கார்ப்பரேஷனில் பார்ப்பனத் தொல்லை

~cmatter

பார்ப்பனர்கள் சென்னை கார்ப்பரேஷனைக் கைப்பற்றி அதை ஒரு முழு அக்கிரகாரமாக்குவதற்கு ஆகவென்றே காங்கரசின் பேரால் “லஞ்ச ராஜ்யத்தையும் கண்ட்றாக்ட் ராஜ்யத்தையும் வகுப்புவாதத்தையும் ஒழிக்க வேண்டும்” என்றும் ஜஸ்டிஸ் கட்சி அடியோடு இம் மூன்றிலும் மூழ்கிக்கிடக் கின்றதென்றும் ஜஸ்டிஸ் கட்சியை ஆயிரம் கெஜ ஆழத்தில் புதைத்து விட்டு ஸ்தல ஸ்தாபனங்களை கைப்பற்றிவிட்டால் தர்ம ராஜ்யம் ஸ்தாபிக்கப் பட்டுவிடும் என்றும் பேசி பார்ப்பனரல்லாத கூலிகளை விட்டே பிரசாரமும் செய்து ஒரு பெரிய அளவுக்கு ஸ்தல ஸ்தாபனங்களை கைப்பற்றினார்கள் என்பதும் மற்றும் அரசியல் ஆதிக்கத்தையும் அதே முறையில் கைப்பற்றினார்கள் என்பதும் யாவரும் அறிந்ததாகும்.

பிறகு நடந்தது என்ன என்று பார்ப்போமானால் ஜஸ்டிஸ் கட்சியில் கூட இல்லாத அளவுக்கு வகுப்புவாதம் ஸ்தல ஸ்தாபனங்களிலும் அரசியல் ஸ்தானங்களிலும் தாண்டவமாட ஆரம்பித்துவிட்டதுடன் லஞ்சப் பேயும், கண்ட்றாக்டு ராஜ்யமும், காங்கரஸ்காரர்கள் 100-க்கு 90 – பங்கு ஆதிக்கமுடைய ஸ்தல ஸ்தாபனங்களிலும் அரசியலிலும் தாண்டவமாட ஆரம்பித்து விட்டதாக காங்கரஸ்காரர்களே ஒப்பாரி இட்டு அழ ஆரம்பித்து விட்டார்கள். இவற்றிற்கு அதாவது லஞ்சப் பேய்க்கும், வகுப்பு வாதத்திற்கும் தமிழ்நாட்டில் தலை சிறந்து விளங்கும் இரண்டு நகர ஸ்தல ஸ்தாபனங்களின் நடத்தையைப் பார்த்தாலே நன்றாய் விளங்கும். அவை எவை எனில் சென்னை முனிசிபல் கார்ப்பரேஷன் சபையும், திருச்சி ஜில்லா போர்டு சபையும் ஆகும்.

~subhead

கார்ப்பரேஷனில் வகுப்புவாதம்

~shend

சென்னை கார்ப்பரேஷனில் வகுப்புவாதமானது காங்கரஸ்காரர்களே ஒருவருக்கொருவர் “உதை” போட்டுக்கொள்ளும் படியான அளவுக்கு முற்றிவிட்டது. அவ்வகுப்புவாதமேதான் இப்போது காங்கரசின் லஞ்ச ராஜ்யத்தையும், கண்டிராக்டு ராஜ்ஜியத்தையும் புட்டுப்புட்டு காண்பித்து வருகிறது. கார்ப்பரேஷனில் காங்கரசு லஞ்ச ராஜ்ஜியமும், கண்டிராக்டு ராஜ்யமும் வகுப்புவாதமும் நடக்கிறது என்பதை காங்கரஸ் தலைவர்களே ஒப்புக்கொண்டு அவற்றை விசாரிக்க கமிட்டியும் ஏற்படுத்தி சபதங்களும் கூறப்பட்டு விட்டதால் அவற்றை ருஜúப்பிக்க நாம் முயற்சிக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது.

ஆனால் அதில் இருக்கும் தகராறு என்னவென்றால் லஞ்சமும், கண்டிராக்டும் வகுப்பு வாதமும் காங்கரஸ் பார்ப்பனர்களாலா? அல்லது காங்கரஸ் பார்ப்பனரல்லாதார்களாலா? என்பதுதான். இப்பொழுது காங்கரஸ் தலைவர்களான பார்ப்பனர்களும் காங்கரஸ் பத்திரிகைகளான பார்ப்பனப் பத்திரிக்கைகளும் அவர்களது கூலிப்பத்திரிக்கைகளும் “காங்கரசைச் சேர்ந்த பார்ப்பனரல்லாதார்களாலேயே இந்த மோசங்கள் நடக்கின்றன – நடந்திருக்கின்றன” என்று கூறி இனி நடக்காமல் இருக்கத்தக்க ஏற்பாடு செய்ய கமிட்டி நியமித்து இருக்கிறார்கள். அக்கமிட்டி விசாரணை மிக மிக ரகசியமாய் நடக்குமாம். ஆதலால் யார் வேண்டுமானாலும் வந்து யார் யார் லஞ்சம் வாங்கினார்கள் என்று தாராளமாய்ச் சொல்லலாம் என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள்.

~subhead

ரகசிய விசாரணை ஏன்?

~shend

கார்ப்பரேஷன் மெம்பர்கள் லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றமாகும். அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டால் அவர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீதும் அது தவறு என்று வழக்குத் தொடர பாத்தியமுண்டு. அப்படியில்லாமல் ஏதோ நான்கு பேரை சாட்சி கேட்டு ரகசிய வாக்குமூலம் வாங்கி காங்கரஸ் கட்சி ஸ்தாபனம் மூலம் நடவடிக்கை நடத்தி முடிவு செய்து விடமுடியும் என்றால் வேறு ஏதாவது ஒரு பொதுநல சங்கத்தார் மந்திரிகளையும், காரியதரிசிகளையும் கூட இதே மாதிரி குற்றம் சாட்டி அவர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டும் அல்லது லஞ்சத்துக்கு சமானமான பிரதி பிரயோஜனத்தை அடைந்து கொண்டும் மற்ற மந்திரி களையும், காரியதரிசிகளையும் நியமித்தார்கள் என்றும் தனித்தனியாக சில மந்திரிகள் இன்ன காரியங்களில் லஞ்சமும் சுயநல பிரதிப் பிரயோஜனமும் பெற்றார்கள் என்றும் ஒரு காலியை விட்டு கூப்பாடு போடச் செய்தும் ஒரு கூலிப்பத்திரிகையை விட்டு எழுதச்செய்தும் அதன் மீது ஒரு கமிட்டியை நியமித்து ரகசிய விசாரணை செய்து லஞ்சம் வாங்கியது ருஜúவாய் விட்டதென்றும் இம்மந்திரிகளும், காரியதரிசிகளும் ராஜிநாமாச் செய்து விட வேண்டியது என்றும் முடிவு கூறினால் அது குற்றமாகுமா? என்று கேட்கின்றோம்.

குற்றமாகாதென்றால் இன்றைய முதல் மந்திரி முதல் கடைசி மந்திரி வரை அவர்களது காரியதரிசிகள்வரை அனைவர் பேரிலும் இம்மாதிரி குற்றம் சாட்டி வண்டி வண்டியாய் தீர்ப்புக் கூறிவிடலாம். கட்டுப்பாடு, ரகசியம், நியாய விசாரணை என்பவைகளுக்கு ஒரு எல்லையுண்டு. தங்கள் சுயநலத்துக்கும் சூழ்ச்சிக்கும் குரோத புத்திக்கும் வஞ்சகத் தன்மைக்கும் இம்மாதிரியாக கட்டுப்பாடும் ரகசிய நியாய விசாரணையும் உபயோகப்படுத்தப்படுமானால் இதைக் கொடுங்கோன்மை அல்லது கையில் வலுத்தவனது சர்வாதிகாரத்தன்மை என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?

~subhead

முச்சூடும் லஞ்சமா?

~shend

கார்ப்பரேஷன், டெண்டர் கமிட்டியும், புஸ்தகக் கமிட்டியும் மற்றும் பல சப்கமிட்டியும் லஞ்சம் வாங்கியிருக்கிறது என்று காங்கரஸ் தலைவர்களாலும் காங்கரஸ் பத்திரிகைகளாலும் ஒரு முகமாகக் கூறப்படுகின்றன. இந்த லஞ்சங்களைப் பற்றி எப்போது விசாரணை செய்வது? மெம்பர்களின் காலாவதி ஆன பின்பா அல்லது லஞ்சம் தெரிந்த உடனேயா? தவிரவும் தலைமை நிர்வாகத்திலேயே வகுப்புவாதம் வெளிப்படையாய் ஏற்பட்டபின்பு விசாரணைக் கமிட்டி மூலமோ அல்லது மேல்சர்க்கார் மூலமோ நியாயம் கிடைக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இவை இங்ஙனமிருக்க உத்தியோக நியமன விஷயங்களிலும் ஒரு பார்ப்பனரல்லாதாருக்கு உத்தியோகம் கிடைத்துவிட்டது என்ற சமயங்களில் இம்மாதிரியான கூச்சல்களைப் போட்டு உத்தியோக நியமனத்துக்கும் லஞ்சத்துக்கும் சம்மந்தமேற்படுத்துவது யோக்கியமான காரியமாகுமா? என்பதோடு இப்படிச் செய்வதை விட வகுப்புவாதத்திற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும் என்றும் கேட்கிறோம். இப்படி ஏன் சொல்லுகிறோம் என்றால்,

~subhead

கல்வியதிகாரி நியமனம்

~shend

சமீபத்தில் கார்ப்பரேஷனில் நடந்த உத்தியோக தேர்தலானது அதாவது கார்ப்பரேஷன் கல்வி அதிகாரி நியமன தேர்தலானது வகுப்புவாதத்தை வெட்ட வெளிச்சமாக காட்டும்படியாக நடந்திருக்கிறது.

எப்படிஎனில் அவ்வுத்தியோகத்துக்கு எலக்ஷனில் ஒரு பார்ப் பனருடைய பெயரும் ஒரு பார்ப்பனரல்லாதாருடைய பெயருமே முடிவாக யோசனைக்கு வந்திருக்கிறது. அதில் பார்ப்பனக் கவுன்சிலர்கள் எல்லோரும் பார்ப்பனருக்கும் பார்ப்பன அல்லாத கவுன்சிலர்கள் அநேகமாக எல்லோரும் பார்ப்பனரல்லாதாருக்குமே ஓட்டு செய்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். அதாவது கார்ப்பரேஷன் மெம்பர்கள் 65 பேர்களில் சுமார் 13 அல்லது 14 பேர்களே பார்ப்பனர்கள். அவற்றுள் பார்ப்பன அபேக்ஷகராகிய தோழர் ராஜகோபாலய்யர் என்பவருக்கு 13 ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன. இதில் ஏதாவது ஒன்று இரண்டு தோழர்கள் தாவுத்ஷா, பக்தவத்சலம் போன்ற பார்ப்பனரல்லாதார் ஓட்டுகள் இருந்தாலும் இருக்கலாமென்றாலும் எல்லா பார்ப்பனர்களும் þ பார்ப்பன அய்யருக்கே ஓட்டு செய்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமிருக்காது. தோழர் சிவசைலம் பிள்ளை என்கின்ற பார்ப்பனரல்லாருக்கு கிடைத்த 30 ஓட்டும் கண்டிப்பாய் பார்ப்பனரல்லாதார்களுடைய ஓட்டுக்களே என்பதிலும் கடுகளவு சந்தேகம் கூட இருப்பதற்கு இடமில்லை.

ஆகவே கார்ப்பரேஷனில் வகுப்பு வாதம் என்பதற்கு இதைவிட வேறு என்ன ருஜú வேண்டும்? அன்றியும் தோழர் கே.பாஷ்யம் அய்யங்கார் என்பவர் கார்ப்பரேஷனில் காங்கரஸ் கட்சிக்குத் தலைவர். காங்கரஸ் கட்சியில் தோழர் சிவசைலம் பிள்ளைக்கு ஆதரவு கிடைத்துவிட்டது என்று தெரிந்த உடன் கார்ப்பரேஷன் மீட்டிங்கில் வந்து முறைப்படி தோழர் பிள்ளையை பிரேரேபிக்க வேண்டிய விதியில் இருந்து தப்பித்துக் கொள்ளவே கார்ப்பரேஷன் மீட்டிங்கு அன்று மறைந்து கொண்டிருக்கிறார். இதுவும் மேல் கண்ட வகுப்புவாதத்தை உறுதிப்படுத்துகிறது.

இவ்வளவும் அல்லாமல் தோழர் பிள்ளை அவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டவுடன் லஞ்சக் கூப்பாடும் ராஜிநாமா நாடகங்களும் நடிக்கப்படுகிறது என்பதைப் பார்க்கும் போது இதை வகுப்புவாத பார்ப்பன சூழ்ச்சி என்று அல்லாமல் வேறு என்ன என்று சொல்லுவது என்பது நமக்குப் புரியவில்லை.

~subhead

பாஷ்யம் ஒஸ்தியா?

~shend

உண்மையில் சென்னை கார்ப்பரேஷன் காங்கரஸ் கட்சிக்கு யோக்கியமாகவும் நாணயமாகவும் பார்த்தால் தோழர் சாமி வெங்கடாசலம் செட்டியாரே தலைவராக இருந்திருக்க வேண்டியது கிரமமாகும். ஏன் எனில் அவர் மேயராக இருந்த அனுபவமும் கவுரவமும் உடையவர். மற்றும் தோழர் பாஷ்யம் அய்யங்காருக்கு முன் இருந்தே காங்கரஸ் கட்சி பிரமுகராக கார்ப்பரேஷனில் இருந்து வந்திருப்பவர்.

காங்கரஸ் கட்சியில் உள்ள பார்ப்பனரல்லாத கார்ப்பரேஷன் மெம்பர்களுக்கு சிறிது அளவு சுயமரியாதை உணர்ச்சி இருந்திருந்தாலும் தோழர் சாமி வெங்கடாசலத்தையே தலைவராக்கியிருப்பார்கள். ஆனால் பார்ப்பனர்கள் காங்கரசின் பேரால் எந்த ஸ்தானங்களுக்கு பார்ப்பனரல்லாதாரை தெரிந்தெடுப்பதற்கு வைத்திருக்கும் குறைந்த பக்ஷ யோக்கியதையே அடியோடு மானம், ஈனம், சுதந்தரம், சொந்தப்புத்தி முதலியவைகளை முற்றும் துறந்தவர்களையே தெரிந்தெடுப்பது என்று கண்டிப்பாக வைத்திருப்பதால் இந்த யோக்கியதாம்சமில்லாத பார்ப்பனரல்லாத மெம்பர்களுக்கு காங்கரசின் பேரால் பதவிக்கு இடமோ காங்கரசில் ஓட்டுள்ள 4 அணா மெம்பருக்கு இடமோ அறவே இல்லாமல் போகின்றது. அதனாலேயே சாமி வெங்கிடாசலம் போன்றவர்களும் மின்சாரக் கைபோல் பட்டன் அழுத்தினவுடன் கை தூக்க மாத்திரம் பயன்படுத்தப் படுகிறார்கள். அவ்வளவு மாத்திரமா என்றால் பார்ப்பனர்கள், தங்கள் இஷ்டப்படி கை தூக்கப்படவில்லை என்று தெரிந்தவுடன் அவர் எப்படிப்பட்ட பார்ப்பனரல்லாதார் ஆனாலும் உடனே லஞ்சம் வாங்கினார், கட்டுப்பாட்டை மீறினார், கòக்கு துரோகம் செய்தார் என்கின்றதான குற்றச்சாட்டுக்கு ஆளாகி இரகசிய விசாரணைக் கமிட்டிக்கு முன்னால் நிற்கவோ அல்லது அதுகூட இல்லாமல் நாடு கடத்தும் அடக்கு முறைக்கு ஆளாகவோ வேண்டியவராக ஆகிவிடுகிறார்கள். இன்று கார்ப்பரேஷனில் பார்ப்பனரல்லாத மெம்பர்கள் 50 பேர் இருந்தும் ஒரு அய்யங்கார் பார்ப்பனர் தலைவராகவும் மற்றொரு அய்யங்கார் பார்ப்பனர் காரியதரிசியாகவும் இருக்கிறார்கள் என்றால் பார்ப்பனரல்லா தாருக்கு தன்மானமோ சமூக உணர்ச்சியோ இருக்கின்றது என்று எப்படி சொல்லமுடியும்?

~subhead

அல்லாதரெல்லாம் அவிசாரிகளா?

~shend

ஒரு உத்தியோக தேர்தலில் 13 ஓட்டுக்கு எதிராக ஒருவருக்கு 30 ஓட்டு கிடைத்தது. பதின்மூன்று ஓட்டு பெரிதும் பார்ப்பனருடையது என்றும் 30 ஓட்டும் முழுதும் பார்ப்பனரல்லாதாருடையது என்றும் பட்டாங்கமாய் பட்டப் பகல் போல் தெரிந்த பிறகும் 100க்கு 75 விகிதம் ஓட்டுப் பெற்றவரை அவர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற காரணத்துக்கு ஆக “லஞ்சம் கொடுத்துத் தெரிந்தெடுக்கப்பட்டார்” என்றும் 100க்கு 75 பங்கு மெஜாரிட்டி கட்சியை லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டுச் செய்த கட்சி என்றும் பார்ப்பனர்கள் சொல்லத் துணிவார்களானால் இனி யாருடைய பெண்டு பிள்ளைகளுக்குத்தான் என்ன பந்தோபஸ்து என்று கேட்கிறோம். தனக்கு இணங்காத பெண்களைப் பார்த்து அவர்கள் எப்படிப் பட்டவர்களானாலும் யாருடைய மனைவி மக்களானாலும், தாங்கள் தங்கள் இஷ்டப்படி சொல்லி விசாரிக்க ரகசிய விசாரணைக் கமிட்டி கூட நியமித்துவிட பயப்படுவார்களா என்று கருதவேண்டி இருக்கிறது.

பார்ப்பனரல்லாதார் மீது பார்ப்பனர் லஞ்சக் குற்றம் சாட்டுவதைப் பற்றி நமக்கு அதிக கவலை இல்லை. ஆனால் ஒரு தகுதியுள்ள, யோக்கியமான – எதிரிகளாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு கண்ணியவானின் தேர்தல் நடந்த உடன் அவர் பார்ப்பனரல்லாதார் என்பதற்கு ஆக குறிப்பாய் அத்தேர்தலை மாத்திரமல்லாமல் அக்கண்ணியவானின் நடத்தையையும் பிற்கால வாழ்க்கையையும் பாதிக்கும்படியான ஒரு பெரிய அபாண்டத்தைக் கொண்டு வந்து போடுவதானால் இதை எப்படி மக்கள் சகித்துக்கொண்டு இருக்க முடியும் என்பதே நமது முக்கிய கவலையாகும். தோழர் சிவசைலம் பிள்ளை கறுப்பா சிவப்பா என்று நாம் நேரில் பார்த்தது கிடையாது. பார்ப்பனப் பத்திரிகைகளும் காங்கரஸ் பிரமுகர்களும் அவரது தகுதியைப் பற்றி அனுகூலமாயச் சொல்லுவதைக்கொண்டே அவரைபற்றி குறிப்பிடுகிறோம். ஆனால் அவர் தோழர் சி.டி. நாயகம் அவர்களது மாப்பிள்ளையாம். இதையும் பத்திரிகைகள் மூலமேதான் பார்த்தோம். இந்தக் காரணத்தைக் கொண்டே அதாவது தோழர் சி.டி.நாயகம் அவர்களது மாப்பிள்ளை என்பதற்கு ஆகவே பார்ப்பனர்கள் அவருக்குத் தொல்லை கொடுக்கிறார்கள் என்றும் லஞ்சப் புரளி கிளப்பினார்கள் என்றும் பச்சையாய் பொருள் பட பார்ப்பனப் பத்திரிகையாகிய “ஆனந்த விகட”னே எழுதுகிறது. ஆகவே பார்ப்பனர்களின் வகுப்பு வாதத்துக்கும் சமயம் நேர்ந்தால் எதையும் செய்யத் துணிவார்கள் என்பதற்கும் வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்பதோடு தோழர் சிவசைலம் பிள்ளைக்கு கல்வி அதிகாரி வேலை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அதைப்பற்றி லôயம் செய்யாமல் கார்ப்பரேஷனில் உள்ள பார்ப்பனரல்லாத மெம்பர்கள் தங்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை காட்டிக் கொள்ள கார்ப்பரேஷன் காங்கரஸ் கட்சி தலைவர் பதவி தோழர் பாஷ்யத்துக்கு இருப்பதை ஒழித்து கிரமமாக தலைவர் ஆகவேண்டியவராகிய தோழர் சாமி வெங்கடாசலத்தை தலைவராக்க முன் வருவார்களா என்று கேட்கிறோம்.

~subhead

திருச்சி போர்டு

~shend

இந்த மோசம் இப்படி இருக்க இனி திருச்சி ஜில்லா போர்டில் காங்கரஸ் கட்சி பார்ப்பனர்கள் நடந்து கொண்ட யோக்கியதையை பார்ப்போம். தோழர் தேவருக்கு வீரம் உண்டு என்பதில் நாம் தகராறுக்கு வரவில்லை. அதனாலேயே ஒருவருக்கு புத்தி வேண்டியதில்லை என்று சொல்லிவிட முடியாது. திருச்சியில் காங்கரஸ் கூப்பாடு வெளியில் தெரிவதற்கு தோழர் தேவரே காரணஸ்தராவார். தோழர்கள் டாக்டர்கள் டி.எஸ்.எஸ்.ராஜனோ, சாஸ்திரியோ, எப்.ஜி.நடேசய்யரோ, ஆலாசியமோ மற்றும் எந்த அய்யரோ தெருவில் நின்று ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி பேச நாக்கை சன்னை போட்டு தூக்கிக் கொடுத்தவர் தேவரேயாகும். இந்தக்கூட்டமே இன்று தேவருக்கு 500கெஜ ஆழக்குழி தோண்டிவிட்டது. “வாய்த்தவிடும் போய் அடுப்பு நெருப்பும் அணைந்து போய் பட்டினி கிடக்க வேண்டியதாயிற்று” என்று ஒரு பழமொழி உண்டு. அது போல் தேவருக்கு ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனரல்லாத சமூகத்தில் மதிப்புக் குறைந்து விட்டதுடன் பார்ப் பனர்களும் அவரைக் குழியில் தள்ளிவிட்டு இனி மேலே மண்ணைப் போட்டு மூட வேண்டியதை மாத்திரம் பாக்கி வைத்திருக்கிறார்கள். முனிசிபல் தேர்தலில் தேவர் மனதார அக்கிரமமாக வேண்டுமென்றே ஒரு தனிப்பட்ட பார்ப்பனரின் சொந்த குரோதத்துக்கு ஆக பார்ப்பனர்களால் தோல்வி அடையச் செய்யப்பட்டார்.

~subhead

தேவர் கதி

~shend

பிறகு தேவருக்கு மந்திரி வேலையிலும் காரியதரிசி வேலையிலும் நாமம் சாத்திவிட்டதோடு நில்லாமல் மேலும் தேவரை கடுமையான அவமானப்படுத்தும் பொருட்டே தேவருக்கு துரோகம் செய்தவருக்கு மந்திரி வேலை கொடுக்கப்பட்டது. இவ்வளவோடாவது அவரை விட்டு விடாமல் திருச்சி ஜில்லா போர்டுகளை தேவரை ஒழிக்கும் பொருட்டே ஒன்று சேர்க்க நினைத்து தேவருடைய போர்டு வேறு போர்டுடன் சேர்க்கப் பட யோசனை செய்யப்பட்டது. பிறகு எப்படியும் தேவருக்கு சான்சில்லாமல் செய்து விட்டு 2 போர்டும் ஒன்றாக்கப்பட்டது என்று பெயர் கொடுத்து தேவரை கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளி காங்கரசில் இல்லாதவருக்கு பார்ப்பனர் சதியாலோசனையாலே பிரசிடெண்டு பதவி அளிக்கப்பட்டு விட்டது. உண்மையில் திருச்சி ஜில்லாபோர்டுக்கு பார்ப்பனர்கள் வகுப்புவாத உணர்ச்சியில்லாமல் ஒரு காங்கரஸ் பிரசிடெண்டை கொண்டு வர முயற்சி செய்திருந்தால் கண்டிப்பாக எதிர்ப்பில்லாமலே காங்கரஸ் பிரசி டெண்டு வந்திருக்கலாம். திருச்சி பார்ப்பன மெம்பர்களும் பார்ப்பன மந்திரியும் தங்களுடைய ஒரு கண்ணைக்குத்திக் கொண்டாவது எதிரியின் இரண்டு கண்களையும் தொலைத்துவிட வேண்டுமென்று கருதியே “காங்கரசுக்கு தோல்வி ஏற்பட்டாலும் சரி, தேவர்மாத்திரம் பதவிக்கு வரக்கூடாது” என்ற நினைப்பில் தேவரை ஒழித்துவிட்டார்கள். ஆகவே இப்போது திருச்சியானது கோயமுத்தூருக்கு அண்ணன் ஆகிவிட்டது.

~subhead

பார்ப்பனர் தந்திரம்

~shend

ஆனால் தோழர்கள் தேவரையும் ராமலிங்க செட்டியாரையும் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை எவ்வளவு வையவேண்டுமோ அவ்வளவுக்கு மேலாகவே வையும்படி செய்து பார்ப்பனர்கள் தங்கள் காரியத்தை சாதித்துக் கொண்டார்கள். பதவிகள் வரும்போதெல்லாம் தகுதியை அடியோடு மறந்து பார்ப்பனர்கள் தங்கள் அடிமைகளையே ஆதரிப்பதோடு தகுதி உடையவர்களை குழியில் தள்ளவும் துணிந்துவிடுகிறார்கள். இவ்விஷயங் களில் கோவை திருச்சி மாத்திரமல்லாமல் சேலமும் இக்கதிக்கே ஆளாகி விட்டது. ஏன்? சேலத்தை இதைவிட மோசம் என்றே சொல்லலாம். தோழர் தேவரிடமாவது நல்ல நடத்தைக்கு ஜாமீன் வாங்கி வைத்திருக்கிறார்கள். தோழர் ராமலிங்க செட்டியாரையாவது நம்பிக்கையற்றவர் என்று கண்டனம் செய்து வைத்து இருக்கிறார்கள். சேலம் தோழர் வெங்கட்டப்ப செட்டியார் விஷயத்திலோ அவரது மகனை டிஸ்மிஸ் செய்துவிட்டு அவரை சர்வீஸஸ் டிஸ்பென்ஸ்டுவித் அதாவது வேலைக்கு வேண்டியதில்லை என்று முடிவு கட்டிவிட்டார்கள்.

மற்ற ஜில்லாக்களைப் பொறுத்தவரையிலும் ஏறக்குறைய இப்படியே செய்துவிட்டார்கள். உதாரணமாக திருநெல்வேலியில் இன்று இரண்டு கிறிஸ்தவர்கள் விஷமில்லாத தண்ணீர் பாம்பு மாதிரி ஆக்கப்பட்டு விட்டார்கள். ஒரு முஸ்லீமையும் பைத்தியக்காரராக்கி விட்டார்கள். மேடை முதலியார்கள் இனி மேடையிலேயே இருக்க வேண்டியதுதான். ராமநாதபுரம், மதுரை இரண்டும் அழுவாரற்ற பிணமாய் இருந்து வருகிறது. என்ன செய்தாலும் ஏன் என்று கேட்க ஆட்கள் இல்லை.

~subhead

பல்போன பாம்பு

~shend

தஞ்சைக்கு தோழர் நாடிமுத்து தான் ஜில்லா தலைவர். அவர் சீறக்கூடிய பாம்பு என்று சொல்லிக்கொண்டாலும் பல்லுகள் பூராவும் பிடுங்கப்பட்டு விட்டால் என்னதான் சீறிச்சீறி பார்த்தாலும் யார் லôயம் செய்வார்கள். தென் ஆற்காட்டில் ஒரு ரெட்டியார் தலைவர் பட்டம் விட்டதோடு சரி. வடஆற்காடு அனாமதேய ஜில்லாவாக ஆகிவிட்டது. திருவண்ணாமலை ஜில்லாபோர்டு காங்கரஸ் பிரசிடெண்டும் தண்டிக்கப்பட்டு விட்டார். ஆனால் தண்டனை சரியான படி நிறைவேற்றப் படவில்லை. செங்கல்பட்டாரோ போட்டி போட்டுக்கொண்டு பார்ப்பனர்கள் காலடியில் விழவேண்டிய தலைவர்களாக ஆகிவிட்டார்கள். சென்னையின் கதியை ஆதியிலேயே விளக்கிவிட்டோம்.

ஆகவே காங்கரசில் வகுப்புவாதம் இருக்கிறது என்பதற்கும் காங்கரசில் இருக்கும் பார்ப்பனரல்லாதார் சுதந்தரத்தோடும் சுயமரியாதை யோடும் நடத்தப்படவில்லை என்பதற்கும் உத்தியோக விஷயங்களில் பார்ப்பனர்கள் யோக்கியமாக நடந்து கொள்ளவில்லை என்பதற்கும் இவற்றைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கிறோம்.

காங்கரசிலுள்ள பார்ப்பனரல்லாதாரைப் பார்த்து நாம் ஒன்று கேட்கிறோம். அதாவது தோழர்களே! நீங்கள் பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு ஏதும் செய்ய வேண்டியதில்லை. உங்கள் சுய மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவாவது முயற்சியுங்கள் என்பதுதான்.

காங்கரஸ் மெஜாரிட்டியைப் பார்த்து பயப்படுகிறீர்கள் என்பதாக தெரிகிறது. மெஜாரிட்டியென்றால் அவர்கள் யார் அவர்களது யோக்கியதை என்ன அவர்களது பெருமையும் லôயமும் ஆகியவை என்ன? இவற்றை யோசித்துப் பாருங்கள்.

வெளியூருக்காரன் ஒருவன் வந்து தோழர் கனம் ஆச்சாரியாரைப் பார்த்து “உங்கள் காங்கரசில் பார்ப்பனரல்லாதாரோ முஸ்லீம்களோ இருக்கிறார்களா?” என்று கேட்டால் ஆச்சாரியார் ஆம் என்று யாரை சொல்லுவார்? தேவர், ராமலிங்கம் செட்டியார், வெள்ளியங்கிரிக் கவுண்டர், நாடிமுத்துபிள்ளை, வெங்கிடாசலஞ் செட்டியார், டாக்டர் சுப்பராயன், சாமி வெங்கடாசலம், ஜமால் முகமது… என்று இந்த பெயர்களை சொல்லுவாரா? அல்லது தோழர்கள் அண்ணாமலை, குப்புசாமி, உபயதுல்லா, சுப்பையா, முத்துசாமி, கந்தசாமி, சுப்பரமணியம் என்று இவர்கள் பெயர்களை சொல்லுவாரா?

ஆகவே உங்களுக்கு தன்மதிப்பு இருக்குமானால் காங்கரசை விட்டு விலகி அவசியமானால் உங்கள் பதவிகளை ராஜிநாமா செய்து ஒரு 6 மாத காலத்துக்கு மெளனமாக இருங்கள்.

குடி அரசு – தலையங்கம் – 07.11.1937

You may also like...