ஆச்சாரியார் கடற்கரைப் பேச்சு

 

தற்காலம் நமது நாட்டில் நடைபெறும் புரோகித ஆட்சியானது தனது தகுதியற்ற தன்மையையும், சக்தியற்ற தன்மையையும் வெளிப்படுத்திவிட்டது.

சென்ற வாரம் சென்னை கடற்கரையில் பிரதம மந்திரி கனம் ஆச்சாரியார் தலைமையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் ஆச்சாரியாரும், மற்றொரு அய்யங்கார் பார்ப்பன மந்திரியான கனம் டாக்டர் ராஜனும் முக்கிய பேச்சாளர்களாக விளங்கி இருக்கிறார்கள்.

அதுபோலவே வெள்ளிக்கிழமை நடந்த சென்னை சட்டசபை நடவடிக்கையிலும் கனம் ஆச்சாரியாரும், ஆந்திரப் பார்ப்பனரான கனம் பிரகாசமும் முக்கிய பேச்சாளராக இருந்திருக்கிறார்கள். இவர்களது இரண்டு இடத்துப் பேச்சுகளிலும் கடற்கரைப் பேச்சைவிட சட்டசபைப் பேச்சு சற்று பிகுவாகவும், முறுக்காகவுமே இருந்திருக்கிறது. அதைப்பற்றி பின்னால் கவனிப்போம்.

என்றாலும் பார்ப்பன ஜாதிக்கு ஆட்சி தகாது என்பதும், அதற்கு ஆட்சி தெரியாது என்பதும் இந்த இரண்டு இடத்து 4 பேச்சுகளிலும் நன்றாய் விளங்கி விட்டது. கடற்கரைக் கூட்டத்தில் முதலில் பேசிய கனம் டாக்டர் ராஜன் முழுதும் நடுக்கத்துடன் உண்மைக்கு விரோதமாக, பித்தலாட்ட பாஷையில் கூட்டத்தாரை ஏமாற்றி சமாளித்துப் போகிற தன்மையிலேயே உப்புமில்லாமல், உறைப்புமில்லாமல் சப்பையாக ஏதோ சில வார்த்தைகளைக் கொட்டிவிட்டு தந்திரமாக தப்பித்துக்கொண்டார்.

அவர் பேசியதில் உள்ள ஆபாசங்களை வாசகர்கள் கவனிக்க வேண்டுமென்றே ஆகஸ்ட் N 15 தேதி, ்சுதேசமித்தர”னில் உள்ளபடியே எடுத்து எழுதி விளக்குகிறோம்.

  1. ்தமிழ்த்தாயின் வயிற்றில் பிறந்த தமிழ் மக்களாகிய நாம் தமிழ்த்தாயின் உண்மை புதல்வர்கள் என்று எவ்விதம் காட்டுவது என்பதற்கு இப்பொழுது சந்தர்ப்பமேற்பட்டிருக்கிறது.”

வாஸ்தவத்திலேயே கனம் டாக்டர் ராஜன் தன்னைத் தமிழ்த்தாயின் புதல்வன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாரா? அவர் உண்மையாகவே தமிழனா? தமிழனுக்குப் பூணூலும் உச்சிக்குடுமையும் உண்டா? அப்படித்தான் அவர் தமிழனாக இருப்பதாக வாதத்துக்காக ஒப்புக்கொண்ட போதிலும் இந்தி படித்தால் தான் மற்றவர்களும் தமிழர்கள் என்று காட்டிக் கொள்ள முடியுமா? உண்மைத் தமிழனுக்கு இந்தி தான் அடையாளமா என்று கேட்கிறோம்?

  1. ்தமிழ் நாட்டை தமிழ் நாடாக்க செய்யும் சக்தியை நீங்கள் எங்களுக்கு அளிக்கிறீர்களா?”

தமிழ்நாட்டைத் தமிழ்நாடாக்குவதற்கு இந்தியைக் கட்டாயமாகப் புகுத்துவதினால் தான் முடியுமா? அல்லது தமிழை எல்லோரும் கட்டாயமாய் படிக்கும்படி செய்வதால் தான் முடியுமா? எனவே இதில் எவ்வளவு சூதும், பித்தலாட்டமும் இருக்கிறது என்பதைப் பாருங்கள்.

  1. ்தமிழ்த்தாயைத் தட்டி எழுப்பின கூட்டம் எது?”

்தமிழ்த்தாயை தூக்கத்தில் இருந்து எழுப்பினது யார்?”

தமிழ்த்தாயை இவர்கள் தட்டி எழுப்புகிறார்களா? இந்தியைப் புகுத்துவதன் மூலம் கொலை செய்து குழியில் போட்டு புதைக்கிறார்களா?

  1. ்இப்பொழுது தமிழின் பெயரால் கிளர்ச்சி செய்பவர்கள் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். பேச்சு வன்மையில்லாமல் மேடைகளில் ஏறிப்பேச முன் வருகிறார்கள். இவர்களை நீங்கள் மறந்து விடாதீர்கள்”

தமிழின் பேரால் கிளர்ச்சி செய்பவர்கள் இங்கிலீஷில் பேசுவதால் முழுகிப் போன காரியம் என்ன? தமிழ் சுத்தமாக பேசத் தெரியாத காரணத்தாலேயே ஒருவருக்கு தமிழைக் காக்க கவலை உண்டாகாதா? இதற்கு ஆக அவரை பொது ஜனங்கள் ஞாபகத்தில் வைத்து என்ன செய்யவேண்டும்? அசட்டுத்தனமான கோள் சொல்லும் புத்திதானே இந்தப் பேச்சு. பேசத் தெரியாமல் சிலர் மேடை ஏறுகிறார்கள் என்பது இம்மாதிரி முட்டாள்தனமாகவும் விஷமத்தனமாகவும் பேசுவதைவிட பேசத் தெரியாதது பல பங்கு மேலானதாகும்.

  1. ்சரஸ்வதி கடாக்ஷம் தமிழ் நாட்டினருக்கே ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.”

தமிழர்களுக்கு ்சரஸ்வதி கடாக்ஷ” மிருப்பதால்தான் தமிழர் 100-க்கு 95-பேர் தற்குறிகளாவும், பார்ப்பான் (ஆரியன்) 100-க்கு 100-பேர் படித்தவர்களாகவும் இருக்கிறார்கள் போலும்.

  1. ்தமிழ் உயிருள்ள பாஷை ஆனதால் சமஸ்கிருதத்தை கபளீகரம் செய்து அந்த பாஷையின் சொற்களையும் நாகரிகத்தையும் தன்னுடையதாக்கித் தனி மணம் வீசித் திகழ்கின்றது.”

இப்பேச்சுத்தான் சத்தியமான பேச்சு எனலாம். தமிழில் சமஸ்கிருதம் பூராவும் புகுந்து சமஸ்கிருதமயமாகி! சமஸ்கிருத (ஆரிய) நாகரிகத்தையும் தன்னுடையதாக்கிக் கொண்டது.

இதை நாம் ஒப்புக்கொள்ளுகிறோம். இதற்காகத்தான் இந்தியை (சமஸ்கிருதத்தை) வேண்டவே வேண்டாம் என்கிறோம். ஏன் என்றால் இந்தி கட்டாயமாய் வந்தால் கொஞ்ச நஞ்சம் இருக்கும் தமிழும் சமஸ்கிருதமாகி தமிழ் நாகரிகமே – தமிழனே இல்லாமல் போய்விடும். பிறகு சூத்திரன் தான் இருப்பான்.

ஆகவே கனம் டாக்டர் சொன்னதிலிருந்தாவது நாம் இவ்வளவு நாளாக சொல்லி வந்தது அதாவது இந்தி வந்தால் தமிழ் உருக்குலைந்து விடும் என்று சொல்லி வந்தது தமிழர்களுக்கு புரிந்ததா என்று கேள்க்கிறோம்.

  1. ்ஒரு உண்மைத் தமிழன் மற்றொரு பாஷையைக் கண்டு அஞ்சினால் தமிழரைப் போன்ற கோழைகள் யாரும் இருக்கமாட்டார்கள்”

தமிழர்களை பார்ப்பனர்கள் கோழையென்றாலும் சரி கழிசடைகள் என்றாலும் சரி இந்தியைப் படிக்கச் செய்யாமல் இருந்தால் போதும். இது விஷயத்தில் பார்ப்பனர்களே வீரர்களாக இருக்கட்டும்.

  1. ்தர்மம் குன்றியதால் ஒரு சிலர் இந்தி கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்”

இந்தி படிப்பது தர்மம், இந்தி வேண்டாமென்பது அதர்மம் என்பது பார்ப்பன அகராதிப்படியே ஒழிய அறிவுப்படி அல்ல. பார்ப்பான் சொல்வது எல்லாம் தர்மம் என்பதும், தேசியம் என்பதும், மற்றவை அதர்மம் என்பதும், தேசத் துரோகம் என்பதும் நாம் இந்த 20 வருஷமாய் கேட்டுக்கேட்டு காது செவிடுபட்டிருக்கிறது. ஆதலால் கனம் டாக்டர் ராஜன் பேசுவது ஒன்றும் புதிதல்ல. அதற்காக யாரும் பயப்பட வேண்டியதில்லை.

  1. ்இந்தியா முற்போக்கடைய வேண்டுமானால் இந்திய நாகரிகத்தில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்.”

இந்தியா முற்போக்கடைய இந்திய நாகரீகத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென்பதில் ஒரு இரகசியம் வெளியாகிவிட்டது. அதாவது இந்தி படித்தால் இந்திய நாகரிகம் பிடிபடும் என்பது. இந்திய நாகரிகம் என்றால் ஆரிய நாகரிகம் தானே. (வேறு தமிழ் நாகரீகம் ஏற்கனவே தமிழர்களிடம் உள்ளதாகும்) ஆதலால் ஆரிய நாகரிகத்தை தமிழனுக்குள், தமிழ்நாட்டிற்குள் புகுத்தவே இந்தி கட்டாயமாக பார்ப்பன ஆட்சி புகுத்துகின்றது என்று நாம் கூப்பாடு போட்டு வருவது இப்போதாவது தமிழ் மக்களுக்குப் புரிந்திருக்கும் என்று கருதுகிறோம்.

  1. ்தமிழ்நாட்டுக் கல்வியையும், திருக்குறளையும், கம்பராமாயணத்தையும் வட இந்தியாவில் பரப்ப வேண்டுமானால் இந்தி கற்க வேண்டியது மிக அவசியம்.”

குறளையும், கம்பராமாயணத்தையும், தமிழ் கலையையும் வட இந்தியாவில் பரப்ப தமிழன் இந்தி படிக்க வேண்டும் என்று சொல்லுவதில் எவ்வளவு அசட்டுத்தனமும், மனந்துணிந்த பித்தலாட்டமும் இருக்கிறது என்பதை வாசகர்கள் அறியவேண்டும். இந்தி படித்தால் துளசிதாஸ் இராமாயணமும், மற்ற இந்தி (சமஸ்கிருத)க் கலையையும் நாகரிகமும்தான் தமிழன் படிக்க முடியுமே ஒழிய வட நாட்டான் குறளையோ, கம்பராமாயணத்தையோ எப்படி படிக்க முடியும்? தமிழ் நாகரிகத்தை வடக்கத்தியானுக்கு எப்படி புகுத்த முடியும் என்பது விளங்கவில்லை.

குறளும், கம்பராமாயணமும் மொழி பெயர்க்கும் நூல்கள் அல்ல. பாஷையுடைய, இலக்கியத்தினுடைய ருசியை அனுபவிப்பதாகும். கருத்தை மொழிபெயர்க்கலாமானாலும், மொழிபெயர்க்க வேண்டுமானாலும் அந்த கருத்தை வடநாட்டானுக்குப் புகுத்த வேண்டுமானாலும் 2 கோடி தமிழ் மக்கள் இந்தி படிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்க்கிறோம்.

ஆகவே கனம் டாக்டர் ராஜன் அவர்கள் கடற்கரையில் பேசிய பேச்சுகளில் தமிழ் மக்கள் இந்தி கட்டாயமாய் படிக்க வேண்டும் என்பதற்கு நியாயமான – யோக்கியமான ஆதாரமோ, சமாதானமோ ஏதாவது இருக்கிறதா என்பது யோசிக்கத்தக்கதாகும்.

ஆகவே கனம் டாக்டர் ராஜன் அய்யங்கார் பேசிய இப்பேச்சுகளில் எந்த வரியிலாவது, எந்த எழுத்திலாவது உண்மையோ, நாணையமோ, நியாயமோ, சரியான சமாதானமோ இருக்கிறதா என்பதை வாசகர்கள் கவனித்து பார்க்க வேண்டுகிறோம்.

இனி ஆச்சாரியார் சேதியைப் பார்ப்போம்

~subhead

பொய் பாவனை

~shend

மகா புத்திசாலி என்று கருதப்படுகிற நமது கனம் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் அன்று பேசிய பேச்சுகளிலாவது அறிவு உடமையோ, நியாயவாதத் தன்மையோ சிறிதாவது இருக்கிறதா என்பதை கவனிப்போம்.

15-ந் தேதி ்சுதேசமித்திர”னில் உள்ளதையே குறிப்பிடுகிறோம்.

அ. ்இந்தி எதிர்ப்பு இயக்கம் இந்தி எதிர்ப்பு இயக்கமும் அல்ல, தமிழ் இயக்கமும் அல்ல. இது பெரும்பான்மையோர் சக்திக்கும் சிறுபான்மையோர் சக்திக்கும் போட்டி” என்கிறார்.

உண்மைதான், இதில் சிறிதும் தவறில்லை. 100-க்கு 97-பேர்களாய் இருக்கும் பெரும்பான்மைத் தமிழ் மக்கள் சக்திக்கும், 100-க்கு மூன்று பேராய் இருக்கும் பார்ப்பனர் சக்திக்கும் ஒரு போட்டி மாத்திரமல்ல போராட்டமேயாகும்.

இந்தப் போராட்டம் ஆச்சாரியாருக்கு மிக்க சுகமானதாயிருக்கிறதாம்.

இருக்கலாம்தான். எப்படியெனில் கை தூக்கி முண்டங்கள் தனது காலடியில் மிதிபட்டுக் கிடக்கின்றன என்கின்ற ஆணவத்தால்தான்.

ஆனால் அப்படிப்பட்ட முண்டங்கள் இந்தி எதிர்ப்பாளருக்கு இல்லாவிட்டாலும் இந்தி எதிர்ப்பாளர் ஒவ்வொருவரும் தன்னைப்பற்றிய நம்பிக்கை உடையவர்கள், மற்றும் சுதந்திரத் தமிழ் மக்களின் சுயமரியாதையில் நம்பிக்கை உள்ளவர்கள். ஆதலால் இப்போராட்டத்தை ஆச்சாரியார் வெளிப் பேச்சில் சுகமானது என்று சொன்னாலும் உள்ளுக்குள் நடுக்கமும், தாங்கமுடியாத தொல்லையும் கஷ்டமுமானதாக இருக்கிறது என்று கருதி திண்டாடுகிறார் என்பது நமக்கு தெரியும். அவரது பேச்சுகளினாலேயே அவற்றை விளக்கப் போகிறோம். ஆனால் இப்போராட்டம் இந்தி எதிர்ப்பாளர்களுக்கு கிடைக்க முடியாத ஒரு மாபெரும் புதையலெனவே கருதுகிறார்கள் என்பதுறுதி. ்இப்போராட்டம்” இனியும் கொஞ்ச காலத்துக்கு ஆவது தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதே நமது ஆசை. அல்லது சீக்கிரத்தில் முடிக்கும்படியான இதினும் கடினமான முயற்சிகளை அதாவது ஆச்சாரியார் கையாள வேண்டுமென்பது நமது அவா. ஏனெனில் இந்திக் கிளர்ச்சியை அடக்க ஆச்சாரியார் கருதும் கடின முறைகள் நெருப்பை அவிக்க பெட்றோல் எண்ணை விடுவது போல் பயன் தரும் என்பதில் நமக்கு சந்தேகமில்லை.

~subhead

பொய் சமாதானம்

~shend

ஆ. “தேர்தலில் தோற்றவர்கள் காங்கரசுக்குள்ளாகவே கலகம் வரும் என்று பார்த்தார்கள்”

“அதில்லாமல் போனதால் இந்தியை பிடித்துக் கொண்டார்கள்” என்கிறார்.

்தேர்தலில் தோற்றவர்கள் யார்? ஒருவராவது இந்திக் கிளர்ச்சியில் இருக்கிறார்கள் என்று ஆச்சாரியார் மெய்ப்பிப்பாரா? ஊர் ஜனங்களை ஏமாற்ற வேறு ஞாயமான சமாதானம் சொல்ல வகையில்லாதபோது தப்பு வழியில் செல்லும் வக்கீல் புத்தியைக் காட்டுகிற ஒரு இழிவான செய்கையே அல்லாமல் இதில் மெய்யோ ஒழுக்கமோ இருக்கிறதாக கடுகளவு அறிவுள்ளவனாவது கூற முடியுமா என்று கேள்க்கின்றோம்.

~subhead

தமிழர்கள் இந்தியை எதிர்ப்பது

~shend

இந்தியைத் தமிழ் மக்கள் 10, 12 வருஷ காலமாக எதிர்த்து வருகிறார்கள். 1926-ம் வருஷம் ்குடிஅரசு” பத்திரிகையில் இந்தி பார்ப்பன சூழ்ச்சி என்றும் பார்ப்பன ஆதிக்கத்தைப் புகுத்த அரசியலின் பெயரால் செய்யப்படும் பித்தலாட்டம் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. மறைமலை அடிகள் 10 வருஷங்களுக்கு முன்பே மறுப்பு எழுதி இருக்கிறார். ்மார்டன் ரிவ்யூ” போன்ற பிரபல நடுநிலை அறிவு பத்திரிக்கைகள் இந்தியை பொது பாஷையாக ஆக்கக் கூடாது என்று சுமார் 15 வருஷங்களுக்கு முன்பே எழுதி இருக்கின்றன. இந்தி வந்தால் தமிழ் எப்படிக் கெடும், தமிழர் நாகரீகம் கலை எப்படிகெடும், ஆரிய ஆதிக்கம் எப்படி ஏற்படும் என்பனவாகிய விஷயங்கள் இந்தி எதிர்ப்பாளர்களால் புட்டுப்புட்டு தக்க ஆதாரங்களுடன் பல பெரியார்கள் – தேர்தலில் தோல்வி அடையாதவர்கள் – காங்கிரசினிடத்தில் துவேஷம் இல்லாதவர்கள் – வருணாச்சிரமத்தில் வெறுப்பில்லாதவர்கள் – ஆரியத் துவேஷம் வகுப்புவாதம் இல்லாதவர்கள் ஆகியவர்கள் எடுத்துக்காட்டி வரும்போது இத்தனைக்கும் சமாதானம் ்தேர்தலில் தோற்றவர்கள் கிளர்ச்சிதான் இந்தி எதிர்ப்பு” என்று சொல்லுவதாலேயே இந்தி புகுத்துகிறவர்களுக்கு யோக்கியமான நாணையமான சமாதானம் இல்லை என்பதும் எதிர்ப்பவர்கள் சொல்லும் மறுப்புகள் எல்லாம் உண்மையும், ஆணித்தரமுமானதென்பதும் விளங்கவில்லையா? என்று கேள்க்கிறோம்.

~subhead

பச்சை வக்கீல் புத்தி

~shend

தோழர்கள் பன்னீர்செல்வம், கலீபுல்லா சாயபு, சர்.கே.வி. ரெட்டிநாயுடு போன்றவர்களை இந்தி எதிர்ப்பாளர்களும் இந்தி எதிர்ப்பு கமிட்டியாரும் கூப்பிட்டால் அதுவும் 4 – தரம் கூப்பிட்டால் ஒரு தரம் அதுவும் எதிர்ப்பாளர்கள் வைவார்களே என்று பயந்துகொண்டு ஏதோ ஒன்று இரண்டு கூட்டங்களில் பேசுவதல்லாமல் அவர்கள் இதில் எந்த அளவுக்கு சிரத்தை காட்டுகிறார்கள்? இன்று வரை இந்தச் சட்டசபை அங்கத்தினர் யாராவது 1 – தம்பிடி இந்த இயக்கத்துக்கு உதவி இருப்பார்களா? கனம் ஆச்சாரியார் இதெல்லாம் மனப்பூர்வமாய் அறிந்தே (தான் அனந்தப்பூரில் சொன்னதுபோல்) பச்சை வக்கீல் புத்தியில் சமாதானம் சொல்ல இந்த இழி முறையை கையாளுவாரேயானால் அவரை யோக்கியரென்றோ, அல்லது ்மனப்பூர்வமாக இந்தி கிளர்ச்சியை எதிர்ப்பதும் அடக்குவதும் வெகு சுலபமான காரியம்” என்று கருதி இருக்கிறார் என்றோ எந்த மடையன் நம்புவான் என்று கேட்கின்றோம். அடுத்த மூச்சில் அவரது யோக்கியதை வெளியாகிவிட்டது. அதாவது

இ. “முடிவேற்படும் வரைதான் கட்சி நடத்தலாம். முடிவேற்பட்ட பிறகு ரஜா எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படிக்கில்லாமல் அரசாங்கத்தை நடத்த முடியாமல் கஷ்டங்களையும், தடைகளையும் ஏற்படுத்துவது நியாயமல்ல” என்கிறார்.

இது புறமுதுகிட்டு ஓடும் ஒரு பிறவிக் கோழையின் கூற்றாகும்.

்ஒருவன் நான் ஜெயித்துவிட்டேன் இனி நீ அடங்க வேண்டும்” என்றால் வெற்றியை வைத்துக் காப்பாற்ற யோக்கியதை இல்லை என்றோ, அல்லது யோக்கியமான முறையில் வெற்றி பெறவில்லை என்றோதான் பொருள் கூற வேண்டும். அது எப்படியோ போகட்டும். இந்தி எதிர்ப்பானது கனம் ஆச்சாரியாருக்கு அரசாங்கத்தை நடத்த முடியாத அளவுக்கு கஷ்டங்களையும், முட்டுக்கட்டைகளையும் விளைவித்து விட்டது என்பதிலேயே ஆச்சாரியாரின் வீரமும் தீரமும் விளங்கிவிடவில்லையா என்று கேட்கின்றோம். இந்தி எதிர்ப்புக் காரர்களால் அரசாங்க நடைமுறைக்கு எந்த விதத்தில் கஷ்டமும், நஷ்டமும் ஏற்படுகின்றது என்பது நமக்கு விளங்கவில்லை.

~subhead

வந்தே மாதரத்தின் கதி?

~shend

வந்தே மாதரம் பாடியதை முஸ்லிம்கள் கூடாதென்றார்கள். ஆச்சாரியார் அரசாங்கம் வாயும், பவனமும் அடைத்துக் கொண்டு பாட்டை நிறுத்திக்கொண்டது. இது ஆச்சாரியார் வீரத்துக்கு மாத்திரம் தோல்வியல்ல. மற்றும் எவ்வளவோ காரியத்துக்கு இந்தியா பூராவுக்கும் தோல்வியும் இழிவுமாகும். மேலும் தேசியக் கொடி ்கட்டப்பட்ட”தானது யூனியன் ஜாக் கண்டவுடன் அவிழ்க்கப்பட்டு விட்டது. தேசியக் கொடி பெயரே அடியோடு எடுக்கப்பட்டு வர்ணக் கொடியாகிவிட்டது. இதில் ஆச்சாரியாருக்கும், காங்கரசுக்கும், தேசியத்துக்கும் சிறிதும் அவமானமோ, தோல்வியோ, இழிவோ, கேவலமோ இல்லை என்று ஆச்சாரியார் கருதுகிறார். அவரது தோல் இது விஷயத்தில் அவ்வளவு மொத்தையாக இருக்கலாம்.

மற்றும் விசுவப் பிராமணர்களிடம் காட்டப்பட்ட வகுப்பு உணர்ச்சி உடனே கண்டிக்கப்பட்டு சரணாகதி அடைந்துவிட்டது. இதிலும் ஆச்சாரியாருக்கு அவமானமில்லாமலிருக்கலாம். இவைகளினால் எல்லாம் அவரது வீரமும், தீரமும் சிறிதும் மங்கவில்லையென்றே வைத்துக்கொள்வோம்.

~subhead

தணிகாசலம் செட்டியார் ரோட்டு

~shend

மற்றும் தணிகாசலம் செட்டியார் ரோட்டுக்கு ரங்கசாமி அய்யங்கார் ரோட்டு என்று பெயர் வைக்கப்பட்ட வகுப்புவாத உணர்ச்சியானது தோழர் ஓ.கந்தசாமி செட்டியார் ஒரு ்வெடிகுண்டு” போட்டவுடன் உடனே கொல்லப்பட்டு விட்டது. இதிலும் ஆச்சாரியாருக்கோ, காங்கரசுக்கோ, தேசியத்துக்கோ சிறிதும் அவமானமோ, இழிவோ, கேவலமோ, சிரிப்புக்கு இடமோ, காறி உமிழ சவுகரியமோ ஏற்பட்டு விடவில்லை. இவைகள் சம்மந்தமாக நடந்த கிளர்ச்சிகளும், ஆச்சாரியாரின் அரசாங்கத்தை நடத்த கஷ்டமாகவோ, முட்டுக்கட்டையாகவோ இருக்கச் செய்யவில்லை. ஆதலால் அவற்றிற்கு உடனே தலைவணங்கி விட்டார். இப்போது தமிழர்களுக்கும், ஆரியருக்கும் என்று வெளிப்படையாக நடக்கும் இந்த இந்தி எதிர்ப்புத்தான் ஆச்சாரியாரின் ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறது போலும்.

ஈ. ்காங்கரசைப் பார்த்து இந்தி எதிர்ப்பாளர்கள் சத்தியாக்கிரகம் செய்கிறார்கள். சத்தியாக்கிரகத்தில் காங்கரஸ் வெற்றி பெற்றது. இந்தி எதிர்ப்பாளர்களுக்கு தாங்கள் வெற்றி பெறவில்லையே என்கின்ற கோபம்” என்று அசட்டு பேச்சு பேசுகிறார்.

சத்தியாக்கிரகத்தாலா காங்கரஸ் வெற்றி பெற்றது?

காங்கரஸ் இன்றுவரை எந்த சத்தியாக்கிரகத்திலாவது வெற்றி பெற்றது என்று யாராவது ருஜú செய்ய முடியுமா? காங்கரஸ் சத்தியாக்கிரக கைதிகள் காரியம் வெற்றி பெற்று விடுதலையாகவில்லை. அதற்கு பதிலாக மன்னிப்பு கேட்டுக் கொண்டே வெளியானார்கள். ஆனால் இந்தி எதிர்ப்புக்காரர்கள் சத்தியாக்கிரகம் என்று எதையும் செய்யவே இல்லை. செய்வதுமில்லை. அவர்களுக்கு சத்தியாக்கிரகம் என்பது முழுப்புரட்டு, பித்தலாட்டம் என்பதும் அது ஒரு சண்டித்தனமே என்பதும் நன்றாய் தெரியும். மற்றென்ன செய்கிறார்கள் என்றால் ்இந்தியை எதிர்ப்பவர் ஒரு ராமசாமிதானேயொழிய பொதுஜனங்கள் அல்ல” என்று கனம் ஆச்சாரியார் சட்டசபையில் சமாதானம் சொல்லி தப்பித்துக் கொண்ட சூழ்ச்சியை விளக்கவே ராமசாமி மாத்திரமல்ல நாங்கள் வெகுபேர் இருக்கிறோம் என்பதை ஆச்சாரியாருக்குக் காட்டவே பொது ஜனங்கள் அடையாளம் காட்டுகிறார்கள். அவர்களைப் பிடித்துத்தான் காங்கரஸ்காரர்கள் 6 N தண்டிக்கிறார்கள். இவ்வளவே தவிர இதில் சத்தியாக்கிரகம் என்ன அழுகின்றது என்று கேட்கின்றோம். இந்த லக்ஷணத்தில் சத்தியாக்கிரகம் தங்களுக்குதான் பலிக்குமாம். மற்றவர்களுக்கு பலிக்காதாம். இது “நாங்கள் தான் அயோக்கியர்களே தவிர எங்களுக்கு தான் ஏமாற்ற தெரியுமே தவிர மற்றவர்கள் யோக்கியர்கள் அவர்களுக்கு ஏமாற்ற தெரியாது” என்று காங்கரஸ்காரர் முட்டாள் வீரம் பேசுவது போல் இருக்கிறது.

உ. மற்றும் ஆச்சாரியார் (மெயில் பத்திரிகையில் காணப்படுகிறபடி)

்ரஷியாவுக்குச் சென்றுவிட்டு வந்து நாஸ்திகம் பேசி பொது உடமை பிரசாரம் செய்யும் பொது உடமைவாதி ஒருவர் இந்தியை எதிர்ப்பது ஆச்சரியமாய் இருக்கிறது” என்று பேசி இருக்கிறார்.

இதற்கு முன் கூட்டப்பட்ட சட்டசபையில் கனம் ஆச்சாரியார் ்எனது நண்பர் ராமசாமி நாயக்கர் தான் இந்தியை எதிர்க்கிறாரே ஒழிய பொதுஜனங்கள் எதிர்க்கவில்லை” என்றார். 15-தேதி கடற்கரை கூட்டத்தில் ்மற்றவர்கள் எதிர்ப்பதுதான் சரி ரஷ்யாவுக்கு போய் வந்தவர் (ராமசாமி) கூட எதிர்ப்பது ஆச்சரியமாய் இருக்கிறது” என்றால் இதில் இருக்கும் அறிவுடைமையையோ, நாணையத்தையோ முன்னுக்குப் பின் முரண் இல்லாத தன்மையையோ இருக்கிறதா என்று பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க ஆசைப்படுகிறோம். அந்தக் காலத்தில் அதாவது சட்ட சபையில் ்ராமசாமி தான் எதிர்க்கிறார்” என்ற காலத்தில் ஆச்சாரியாருக்கு ஆச்சரியம் தோன்றவில்லை. அப்போது ராமசாமி எதிர்ப்பது சாதாரணமாய், நியாயமாய் தோன்றி இருக்கிறது. ஏன் எனில் ்காங்கரஸ் எதிரியும் ஆரியர் எதிரியுமான ராமசாமி” காங்கரசுகாரரும், ஆரியருமான கனம் ஆச்சாரியார் சூழ்ச்சியை எதிர்க்க வேண்டியதுதான் போலும். ஆனால் இப்போது கடற்கரை கூட்டத்தில் அதே ராமசாமிக்கு ரஷியா, நாஸ்திகம், பொது உடமை என்கின்ற அடைமொழி கொடுத்து அவர் எதிர்ப்பதில் ஆச்சரியப்படுவது என்பது எப்படி பொருந்துகிறது என்பது நமக்கு விளங்கவில்லை. ரஷ்யா போய் வந்தவனும், நாஸ்திகனும் பொதுஉடமைவாதியுமாய் ஒருவன் இருந்தால் ஆச்சாரியார் சொல்லுவது எதையும் எதிர்க்கக்கூடாது என்பது சட்டமா ்வேதமா” என்று கேட்கின்றோம்.

ஒரு சமயம் தோழர் ராமசாமியை போலவே ்ரஷியா போய்வந்த நாஸ்திகன் பொதுஉடமைவாதி”யான தோழர் விளம்பர மந்திரி கனம் ராமநாதன் போல் ராமசாமி இல்லையே என்று கருதி இப்படிச் சொன்னாரோ அல்லது ஒருவனை பொதுஉடமைக்காரன், நாஸ்திகன் என்று சொன்னால் பொதுஜனங்கள் ஆளுக்கொரு கல் எடுத்துப் போட்டு ராமசாமியை அடக்கிவிடுவார்கள் என்று கருதி ஒரு சுருக்க வழி கண்டுபிடித்தாரோ என்னவோ தெரியவில்லை. இதிலிருந்து ஆச்சாரியாரின் ஜீவ சுபாவம் எப்படிப்பட்டது என்பது பொதுமக்களுக்கு விளங்காமல் போகாது.

~subhead

ஒழுக்கமும் தைரியமும் இருந்தால்?

~shend

ஊ. ்இந்தி இயக்கமும், சத்தியாக்கிரகமும் ஜனங்களை ஏமாற்றும் வரை, தைரியம் ஒழுக்கம் முதலியவைகளுடன் காங்கரஸ் ஆட்சி நடத்தினால் காங்கரஸ் ஆட்சி அசையாது. சந்தேகப்படாதீர்கள் நம்புங்கள்” என்று பேசி இருக்கிறார்.

இது ஒரு சமயம் இந்தி எதிர்ப்பால் ஆச்சாரியார் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்று பொது ஜனங்கள் நினைத்துவிட்டால் என்ன ஆவது என்கிற பயத்தால் உளறியதாகும். ஆனால் காங்கரசிடமோ, ஆச்சாரியார் இடமோ அது மாத்திரம் கிடையாது. அதாவது “தைரியமும் ஒழுக்கமும்” மாத்திரம் கிடையாது. தைரியமிருந்தால் – ஒழுக்கமிருந்தால் ்வந்தே மாதரமே” ஒழிந்திருக்காது. மற்றும் இந்தி 3 வகுப்புக்கு மாத்திரமாகி 125 பள்ளிக் கூடத்திற்கு மாத்திரம் ஆகி பரீட்சையில் தேற வேண்டியதில்லையாகி படிக்காவிட்டாலும் மேல் வகுப்புக்கு போகலாமாகி இரண்டு பாஷை எழுத்தில் படிக்கலாமாகி 200 வார்த்தை கற்றால் போதுமானதாகி கடைசியாக இந்துஸ்தானியாக ஆகி தப்பபிப்பிராயப்பட்டு இந்தியை தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்றாகி காங்கரஸ் காரியக்கமிட்டி சிபார்சும் காங்கரஸ் தலைவர் ஆதரவும் காந்தியாரின் “ஸ்ரீ முகங்”களும் வந்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது.

கடைசியாக தனது நடுக்கத்தையும் கக்கிவிட்டதோடு கடைசி ஆயுதத்தையும், இந்தி எதிர்ப்புக்காரர்கள் மீது வீசிவிட்டார். அதாவது,

~subhead

மானமுள்ளவர் கூறும் சமாதானமா?

~shend

எ. “நாம் வெறுத்த கிரிமினல் சட்டத்தை நாம் பிரயோகப்படுத்துவது தப்பென்கிறார்கள் சிலர். அது தப்பாகாது. புதிய இந்திய சீர்திருத்தச் சட்டத்தை நாம் வேண்டாமென்றுதான் சொன்னோம். ஆனால் புதிய சட்டப்படி நாம் இன்று (மந்திரியாய்) இருந்து அந்த சட்டப்படி ஆட்சி புரியவில்லையா?” என்கிறார்.

ஆகவே இது எவ்வளவு – வெட்கம் கெட்ட மானம் கெட்டதனம் என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. “புதிய அரசியல் சட்டத்தை ஒழிக்கிறோமென்றவர்கள் இன்று எப்படி நடத்திக் கொடுக்கிறீர்கள்” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நாளது வரையிலும் ஒருவரும் பதில் சொல்லவில்லை. அதுபோலவே ்நாமினேஷனே கூடாது என்று சொன்ன நீங்கள் டாக்டர் ராஜனுக்கு எப்படி நாமினேஷன் செய்து மந்திரியாக்கினீ்ர்கள்” என்பதற்கும் நாளது வரை பதில் இல்லை.

“கிரிமினல் சீர்திருத்த சட்டத்தை வெறுத்த நீங்கள் இப்போது ஏன் நீங்களே அச்சட்டத்தை உபயோகப்படுத்துகிறீர்கள்” என்றால் “மந்திரி வேலை ஏற்று அரசியலை நடத்திக் கொடுப்பது போலும். நாமிநேஷன் செய்து மந்திரியாக்கினது போலும்” என்று சமாதானம் சொல்லப்பட்டால் இந்த சமாதானம் மானமுள்ள மக்கள் சொல்லுவார்களா? அறிவுள்ள மக்கள் ஏற்பார்களா என்பது யோசிக்கத்தக்கதாகும்.

்கிரிமினல் சீர்திருத்தச் சட்டத்தை உபயோகிப்பதற்கு இதைத் தவிர வேறு பதில் இல்லை என்பது இப்போதாவது பொது ஜனங்களுக்கு விளங்கி இருக்குமென்று கருதுகிறோம். மற்றொரு ்புத்திசாலி”த்தனமான சமாதானமும் சொல்லி இருக்கிறார். அது என்னவென்றால்

்பணம் ஆள் சேகரித்து ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்படுவதுபோல் புறப்பட்டு வந்து தினமும் நியூசென்சாக இருந்தால் என்ன செய்வது, கிடைத்ததை எடுத்து உபயோகிக்க வேண்டியதுதானே” என்றும் ்திடீரென்று வீட்டுக்குள் திருடன் வந்துவிட்டால் கைக்கு அகப்பட்டதை எடுத்து அடிக்க வேண்டியதுதானே” என்றும் பேசியிருக்கிறார். இவர்தான் மகாதீரராம், மகாவீரராம் . கடைசி வரை பார்க்கப் போகிறாராம்.

இந்தப் பேச்சில் இவரது பயங்காளித்தனமும், புறமுதுகிட்டோடப் போகும் கோழைக் குறியும் எவ்வளவு புதைந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள எவ்வளவு வசதி கிடைத்துவிட்டது என்பதை வாசகர்கள் உணரவேண்டுகிறோம்.

~subhead

கடைசி ஆயுதம்

~shend

3 மாத காலமாய் 250 தொண்டர்கள் தான் ஆச்சாரியார் வீட்டுக்குப் பக்கத்திலும், பள்ளிக் கூடத்தின் பக்கத்திலும் நின்று இருக்கிறார்கள். அதுவும் பெரிதும் ஒரு ஜில்லாக்காரர்கள்தான். அதுவும் தமிழ் வாழ்க இந்தி ஒழிக என்ற ்கூச்சல்” உடன்தான். இந்த நிலையே ஆச்சாரியாருக்கு ஈசல் புற்றுப் போல் காணப்பட்டு அதை சமாளிக்க வேறு வழியில்லாமல் நேர் நிதானம் இல்லாமல் கடைசி ஆயுதத்தை எடுத்து அதாவது கைக்கு கிடைத்ததை எடுத்து அடித்து பார்த்துவிட்டார் என்றால் அந்த ஆயுதம் பயன்படுத்தியும் 2 N காலமாகி இனியும் முன்போலவே ஒரு சிறிதும் மாற்றமில்லாமல் நடந்துவருகிறது என்றால் இப்பொழுதே ஆச்சாரியார் ஆயுதமில்லாத ஆளாக ஆகிவிட்டாரா இல்லையா என்று கேட்கின்றோம். இவரின் கையில் கிடைத்த கடைசி ஆயுதத்தால் கூட திடீரென்று வந்த திருடன் ஓடிவிடவில்லை என்றால் திருடனிடம் அகப்பட்டு திக்குமுக்காடி விழிக்கிறார் என்றுதானே அர்த்தம்.

இவரால் வெறுக்கப்பட்ட வெகு கொடுமையான ஆயுதமே இந்த இயக்கத்தை அடக்க இந்தி எதிர்ப்புத் திருடர்களை விரட்டப் போதுமானதாக இல்லாத மாதிரியில் இயக்கம் வலுத்திருக்கிறது என்பதையாவது ஆச்சாரியார் இப்பொழுது ஒப்புக்கொண்டவராகி விட்டாரா இல்லையா என்று கேட்கின்றோம்.

ஆச்சாரியார் பந்தய விளையாட்டில் பேஸ்த்து (நாணையத் தவறுதல்காரர்) ஆகிவிட்டார். அதாவது சீட்டாட்டத்தில் எப்படிப்பட்ட ஆட்டமானாலும் அதற்கு ஒரு முறை-விதி உண்டு.

அப்படிக்கில்லாமல் கையில் மேல் சீட்டு இல்லாததால் கீழ் சீட்டைப் போட்டால் தோற்றுப் போகுமே என்று கருதி ஜாதிச் சீட்டு இருந்தும் துருப்பைப் போட்டு வெட்டினால் அப்படிச் செய்தவனை பேஸ்து என்பார்கள்.

அதுபோலவே கனம் ஆச்சாரியாருக்கு நேர் வழியில் தோல்வி ஏற்படும் என்ற பயமும் தப்பு வழியில் வெற்றி பெற ஆசையும் வந்துவிட்டது. விதிமுறைகள் எல்லாம் தடுமாறிவிட்டது. ஆனதினாலேயே அவருக்கு இந்தி எதிர்ப்பு இயக்கம் ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்படுகிற மாதிரியாக ஆகிவிட்டது. கையில் கிடைத்ததை எடுத்து போட்டுக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.

~subhead

ஆச்சாரியார் பேஸ்து

~shend

ஆகவே ஆச்சாரியார் பேஸ்தாகிவிட்டார். கூடிய சீக்கிரம் மூன்றாம் பேஸ்த்தாகி பிரித்துக் கொடுத்துவிட்டு அடங்கப்போகிறார். சாகப் போகிறவன் ஜன்னியில் திமிருவது போல் முடுக்குகிறார் – உளறுகிறார் – விறைக்கிறார் என்ன என்னமோ செய்கிறார். நாடு சிரிப்பதும், காறி உமிழ்வதும் அவருக்குத் தெரியவில்லை. தன்னுடைய சகாக்களையும் கூலிகளையும் ஒரு பெரும்பலமாக நினைத்திருக்கிறார். நியாயம் ஒழுங்கு சமாதானம் அவர் கண்முன் தென்படவே மாட்டேன் என்கின்றன.

அப்படிக்கில்லையானால் கடற்கரையில் 14-ந்தேதி 2- மணி நேரம் பேச்சில் 10 பேர்கள் பேசியதில் இந்தியை தமிழ் மக்களுக்குள் கட்டாயமாய் புகுத்துவதற்கும், தமிழ் மக்கள் கூடாது என்று சொன்ன காரணங்களுக்கும் சொல்லப்பட்ட சமாதானங்கள் என்ன?

்தேசியத்துக்கு இந்தி அவசியம்” மெஜாரட்டி பலம் உள்ள நான் நினைத்ததை செய்ய முடியுமா இல்லையா என்று பார்த்துவிடுகிறேன்” ்கிடைத்த ஆயுதத்தைக் கொண்டு அடித்தேன்” ்இனியும் எந்த ஆயுதத்தையும் உபயோகிக்க பின்வாங்க மாட்டேன்” ்கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்து பயன்படுத்தப்போகிறேன்” என்றுதான் டயர் மாதிரி சமாதானம் சொல்லப்பட்டதே தவிர வேறு சமாதானம் என்ன? இந்த லக்ஷணத்தில்

்பத்திரிகைகளில் இஷ்டப்படி எழுதுவதையும், வாசலில் இஷ்டப்படி கத்துவதையும், இஷ்டப்படி சத்தம் போடுவதையும் அடக்க எனக்குத் தெரியும். ஜாமீன் வாங்கி பேச விடாமலும் செய்வதோடு இன்னமும் எவ்வளவோ செய்யவும் எனக்குத் தெரியும். ஆனால் தொந்திரவு செய்யக்கூடாது என்று இருக்கிறேன். அன்றியும் இப்படியெல்லாம் செய்வது அடக்குமுறையாகும். அது என் மனோதர்மத்துக்கு விரோதம்” என்று பேசி தனது பெருந்தன்மையைக் காட்டிக்கொண்டார்.

~subhead

நமது நன்றி

~shend

வாசகர்களே! இதில் ஏதாவது புத்திசாலித்தனமிருக்கிறதா? என்று பாருங்கள். ்எழுத்து வாசனையில்லாத யாதொரு பாவமும் அறியாத யாரோ சில பிள்ளைகளை சிலர் பின்னால் இருந்து அனுப்பி வருகிறார்கள் அவர்களை அடக்க வேண்டும்” என்று வீரப்பிரதாபம் பேசும் ஆச்சாரியார், அப்படிப்பட்ட யாதொரு பாவமும் அறியாத பிள்ளைகளை அடக்க ்கையில் அகப்பட்டதை எடுத்து அடித்து ஒழிக்க வேண்டியதுதான்” என்று சொல்லுகிறவர் மற்ற சாதாரண காரியங்களை செய்வதுதான் அடக்குமுறை யென்றும் இம்மாதிரி தண்டிப்பது ஆபத்துக்கு ஏற்றதென்றும் சொல்லுவது எப்படி புத்திசாலித்தனமாகு மென்பது நமக்கு விளங்கவில்லை. ஆனாலும் அந்த அளவுக்கு அதுவரை நன்றி செலுத்துகிறோம், பாராட்டுகிறோம்.

்பேய்க்கும் அதன் பங்கைக்கொடு” என்று பழமொழி சொல்லுவார்கள். அதற்கிணங்க நன்றி செலுத்துகிறோம்.

சிறை நடத்தையைப் பற்றி கனம் ஆச்சாரியார் கூறியிருப்பதைப் பாருங்கள்.

்நாம் (காங்கரஸ்காரர்கள்) சிறை செல்லும்போது இருந்த மாதிரிதான் இப்பொழுதும் இருக்கிறது. அதைவிட தாழ்வுமில்லை உயர்வுமில்லை.”

என்று சொல்லுகிறார். முன் இருந்த சிறை நிர்வாகம் அன்னிய ஆட்சி நம்மை சுரண்டிக்கொண்டு போகவந்த கொடுங்கோலாட்சி, அஹிம்சை சமாதானம் பொருமை மனிதத் தன்மையில் நம்பிக்கை ஆகியவை இல்லாத மிருக ஆட்சி என்று காங்கரஸ்காரர்கள் சொன்னார்கள். காந்தியாரும் சொல்லி இருக்கிறார். ்இன்றைய ஆட்சி நம்ம ஆட்சி, ஜனப் பிரதி ஆட்சி, சுயராஜ்ய சர்க்கார், பொதுஜன மெஜாரட்டியின் பேரில் நடக்கும் வெகுஜன ஆட்சி” என்று அதே காங்கரஸ்காரர்களால் சொல்லப்படுகிறது. அப்படி இருக்க ்சிறைக்கூடம் முன் இருந்த கொடுமைகளுக்கு குறைவில்லாமல் நடத்தப்படுகிறது என்பதை நம்புங்கள்” என்றால் வெள்ளையர்கள் சுரண்டுகிறவர்கள் அன்னியர்கள் கொடுங்கோலர்கள் ஆட்சியைவிட பார்ப்பன ஆட்சி புரோகித ஆட்சி எந்த விதத்தில் மேலானதென்று சொல்லிக்கொள்ள உரிமை உண்டு என்று கேட்கின்றோம்.

ஆகவே தோழர்கள் ஆச்சாரியார், டாக்டர் ராஜன் ஆகியவர்களின் கடற்கரைப் பேச்சிலிருந்து பார்ப்பனரல்லாதாராகிய தமிழ் மக்களாகிய நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சங்கதி என்ன என்பதை இந்த வியாசத்தை ஒரு தடவைக்கு இருமுறை படித்து ஆராய்ந்து பார்த்து தமிழ் மக்கள் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி செய்வது சரியா, தப்பா என்பதை உணர்ந்து பார்த்து சரி என்று பட்டால் உடனே உங்களுடைய பங்கை செலுத்துங்கள். உங்கள் கடமையை செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டு இதை முடிக்கின்றோம்.

குடி அரசு – தலையங்கம் – 21.08.1938

You may also like...