இந்தி எதிர்ப்பும் அரசாங்கமும் எதிரிகளும்

 

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்காக இதுவரை 197-பேர்கள் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். நூற்று இருபது பேர்கள் வரை தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு 4 – மாதம், 5-மாதம், 6-மாதம் கடின காவலும், ஒரு மடாதிபதி சந்யாசிக்கு 2-வருஷ கடின காவலும், மற்றொரு பி.ஏ. படித்த யாழ்ப்பானத்து சன்யாசியாருக்கு 18 மாதம் கடுங்காவல் தண்டனையும் அளித்திருப்பதோடு இவர்கள் எல்லோருக்கும் ஜெயிலில் இ (சி) கிளாஸ் உணவும் தகுதியும்தான் கொடுக்கப்பட வேண்டுமென்றும் தீர்ப்பளித்து அந்தப்படியே அவர்கள் அத்தனை பேரையும் மொட்டை அடித்து கிரிமினல் கைதிகள் உடுப்புக் கொடுத்து மிகக் கொடூர வாழ்வு வாழும்படி நடத்தப்பட்டு வருகிறார்கள்.

சிறை சென்ற தொண்டர்களில் பலர் பெருத்த செல்வவான்களின் பிள்ளைகள் சிலர் மாதம் 100, 200 – ரூபாய் சம்பாதிக்கக் கூடியவர்கள். சில தொண்டர்களின் பெற்றோர்கள் சென்னை வந்து தொண்டர்களுக்குப் பல வித உபசாரங்கள் சொல்லி காங்கரஸ்காரர்கள் தயவு பிடித்து அழைத்துப் போக முயற்சித்தும் தொண்டர்கள் மறுத்து விட்டார்கள். இரண்டொரு லட்சாதிபதிகள் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

~subhead

ஒரு முக்கிய விஷயம்

~shend

ஒரு விஷயத்தை வாசகர்கள் நினைவில் இருத்த விரும்புகிறோம். அதாவது இந்தி எதிர்ப்பு கமிட்டியார் தங்கள் கிளர்ச்சிகளை சட்டத்திற்கு உட்பட்டு நடத்த வேண்டும் என்றும், எவ்வித நிலைமையிலும் சட்டம் மீறுதல் கூடாது என்றும், சர்க்கார் உத்திரவுகளைக் கூட மீறி ஒன்றும் செய்யக்கூடாது என்றும் தீர்மானித்திருப்பதுடன் இம்முடிவை இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி சங்கத்தை சேர்ந்தவர்கள் உணர்ந்து வெகு கண்டிப்பாய் நடக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கும் போதே பதட்டமுள்ள – சர்க்கார் அக்கிரமத்தை சகிக்க முடியாத – பல தோழர்கள் சிறைபிடிக்க இணங்கி இருக்கிறார்கள் என்றாலும் இவர்களில் எவரும் சட்டத்தை மீறத் தீர்மானித்து சிறை சென்றவர்கள் என்று சொல்லிவிட முடியாது.

~subhead

மறியலுக்குக் காரணம்

~shend

உண்மையிலேயே யாரும் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டுமென்று கருதிக்கூட சிறை செல்லவில்லை. நடந்த காரியம் என்னவென்றால் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியானது ஒரு தோழர் ்ராமசாமி நாயக்க”ராலும் மற்றொரு காங்கரஸ் – ஆரிய விரோதியாலும் நடக்கின்றதே ஒழிய பொது ஜனங்களின் எதிர்ப்பல்ல என்று கனம் ஆச்சாரியார் வெளியிலும், சட்டசபையிலும் கூறிய கூற்று தவறு என்று நிரூபிப்பதற்காக ்நாங்களும் எதிர்க்கின்றோம்” ்நாங்களும் எதிர்க்கின்றோம்” என்பதைக் காட்ட வேண்டி பல தோழர்கள் முயற்சித்தார்கள். அம்முயற்சியில் ஒன்றுதான் ஆச்சாரியார் வீட்டுக்குப் பக்கத்தில் ஆச்சாரியார் கண்ணில் படும்படி நின்றதாகும். அதுவும்கூட அப்படிநின்ற தோழர்கள் ்தமிழ் வாழ்க – இந்தி ஒழிக” என்று சொல்லிக் கொண்டு நின்றதாகும். இதைத் தவிர அத்தொண்டர்கள் எந்த அடாத காரியத்தையும் செய்யாது யாருக்கும் எவ்வித அசெளகரியத்தையும் தொந்தரவையும் கொடுக்காது இருக்கும்போது (கொடுத்ததாக போலீசார் சாòயத்திலும் மற்றும் அவர்கள் கொடுத்த சார்ஜி ஷீட் பிராதிலும் கூட காண முடியவில்லை) அந்தப்படி நடந்துகொண்டவர்களைத்தான் ஆச்சாரியார் சர்க்கார் கைது செய்து 200-பேர்கள் வரை கணக்கு காட்டி இருக்கிறார்கள்.

~subhead

மந்திரிமார் ஏளனம்

~shend

ஆனால் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி கமிட்டியார் ்நியாயமான முறையில் சமாதானத்துக்குப் பங்கமில்லாமல் செய்யப்படும் கிளர்ச்சியை சட்டம் மீறியது என்று சொன்னாலும் லட்சியம் செய்ய வேண்டியதில்லை” என்று தீர்மானித்திருப்பார்களேயானால் கூட இதுவரை 2000 பேர்களாவது சிறைபிடிக்கப்பட்டிருப்பார்கள் என்பதில் நமக்கு சிறிதும் சந்தேகமில்லை. அந்த நிலையை ஏற்படுத்தாமல் இனியும் பார்ப்போம் இனியும் பார்ப்போம் என்று இந்தி எதிர்ப்புக் கமிட்டி பொறுமை காட்டி வருவதை மந்திரிகள் யோக்கியப் பொறுப்பற்ற முறையில் கருதி ஏளனம் செய்து வருகிறார்கள்.

்இந்தி எதிர்ப்புத் தலைவர்கள் ஏன் இன்னும் சிறைக்கு வரவில்லை?” என்று கூட்டங்களிலும் மேடைகளிலும் இருந்து கேட்பதோடு தனிபேச்சு வார்த்தைகளிலும் பேசி பரிகாசம் செய்கிறார்கள். மந்திரிகள் என்னவோ சொல்லட்டும், அதைப்பற்றி கவலை இல்லை. அது பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு இரண்டறக் கலந்து விட்ட கூட்டமாகும்.

ஆனால் அற்பக் கூலிகளும் இதைப் பின்பற்றி சில அயோக்கிய காலிப் பத்திரிக்கைகளும் ஏளனம் செய்கின்றன.

~subhead

அற்பர்கள் புரளி

~shend

மக்களுக்கு வாழ்க்கையின் கொடுமையால் மானம் ஈனம் இல்லாமல் போவது இயல்பு. ஆனால் புத்தி கூட இல்லாமல் போகுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தி எதிர்ப்புக் கமிட்டி தலைவர்கள் சட்டத்தையும் சர்க்கார் உத்திரவையும் லட்சியம் செய்யாமல் சிறை செல்லும்படி அபிப்பிராயப்பட்டு விட்டார்களா, தீர்மானம் போட்டு அனுமதித்துவிட்டார்களா என்றுகூட கவனிக்காத இந்த அற்பர்கள் அயோக்கியர்கள் தங்களிடம் பத்திரிகை இருப்பதாலும் தங்களுக்கு வாய் இருப்பதாலும் அவைகளை ஒழுங்காக உபயோகப்படுத்தாமல் துஷ்ப்பிரயோகப்படுத்துகிறார்களே! இந்த இழிபிறப்பாளருக்கு புத்தி வரும்படியான வார்த்தைகள் கிடைக்காமல் வெகு கஷ்டப்பட்டுக் கொண்டு இதை எழுத வேண்டியிருக்கிறது.

~subhead

இந்திக் கிளர்ச்சி நடப்பதேன்?

~shend

இன்றைய நிலைமை இந்நாட்டு தமிழ் மக்களுக்குப் பேராபத்தாய் வெகு நெருக்கடியாய் இருக்கிறது என்று கருதியே இந்தி எதிர்ப்பையும் மற்றும் பல காரியங்களையும் செய்ய பல சுயநலமற்ற மக்கள் கிளர்ச்சி துவக்கி இருக்கிறார்களே தவிர இதனால் எவ்வித கூலியும் பெறுவதற்கல்ல. இம்முயற்சியில் அவர்கள் படும்பாடும் அடையும் கஷ்டமும் கொஞ்சநஞ்சமல்ல. அவர்களுக்கு ஒவ்வொரு நிமிஷமும் ஏற்படும் ஆபத்தும் கவலையும் அபாயகரமானதாக இருந்து வருகிறது. இவ்வளவு கஷ்டத்தில் அவர்கள் வேலை செய்து வரும்போது தங்களது மான ஈனத்தை காசுக்கு விற்று வயிறு வளர்க்கும், பதவி பெற்று வாழும் அற்பர்கள் இதை பரிகசிக்கவோ உண்மைக்கு விரோதமாக பேசவோ எழுதவோ என்ன யோக்கியதை என்று கேட்காமல் இருக்கவும் இந்த அயோக்கியர்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும்படி வெளிப்படுத்தாமல் இருக்கவும் பொது நலத்தை உத்தேசித்து நம்மால் முடியவில்லை. ஆதலால் இதை விளக்குகிறோம். சர்க்காரை நடத்துகிறார்கள் என்கின்ற முறையில் மந்திரிகள் ஏதாவது பேசலாம். அவர்கள் சில சமயங்களில் வக்கீல்களைப் போலும் வியாபாரிகளைப் போலும் தாசி வேசிகளைப் போலும் உண்மைக்கு மாறாகவும் உணர்ச்சிக்கு மாறாகவும் பேசலாம், நடக்கலாம்.

~subhead

பொதுஜனங்களுக்கு வேண்டுகோள்

~shend

ஆனால் மற்றவர்கள் அதிலும் பொதுநல சேவை பத்திரிகைகள், பொதுநல சேவை பிரசாரகர்கள் என்று சொல்லிக்கொண்டு இம்மாதிரி அற்பத்தனமாக அயோக்கியத்தனமாக நடந்து பொதுஜன சமூகத்துக்கு கேடு உண்டாகும்படியான காரியத்தைச் செய்து வாழப் பார்ப்பதை எப்படி சற்றாவது மதித்துக் கொண்டிருப்பது என்பது நமக்கு விளங்கவில்லை. ஆகையால் பொது ஜனங்கள் இவ்விஷயங்களில் உண்மைகளை அறிய கவலை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்.

தவிர இவ்வியக்கத்துக்கு பணம் வசூல் செய்வதைப் பற்றியும் ஈனத்தனமாக சிலர் பேசிவருவதாக அறிகிறோம். ்சில தலைவர்கள் தங்களுக்கு வீடு கட்டிக் கொள்வதற்காக இந்தி வசூல் பணம் பயன்படுத்தப்படுகிறது” என்று பேசினார்களாம். இது எவ்வளவு கண்டிக்கப்படத்தக்கது என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

~subhead

காங்கரஸ் வீரர்களுக்கு ஒரு கேள்வி

~shend

காங்கரஸ்காரர்கள் பலர் காங்கரசில் வந்து சேரும் போது எச்சிலை நக்கிப் பிழைக்கும் யோக்கியதையிலும் – காமுகனுக்கும் காமக் கிழத்திக்கும் தரகனாய் இருந்து வயிறு வளர்த்துக் கொண்டும் இருந்தவர்கள் இன்று பல ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு உடைமஸ்தர்களாய் இருக்கக் காரணம் என்ன? அவர்களது வரவு செலவு என்ன? தொழில் வரி வருமான வரி என்ன? என்று கணக்குச் சொல்ல முடியுமா என்று கேட்கிறோம். இந்நிலையுள்ள அயோக்கிய கூட்டத்தார் மற்றவர்களைப் பார்த்து அதுவும் பொதுநல சேவைக்கு வந்தபின்பு தங்களுடைய ஏராளமான வருவாய்களை இழந்து பல லக்ஷக்கணக்கான ரூபாய்களையும் இழந்து பல நல்ல வீடுகள் மொத்தத்தில் மாதம் 1000, 1500 ரூ. வாடகை வந்த வீடுகள் குட்டிச் சுவராக நிற்க விட்டு விட்டும், பல பதினாயிரக்கணக்காக கடன் கொடுத்த ரூபாய்களை வசூலிக்காமல் (கடன் நிவாரண சட்டத்தால் அல்ல) விட்டு விட்டும் மற்றும் ஒருவர் தனது பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பூமிகளின் சொந்த விவசாயத்தை பாழாக்கிக் கொண்டும் மற்ற ஒருவர் தனது M 4000, 5000 லாபம் வரும் வியாபாரத்தை லட்சியம் செய்யாமல் இருந்து கொண்டும் எந்தப் பதவியையும் எந்த லாபத்தையும் ஆசைப்படாமல் தமிழ் மக்கள் நலத்தையே கருதி பல கஷ்ட நஷ்டங்களுக்குக்கிடையில் தங்கள் சொந்தச் செலவில் தொண்டாற்றி வருகிறவர்களை சிறிதும் நன்றி கெட்ட மிருகக் குழந்தைகள் போல் கேவலமாக இழிவாக பேசி விஷமப் பிரசாரம் செய்வதென்றால் இதை எப்படி சகிக்க முடியும் என்று கேட்கிறோம்.

~subhead

ஸ்டாலின் கதை

~shend

அடுத்தாற்போல் ஸ்டாலின் ஜகதீசன் என்பவருடைய விரதத்தைப் பற்றி செய்யும் கிண்டல் இயக்கத் தலைவர்களையும் சேர்த்து விஷமப் பிரசாரம் செய்யப்படுகின்றன. இயக்கத் தலைவர்களின் நாணையத்தை பாதிக்கும்படியும் ஜகதீசனை ஆதரிக்கும் காங்கரஸ் பத்திரிகைகள் எழுதுகின்றன.

ஜகதீசனின் ்விரதம்” உண்மையற்ற பித்தலாட்ட விரதமாய் முடிந்தது என்பதில் தலைவர்களுக்கு சிறிதும் சந்தேகமில்லை. அவ் ்விரதம்” அந்தப்படி முடிய மந்திரிகள், போலீசு, சி.ஐ.டி.க்கள் மற்றும் மந்திரிக்கு வேண்டிய சில நண்பர்கள் இவ்விரதத்தை அழித்து மந்திரிக்கு நன்மை செய்து கிப்பாத்தும் பலனும் அடையக் கருதிய சில இயக்கத் தோழர்கள் முதலியோர் எடுத்துக்கொண்டு வரும் முயற்சியைப் பற்றி தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் சி.ஐ.டி. சுருக்கெழுத்து நிருபர் முன்னிலையில் அவரை குறித்துக் கொள்ளும்படி வேண்டிக் கொண்டு நெடுநாளாகவே பல கூட்டங்களில் பேசி இருக்கிறார். இந்த ஒரு மாத காலத்திய சி.ஐ.டி சுருக்கெழுத்து ரிபோர்ட்டுகளில் அவற்றைக் காணலாம். ஜகதீசனுக்கும் இவ்விஷயம் தெரிவித்து கண்டிக்கப்பட்டிருக்கிறது. அவர் தான் அப்படி இல்லை என்றும் அந்த பிரஸ்தாபம் பொய்யென்றும் மற்றும் எங்கள் தகப்பனார் குதிருக்குள் இல்லை என்ற மாதிரி சமாதானம் எழுதியிருக்கிறார்.

~subhead

ஸ்டாலின் ஈரோட்டுக்கு வந்தது

~shend

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் சுமார் 3 Nத்துக்கு முன் ஜகதீசன் ஈரோட்டிற்கு வந்து தான் உண்ணாவிரதமிருக்கப் போகிறேன் என்று தோழர் ஈ.வெ.ராமசாமியிடம் தெரிவித்தபோது அவருக்கு சரியாக முகங் கொடுத்துப் பேசாமல் தனக்கு அக்காரியங்களில் நம்பிக்கை இல்லை என்றும் அதை ஆதரிக்க முடியாதென்றும் தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் கூறி அலட்சியப்படுத்தி அனுப்பிவிட்டார்.

பிறகு அவர் தோழர் ஈ.வெ.ரா. பேரைச் சொல்லிக் கொண்டு சென்னை சென்று அங்குள்ளவர்களை ஏய்த்து எப்படியோ தோழர் சி.டி. நாயகம் அவர்கள் வீட்டில் இடம் தேடிக் கொண்டார்.

அங்கு உண்ணாவிரதம் ஆரம்பித்ததாய் வந்த சேதிகளை ்விடுதலை” பத்திரிகையில் போட முதலில் அனுமதிக்கப்படவில்லை. சென்னையில் இருந்து பல தோழர்கள் சிபார்சு செய்தார்கள். பல பொதுக் கூட்டங்களில் தோழர் ஈ.வெ.ராமசாமியை ஏன் போடவில்லை என்று கேள்வி கேட்டார்கள். அக்கேள்விகளுக்கு பதில் சொல்லுகையில் ஸ்டாலினைப் பற்றி தனக்கு தெரியாதென்றும், அவரைத் தான் நம்பவில்லை என்றும் சொல்லி இருக்கிறார். அதோடு அந்த உண்ணாவிரதப் புரளி சென்னையில் உள்ள பல மூட நம்பிக்கைக்காரர்களால் இந்தி எதிர்ப்புக் கூட்டங்களிலும், பிரசாரத்திலும் கலக்கப்பட்டுவிட்டதால் அதன் பயனாய் இந்தி எதிர்ப்பு தோழர்களுக்குள் அபிப்பிராய பேதம் வரும்போல் இருந்ததால் ஸ்டாலின் கபட நாடகத்துக்கு அனுமதி கிடைத்துக் கொண்டேதான் வந்திருப்பதாய் தெரிகிறது.

~subhead

்விடுதலை”யும் உண்ணாவிரதமும்

~shend

ஸ்டாலின் ்உண்ணாவிரதம் ஆரம்பித்தது” மே- N 1-ந் தேதி. அதை ்விடுதலை” 10 நாள் வரை பிரதானப்படுத்தவோ விளம்பரப்படுத்தவோ இஷ்டப்படவில்லை. ஏதோ நிருபர் சேதியாக ஒன்று இரண்டு செய்தி போடப்பட்டது. பல இந்தி எதிர்ப்பு தொண்டர்களின் வற்புறுத்தலின் மீது 10-ந் தேதி கோடு கட்டி போட்ட பிறகும் மறுபடியும் அதற்கு பிரதானம் கொடுக்கக்கூடாது என்று நிறுத்தப்பட்டுவிட்டது. பிறகு 17-ந் தேதி மறுபடியும் பலர் வேண்டுகோள் பேரில் போடப்பட்டு வந்தது. மறுபடியும் அதை சிறு சேதியாய் போடப்பட்டது. இதற்காக சென்னை தோழர்களுடன் சதா தகரார் செய்து கொண்டு போடாமல் நிறுத்துவதும் மறுபடியும் சேதியாக போடுவதும் இப்படியாக இருந்து வந்ததும் விடுதலையை பார்ப்பவருக்கு விளங்கும். கடைசியாக நமது நிருபர் சென்னைக்கு சென்று நேரில் பார்த்து பலரை விசாரித்து உண்மையாக பட்டினி கிடக்கிறார் என்றும் (அவர் ஏதாவது சாப்பிடுவதாய் இருந்தால் குளிக்கும் போதோ அல்லது வெளியில் போகும் போதோதான் இருக்கலாம் என்றும்) தண்ணீரும் எலுமிச்சம்பழ சாறும் மாத்திரம் சாப்பிடுவதாய் நம்பிக்கை உள்ள இடத்தில் இருந்து தெரிந்து வந்தார். அப்படி இருந்தும் இந்தி எதிர்ப்பு கமிட்டியார் அதை ஆதரிப்பதில்லை என்று திருச்சி கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் செய்து இருக்கிறார்கள்.

~subhead

ஜகதீசன் காங்கரஸ் ஒற்றர்

~shend

தோழர் ஈ.வெ.ராமசாமி திருபுவனம் மகாநாட்டில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் அதை யாரும் நம்பாதீர்கள் என்றும் ஜகதீசன் காங்கரஸ்காரர்களால் அனுப்பப்பட்ட ஒற்றராக இருந்தாலும் இருக்கலாம் என்றும் பேசி பதில் அளித்து இருக்கிறார். அதுவும் சி.ஐ.டி. ரிப்போர்ட்டரும் மெயில் ரிப்போர்ட்டரும் குறித்திருப்பார்கள்.

~subhead

கடற்கரைக் கூட்ட நிகழ்ச்சி

~shend

பிறகு சென்னை திருவல்லிக்கேணி பீச் கூட்டத்தில் தோழர் ஈ.வெ.ரா. பேசும்போதும் இம்மாதிரி பட்டினியில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும், தான் இதை இயக்கத்திற்கு சம்மந்தப்படுத்தி காரியம் சாதித்துக் கொள்ள விரும்பவில்லை என்றும் சொல்லி இருக்கிறார். அதன் மீது பலர் அவர் இருந்தால் சரியான பட்டினியாகவாவது இருக்கட்டும், இல்லாவிட்டால் வெளியில் அனுப்பிவிடவேண்டும் என்று அபிப்பிராயப்பட்டு அவரை அதிகமாக காவல் செய்ய ஏற்பாடு செய்தவுடன் அவர் வேறு இடத்திற்கு போக ஆசைப்பட்டுவிட்டார். அந்த சாக்கில் அவரை எப்படியாவது விரதத்தை குலைக்கச் செய்ய வேண்டும், சாப்பிட வைக்கவேண்டும் என்று கவலை கொண்ட தோழர் மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவிடப்பட்டு விட்டது.

~subhead

ஜüன் 28-ந் தேதி செய்தி

~shend

அன்றைய தினமே அதாவது ஜüன் 28-ந் தேதி ்விடுதலை”யில் ஒரு தந்தி சேதி பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதன் கடைசி பாகத்தில் இந்த கருத்தும் காட்டப்பட்டிருக்கிறது. என்னவென்றால் ்ஸ்டாலின் ஜெகதீசன் ராயப்பேட்டைக்கு கொண்டு போகப்பட்டு விட்டார். தோழர் சிவராஜ் உண்ணாவிரதத்தை நிறுத்த முயற்சிக்கிறார். அது வெற்றி பெற வேண்டுமென்று மகாஜனங்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பிறகு அடுத்தநாளே அந்த வீட்டிற்கு பல ஸி.ஐ.டி. போலீசார், போலீசு டிப்டி கமிஷனர், கனம் ஆச்சாரியார் நண்பர்கள் பலர் சென்று இருக்கிறார்கள். மற்றும் ஆச்சாரியார் சார்பாக ஸ்டாலினிடம் வியாபாரம் பேசுவதாகவும் தெரியவந்தது. இதைப்பற்றி அப்போதே தோழர் ஈ.வெ.ரா. ஜகதீசனைக் கண்டித்ததோடு அவரது சம்மந்தம் யாரும் வைத்துக்கொள்ளக் கூடாதென்று சொல்லிவிட்டார். இதை அறிந்த ஜகதீசன் ஈ.வெ.ரா.வுக்கு ஆச்சாரியார் பெயர் போட்டு ஒரு சமாதானக் கடிதம் எழுதி இருக்கிறார். அதன் பின் பத்திரிக்கைக்கு பிரசுரிக்கும்படி வந்த செய்தியில் காங்கரசார் ஜகதீசனை சுவாதீனம் செய்து கொண்டார்கள் என்றும் நமக்கு விரோதமாய் அவரை பயன்படுத்தப்போகிறார்கள் என்றும் சேதிகள் வந்தன. இந்த சமயத்தில் இது நம்பத் தகுந்த மாதிரியில் ஜகதீசன் பலருக்கு ரூபாய்க்கு ஆகவும் நகைகள் மோதிரங்களுக்கு ஆகவும் பலவித உடுப்பு கண்ணாடி வகையராக்களுக்கு ஆகவும் கடிதம் எழுதிய வண்ணமாக இருந்ததாகவும் பல ஊர்களில் இருந்து அவை வந்ததாகவும் இந்தி எதிர்ப்பு தலைவர்களில் சிலரே ஏமாந்து மோதிரம், பணம், உடுப்பு, கண்ணாடி, தங்க சங்கிலி முதலியவைகள் சன்மான மளித்ததாகவும் தெரிய வந்தது. இந்த சமயத்திலும் ஸ்டாலின் தான் பட்டினி கிடப்பதாகவும் நாளை அல்லது மறுநாள் தன் உயிர் பிரிந்துவிடும் என்றும், தான் செய்த சகல குற்றங்களையும் மன்னித்து தனக்கு தரிசனம் கொடுக்கும் படியும் தோழர் ஈ.வெ.ரா.வுக்கு கடிதம் அனுப்பிக்கொண்டே இருந்தார். இவைகளுக்கு பதிலாக நடந்த விஷயங்களை வெளிப்படுத்தப் போவதாகவும் மரியாதையாய் சென்னையை விட்டுப் போய்விடுவது மேல் என்றும் தோழர் ஈ.வெ.ரா. சொல்லியனுப்பிய பிறகே அவர் சென்னையை விட்டு ஓட நேர்ந்தது. இவைகளை வெளியிட வேண்டிய அவசியமேற்பட்டது, ஸ்டாலின் இப்போது சில இந்தி எதிர்ப்பு தலைவர்கள் மீது குறைகள் கூறிவருவதும், காங்கரஸ்காரர்களும் இவரை கையாளாகக் கொண்டு இழிதகமை விஷமப் பிரசாரம் செய்ய அவரை விலைக்கு வாங்கப் போவதாக அறிவதாலும், மற்றும் இரண்டொரு காரியங்களாலுமேயாகும். (அவற்றைப் பின்னால் அவசியம் நேர்ந்தால் ஆதாரங்களோடு வெளியிடக் கருதி இருக்கிறோம்.)

~subhead

அரஸ்ட்டு நிறுத்தப்பட்டது

~shend

பட்டினி எப்படியோ போகட்டும். இந்தி எதிர்ப்பு அரஸ்டுகளில் இப்போது ஒன்று நிறுத்தப்பட்டு விட்டது. இதன் பெருமையை ஜகதீசன் அடைவதில் நமக்கு ஆக்ஷேபணை இல்லை.

அதாவது கனம் ஆச்சாரியார் வீட்டுக்கு பக்கத்தில் நிற்கும் தொண்டர்களை இந்த 10-நாளாக கைதி செய்வதில்லை. சும்மா வாய் மிரட்டலோடு விட்டுவிடுகிறார்கள். ஆனாலும் தொண்டர்கள் தினப்படி நின்று கொண்டுதான் வருவதாகத் தெரிகிறது. உண்மையிலேயே ஆச்சாரியார் இவர்களை கைதி செய்ய வேண்டாம் என்று சொல்லி எதிரிகளை அன்பினால் வெல்லக் கருதி இருந்தாலும் அல்லது போலீஸ் இலாகாவே இது குற்றமாகாது என்று தெரிந்து அரஸ்டு செய்வதை கைவிட்டு இருந்தாலும் அல்லது காங்கரஸ் ஆட்சிக்கு வெளியில் ஏற்பட்ட கெட்ட பெயருக்கு பயந்து கொண்டு கைவிடப்பட்டிருந்தாலும் அல்லது தொண்டர்கள் மீது கருணை காட்டி அவர்களை சும்மா விட்டுவிடுவதானாலும் எப்படியானாலும் சரி இதற்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றி செலுத்துகிறோம். சர்க்கார் நடத்தையையோ ஆச்சாரியார் நடத்தையையோ கோழைத்தனம் என்றோ அல்லது அவர்கள் முட்டாள் தனத்தை திருத்திக் கொண்டார்கள் என்றோ, தோற்றுவிட்டார்கள் என்றோ சொல்ல வரவில்லை. மற்றவர்கள் எப்படி நினைத்தாலும் நம்மைப் பொறுத்தவரை ஆச்சாரியாரை மனமார பாராட்டுகிறோம்.

~subhead

சர்க்காருக்கு மரியாதையிருந்தால்!

~shend

ஆனால் இதே காரியத்துக்காக என்று இது வரை 150 -க்கு மேற்பட்ட தொண்டர்களை கைதி செய்து, கடுந் தண்டனை விதித்து, களி போட்டு கொடுமை படுத்தி வரும் காரியம் இனியும் நியாயமானதா என்றுதான் கேட்கின்றோம்.

இந்த 150- பேர்களைப் பொறுத்தவரையாவது இத்தொண்டர்கள் செய்து வந்த காரியம் துர்ஆக்கிரகமா, சத்தியாக்கிரகமா என்று கேட்கின்றோம்.

இத்தொண்டர்கள் நடத்தைக்கு காரணபூதர்கள் என்று கைதி செய்யப்பட்டு ஒன்றரை வருஷம் இரண்டு வருஷம் கடுந் தண்டனை விதிக்கப்பட்ட சந்யாசிகள், மடாதிபதிகள் நடத்தையை இனியும் துராக்கிரகத்துக்கு தூண்டினவர்கள் நடத்தையாகும் என்று இனியும் காங்கரசோ, ஆச்சாரியாரோ, சர்க்காரோ, காங்கரஸ் பத்திரிக்கைகாரர்களோ கருதுகிறார்களா என்று கேட்கின்றோம்.

விவகார முறையில் பார்க்கும்போது இந்த 150 பேர்களையும் சர்க்கார் மரியாதையாக வெளியில் அனுப்பிவிட்ட பிறகே கைது செய்வதை நிறுத்தி இருக்க வேண்டியது அவர்கள் கடமை என்று கூறுவோம்.

ஏனெனில் சர்க்கார் பயந்து கொண்டு அரஸ்டை நிறுத்திவிட்டார்கள் என்றோ அன்பு காரணமாக நிறுத்திவிட்டார்கள் என்றோ கூற முடியாது. எப்படி எனில் ்கடைசி வரை இரண்டிலொரு காரியம் பார்த்துவிடுகிறேன்” என்று கூறிய முதல் மந்திரியார் போலீசும் பட்டாளமும் தாம் சொல்லுவது போல் நடக்கத் தகுந்த அதிகாரமும் சக்தியும் கொண்ட மந்திரியார் இந்த இரு இளைஞர்களை பிடிக்க பயந்து விட்டார்கள் என்று எந்த மடையனும் கருதமாட்டான். மற்றும் சன்யாசிகள் உள்பட 150-பேர்களை சிறையிலடைத்து கொடுமைக்குள்ளாக்கும் ஆச்சாரியார் இரு வாலிபர்களுக்கு அன்பு காட்டினார் என்று எந்த ்மகாத்மாவும்” கருத முடியாது.

மற்றும் மன்னிப்பு கேட்காதவர் மீதும் குற்றத்தை நிறுத்திக் கொள்ளாதவர்கள் மீதும் எந்த வீரரும், கோழையும் கூட அன்பு காட்ட முன்வர மாட்டார் என்பது யாவரும் உணர்ந்ததேயாகும்.

நடு நிலைமையில் இருந்து பார்த்தால் இக்காரியம் அதாவது 150- தொண்டர்கள் செய்த காரியம் குற்றமற்றது என்றும் சிறைப்பிடித்து கடின தண்டனை கொடுக்கத்தக்க காரியமல்லவென்றும் கருதி இருக்கலாம் என்றுதான் கருத வேண்டும். ஏனெனில் இந்தி எதிர்ப்பை ஆதரிக்காத அறிஞர்களும் காங்கரஸ் பத்திரிகைகளில் சிலவும் நடுநிலை மக்கள் பலரும் இப்படித்தான் சொல்லி வந்தார்கள். தோழர் கனம் ஆச்சாரியார் இதற்கு செவி சாய்த்திருக்கலாம். அல்லது ஊர் பழிக்கு பின்வாங்கியிருக்கலாம்.

மற்றும் கவர்னர் பிரபு வெகு அவசரமாக கனம் ஆச்சாரியாருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து மேட்டுப்பாளையம் சத்திரத்தில் பேசினார் என்று ஒரு சேதி வந்தது. ஒரு சமயம் இது அதன் விளைவாய் இருந்தாலும் இருக்கலாம் அல்லது காங்கரஸ் தலைவர் சுபாஷ் பாபு அவர்கள் கனம் ஆச்சாரியாரிடம் சமாதானம் கேட்டதாக சொல்லிக் கொள்ளப்படுகிறது, அதன் விளைவோ என்னவோ என்பதும் தெரியவில்லை. எப்படி இருந்தாலும் அந்த நூற்றி ஐம்பது பேரையும் முதலில் கண்ணியமாக வெளியில் அனுப்பிவிட்டு பிறகு கைது செய்யப்படுவதை நிறுத்துவதுதான் ஆச்சாரியாருக்கு புத்திசாலித்தனமான காரியம் என்று கூறாமல் இருக்க முடியவில்லை.

~subhead

ஆச்சாரியாருக்கு வேண்டுகோள்

~shend

இதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில் ஆச்சாரியார் கைது செய்வதை மத்தியில் நிறுத்தி சிறையில் உள்ளவர்களை விட்டுவிடுவார்கள் என்று கருதி கொண்டு யாரும் சிறைக்கு செல்லவில்லை. அவர்களில் அனேகர் வெளியே விடப்பட்டாலும் மறுபடியும் இந்தி ஒழியும் வரை சிறை செல்லக்கூடியவர்கள் என்றே தெரியவருகிறது.

ஒன்று கடைசியாக ஆச்சாரியாரை நட்புமுறையில் கேட்டுக் கொள்ளுகிறோம். ஆச்சாரியார் இது விஷயத்தில் எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி இந்தியோ இந்துஸ்தானியோ கட்டாய பாடம் என்கின்ற முறையை நிறுத்திக் கொண்டால் ஒழிய ்மாற்றிக் கொண்டால்” ஒழிய கிளர்ச்சி நிறுத்தப்படமாட்டாது. சில கூலிகளும் காலிகளும் எச்சிலைப் பத்திரிகைகளும் எவ்வளவு கேவலமாகவும் இழிவாகவும் விஷமத்தனமாகவும் பிரசாரம் செய்தாலும் எதிர்ப்புக் காரியம் நிற்காது. இதில் இறங்கிவிட்ட பிறகு இனி எந்தவிதமான விஷமப் பிரசாரத்துக்கும் பயந்து (பொய் மானம் காப்பாற்றிக்கொள்ள கருதி யாரும் பின் வாங்கப் போவதில்லை. ஏனெனில் உண்மையில் இது அரசியல் போராட்டமல்ல, வகுப்புப் போராட்டம்) இதில் இறங்கியவர்கள் இரண்டிலொன்றுதான் முடிவு பெறுவார்களே தவிர மத்திய வாழ்வில் திருப்தி அடைய மாட்டார்கள். ஆதலால் மெய்யான மானம் போவதானாலும் சரி இந்த முயற்சியில் இந்தி கிளர்ச்சிக்காரர்கள் பின்வாங்கப் போவதில்லை. இதற்கு வள்ளுவர் வாக்கே ஆதாரம். ஆச்சாரியார் குறளை மொழிபெயர்த்து குறளை தனது பேச்சுக்கு அடிக்கடி ஆதாரம் காட்டி வருபவர். ஆகவே, அக்குறளையே ஆச்சாரியார் இனி ஒரு தரம் படித்துப் பார்க்கட்டும்.

அதாவது 103-வது அதிகாரம் குடி செயல் வகை 1028-ம் குறள்.

்குடி செய்வார்க்கில்லைப் பருவமடி செய்து

மானங் கருதக் கெடும்”

என்பதாகும். இதன் பொருள்:-

ஒருவன் தான் பிறந்த குடியை உயரச் செய்யவோ காப்பாற்றவோ முயற்சிப்பானேயாகில் அவன் ஒரு காலத்தையோ தக்க சமயத்தையோ எதிர்பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது என்பதோடு, இம்முயற்சியில் சிறிதும் சோம்பல் கொள்ளக்கூடாது, தனது மானத்தையும் கூட லòயம் செய்யக்கூடாது என்பதோடு அந்தப்படி எவனாவது இந்த விஷயத்தில் மாத்திரம் மானாபிமானம் பார்த்துக்கொண்டு சிறிதாவது தயங்குவானேயானால் அக்குடி அடியோடு கெடும் என்பது பொருளாகும்.

~subhead

ஆச்சாரியார் வெற்றி பெற்றாலும்?

~shend

ஆகவே இந்தி கிளர்ச்சியை அடக்கவேண்டிய அவசியம் இன்றைய தினம் ஆச்சாரியாருக்கு அவரது குடியை (குலத்தை) உயரச் செய்வதற்கு இல்லை என்றால் மற்றபடி ஒரு வீம்பு காரணமாயாவது அவசியப்படலாம். அப்படியானால் இந்த வீம்பை காப்பாற்றிக்கொள்ள ஆச்சாரியார் இனியும் அனேகம் தப்புகளும், முட்டாள்தனமான காரியங்களும் செய்ய வேண்டி ஏற்படும் என்பதை அவருக்கு எச்சரிக்கை செய்து அறிவுறுத்துகிறோம். இந்த வீம்பில் ஆச்சாரியார் வெற்றி பெற்றாலும் அவ்வெற்றிக்கு செயலாற்றுவதின் பயனாய் வெற்றிப் புகழைவிட பல மடங்கு அதிகமான அளவு குறைபாடும், இகழ்தலும் அடைய வேண்டியவராவார் என்று உறுதி கூறுகிறோம். பொறுப்பற்ற – கீழ்மக்களின் பத்திரிகை உதவியும் நாவன்மையும் கீழ்மக்களையும் பாமர மக்களையும் மாத்திரம் தான் ஏமாறச் செய்யுமே ஒழிய மேன்மக்களையும் அறிவுடையோரையும் ஒன்றும் செய்துவிடாது. அவை மேலும் மேலும் உண்மை விளங்கவே பயன்படும். ஆதலால் அன்பர் கனம் ஆச்சாரியார் அவர்கள் நன்றாய் சிந்தித்துப் பார்த்து கட்டாய இந்தி முறையை மாற்றிக் கொள்வதே சாலவும் சிறந்த கருமம் என்பதை வணக்கத்துடன் அறிவித்துக் கொள்கிறோம்.

ஆச்சாரியாருக்கு பதவி மாத்திரம் அல்லாமல் உதவிக்கு பெரும் படைகள் இருக்கின்றன. அவை ஆச்சாரியார் என்ன சொன்னாலும் செய்தாலும் ்ஆமாம் சாமி” கூறி கூலி அடையக் காத்திருப்பவைகளேயாகும் – ஆச்சாரியார் சற்று இளைத்துப் போனார் – களைத்துப் போனார் என்றவுடன் விட்டுவிட்டு ஓடக்கூடியவர்களுமே யாகும். ஆச்சாரியார் வெற்றி பெற்று அடிமை கொண்டு விட்டதாக காட்டிவரும் அரசாங்கம், ஆச்சாரியாரை காலை வாரிவிட சமயம் பார்த்துக்கொண்டிருக்கும் அரசாங்கம் என்பதையும் ஆச்சாரியார் ஞாபகத்தில் வைத்துக் கொள்வாராக.

~subhead

எதிர்ப்பாளர் நிலைமை

~shend

ஆனால் இந்தி எதிர்ப்புக்காரர்களோ தனித்தனியே தங்களையே நம்பி இருப்பவர்கள். அப்படிப்பட்டவர்கள் தோல்வி அவர்கள் முடிந்த பிறகு தான் காண்பார்கள். இவை தர்ம உபதேசமல்ல. அன்பு அறிக்கை என்பதாய் கொள்ள வேண்டுமென்று கேட்டுகொள்ளுகிறோம்.

~subhead

தமிழ் மக்களே!

~shend

இனித்தான் போராட்டம் இருக்கிறது. வார்தா காரியக் கமிட்டி தீர்மானப்படி காங்கரஸ் தலைவர் முடிவு நாளை மறுநாள் வெளியாகிவிடும். நம் பிரமுகர்கள் வழக்கும் நான்கு நாளையில் முடிந்துவிடும். அப்புறம் நாம் என்ன செய்வது? ஓடி ஒளிவதா அல்லது அடக்குமுறை ஆயுதத்தை மழுங்கச் செய்து பிடுங்கி எறிவதா என்கின்ற முடிவுக்கு வர வேண்டியதுதான்.

எதிரிகளும் அவர்கள் கூலிகளும் கூப்பாடு போடுவதை லòயம் செய்யாதீர்கள்.

குடி அரசு – தலையங்கம் – 31.07.1938

You may also like...