Category: பெரியார் முழக்கம் 2012

சீரழிக்கப்படும் திராவிடர் நாகரிகமும் – சீராட்டப்படும் ராமன் பாலமும்

சீரழிக்கப்படும் திராவிடர் நாகரிகமும் – சீராட்டப்படும் ராமன் பாலமும்

அரியனாவில் ஹிகார் மாவட்டத்திலுள்ள இராக்கி ஷா, இராக்கி ஹாஸ் எனும் இரட்டை கிராமங்கள், வரலாற்று முக்கியத்துவமானவை. காரணம், இக்கிராமப் பகுதி சிந்து சமவெளி நாகரிகம் தழைத்தோங்கிய காலத்தில் மக்கள் வாழ்ந்த பகுதியாக கண்டறியப்பட்டவை. 12 ஆண்டுகளுக்குமுன் இங்கே நடந்த அகழ்வாராய்ச்சியில் சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அது, ஏடுகளில் தலைப்பு செய்திகளாகவும் வந்தன.  சுமார் 160 ஹெக்டேர் நிலப்பரப்பைக் கொண்ட இந்த பகுதிதான் இந்தியாவிலேயே கண்டறியப்பட்ட சிந்து சமவெளி நாகரிக மக்கள் வாழ்ந்த மிகப் பெரிய பகுதி. அமரேந்திரநாத் என்ற அகழ்வாராய்ச்சியாளர் தலைமையிலான குழு, 1997-1999 ஆண்டுகளில் 3 கோடை விடுமுறைகளில் இந்த ஆய்வுகளை மேற் கொண்டது. ஒரு சமூகததின் நாகரிகத்தைக் கண்டறிய முக்கிய ஆவணமாகக் கருதப்படும், இறந்தவர் உடல்கள் புதைக்கப்பட்ட குழிகளும் இங்கே கண்டறியப்பட்டது. தொண்மை மிக்க திராவிடர் நாகரிகத்தின் சான்றுகளைக் கொண்ட இந்தப் பகுதி, இப்போது மலைமலையாக மாட்டுச் சாணங்களை யும் குப்பைகளையும் கொட்டிக் கிடக்கும்...

சைவ மடங்களையும் ஆட்டிப் படைக்கும் மனுதர்மம்

சைவ மடங்களையும் ஆட்டிப் படைக்கும் மனுதர்மம்

மதுரை ஆதினம், நித்யானந்தாவை தனது வாரிசாக அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கடும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்து மத கட்சிகளே நித்யானந்தா நியமனத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களையும், தாக்குதல்களை யும் நடத்தி வருகின்றன. கருநாடக பா.ஜ.க. ஆட்சி நித்யானந்தாவை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டின் சைவ மடங்கள் 7 மற்றும் 9 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டன. புத்த மதம், சமண மதம் வேகமாகப் பரவியதால் உருவான நெருக்கடிகளை எதிர்கொள்ளவே இந்த மடங்கள் உருவாயின. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற சைவத் ‘திருமேனிகள்’ ஊர் தோறும் கோயில் கோயிலாகச் சென்று பதிகம் பாடினர். சைவத்திலும் மனுதர்மமான பார்ப்பனியம் புகுந்து சைவக் கடவுள்களை பார்ப்பனமாக்கியது. சைவக் கடவுளான சிவன், பார்ப்பன ஊடுருவலால் ‘உருத்திரன்’ ஆனான். பார்ப்பன யாகங்களை நடத்தி, ‘உருத்திரனை’ப் போற்றி ‘மகாதேவன்’ என்று மாற்றினார்கள். தமிழ்க் கடவுள் என்று கூறப்பட்ட முருகன், பார்ப்பன ‘மனுதர்ம’ ஊடுருவலால் கந்தனாகவும், சுப்ரமணியனாகவும் மாற்றப்பட்டான். வீரத்தின் கடவுளாக...

பல்லாயிரம் மக்களை சந்தித்து மனுதர்மக் கொடுமைகள் விளக்கம் சாதி தீண்டாமை ஒழிப்புப் பயணத்தின் எழுச்சி

பல்லாயிரம் மக்களை சந்தித்து மனுதர்மக் கொடுமைகள் விளக்கம் சாதி தீண்டாமை ஒழிப்புப் பயணத்தின் எழுச்சி

சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் நடத்திய சாதி தீண்டாமை எதிர்ப்பு; மனு சாஸ்திர எரிப்பு விளக்க 10 நாள் பரப்புரைப் பயணத்தில் பல்லா யிரக்கணக்கில் மக்களை சந்தித்து, ‘மனுதர்மம்’ இப் போதும் சமுதாயத்தில் நிலவி வரும் கொடுமைகளை தோழர்கள் விளக்கினர். கடந்த வாரம் முதல் மூன்று நாள் பயணம் குறித்த செய்திகள் வெளி வந்துள்ளன. அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு: 26.6.2012 அன்று காலை 9 மணியளவில் பேரறிஞர் அண்ணா சிலை அருகில் பரப்புரைப் பயணம் தொடங்கியது. காலை 10.30 மணியளவில் சேத்துப்பட்டு நான்கு முனை ரோட்டிலும், காலை 11.15 மணியளவில் தேவிகாபுரத்திலும், மதியம் 12.30 மணியளவில் போளூர் பேருந்து நிறுத்தத்திலும் பரப்புரை நடைபெற்றது. மதிய உணவுக்குப் பிறகு பிற்பகல் 3.30 மணியளவில் நாயுடு மங்களம், மாலை 4.45 மணி வேங்கிக்கால், மாலை 5.30 மணியளவில் திருவண்ணாமலை பேருந்து நிலையம், மாலை 6 மணியளவில் திருவண்ணாமலை பெரியார் சிலை...

சாதி மத மறுப்பு மண விழா

சாதி மத மறுப்பு மண விழா

சேலம் மாவட்டம் ஆவத்திப் பாளையம் முரு கேசன்-சின்னப்பா இணை யரின் மகன் கழகத் தோழர் சரவணன்; ஆவத்திப்பாளை யம் ஷாஜ கான்-மைதிலின் பீபி இணையரின் மகள் ஷஜீனா ஆகியோரின் மத மறுப்பு, தாலி சடங்குகள் தவிர்ப்பு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் 28.6.2012 அன்று பகல் 11 மணிக்கு பள்ளி பாளையத்தில் நடந்தது. மணமக்களை வாழ்த்தி, மாநில செயற்குழு  உறுப்பினர் இரத்தினசாமி, நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சாமிநாதன், ஈரோடு மாவட்ட தலைவர் நாத்திகசோதி, திருப்பூர் மாவட்ட தலைவர் துரைசாமி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி  மாணிக்கம், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வாழ்த்துரை வழங்கினர். மணமக்கள் விழாவின் மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதியாக ரூ.2000 அளித்தனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 12072012 இதழ்

கொமாரப் பாளையத்தில் கழகக் கொடி ஏற்றம்

கொமாரப் பாளையத்தில் கழகக் கொடி ஏற்றம்

275.2012 அன்று கொமாரபாளையம் கழகம் நடத்திய திராவிட இயக்க நூற்றாண்டு விழா மனு சாஸ்திர எரிப்பு விளக்கக் கூட்டம் கொமாரபாளையம் நகரப் பகுதியில் நடைபெற்றது. அதையொட்டி புதிய கழகக் கொடிக் கம்பங்களில் கழகக் கொடிகள் ஏற்றப்பட்டன. காவேரி நகர் புதுப்பாலம் அருகில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், நகராட்சி அலுவலகம் அருகில்  பொதுச் செய லாளர் இராமகிருட்டிணனும், மெயின்ரோடிலுள்ள ஆர்.ஏ.எஸ். தியேட்டர் அருகில் நகர தலைவர் இரா. திராவிடமணியும், பேருந்து நிலையம் அருகில் கேப்டன் அண்ணாதுரையும் கழகக் கொடிகளை ஏற்றி வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் மு.சாமிநாதன் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 12072012 இதழ்

சென்னையில் சாதி ஒழிப்புப் பயண தொடக்க விழா

சென்னையில் சாதி ஒழிப்புப் பயண தொடக்க விழா

22.6.2012 அன்று மாலை 6மணிக்கு மந்தைவெளி மார்க்கெட் அருகில் திராவிடர் இயக்க நூற்றாண்டில் ஜாதிய வாழ்வியல் எதிர்ப்பு மனுதர்ம சாஸ்திர எரிப்புப் போராட்டம், பரப்புரை பயணத் தொடக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. தி.இராவணன் தலைமை வகிக்க, சு.அம்பிகா, இரா.குமார் முன்னிலை யில் ஜா.ஜெயந்தி வரவேற்புரையாற்றி னார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரை யாற்றினர். நிகழ்வின் தொடக்கத்தில் சமர்பா இசை நிகழ்ச்சி நடந்தது. நாத்திகன், சாதி ஒழிப்புப் பாடல்களை பாடினார். இரவு 7.30 மணிக்கு சிற்பி இராசனின் ‘மந்திரமல்ல தந்திரமே’ என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வின் முடிவில் இரா. மாரி நன்றியுரையாற்றினார். கூட்டத்துக்குப் பிறகு, கழகத்தின் கொள்கை எழுத்துப் பலகையை மந்தைவெளியில் கழகத் தலைவர் திறந்து வைத்தார். பெரியார் முழக்கம் 12072012 இதழ்

அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வழக்கறிஞர் துரைசாமி விளக்கம்: நீதிக்கட்சி ஆட்சியின் சமூக நீதி சாதனைகள்

அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வழக்கறிஞர் துரைசாமி விளக்கம்: நீதிக்கட்சி ஆட்சியின் சமூக நீதி சாதனைகள்

திராவிடர் இயக்கம் வந்த பிறகு தான் தமிழன் தலைநிமிர்ந்தான்; தன்மானம் பெற்றான் என்று வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வரலாறுகளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். 24.3.2012 அன்று பெரம்பூர் ராஜலட்சுமி அரங்கில் ‘குடிஅரசு’ வாசகர் வட்ட தொடக்க விழாவில் அவர் ஆற்றிய உரையின் தொடர்ச்சி: நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி. தியாகராயர், சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான் முதன் முதலாக பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி.தியாகராயர், சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான் சென்னை மாநகரில் கட்டாய ஆரம்பக் கல்வியும், பார்வையற்றோர் பள்ளியும், பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லமும் உருவாக்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு முதன்முதலாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது நீதிக்கட்சி அரசு. 1922 ஆம் ஆண்டு வேலை வாய்ப்பில் மட்டுமின்றி பதவி உயர்விலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டுமென நீதிக்கட்சி அரசு ஆணை பிறப்பித்தது. ஒவ்வொரு அரசுத் துறையிலும் அந்தந்த துறைகள் மூலமாகவே...

மனித உறுப்புகளை கூறு போட்ட ‘மனுதர்ம’த்துக்கு மாணவி தந்த மரண அடி

மனித உறுப்புகளை கூறு போட்ட ‘மனுதர்ம’த்துக்கு மாணவி தந்த மரண அடி

உலகத்தைப் “படைத்த” பிர்மா, தனது தலையிலிருந்து ‘பிராமணனை’யும், தோளிலிருந்து ‘சத்திரியனை’யும், தொடையிலிருந்து ‘வைசியனை’யும், காலிலிருந்து ‘சூத்திரனை’யும்  படைத்ததாக ‘மனுசாஸ்திரம்’ கூறுகிறது. பிறப்பின் அடிப்படையிலே மனுதர்மம் கற்பித்த இந்த ஏற்றத் தாழ்வுகளை, சாதியமைப்பு உள்வாங்கிக் கொண்டது. சாதியமைப்பு, ‘மனு சாஸ்திரத்தை’ அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகிறது. இதன் காரணமாகவே சாதிப் பிளவுகள் சமூகத்தை சீரழித்து வருகின்றன. சாதி மாறி திருமணம் செய்து விட்டால், சாதிச் சமூகமும், சாதிக் குடும்பமும் துள்ளிக் குதிக்கின்றன. வாழத் தகுதியற்றவர்களாக்கி, மரண தண்டனை வழங்கவும் குடும்பத்தினரே முற்படுகின்றனர். ‘பிர்மா’ தனது உடலையே ‘தலை’, ‘தோள்’, ‘தொடை’, ‘கால்’களை ஏற்றத் தாழ்வுக்கு உள்ளாக்கிய இந்த சமூகக் கொடுமை, மனித உடலுக்குள்ளேயே கூறு போடும் இந்த ‘சமூக வக்கிரம்’ சுக்குநூறாக உடைத்தெறியப்பட வேண்டும். அதுவே ‘மனித நேயம்’ என்பதற்கு சான்றாக இப்போது ஒரு உள்ளத்தை நெகிழச் செய்யும் செய்தி வந்துள்ளது. கோவையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியில் படித்த மாணவி சரண்யா, தனது...

வடமொழி மந்திரம் – சடங்குகளின் ஏமாற்று

வடமொழி மந்திரம் – சடங்குகளின் ஏமாற்று

ஆட்சி மொழிக்குரிய தமிழ்ச் சொற்களை உருவாக்கியவரும், பல அரசுப் பணிகளை வகித்தவரும், ‘செந்தமிழ் புரவலர்’ என்று பாராட்டப் பெற்ற வருமான கீ.இராமலிங்கனார், தனது சுயசரிதையை ‘என் வரலாறு’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். அதில் புரியாத மொழியான ‘சமஸ்கிருத மந்திரங் களால்’ – அதை நம்புவோர், ஏமாற்றப்படும் நிகழ்வுகளை சுட்டிக்காட்டியுள்ளார்: எனக்கு இளமையிலிருந்தே “இவ் வடமொழிச் சடங்கு முறை தமிழ் மக்களுக்கு எவ்வளவு புறம் பானது?” என்பது உள்ளத்தினை உறுத்தி வந்தது; “கண்ணற்ற கபோதிகளாய்த் தமிழ் மக்கள் ஏமாந்து, இச் சடங்குகளுக்கு அடிமைகளாகி  விட்டிருக் கின்றனரே!” என வருந்தலானேன். ஓசூரில் நான் குடியிருந்த வீட்டிற்கெதிரே புரோகிதர் ஒருவர் குடியிருந்தார்.  அவர் மனைவியின் தம்பி பன்னிரண்டு அகவைச் சிறுவன். கோடை விடுமுறைக்குத் தன் அக்கா வீட்டிற்கு வந்திருந்தான். அவன் அப்போதே தனியே சென்று, தமிழர் வீட்டுச் சடங்குகளை நடத்தி வைத்துவிட்டு, அரிசி, காய்கறி முதலியவற்றைச் சுமந்து வருவான். ஒருநாள் அவனை “எங்கிருந்து இவற்றைக் கொண்டு...

கழக அமைப்பு முறைகளை மாற்றியமைக்க மாநில செயற்குழு முடிவு

கழக அமைப்பு முறைகளை மாற்றியமைக்க மாநில செயற்குழு முடிவு

7.7.2012 அன்று காலை கழக மாநில செயற்குழுக் கூட்டம், சென்னை இராயப்பேட்டை முருகேசன் திருமண மண்டபத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பொதுச் செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் துரைசாமி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 5.7.2012 அன்று காலை சமூக விரோதிகளால் சுடப்பட்டும், வெட்டியும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட கிருட்டிணகிரி மாவட்ட அமைப்பாளர் பழனி (எ) மு. பழனிசாமிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அரசும் காவல்துறையும் இதில் தனிக் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் தலைமை செயற்குழுக் கூட்டத்தில் கழகத்தில் நிலவும் கழகப் பணிகளிலுள்ள சுணக்கம், கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தைப் பரப்புதல், தமிழக அரசியல் சூழல், கழகத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றைப் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இறுதியில், கழகத்தின் அமைப்பு முறையை...

அதிகாரத் திமிர் வெறியாட்டங்களை எதிர்த்து நின்ற  தோழர்  பழனி  கொடூரமாகக் கொல்லப்பட்டார்

அதிகாரத் திமிர் வெறியாட்டங்களை எதிர்த்து நின்ற தோழர் பழனி கொடூரமாகக் கொல்லப்பட்டார்

தனது சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களின் கருத்துரிமைகளை மறுத்து கொத்தடிமைகளாக மிரட்டி ஒடுக்கி வைத்திருந்த தளி சட்டமன்ற உறுப்பினரின் அதிகாரத் திமிரை எதிர்த்து நின்ற கழகத் தோழர் பழனி சுடப்பட்டு, வெட்டப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான கிருட்டிண கிரி மாவட்டத்தில் “தளி” சட்டமன்ற தொகுதி இருக்கிறது. இந்திய பொதுவுடமை கட்சியைச் சார்ந்த இராமச்சந்திரன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவரின் சொந்த ஊர் தளி தொகுதியின் எல்லை ஓரமாக இருக்கும் கெலமங்களம் (வேப்பினப்பள்ளி தொகுதியின் எல்லையோரம்). கெலமங்களத்தை சுற்றியுள்ள பல ஊர்களிலும் இவர் சார்ந்திருக்கும் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இயங்கக் கூடாது என்ற கருத்துள்ள அராஜவாதியாக இருந்து வருகிறார். தி.மு.க.வைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம், இந்தப் பகுதிக்குப் பிரச்சாரம் செய்ய வந்தபோது, இவரது ஆட்களால் தாக்கப்பட்டு விரட்டியடிக்கவும் பட்டார். தன்னை பொது வுடமைக் கட்சியில் இணைத்துக் கொண்டிருந் தாலும், கடந்த பதினைந்து...

பொது நலனை சிதைக்கும் ‘மனு சாஸ்திரம்’

பொது நலனை சிதைக்கும் ‘மனு சாஸ்திரம்’

‘பிராமணர்களுக்கு மட்டும்’ என்று அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வெளிப்படையாக விளம்பரங்களே வருவதை ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம். அதை வெளியிட்ட ‘இந்து’ஏட்டின் மீது, பத்திரிகைக் குழுவுக்கு சென்னை மருத்துவர் இனியன் இளங்கோ புகார் கூறியதன் அடிப்படையில், ‘இந்து’ அந்த விளம்பரத்தை வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, ‘இந்து’ நாளேடு (ஜூலை8, 2012) டெல்லி, பெங்களூர், மும்பை போன்ற பெரு நகரங்களில் வாடகைக்கு வீடுகளை விடுவதில் ‘இனப் பாகுபாடு’ காட்டப்படுகிறது என்ற விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக தலைநகரமான டெல்லியில் முஸ்லீம்கள் என்றாலே, அவர்களுக்கு வீடு வாடகைக்கு தரப்படுவதில்லை. நகரின் ஒதுக்குப்புறத்தில் முஸ்லீம்கள் வாழும் நெருக்கடியான பகுதிகளுக்குள்ளேயே தள்ளப்படுகிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. சென்னையில் முஸ்லீம்களுக்கும், ‘தலித்’களுக்கும் இதே நிலைதான். ‘சைவமா? அசைவமா?’, அசைவக்காரர்களுக்கு வீடு இல்லை என்று கூறிவிடுகிறார்கள். மாமிச உணவு சமைக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் வாடகைக்கு விடப்படும் நிலையும் உண்டு. உணவு முறையில் புகுத்தப்பட்ட ‘மனுதர்மம்’ வாழ்க்கையில் மட்டுமல்ல; வாடகைக்கு வீடு கிடைப்பதிலும்கூட விட்டு வைக்காமல், துரத்தி...

புள்ளி விவரங்களுடன் வழக்கறிஞர் துரைசாமி விளக்கம்: வரலாற்றுப் போக்கை மாற்றியமைத்த திராவிடர் இயக்கம்

புள்ளி விவரங்களுடன் வழக்கறிஞர் துரைசாமி விளக்கம்: வரலாற்றுப் போக்கை மாற்றியமைத்த திராவிடர் இயக்கம்

திராவிடர் இயக்கம் வந்த பிறகு தான் தமிழன் தலைநிமிர்ந்தான்; தன்மானம் பெற்றான் என்று வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வரலாறுகளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். 24.3.2012 அன்று பெரம்பூர் ராஜலட்சுமி அரங்கில் ‘குடிஅரசு’ வாசகர் வட்ட தொடக்க விழாவில் அவர் ஆற்றிய உரையின் தொடர்ச்சி: 1925 ஆம் ஆண்டு பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வந்தார். இவ்வியக்கம் ஆரம்ப காலத்தில் நம் நிலை எப்படி இருந்தது? ஹிட்லர், ஜெர்மன், யூதர்களிடம் கொண் டுள்ள மனப்பான்மைக்குக் காரணங்கள் என்ன வென்று அவர் சொல்லுகின்றாரோ, அவைகளும், அவைகளுக்கு மேற்பட்ட காரணங்களுமே இங்கே நம் மாபெருந்தலைவர்கள் இவ்வியக்கத்தை ஆரம்பிப்பதற்குக் காரணங்களாயிருந்தன. கல்வி 1915 ஆம் ஆண்டில், நம் இயக்கம் ஆரம்பிக்கப்படு முன் கல்வித் துறையில் பார்ப்பனரல்லாத மக்கள் எந்நிலையிலிருந்தார்கள் என்பதைச் சிறிது கவனிப் போம். கல்வித் துறை நிர்வாகத்தில் மொத்தம் 518 பதவி களில் 400 பதவிகள் பார்ப்பனர்கள் கையிலிருந்தன. 73 பதவிகளை ஆங்கிலே இந்தியர்கள், யூரேஷியர்கள், கிறிஸ்தவர்...

தமிழக அரசே; குற்றவாளிகளை தப்பவிடாதே!  தோழர் பழனிக்கு தமிழகம் முழுதும் வீரவணக்கப் பேரணிகள் சென்னை

தமிழக அரசே; குற்றவாளிகளை தப்பவிடாதே! தோழர் பழனிக்கு தமிழகம் முழுதும் வீரவணக்கப் பேரணிகள் சென்னை

வீரமரணம் அடைந்த பழனிச்சாமி வீர வணக்கப் பேரணி சென்னையில் 14.7.2012 மாலை 4 மணியளவில் மயிலாப்பூர் கழகத் தலைமை அலுவலகத்திலிருந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் புறப்பட்டது.   கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் முன்னிலை வகித்தார். வீர வணக்க முழக்கங்களுடன் பேரணி மயிலாப்பூர் டாக்டர் நடேசன் சாலை – அய்ஸ் அவுஸ் – வி.எம். சாலை வழியாக இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தை வந்தடைந்தது. ஒரு மணி நேரம் நடந்த இந்தப் பேரணியை வீதியின் இருபுறமும் மக்கள் திரண்டு பார்த்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேரணியில் பங்கேற்றார். இராயப்பேட்டை கழக அலுவலகமான பெரியார் படிப்பகம் அருகில் வீரவணக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ‘சேவ் தமிழ்’ அமைப்பைச் சார்ந்த செந்தில், திருமுருகன் (மே 17 இயக்கம்), எஸ்.எஸ்.பாலாஜி (விடுதலை சிறுத்தைகள்), வழக்கறிஞர் குமாரதேவன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர்...

தோழர் பழனி வீரவணக்க கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறைகூவல் முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் போராட்டம்

தோழர் பழனி வீரவணக்க கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறைகூவல் முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் போராட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரில் நிலப் பிரபுத்துவவாதியாக தளி சட்டமன்றத் தொகுதியில் தனியான ‘வன்முறை அரசை’ நடத்தி வந்த ஆதிக்கவாதிகளை மக்களுக்காக தட்டிக் கேட்ட கிருஷ்ணகிரி மாவட்ட பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் மு.பழனி படுகொலையைக் கண்டித்து வீரவணக்கம் செலுத்தும் நினைவேந்தல் பொதுக் கூட்டம் 15.7.2012 மாலை 4.30 மணியளவில் இராயக்கோட்டை பேருந்து நிலைய மைதானத்தில் உருக்கத்துடனும் உணர்ச்சியுடனும் நடைபெற்றது. அராஜக அடக்குமுறைக்கு எதிராக பொது மக்கள் பிற்பகல 3 மணியிலிருந்தே திரளத் தொடங்கி விட்டனர். இந்த கொலை வெறியாட்டங்களைத் தட்டிக் கேட்க எவருமே கிடையாதா என்ற மனப் புழுக்கத்தில் ஏங்கிக் கொண்டிருந்த பொது மக்களின் உணர்வுகளுக்கு நம்பிக்கையூட்டுவதாக இந்தக் கூட்டம் இருந்தது. அச்சத்தின் பிடியில் உறைந்து கிடந்த ஏழை எளிய மக்கள் அச்சத்தை உதறி எறிந்துவிட்டு ஆவேசத் துடன் திரண்டு நின்றதைப் பார்க்க முடிந்தது. இராயக்கோட்டைப் பேருந்து மைதானம் முழுவதும் மக்கள் தலையாகவே காட்சியளித்தது. முன்புறம் போடப்பட்டிருந்த இருக்கைகள் முழுமையாக...

இளம் விஞ்ஞானியின் நன்கொடை

இளம் விஞ்ஞானியின் நன்கொடை

தூத்துக்குடியில் பிறந்து, அமெரிக்காவில் உயர் கல்வியும் முனைவர் பட்டமும் பெற்ற இளம் விஞ்ஞானி தோழர் இராசா, பெரியார் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளையும், பெரியார் முழக்கம் ஏட்டையும் இணைய தளங்கள் வழியாக படித்து மகிழ்ந்து ஜூலை 6 ஆம் தேதி கழகத் தலைமை அலுவலகம் தேடி வந்தார். தற்போது தமிழகம் வந்து, முகப்பேர் மேற்கு பகுதியில் தங்கியுள்ள தோழர் இராசா, தம்முடைய உயர்கல்வி பெறும் நிலை உயர்வுக்குக் காரணமான பெரியார் தொண்டினை நன்றியுடன் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் நினைவு கூர்ந்தார். விரைவில் சாதி மறுப்பு திருமணத்தை எளிமையாக பதிவு செய்ய விருப்பதையும் தெரிவித்தார். தான் பொருளாதார நிலையில் இன்னும் வளரவில்லை. ஆனாலும் இந்த கழகத்துக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன் என்று கூறி, ரூ.1000 நன்கொடையை பொதுச் செயலாளரிடம் வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 26072012 இதழ்

பொள்ளாச்சியில் கராத்தே போட்டி: இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

பொள்ளாச்சியில் கராத்தே போட்டி: இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

பொள்ளாச்சி கராத்தே கழகம் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் போட்டி பொள்ளாச்சியில் பல்லடம் ரோடிலுள்ள திருமண மண்டபத்தில் தொடங்கியது. போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கராத்தே வீரர்கள் வந்தனர். இந்தப் போட்டியில் கலந்து கொள்ள இலங்கையைச் சேர்ந்த 2 கராத்தே வீரர்கள், பயிற்சியாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இதை அறிந்த பொள்ளாச்சி நகர பெரியார் திராவிடர் கழகத்தினர் மற்றும் ம.தி.மு.க.வினர் கராத்தே போட்டி நடத்தும் நிர்வாகிகளிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  எக்காரணம் கொண்டும் இலங்கை வீரர்கள் இங்கு வரக்கூடாது. எங்கள் எதிர்ப்பையும் மீறி அவர்கள் பொள்ளாச்சி வந்தால் மீண்டும் இலங்கை செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரித்தனர். இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த கராத்தே வீரர்கள் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் விமான நிலைய அதிகாரிகள், ‘நீங்கள் பொள்ளாச்சி சென்று கராத்தே போட்டியில் பங்கேற்கக் கடும் எதிர்ப்புள்ளது. எனவே இங்கிருந்து திரும்பி விடுங்கள்’...

தோழர் பழனிக்கு திருச்சியில் வீர வணக்கம்

தோழர் பழனிக்கு திருச்சியில் வீர வணக்கம்

சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட கிருட்டிணகிரி மாவட்ட பெரியார் தி.க. அமைப்பாளர் பழனிச்சாமிக்கு வீர வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி கலைஞர் அறிவாலயத்திலிருந்து அண்ணா சிலை வரை வீரவணக்க ஊர்வலம் 14.7.2012 சனி மாலை 5 மணிக்கு மாவட்ட தலைவர் டாக்டர் எஸ்.எஸ். முத்து தலைமையிலும் திருவரங்க நகர செயலாளர் அசோக் முன்னிலையிலும் நடைபெற்றது. மா.பெ.பொ.கட்சி மாவட்ட செயலாளர் கலியபெருமாள், ஆதித் தமிழர் பேரவை உறந்தை ரமணா, பெரியார் பாசறை அமைப்பாளர் அன்பழகன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தமிழாதன், சட்ட எரிப்புப் போராளி முத்துச் செழியன் (பெ.தி.க.),  பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர்  ஆரோக்கியசாமி மற்றும் அகில இந்திய இளைஞர் இயக்கம் டார்வின் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கழக மாவட்ட இணை செயலாளர் த. புதியவன் மற்றும் குணா ஆகியோர் கண்டன உரையாற்றினர். கழக மாவட்ட பொருளாளர் மு.மனோகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாவட்ட செயலாளர் வே.கந்தவேல் குமார் நன்றியுரையாற்றினார்....

பள்ளிக் குழந்தைகள் முடியை வெட்டும் மனுதர்ம வெறி

பள்ளிக் குழந்தைகள் முடியை வெட்டும் மனுதர்ம வெறி

சூத்திரனுக்குகல்வியைத் தரக் கூடாது என்று மனுதர்மம் கூறுவதற்கு எதிராக வந்ததுதான் கட்டாயக் கல்வி சட்டம் என்று திருப்பூரில் நடந்த சாதி ஒழிப்பு நிறைவுப் பொதுக் கூட்டத்தில் கழகம் தீர்மானம் நிறைவேற்றியது. 6 வயது முதல் 14 வயது வரை அனைவருக்கும் கல்வியை கட்டாயமாக்கும் இந்தச் சட்டம், தனியார் பள்ளிகள் 25 சதவீதம் ஏழைக் குழந்தைகளை கட்டணமின்றி அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் இந்தப் பிரிவைக் கடுமையாக எதிர்க்கின்றன. பெங்களூரிலிருந்து வந்துள்ள ஒரு செய்தி அதிர்ச்சி யளிக்கிறது. பெங்களூரில், ‘நந்தினி லே அவுட்’ பகுதியிலுள்ள ஆக்ஸ்போர்டு ஆங்கிலப் பள்ளியில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்ட இந்த ஏழைக் குழந்தைகள், மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட, அவர்களின் தலைமுடியை வெட்டியுள்ளனர். வகுப்பறையிலும் அவர்களுக்கு கடைசி இடத்தில்தான் இடம். அவர்கள் கொண்டு வரப்படுகிற உணவு டப்பாக்கள், பள்ளி நுழைவு வாயிலில் சோதனையிடப்படுகின்றன. பள்ளி வருகைப் பதிவேட்டிலேயே இவர்களின் பெயர்கள்...

தமிழக அரசின் பாராட்டத்தக்க ஆணை

தமிழக அரசின் பாராட்டத்தக்க ஆணை

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அனைத்து சுயநிதி கல்லூரிகளிலும் ஆதி திராவிடர் பழங்குடி மாணவர்களுக்கு 100 சதவீத கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என்ற பாராட்டத்தக்க ஆணையை தமிழக அரசு அறிவித்துள்ளது. தலித் பழங்குடி மாணவர்கள் நலன் கருதி அரசு ஆணையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இங்கே வெளியிடுகிறது. பெரியார் முழக்கம் 26072012 இதழ்

‘மனுதர்ம’த்தில் மண்டியிட்ட மானமற்ற தமிழ் மன்னர்கள்

‘மனுதர்ம’த்தில் மண்டியிட்ட மானமற்ற தமிழ் மன்னர்கள்

தமிழ் மன்னர்கள் நடத்தியது மனுதர்ம அடிப்படை யிலான பார்ப்பன ஆட்சியே என்பதையும் மனு சாஸ்திரம் எரிக்கப்படவேண்டும் என்றும் மறைந்த பெரியாரியலாளர் வழக்கறிஞர் கரூர் பூ.அர. குப்புசாமி எழுதிய கட்டுரையை இன்றைய பொருத்தம் கருதி வெளியிடுகிறோம். அவர் 1985 இல் வெளியிட்ட ‘மன்னர்களும் மனுதர்மம்’ நூலில் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது. நம் அப்பாவி மக்கள் ஏதோ மறைந்துபோன ஒரு நூலை – மனுதர்மத்தை – ஏன் இப்போது கொளுத்த வேண்டும் என்பதாக நினைக்கக்கூடும். ஆனால், இன்றைய சமூக அமைப்பு, நடை முறைகள், நம்பிக்கைகள், நல்லது கெட்டது பற்றிய உணர்வு, ஏன் ஊர் அமைப்புக்கூட தர்மசாத்திரங்கள் என்று சொல்லப்பட்ட பார்ப்பனிய ஏற்பாடுகளின் படி நாடாண்ட மன்னர்கள் பல நூற்றாண்டு கால மாக சமூகத்தின் மீது பலாத்காரமாகத் திணித்து நிலை நாட்டியவை என்பதை அவர்கள் அறிய மாட் டார்கள். நிலைநாட்டிவிட்ட பிறகு அவை இன்று இயல்பாகத் தோன்றுகின்றன – அவ்வளவு தான். சாமான்ய மக்கள்கூட ‘மனுநீதி...

‘வருண பகவானு’க்கு பூசை போட ரூ.17 கோடியை விரயமாக்கும் கருநாடக பா.ஜ.க. ஆட்சி

‘வருண பகவானு’க்கு பூசை போட ரூ.17 கோடியை விரயமாக்கும் கருநாடக பா.ஜ.க. ஆட்சி

கருநாடக பா.ஜ.க. – குடுமி பிடிச் சண்டையில் முதலமைச்சர்களை மாற்றிக் கொண்டே இருக்கிறது. இப்போது முதல்வராக வந்திருப்பவர் ஜெகதீஷ் ஷட்டர். இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர் என்று ஒரு ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அந்த ‘இந்துத்துவ நாத்திகர்’ ஆட்சி, தமது மாநிலத்தில் நிலவும் வறட்சியைப் போக்க மாநிலம் முழுதும் உள்ள 34,000 கோயில்களிலும் ‘வருண ஜெபம்’ நடத்த உத்தரவு போட்டுள்ளது. பார்ப்பனர்களைக் கொண்டு பூஜைகளையும், ஹோமங்களையும் நடத்தப் போகிறதாம். இதற்காக அரசு ஒதுக்கியுள்ள தொகை ரூ.17 கோடி. வறட்சி நிவாரணத்துக்காக நிதி கேட்டு மத்திய அரசு கதவுகளைத் தட்டிக் கொண்டே 17 கோடியை வீண்விரயமாக்குகிறது பா.ஜ.க. ஆட்சி. அரசின் இந்த நடவடிக்கையை சட்டமன்றத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சியைச் சார்ந்த சி.எஸ்.புட்டே கவுடா, மகாதேவ பிரசாத் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், துறை அமைச்சராக உள்ள கோட்டா சீனிவாஸ் பூசாரி என்பவர், “நான கடவுளை நம்புகிறேன். வருண பகவானை வேண்டினால்...

இராமகோபாலனே! கோயில் சொத்துகளை கொள்ளையடிப்பது யார்?

இராமகோபாலனே! கோயில் சொத்துகளை கொள்ளையடிப்பது யார்?

‘இந்து முன்னணி’ இராமகோபாலன் அய்யர் அவ்வப்போது அறநிலையத்துறைக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட்டு விடுவார். இந்து கோயில்களை அரசின் அறநிலையத் துறை கட்டுப் படுத்தக் கூடாதாம். ‘இந்து’க்களைக் கொண்ட தனி வாரியம் அமைத்து, அவர்களின் முழுக் கட்டுப் பாட்டிலேயே விட்டுவிட வேண்டுமாம். இதே போன்ற அறிக்கையை இப்போது மீண்டும் வாந்தி எடுத்துள்ளார். இந்துக் கடவுளர்கள் அரசுக் கட்டுப் பாட்டில் இருக்கக் கூடாது என்றால் அது பார்ப் பானின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டும் என்பதே ‘இவாளின்’ துடிப்பு! அப்படித் தான் 1927 வரை இருந்தது. கோயிலில் குவிந்து கிடந்த நிலங்களும், தங்கம், வைரம், வெள்ளி, வைடூரியங் களும் பார்ப்பனர்களால் சுருட்டப்பட்டன. இந்த பெருச்சாளிகளிடமிருந்து மீட்பதற்கு முதல் கடிவாளம் போட்டது, நீதிக்கட்சி ஆட்சி தான். பனகல் அரசர்  முதலமைச்சராக இருந்தபோது, அவர்தான் மக்கள் வழங்கிய சொத்துக்களை பார்ப்பனர்களின் கொள்ளையிலிருந்து தடுக்க அறங்காவலர்களைக் கொண்ட ஒரு வாரியத்தை உருவாக்கினார்.  இராமகோபாலய்யர் கதறிக் கொண்டிருக்கும்...

மார்க்சிய லெனினிய  தோழர் தொப்பி குமாரின் படுகொலை

மார்க்சிய லெனினிய தோழர் தொப்பி குமாரின் படுகொலை

சட்டமன்ற உறுப்பினர் தளி இராமச்சந்திரன் மற்றும் அவரது ஆட்களின் கொலைவெறியாட்டத்தைக் கண்டித்து  28.4.2012 அன்று கெலமங்கலத்தில் பெரியார் திராவிடர் கழக சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூட்டத்தில் பங்கேற்று, தளி எம்.எல்.ஏ.வுக்கு எதிராக மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு உருவாக்கப்படும் என்று அறிவித்தார். இக்கூட்டத்தில் இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிய-லெனினிஸ்ட்) அமைப்பைச் சார்ந்த தோழர்களும் பங்கேற்றனர்.  அடுத்த நாள் 29.4. 2012 அன்று லெனின் பிறந்த நாளுக்காக மார்க்சிய லெனினியக் கட்சி பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்துக்கு காவல் துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்யுமாறு ராமச்சந்திரன் வற்புறத்தவே ஏப்.28 ஆம் தேதி இரவு 10 மணிக்கு, 29 ஆம் தேதி நிகழ இருந்த கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. பெரியார் திராவிடர் கழகத்தை, சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக இக்கட்சி தூண்டிவிடுவதாக ராமச்சந்திரனும் அவரது ஆட்களும் கருதினார்கள். கூட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து...

தலைமறைவு தளி சட்டமன்ற உறுப்பினர் வங்கிக் கணக்கு முடக்கம் அதிர்ச்சி தரும் நில மோசடி – படுகொலைகள்

தலைமறைவு தளி சட்டமன்ற உறுப்பினர் வங்கிக் கணக்கு முடக்கம் அதிர்ச்சி தரும் நில மோசடி – படுகொலைகள்

தேடப்பட்டு வரும் தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வெளி மாநிலங்களில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் வங்கிகள் மூலம் பண பரிவர்த்தனை எதுவும் மேற்கொண்டு விடக் கூடாது என்பதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்ட 22 பேரின் வங்கி கணக்குகளும் முடக்கி வைக்கப்பட் டுள்ளன. இது குறித்து தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர், “கொலையாளிகள், தங்களின் இருப் பிடத்தை அடிக்கடி மாற்றி வருகிறார்கள். இதனால் அவர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது எங்களுக்கு சில துப்பு கிடைத்தள்ளது. அதைக் கொண்டு விசாரித்து வருகிறோம். மேலும், அவர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. கொலையாளிகள் எங்கும் தப்பிவிட முடியாது. அவர்களை நாங்கள் நெருங்கி விட்டோம். இன்னும் ஓரிரு நாட்களில் தலைமறைவாக உள்ள கொலையாளிகள் பிடிபடுவார்கள்” என்று கூறியுள்ளார். இதற்கிடையே, இந்த கொலை தொடர்பாக தேடப்பட்டு வரும் நபர்கள் சிலர் கல்குவாரிகள் போன்ற தொழில்கள் செய்து வருகிறார்கள். அவர்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் 115 பேர்...

ஆகஸ்டு 5 இல் சுயமரியாதைத் தொண்டர்கள் படத்திறப்பு

ஆகஸ்டு 5 இல் சுயமரியாதைத் தொண்டர்கள் படத்திறப்பு

குத்தூசி குருசாமி – குருவிக் கரம்பை வேலு – சுயமரியாதைப் பேரவை சார்பில் சுயமரியாதை இயக்கத் தொண்டர் நாள் 5.8.2012 அன்று காலை 10 மணியளவில் திருவான்மியூரில் (பி.டி.இராபர்ட் இல்லம், 132 வால்மீகி நகர், இரண்டாம் தளம்) மருத்துவர் சவுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெறுகிறது. மூவலூர் இராமாமிர்தம் படத்தை வாலாசா வல்லவனும், பட்டுக்கோட்டை டேவிஸ் படத்தை கவிஞர் சிகாமணி யும், சுவரெழுத்து சுப்பையா படத்தை புதுகை இராசேந்திரனும் திறந்து வைத்து பேசுகிறார்கள். ஓவியா சிறப்புரையாற்றுகிறார். பெரியார் முழக்கம் 02082012 இதழ்

பார்ப்பன விரத மோசடிகள்

பார்ப்பன விரத மோசடிகள்

இந்த சதுர்மாஸ்ய விரத காலத்தில் பார்ப்பன மடத் தலைவர்களை சந்தித்து, அவர்களிடம் தங்கள் பிரச்சினைகளைக் கூறுவதற்கு சீடர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுப்பது வாடிக்கை. இந்த பார்ப்பன விரதம் பற்றி சிலாகித்து, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் (ஜூலை 18) ஆர். சாமிநாதன் என்ற பார்ப்பனர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். முழுமையாக வேதநெறி வாழ்க்கையில் ‘பிராமணனாக’ வாழும் இந்தக் காலத்தில் இந்தப் பார்ப்பனர்களிடம் தங்களின் மனக் குமுறல்களை கொட்டினால், அதை வேதப் பார்ப்பன ‘குருக்கள்’ காதால் கேட்டு தலையாட்டினாலே கூற வந்தவர்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடுமாம். இப்படியெல்லாம் எழுதும் அந்தப் பார்ப்பனர், ‘சதுர்மாஸ்ய விரத காலங்களில்’ பார்ப்பன குருக்களை சந்திப்பதுகூட வியாபாரமாகிவிட்டது என்றும், செல்வாக்குள்ளவர்கள் முக்கிய புள்ளிகள், தட்டு தட்டாக பொருட்களை வாங்கிக் கொண்டு கியூ வரிசையில் நிற்காமல் தனித் தரிசனம் பெற்று விடுகிறார்கள் என்றும் புலம்புகிறார். சங்கராச்சாரிகளையும் பார்ப்பன குருக்களையும் சந்திக்க வரும் கூட்டத்தினர், தங்களின் பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம், குடும்பப்...

தோழர் பழனி படுகொலையில் தேடப்பட்ட எம்.எல்.ஏ. சரண்

தோழர் பழனி படுகொலையில் தேடப்பட்ட எம்.எல்.ஏ. சரண்

கிருட்டிணகிரி மாவட்ட கழக அமைப்பாளர் தோழர் பழனி படுகொலையில் தலைமறைவாக இருந்த தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன், அவரது மாமனார் இலகுமய்யா, மைத்துனர் கேசவமூர்த்தி, சித்தராஜி மற்றும் ஒருவர் உட்பட 5 பேரும் ஜூலை 30 ஆம் தேதி காலை திருவண்ணாமலை முதலாவது நீதிமன்ற நடுவர் முன் சரணடைந்துள்ளனர்.  கொலை நடந்த ஜூலை 5 ஆம் தேதியி லிருந்து தலைமறைவாக இருந்த இவர்களை காவல்துறையின் தனிப்படைகள் தேடி வந்தன. இந்த கொலையில் 22 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஏற்கனவே தனக்கு முன் பிணை கேட்டு தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன், உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். கடந்த 26 ஆம் தேதி இந்த முன் பிணை கேட்கும் மனு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளி தளி ராமச்சந்திரன் சார்பில் வாதிட வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருட்டிணன் ஆஜர் ஆனார். உச்சநீதிமன்ற...

காவல்துறை கெடுபிடிகளை தகர்த்து எழுச்சியுடன் நடந்த வெள்ளோடு கூட்டம்

காவல்துறை கெடுபிடிகளை தகர்த்து எழுச்சியுடன் நடந்த வெள்ளோடு கூட்டம்

23.7.2012 திங்கட்கிழமை அன்று மாலை 6 மணிக்கு ஈரோடு மாவட்டம் வெள்ளோடு கள்ளுகடை மேடு பகுதியில் பெரியார் திராவிடர் கழகம் சார்பாக மனுதர்ம எரிப்புப் போராட்டம் ஏன்? என்பது பற்றிய விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை குடந்தை சிற்பி இராசன் நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர் பேரவை ப.சிவக்குமார் தலைமை வகித்தார். பெ.சே. மோகன்ராஜ், செல்லப்பன், செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிற்பி இராசன், சாமியார்களின் மோசடிகளையும், கடவுளர்களின் பிறப்புக் கதைகளையும் கூறி, மக்களின் மூளைக்கு வேலை கொடுத்தார். கூட்டத்தில் அமர்ந்திருந்த பக்தர்களிடம் கேள்விகளைக் கேட்டு, கடவுள் நம்பிக்கையை உடைக்கும் விதமான பதில்களை அவர்களிடமிருந்தே பெற்று, அதற்கு விளக்கம் அளித்தார். அடுத்தபடியாக மனுதர்ம எரிப்பு ஏன்? என்பது பற்றிய விளக்கப் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஈரோடு ஒன்றிய அமைப்பாளர் செ.சசிக்குமார் தலைமை வகித்தார். வெள்ளோடு கோபி வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் சென்னிமலை செல்லப்பன், பகுத்தறிவாளர் பேரவை...

ஜீவா வளர்த்த கட்சியில் “தளி இராமச்சந்திரன்களா?”  அரங்க குணசேகரன் கேள்வி

ஜீவா வளர்த்த கட்சியில் “தளி இராமச்சந்திரன்களா?” அரங்க குணசேகரன் கேள்வி

இராயக்கோட்டையில் 15.7.2012 அன்று நடந்த தோழர் பழனி படுகொலை கண்டன கூட்டத்தில் ‘தமிழக புரட்சிக் கழக’ அமைப்பாளர் அரங்க குணசேகரன் ஆற்றிய உரை: தோழர் பழனியை நான் 15 ஆண்டுகளாக அறிவேன். பெண்ணாகரத்திற்கு வருகின்ற காலத்தில் எல்லாம் தோழர் பழனியோடு அரசியல் உறவுகளைக் கொண்டு தோழமையுடன் பழகியிருக்கிறேன். ‘வர்க்க எதிரிகளை ஒழித்து, தமிழ்நாடு விடுதலையை சாதிக்க வேண்டும்’ என்ற கொள்கைகளை ஏற்று வர்க்கப் போராளியாக வாழ்ந்த பழனி, வர்க்கப் போருக்கு தடையாக நிற்கும் சாதி, மதத்தை தகர்த்தெறிய போராடும் பெரியார் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். அவரை படுகொலை செய்ததன் மூலம், இந்த தளி சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டில் தான் இருக்கிறதா? இந்தப் பகுதியின் ஆட்சி தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதா? சி.பி.ஐ. தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் ஆளுகையில் இருக்கிறதா என்பதை தமிழக முதல்வர் ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும். 1971 இல் 5000 ஏக்கர் நிலம்...

‘மனுதர்ம’த்தில் மண்டியிட்ட மானமற்ற தமிழ் மன்னர்கள் (2)

‘மனுதர்ம’த்தில் மண்டியிட்ட மானமற்ற தமிழ் மன்னர்கள் (2)

தமிழ் மன்னர்கள் நடத்தியது மனுதர்ம அடிப்படையிலான பார்ப்பன ஆட்சியே என்பதையும் மனுசாஸ்திரம் எரிக்கப்பட வேண்டும் என்றும் மறைந்த பெரியாரிய லாளர் வழக்கறிஞர் கரூர் பூ.அர. குப்புசாமி எழுதிய கட்டுரையை இன்றைய பொருத்தம் கருதி வெளியிடுகிறோம். அவர் 1985 இல் வெளியிட்ட ‘மன்னர்களும் மனுதர்மம்’ நூலில் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது.  சென்ற இதழ் தொடர்ச்சி. கிராமம் ஊழியம் செய்யும் வகுப்பார்கள் யாரும் ஊரை விட்டு போகக் கூடாது. போனால் அவர்கள் மீது நடவடிக்கை உண்டு. சாதி ஆச்சாரங்களை வரையறுத்து இன்ன வகுப்பார் இன்னின்ன சடங்குகள், உடைகள், உரிமைகள் ஆகியவைகளைத் தான் கைக்கொள்ள வேண்டும் என (களப் பிரர் ஆட்சியில்) அரசாணை பிறப்பித்தனர். அந்த ஆணையும் சாத்திர வல்லுனரான பார்ப்பனர்களின் அபிப்பிராயப்படியே வழங்கப்பட்டது. உதாரணமாக அய்ந்து வகைப்பட்ட கம்மாளர்களை அவர்கள் பிரதிலே மாகளைக் காட்டிலும் உயர்ந்தவர் களான அனுலோமரைச் சேர்ந்தவர்கள் என்றும், எனவே அவர்கள் பூணூல் அணிந்து கொள்ளலாம் என்றும் ஆனால் உபநயன மந்திரம்...

தலையங்கம் பெரியார் கூறுகிறார் நமது முக்கிய கொள்கை

தலையங்கம் பெரியார் கூறுகிறார் நமது முக்கிய கொள்கை

“சாதி ஒழிய வேண்டும் என்பதும் – நாடு பிரிய வேண்டும் என்பதும்தான் நம் கழகத்தின் முக்கிய கொள்கை. மூடநம்பிக்கை ஒழிய வேண்டும் என்பதும் – வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதும், மற்றவைகளும், இதன் உட்பிரிவுதான்.” – ‘விடுதலை’ 21.8.1957 “திராவிடர் இயக்கத்துக்கு முக்கியக் கொள்கை இந்நாட்டில் பறையன் என்றும், பார்ப்பான் என்றும், உயர்ந்த சாதிக்காரன், தாழ்ந்த சாதிக் காரன் என்றிருப்பதையும், சூத்திரன், பஞ்சமன் என்றிருப்பதையும் அறவே ஒழித்து, எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஒரே சமுதாய மக்கள் என்னும் கொள்கைகளை நடைமுறையில் செய்வதே ஆகும்.” – ‘விடுதலை’ 8.7.1947 கட்சி – இயக்கம் “கட்சி எனப்படுவது குறிப்பிட்ட, அதாவது சில உத்தியோகங்களை அல்லது பட்டங் களை மக்களுக்கு வாங்கித் தருவது; ஓரளவு மக்களுக்கு நன்மை பயக்க முயற்சிப்பது. ஆனால், இயக்கம் என்பது அவ்வாறல்ல; மக்களின் நிரந்தர உரிமைக்கும் வாழ்க்கையின் நலனுக்கும் ஏற்ற வகையில் உழைத்து ஆவன செய்வது. இன்னுங் கூற வேண்டு...

செயற்குழுவில் பெரும்பான்மை ஆதரவு இருந்தும், கழகப் பெயரை நாமே பயன்படுத்தும் வாய்ப்பு இருந்தும் பெரியார் இயக்கத்தின் மாண்பு காக்க – நாமே பிரிந்து செல்கிறோம்!

செயற்குழுவில் பெரும்பான்மை ஆதரவு இருந்தும், கழகப் பெயரை நாமே பயன்படுத்தும் வாய்ப்பு இருந்தும் பெரியார் இயக்கத்தின் மாண்பு காக்க – நாமே பிரிந்து செல்கிறோம்!

ஒன்றுபட்ட இயக்கத்தில் செயல்பாடற்று முடங்குவதைவிட பிரிந்து போய் செயல்படுவதே சாலச் சிறந்தது புதிய பெயர் சூட்டி இயக்கப் பணிகளை முன்னெடுக்க… ஆக.12 இல் ஈரோட்டில் கூடுவோம், வாரீர்! பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை. அன்பார்ந்த தோழர்களுக்கு வணக்கம். நமது கழகத்துக்குள் தோழர் இராமக்கிருட்டிணன் அணியினருக்கும், நமக்குமிடையே கடந்த பல ஆண்டுகளாகவே நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் பற்றி 07.07.2012 அன்று சென்னையில் நடந்து முடிந்த தலைமைச் செயற்குழுவில் விரிவாகவே விவாதித்தோம். பெரியார் கொள்கைகளை முன்னெடுப்பதில் கழகத்தில் நாம் சந்திக்க வேண்டியிருந்த முட்டுக்கட்டைகள் – எதிர்ப்புகள் குறித்து விளக்கினோம். ஒன்றுபட்ட இயக்கத்தில் செயல்படாமல் முடங்குவதைவிட, பிரிந்து நின்று செயல்படுவதே சாலச் சிறந்தது என்பதையும் கூறினோம். இதைத் தொடர்ந்து செயற்குழுவில் கருத்தைத் தெரிவித்த உறுப்பினர்களில் பெரும் பான்மையோர் (82க்கு 56 பேர்) பிரிந்து செயல்படுவதே நல்லது என்று கூறிய நிலையிலும்கூட, நாம் ஒற்றுமை...

டெசோ மாநாடு – கொளத்தூர் மணி அறிக்கை

டெசோ மாநாடு – கொளத்தூர் மணி அறிக்கை

தி.மு.க. நடத்தும் டெசோ மாநாட்டுக் குழுவினருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோளாக விடுத்துள்ள அறிக்கை: டெசோ நடத்தும் மாநாடு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. மத்தியில் ஆளுங்கட்சியின் ஒரு அங்கமாக உள்ள தி.மு.க. முன் முயற்சி எடுத்து நடத்தும் இந்த மாநாடு குறித்து – ஈழத்தில் வாழும் தமிழர்களும் – புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் கவலையுடனும், எதிர்பார்ப்புடனும் இந்த மாநாட்டு முடிவு களுக்குக் காத்திருக்கிறார்கள். தமிழ் ஈழ ஆதரவு அமைப்பு நடத்தும் மாநாட்டில்தமிழ் ஈழம் குறித்து தீர்மானங்கள் எதுவும் வராது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்ட கருத்து – தமிழர்களுக்கு முதல் அதிர்ச்சியாகிவிட்டது. தமிழ் ஈழம் குறித்த தீர்மானம் வரவில்லை என்றாலும், குறைந்தது கீழ்க்கண்ட முடிவுகளையாவது வலியுறுத்த வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு. ஈழத் தமிழர்கள் – ஒரு தனித் தேசிய இனம் அவர்களுக்குத் தங்கள் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளும் சுயநிர்ணய உரிமை கோர...

தளி ராமச்சந்திரன் கும்பலிடம் பறிகொடுத்த நிலங்களை மீட்டெடுப்போம்

தளி ராமச்சந்திரன் கும்பலிடம் பறிகொடுத்த நிலங்களை மீட்டெடுப்போம்

தோழர் பழனி நினைவேந்தல் கூட்டத்தில் கொளத்தூர் மணி மக்களுக்கு அழைப்பு தளி ராமச்சந்திரன் மீது நாம் எடுக்கும் பழி தலைக்கு தலை எடுப்பது அல்ல; அந்த கும்பல் பறித்துள்ள நிலங்களை மக்களுக்கு மீட்டுத் தருவதுதான் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி குறிப்பிட்டார். கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி இராயக் கோட்டையில் பழனி நினைவேந்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றதை பார்த்த பின்பு, தளி பகுதியைச் சார்ந்த சிலர், “இதுவரை எம்.எல்.ஏ.வின் அக்கிரமங்களை யாரும் எதிர்த்து தைரியமாக பேசியதில்லை. இந்தக் கூட்டத்தை பார்த்தவுடன் எங்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது. இது போன்ற ஒரு கூட்டத்தை எங்கள் ஊரிலும் நடத்த வேண்டும் என்று கழகத் தோழர்களிடம் கேட்டுக் கொண்டனர்.” பெரியார் திராவிடர் கழகம் சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ‘தளி’யில் 5.8.2012 ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட கழக அமைப்பாளர் பழனி நினைவேந்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றது. விவசாயக்...

பார்ப்பன அடிமையாக ஆட்சி செய்த சோழ மன்னர்கள்

பார்ப்பன அடிமையாக ஆட்சி செய்த சோழ மன்னர்கள்

ராஜ ராஜ சோழனின் பெருமை பேசுவோருக்கு பதிலடி தந்து துரை. இளமுருகு எழுதிய நூல் ‘ராஜ ராஜ சோழனின் மறுபக்கம்’. ராஜராஜன் பார்ப்பன மேலாண்மையை உயர்த்திப் பிடித்ததை ஆதாரங் களுடன் விளக்குகிறது. நூலிலிருந்து… தமிழ் மன்னர்கள் ஆகிய சோழர்கள் ஆரிய பார்ப்பனர்களுக்குச் சிறப்பிடம் அளித்து அவர்களின் அடிமைகளைப் போல் ஆட்சி செய்து இருக்கின்றனர். இராசராச சோழன் உள்பட அனைத்து மன்னர்களின் கதையும் இதுதான். பார்ப்பன அடிமைத்தனத்தின் உச்சத்தைத் தொட் டவன் இராசராச சோழன். அதைத் தெளிவாகச் சான்றுகளுடன் விளக்கும் பகுதி பார்ப்பனர் களுக்கும் மன்னர்களுக்கும் இடையே ஒரு தவிர்க்க முடியாத உறவு, பிரிக்க முடியாத உறவு இருந்து வந்தது. இது எல்லா நாடுகளிலும் காணப்பட்ட மதம் – அரசு / அரசர்கள் உறவைவிட நெருக்க மானது. பிறப்பின் அடிப்படையில் அமைந்தது. பார்ப்பனர்களின் நால் வகுப்பு முறை பிறப்பின் அடிப்படையில் தொழில்களை அமைக்கும் விதமாக அமைந்திருந்தது. ஒருவன் எந்த குலத்தில் பிறந்தானோ அந்தக்...

மாற்றம்,  நமக்குள் தேவை தோழர்களே!

மாற்றம், நமக்குள் தேவை தோழர்களே!

மனிதனுக்கு வெட்கமும் ரோஷமும் ஏற்படு வதற்காகவே சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டது. சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக் காரியம் ஒரு சமூகப் புரட்சியில் ஏற்பட வேண்டியதே யொழிய சிரிப்பு, விளையாட்டில் ஏற்படக் கூடியதில்லை. இதற்காக அநேக தொல்லைகளை அனுபவிக்க வேண்டி வரும். அநேக காரியங்கள் மற்றவர்களால் நாம் துன்பமும் இழிவும் அடையாமல் நம்மாலேயே நாம் இழிவுக்கும், கீழ் நிலைமைக்கும் ஆளாகி வருகின் றோம். நம்மை நாம் திருத்திக் கொள்ளாமல், நமக்குள் ஒரு பெரிய மன மாறுதல் ஏற்படாமல் நமது சமூகம் மாறுதலடைதல் என்பது ஒரு நாளும் முடியாத காரியமாகும். சமூகத்தில் மேல் சாதி, கீழ் சாதி, அடிமை சாதி என்பவர்கள் இருப்பதோடு ஆண், பெண் தன்மை களில் உயர்வும் தாழ்வும் இருந்து வருகின்றது. இவை தவிர ஏழை – பணக்காரன், முதலாளி – தொழிலாளி தன்மைகளும் இருந்து வருகின்றன. இவற்றுள் சில இயற்கையாக ஏற்பட்டவை யாகவும், இவ்வளவுக்குக்...

இளைஞர்களே!

இளைஞர்களே!

வாலிபர்கள் தீவிரப் பிரச்சாரம் செய்ய வேண்டும். தற்சமயம் சிலருக்கு ஒவ்வொரு மயிர்க்காலிலும் சமயப்பித்து இருக்கிறது. சாதி மத வேற்றுமைகளை ஒழிக்க வேண்டுவது அத்தியாவசியம். எல்லாவற்றிற்கும் நம்பிக்கையோடு உழைக்க வேண்டும். ஒழுக்கம், அறிவு, ஆசை எல்லோருக்கும் உண்டென்பது உண்மை. இவைகளினால் இந்தியாவிலுள்ள 33 கோடி ஜனங்களுள் 16.5 கோடி பெண்களும் அடிமையாய் இருந்து, சந்தைக்குப் போய் மாடு வாங்குவது போல் நடத்தப்படுவது ஒழிய வேண்டும். அவர்கள் முதலில் தங்கள் வாழ்க்கையை ஊன்றிப் பார்த்துப் பிறகு உலகத்தைப் பார்க்க வேண்டும். சுயமரியாதை இயக்கம் வாலிபர்கள் கையிலிருக்கிறது. பெண்களும் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு சுயமரியாதை உணர்ச்சியை உணர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். பெரியார், (திராவிடன் – 21.02.1929) பெரியார் முழக்கம் 09082012 இதழ்

ஈரோடு அழைக்கிறது! கழகத் தோழர்கள் கவனத்துக்கு…

ஈரோடு அழைக்கிறது! கழகத் தோழர்கள் கவனத்துக்கு…

12.8.2012 அன்று ஈரோட்டில் கழகத் தோழர்களின் கலந்துரையாடல் சந்திப்பு நடக்கும் இடம்: செல்லாயி அம்மாள் திருமண மண்டபம், (ஈரோடு பேருந்து நிலையம் அருகில்) நேரம் : காலை 10 மணி   பாழ்பட்டு, சீர்க்கெட்டு ஆமைகளாய் ஊமைகளாய்க் கிடந்த தமிழினத்துக்கு ‘மானமும் அறிவும்’ பெற்றுத் தர சூளுரை மேற்கொண்டு, தன்மானத்தை இனமானத்துக்காக ஈகை செய்த அறிவு ஆசான் நமது தலைவர் பெரியார் பிறந்த ஈரோட்டில், நாம் சந்திக்கிறோம். சுயமரியாதை இயக்க வரலாற்றில் ஈரோட்டுக்கு தனிச் சிறப்புகள் உண்டு. 1917 ஆம் ஆண்டில் தனது 38 ஆம் அகவையில் பெரியார் நகர் மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது ஈரோட்டில்தான்! 1921 இல் காந்தியார் கட்டளையை ஏற்று 144 தடை உத்தரவை மீறி பெரியார் கள்ளுக்கடை மறியலை தலைமையேற்று நடத்தியதும் இதே ஈரோடுதான்! பெரியாரின் துணைவியார் நாகம்மையார், தங்கை கண்ணம்மாளும் மறியலில் கைதானார்கள். மறியல் தீவிரமாகி, 10000 பேர் கைது செய்யப்பட வேண்டிய நிலையில் பதறிப்...

கழக வளர்ச்சி நிதி-தோழர்கள் பேரார்வம்

கழக வளர்ச்சி நிதி-தோழர்கள் பேரார்வம்

மாவட்ட கழகங்கள் சார்பில் கழக வளர்ச்சி நிதிகழகத் தலைவரிடம் தோழர்கள் அளித்தனர். வழங்கவிருக்கும் தொகையை அறிவித்து முதல் கட்டமாக நிதியும் வழங்கினர். அறிவித்த தொகையும் முதல்கட்டமாக வழங்கிய தொகையும் (அடைப்புக் குறியில்). சேலம் மேற்கு          –              ரூ.3,00,000 (5,00,000) ஈரோடு            –              ரூ.1,00,000 (5,00,000) சென்னை      –              ரூ.1,00,000 (3,00,000) புதுவை           –              ரூ.70,000 (1,00,000) சேலம் கிழக்கு          –              (ரூ.1,00,000) கோவை         –              (ரூ.25,000) இரா. வீரமணி (சேலம்)     –              ரூ.25,000 ஆசைத்தம்பி (கள்ளக்குறிச்சி)   –              ரூ.10,000 ஆசிரியர் செங்கோட்டையன்     –              ரூ.2000 (10,000) மதுரை வாசுகி          –              ரூ.1,000 (10,000) வடலூர் கலியமூர்த்தி      –              ரூ.1,000 (10,000) தமிழர் முன்னணி (கரூர்)               –              ரூ.1,000   பெரியார் முழக்கம் 16082012 இதழ்

‘விடியல்’ சிவா முடிவெய்தினார்

‘விடியல்’ சிவா முடிவெய்தினார்

விடியல் பதிப்பக உரிமையாளரும் ஏராளமான முற்போக்கு சிந்தனை கொண்ட நூல்களை வெளியிட்டு வந்தவருமான தோழர் விடியல் சிவா, 30.7.2012 அன்று கோவையில் முடிவெய்தினார். அவருக்கு வயது 57. பெரியார் இயக்கத்துக்கு மிகப் பெரும் பங்களிப்பான எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா எழுதிய பெரியார் சுயமரியாதை சமதர்மம், பெரியார் ஆகஸ்ட் 15 நூல்களையும் இவரே வெளியிட்டார். குடிஅரசு தொகுப்புப் பணியில் தீவிர ஆர்வமும் ஒத்துழைப்பும் வழங்கியவர் சிவா. ‘குடிஅரசு’ மெய்ப்புத் திருத்தப் பணிக்கு தனது விடியல் அலுவலகத்தையே தந்து உதவியதோடு, பணியில் ஈடுபட்ட கொளத்தூர் மணி உள்ளிட்ட தோழர் களுக்கு, தமது இல்லத்திலிருந்து உணவு தயாரித் தும் வழங்கினார். விடுதலை இராசேந்திரன் எழுதிய ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்; பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகள் நூல்களை யும் விடியல் சிவாதான் மறுபதிப்பாக வெளி யிட்டார். விடியல் சிவாவின் வெளியீடுகள் அவரது தொண்டின் பெருமையை என்றென்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும். தோழருக்கு, வீர வணக்கம்! பெரியார் முழக்கம் 16082012...

ஆகஸ்டு 17 முதல் மாவட்டக் கழகக் கூட்டங்கள்

ஆகஸ்டு 17 முதல் மாவட்டக் கழகக் கூட்டங்கள்

ஈரோடு கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்டந் தோறும் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள் கீழ்க்கண்டவாறு திட்டமிடப்பட்டுள்ளன. கழகத் தலைவர், பொதுச்செயலாளர் பங்கேற்பர். மாநில கழகப் பொறுப்பாளர்கள் வாய்ப்புள்ள மாவட்டங் களில் பங்கேற்பார்கள். 17.08.12 வெள்ளி மாலை 5.00 நெல்லை (தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி) 18.08.12 சனி காலை 10.00 திண்டுக்கல் (விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை) 18.08.12 சனி மாலை 5.00 திருச்சி, (திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, திருச்சி) 22.08.12 புதன் மாலை 5.00 தலைமை நிலையம், (வட சென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், வேலூர்) 23.08.12 வியாழன் மாலை 5.00 புதுச்சேரி 24.08.12 வெள்ளி மாலை 5.00 விழுப்புரம் 29.08.12 புதன் மாலை 5.00 திருப்பூர் 30.08.12 வியாழன் மாலை 5.00 ஈரோடு, கரூர் 04.09.12 செவ்வாய் மாலை 5.00 கோவை (கோவை மாநகரம், கோவை வடக்கு, கோவை தெற்கு) 05.09.12 புதன் காலை 10.00 மேட்டூர் (சேலம் மேற்கு) 05.09.12 புதன்...

திராவிடர் விடுதலைக் கழகம்: தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள்

திராவிடர் விடுதலைக் கழகம்: தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள்

கழகத்தலைவர் கொளத்தூர்  மணி கலந்துரையாடலில் அறிவித்த கழகப் பொறுப்பாளர்கள் பெயர் விவரம்: தலைவர் : கொளத்தூர் தா.செ.மணி பொதுச்செயலாளர் : விடுதலை க. இராசேந்திரன் புதுச்சேரி மாநிலத் தலைவர்: லோகு.அய்யப்பன் மாநிலப் பொருளாளர் : ஈரோடு ப.இரத்தினசாமி மாநில பரப்புரைச் செயலாளர்: தூத்துக்குடி பால்.பிரபாகரன் மாநில அமைப்புச் செயலாளர்: தி.தாமரைக்கண்ணன் தலைமை நிலையச் செயலாளர்: தபசி குமரன் மாநில வெளியீட்டுச் செயலாளர் : சூலூர் நா. தமிழ்ச் செல்வி மாநில இணைய தளச் செயலாளர் : அன்பு. தனசேகரன் பெரியார் தொழிலாளர் கழக அமைப்பாளர்கள்: கோபி. இராம. இளங்கோவன், பெ.திருமூர்த்தி தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர்கள்: கோவை இர. சிலம்பரசன், ஜெயங்கொண்டாம் சிவக்குமார், சென்னை ஜா. ஜெயந்தி தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர்கள் : திருப்பூர் ஆசிரியர் வீ.சிவகாமி, புதுவை பேராசிரியர் சே. இராமக் கிருட்டிணன், ஈரோடு ஆசிரியர் ப. சிவக்குமார். சென்னை மண்டல அமைப்புச் செயலாளர்: அன்பு.தன சேகரன், (வடசென்னை,...

டிசம்பர் 24, 25-ஈரோட்டில் மாநில மாநாடு

டிசம்பர் 24, 25-ஈரோட்டில் மாநில மாநாடு

டிசம்பர் 24, 25 தேதிகளில் ஈரோட்டில் இரண்டு நாள் மாநில மாநாடு மற்றும் “மனுசாஸ்த்திர எரிப்பு போராட்ட விளக்க மாநாடு” நடத்துவது என ஈரோடு கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 1929 இல் செங்கல்பட்டில் பெரியார் கூட்டிய சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டில் – புரட்சிகர தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நாளான பிப்ரவரி 28 இல் தமிழ்நாடு முழுவதும் – சமுதாயத்தை பிறப்பின் அடிப்படையில் கூறுபடுத்தும் – மனுசாஸ்திரத்தைத் தடைசெய்யக் கோரி – மனு சாஸ்திர எரிப்புப் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டது. செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் தோழர்களுக்குக் கொள்கைப் பயிற்சி வகுப்புகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் 16082012 இதழ்

நிகழ்ச்சிக்கு உழைத்த தோழர்கள்

நிகழ்ச்சிக்கு உழைத்த தோழர்கள்

இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாட்டுப் பணி களை, ஈரோடு இரத்தினசாமி தலைமையில், மாவட்ட தலைவர் நாத்திகஜோதி, மாவட்டச் செயலாளர் இராம. இளங்கோவன் ஆகியரோடு இணைந்து தோழர்கள் சிவக்குமார், சிவா, சுப்ரமணி, குமார், வெங்கட், மோகன், திரு முருகன், பூபதிராஜ், இரமேஷ், அழகன், சண்முக சுந்தரம், இரமேஷ் குமார், சண்முகப் பிரியன், செல்வராசு, செல்லப்பன், இளம் பிள்ளை சந்திரசேகர் ஆகியோர் சிறப்பாகச் செய்தனர். பெரியார் முழக்கம் 16082012 இதழ்

கொள்கை உறவுகளின் நெகிழ்ச்சி சந்திப்பு!

கொள்கை உறவுகளின் நெகிழ்ச்சி சந்திப்பு!

ஈரோட்டில் நடந்த கலந்துரையாடல் சந்திப்பு நிகழ்வுகளிலிருந்து ஒரு தொகுப்பு: விடியற்காலை 5 மணியிலிருந்தே தோழர்கள் வருகைத் தொடங்கவே ஈரோடு செல்லாயம்மாள் திருமண மண்டபம் களை கட்டத் தொடங்கி விட்டது. காலை 9 மணி முதல் பேருந்திலும், சிற்றூர் களிலும் வரிசை வரிசையாக வரத் தொடங்கினர். கழகத் தோழர்கள், தோழியர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினர். காலையில் தனிப் பேருந்துகளில் வந்த தோழர்கள், வழியில் பவானி கூடுதுறை ஆற்று நீரில் நீராடி வந்து சேர்ந்தனர். தன் முனைப்புகளை புறந்தள்ளி, தன்மானக் கிளர்ச்சிக்கு அணியமாகும், தோழர்களே! வாரீர்! வாரீர்! என்று ஈரோடு மாவட்டக் கழகத்தின் சார்பில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. மேடையின் பின்புறத்தில், “இலக்கு நோக்கிய இலட்சியப் பயணத்தில், இணைய வரும் தோழர் களின் சந்திப்பு” என்ற பதாகை, அமைக்கப்பட் டிருந்தது. 11 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் – தோழர்களுடன் வாகனங்களில் சென்று பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள பெரியார்...

இது ஒரு முன்னோக்கிய வளர்ச்சியே!

இது ஒரு முன்னோக்கிய வளர்ச்சியே!

கழகத்துக்கு பெயர் சூட்டியதைத் தொடர்ந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி கழகத் தோழர்கள் முன் வைத்த விளக்க அறிக்கை. 2001 ஆம் ஆண்டு “பெரியார் காலத் தமிழகத்தை உருவாக்குவோம்” என்ற முழக்கத்தோடு நாம் பயணத்தைத் தொடங்கினோம். தோழர்களின் உழைப்பாலும், தொண்டினாலும் கட்டி எழுப்பிய நம் இயக்கத்தின் செயல்பாடுகள், இயக்கத்திற்கு வெளியே கொள்கை ஆதரவாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. வெற்று மேடைப் பேச்சுக் களன்றி, நாம் மேற்கொண்ட செயல்பாடுகளாலேயே நம் கழகத்தின்மீது அனைவரின் கவனமும் ஈர்க்கப் பட்டது என்பதே உண்மை. பெரியார் நமக்கு விட்டுச் சென்ற சமுதாய இழிவு ஒழிப்பு, ஜாதி – தீண்டாமை ஒழிப்புக்கான செயல்பாடுகளை முன்னெடுக்கும் முயற்சிகளில் கழகத்துக்கு உள்ளேயே நாம் கசப்பான அனுபவங்களை சந்திக்க வேண்டியிருந்ததை இங்கே திரண்டிருக்கும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார் நடத்திய சுயமரியாதை இயக்கமானா லும், திராவிடர் கழகமானாலும், அந்த இயக்கங்கள் கொள்கை சார்ந்தவைகளாகவும், கொள்கையை மக்களிடம் கொண்டு போவதற்கே என்ற பார்வை யுடனும் அதற்கேற்ற...

‘திராவிடர் விடுதலைக் கழகம்’கழகத்தின் புதிய பெயர்

‘திராவிடர் விடுதலைக் கழகம்’கழகத்தின் புதிய பெயர்

‘திராவிடர் விடுதலைக் கழகம்’ என்ற பெயருடன் இலக்கு நோக்கிய இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்திட கழகத் தோழர்கள் ஈரோட்டில் நடந்த சந்திப்பில் முடிவெடுத்தனர். பெரியார் திராவிடர் கழகத்தின் 82 தலைமைச் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மை யினர் 51 பேர் ஈரோட்டுக்கு வந்த நிலையிலும் ‘நீக்கல் – விலக்கல்’ ஏதுமின்றி நாமாகவே தனி அமைப்பை உருவாக்கிடும் அறிவிப்பை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டார். 12.08.2012 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு, ஈரோடு செல்லாயம்மாள் திருமண மண்டபத்தில், ‘இலக்கு நோக்கிய இலட்சியப் பாதையில் இணையும் தோழர்கள் சந்திப்பு”, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச் செயலாளர் விடுதலை க. இராசேந்திரன் முன்னிலை யிலும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முன்னதாக, கழகத் தலைவர் தலைமையில் தோழர்கள் திரளாகச் சென்று, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவிலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் 82 தலைமைச் செயற்குழு உறுப்பினர்களில் 51 உறுப்பினர்கள்...

‘தலித்’ தலைவர் ‘சுதந்திர’ கொடி ஏற்ற எதிர்ப்பு: கழகத்தினர் முறியடிப்பு

‘தலித்’ தலைவர் ‘சுதந்திர’ கொடி ஏற்ற எதிர்ப்பு: கழகத்தினர் முறியடிப்பு

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திற்குற்பட்ட நெடுமானூரி லுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்தப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் வரும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின்போதும் அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் கொடியேற்றி வைப்பார். ஆனால், இந்த ஆண்டு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அது தனி ஊராட்சி என்பதால் தாழ்த்தப்பட்டவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே சுதந்திர நாளன்று இந்து ஆதிக்கசாதியினர் ஒன்று கூடி தற்பொழுது தாழ்த்தப்பட்டவர் தலைவர் என்பதால் தலைமை ஆசிரியரே கொடியேற்றட்டும் என்று கூறினர். இந்த செய்தியறிந்த நெடுமானூரைச் சார்ந்த கழகத் தோழர் இளையராஜா தலைமையில் ஒன்று திரண்டு சுதந்திரக் கொடியை தலைமை ஆசிரியர் ஏற்றுவதில் எங்களுக்கு கவலையில்லை. ஆனால், இத்தனை ஆண்டுகள் உயர்சாதி தலைவர் என்பதால் அவரே கொடியேற்றி வந்தார். ஆனால் இந்த முறை தாழ்த்தப்பட்டவர் தலைவர் என்பதால் இந்த முறையை மாற்றுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்ச்சிகள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்ச்சிகள்

13.8.2012 திங்கட்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில், சட்ட ஒழுங்கை சீர்படுத்தக் கோரியும், மனித உரிமை ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் சமூகநல ஆர்வலர் ராஜ்மோகன் படுகொலை, ஓசூரில் பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி படுகொலை, தேசிய மனித உரிமைகள் இயக்க மாநில செயலாளர் சங்கமித்ரனுக்கு வீச்சரிவாள் வெட்டு ஆகிய பிரச்சனைகளை சுட்டிக் காட்டி நடைபெற்ற இந்த கணடனப் பொதுக் கூட்டம், தேசிய நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக, அதன் மாநில இணைச் செயலாளர் பா.ரவி தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்தில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தி.மு.க. தலைமை கழகப் பேச்சாளர் மூ.விஜய ரத்தினம், வழக்கறிஞர் சங்கமித்ரன் மற்றும் பல மனித உரிமை ஆர்வலர்கள் கணடன உரையாற்றினர். 15.8.2012 புதன்கிழமை அன்று மாலை 4 மணிக்கு,...