பாண்டியன் ராமசாமி பிரசாரக்கமிட்டி
சேலத்தில் கூட்டம்
பிரசாரக்கமிட்டி நியமனம்
“சென்றமுறை நாங்கள் இங்கு வந்தபோது பிரசாரத்துக்குப் பொருளுதவி செய்வதாக தலைவர்கள் வாக்குறுதியளித்தார்கள். எங்கள் முயற்சி வெற்றிபெறுமென்று நம்புகிறேன். சுற்று பிரயாண காலத்தில் நான் கண்ணுற்ற முக்கியமான காட்சி என்னவெனில் காங்கிரஸ் கூட்டங்களுக்குச் செல்வதைக் காட்டிலும் ஜஸ்டிஸ் கட்சி கூட்டங்களுக்கு ஜனங்கள் ஏராளமாக வருவதாகும். இதனால் பொதுஜன ஆதரவு நமக்கு அதிகமாக இருந்து வருவது புலனாகிறது. பிரசாரமில்லாததினாலேயே நமது கட்சி அயர்ச்சி யுற்றிருக்கிறது. தீவிரமாக பிரசாரம் செய்தால் ஜனங்கள் நமது கட்சி விஷயங்களில் சிந்தனை செலுத்துவது நிச்சயம். நமது தோல்விக்கு நமது பலவீனமே காரணம்; எதிரிகளின் வலிமையல்ல. எனவே நமது குறைபாடு களை யுணர்ந்து ஊக்கமாக உழைக்க எல்லோரும் முன்வரவேண்டும்”.
குறிப்பு: 27.06.1936 ஆம் நாள் சேலம் போல்க்ஸ் பங்களாவில் நடைபெற்ற தமிழ்நாடு பார்ப்பனரல்லாதார் பிரசார மையக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் குழு உறுப்பினர் தோழர் ஈ.வெ.ரா. பேசியது.
– குடி அரசு வேண்ட�ுகோள் 12.07.1936