது சூத்திரர் களுக்கும் தீண்டாதார்களுக்குமான தடையை அப்படியே வைத்துக் கொண்டார்கள். அதன் கடுமையைக்கூடக் குறைக்க வில்லை. இன்று மிகப் பெரும் பாலான இந்திய மக்கள் சற்றும் வீரியமற்றவர்களாக, ஊக்கம் இழந்தவர்களாக, ஆண்மையில் லாதவர்களாகக் கீழ்ப்படுத்தி வைத்திருப்பது பார்ப்பனிய கொள்கையின் விளைவுதான். பார்ப்பனர் ஆதரவு தராத சமூகத் தீங்கு, சமூக அநீதி ஏதுமில்லை.
மனிதனை மனிதன் மனிதத் தன்மையின்றி நடத்துவது, சாதி உணர்ச்சி, தீண்டாமை, அணு காமை, காணாமை போன்றவை பார்ப்பனர்க்கு மதமாகும். ஆனால், மனித அநீதிகள் மட்டுமே அவருக்குச் மதமென்று கருதுவது தவறாகும்.
உலகின் எந்த பகுதியிலும் இல்லாத அளவில் பெண்களுக்கு இழைக்கப்பட்டுள்ள படு மோசமான அநீதிகளுக்கு பார்ப் பனர் ஆதரவு தந்துள்ளனர். சதி என்ற பெயரில் கைம்பெண்கள் உயிரோடு கொளுத்தப்பட்டார் கள். கைம்பெண்ணை உயிரோடு கொளுத்தும் சதி வழக்கத்திற்கு பார்ப்பனர் முழு ஆதரவு கொடுத்தனர். கைம்பெண்கள் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. பார்ப் பனர் இந்த கொள்கையை ஆதரித்தனர். பெண்களுக்கு எட்டு வயதாகும் முன்பே திருமணம் செய்துவிட வேண்டும். அதன் பிறகு எப்போது வேண்டுமானாலும் திருமணத்தை நிறைவு செய்ய உரிமை உண்டு. பெண் பூப்பெய்தி விட்டாளா, இல்லையா என்பது பொருட்டன்று. பார்ப்பனர் இந்தக் கொள்கைக்கும் வலுத்த ஆதரவு தந்தனர். சூத்திரர்களுக்கும் தீண்டா தார்களுக்கும் பெண்களுக்கும் சட்டம் விதிக்கிறவர்கள் என்ற முறையில் பார்ப்பனர்கள் செய்திருப்பதன் வரலாறு உலகின் ஏனைய பகுதிகளின் அறிவாளி வகுப்புகளின் வரலாற்றுடன் ஒப்பிடுகையில் கருப்பு அத்தியாய மாகும். இந்தியாவில் பார்ப் பனர்கள் செய்திருப்பதுபோல் உலகில் வேறெந்த அறிவாளி வகுப் பினரும் படிக்காத நாட்டினரை நிரந்தர அறியாமையிலும் வறுமை யிலும் ஆழ்த்தி வைப்பதற்காக ஒரு தத்துவத்தை கண்டுபிடிக்க முடி யாது. அந்த அளவு வேறு எவரும் அறிவு விபச்சாரம் செய்தது கிடையாது.
இன்று ஒவ்வொரு பார்ப் பனரும் தன் மூதாதையர் வகுத்துக் கொடுத்த இந்த பார்ப்பனர்தத்துவத்தில் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்து சமுதாயத்தில் பார்ப்பனர் ஒரு அயற்கூறு ஆவர். பிரஞ்சுக்காரருக்கு ஜெர்மானியரும், யூதரல்லாதவருக்கு நீக்ரோவும் வெள்ளையரும் எப்படியோ அதேபோல் சூத்திரர்களுக்கும் தீண்டாதார்களுக்கும் பார்ப்பனர் அயலவர் ஆவர். பார்ப்பனருக்கும் சூத்திரர்கள், தீண்டாதார்களாகிய கீழ் வகுப்பினருக்கும் மெய்யாகவே பெருத்த இடைவெளி உள்ளது. அவர்களுக்கு அயலவர் மட்டுமல்ல; பகையானவரும் ஆவார். அவர்களுடனான உறவில் மனசாட்சிக்கு இடமேயில்லை, நீதிக்கு அழைப்பே இல்லை.
– “காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்தது என்ன?” நூலிலிருந்து
பெரியார் முழக்கம் 02072015 இதழ்