தர்மபுரி ஜில்லா போர்டு காங்கரஸ் கமிட்டிக் கூட்டம்
பாரிஸ்டர் ராமசாமியை கவிழ்க்கச் சூழ்ச்சி
தர்மபுரி ஜில்லா போர்டு காங்கரஸ் கட்சி மெம்பரான பாரிஸ்டர் தோழர் எஸ்.வி. ராமசாமி அவர்கள் தற்கால அக்ரகார மந்திரி சபையைக் கண்டித்து “விடுதலை” பத்திரிகையில் எழுதியதற்காகத் தமிழ் மாகாண காங்கரஸ் கமிட்டியார் தோழர் ராமசாமி அவர்கள் காங்கரசின் பேரால் 3 வருடங்களுக்கு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாதென்று உத்திரவிட்டார்கள். அதை ஒட்டித் தர்மபுரி ஜில்லா போர்டு காங்கரஸ் கட்சியைச் சேர்ந்த பார்ப்பனர்கள் தோழர் ராமசாமிக்கு அழைப்பு அனுப்பாமலேயே சென்ற 31-8-37ந் தேதி ஒரு கூட்டம் கூடி தோழர் ராமசாமி அவர்களை ஜில்லா போர்டு அங்கத்தினர் பதவியை ராஜிநாமா செய்யும்படி கேட்டுக்கொள்வதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதைக்கண்ட தோழர் ராமசாமி அவர்கள் தனக்கு அழைப்பு அனுப்பாமலேயே கூட்டம் கூடி தன்னை ஜில்லா போர்டு மெம்பர் பதவியை ராஜிநாமா செய்யும் படி கேட்பது ஞாயமல்லவென்று ஜில்லா போர்டு காங்கரஸ் கட்சி கமிட்டித் தலைவரிடம் கூறினார்.
þ கமிட்டித் தலைவர் மீண்டும் 12ந் தேதி ஒரு கூட்டம் கூட்டு வதாகக் கூறி þ தேதியில் ஒரு கூட்டம் கூட்டினார். அதில் தோழர் ராமசாமி அவர்கள் ஜில்லா போர்டு மெம்பராக இருக்க வேண்டுமென்று தீர்மானித் தார்கள். தோழர் ராமசாமியை எப்படியாவது ஜில்லா போர்டிலிருந்து நீக்கிவிட வேண்டுமென்று பார்ப்பனர்களனைவரும் ஒருமுகமாக கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்தார்கள். ஆனால் பார்ப்பனரல்லாத மெம்பர்கள் அனைவரும் ஒற்றுமையாகவிருந்து பார்ப்பன சூழ்ச்சியை விரட்டியடித்து விட்டார்கள்.
தமிழ்நாடு காங்கரஸ் கமிட்டி என்ன செய்யப் போகிறது? தர்மபுரி ஜில்லா போர்டு காங்கரஸ் கமிட்டிமீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போகிறதா? பார்ப்பனரல்லாதார்களே! இனியாவது உங்களுக்கு பார்ப்பன சூழ்ச்சி விளங்குமா?
குடி அரசு – துணைத் தலையங்கம் – 19.09.1937