அடாது மழை அடித்தாலும் விடாது ‘அவாள்’ கொட்டம்
கடும் மழையில் தமிழகம் தத்தளிக்கிறது; வெள்ளப் பாதிப்புகள், ஏழை எளிய மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது; அரசு நிவாரணப் பணிகள் படுமோசமாகி விட்டதால், தங்குமிடம் உணவு இன்றி மக்கள் பரிதவிக்கின்றார்கள். ஆனால், மக்கள் துயரங்களைப் பற்றிக் கவலைப்படாமல், ஸ்ரீரங்கம் கோயிலில் ‘கும்பாபிஷேக’ வேலைகளும், யாக சாலை பூஜைகளும் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஊரே வெள்ளத்தில் தவிக்கும்போது, பூணூல் மேனியுடன் வைதிகப் பார்ப்பனர்கள் 28 வெள்ளிக் குடங்களில் ‘புனித நீர்’ கொண்டு வருவதையும், யாக சாலைகளில் பார்ப்பனர்கள் பல்வேறு யாக குண்டங்களில் உணவுப் பொருள்களை தீயில் போட்டு பொசுக்கி தொடர்ந்து பல நாள் யாகங்கள் நடத்துவதையும் ‘தினமணி’, ‘தினமலர்’ போன்ற பார்ப்பன ஏடுகள் படங்களுடன் செய்தி வெளியிட்டு குதூகலிக்கின்றன.
பெரியார் முழக்கம் 19112015 இதழ்