Category: தலையங்கம்

தலையங்கம் – பாராட்டுகிறோம்; ஆனால்… 0

தலையங்கம் – பாராட்டுகிறோம்; ஆனால்…

இது உண்மைதானா என்று வியக்க வைக்கும், ஒரு செய்தி வந்திருக்கிறது. தமிழக காவல்துறையும் கல்வித் துறையும் இணைந்து, ஜாதி, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக, தமிழகம் முழுதும் வீதி நாடகங்கள் உள்ளிட்ட கலை வடிவங்களில் பரப்புரை நடத்துகிறது என்பதுதான் அந்த செய்தி. தமிழகக் காவல்துறைக்கு இப்படி ஓர் அரிய ஆலோசனை எங்கிருந்து வந்தது என்று நமக்குத் தெரியவில்லை. இப்படி ஒரு திட்டத்தை காவல்துறையும் கல்வித் துறையும் உருவாக்கி, களமிறங்கியதற்காக நாம் மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். காரணம், இந்த அடிப்படையான பிரச்சினையை தனது தோளில் சுமந்து, பல ஆண்டுகளாகவே களத்தில் நிற்கும் அமைப்பு திராவிடர் விடுதலைக் கழகம். பெரியார் திராவிடர் கழகமாக இருந்தபோதே இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. தேனீர்க் கடைகளில் இரட்டைக் குவளை, முடிவெட்ட மறுத்தல், செருப்பு அணிய, சைக்கிள் ஓட்ட, அலைபேசி பேச தடை என்று பல்வேறு வடிவங்களில் தீண்டாமைகள் தொடருகின்றன. இவற்றின் விவரங்களைத் தொகுத்தும் இரட்டைக் குவளை முறைகளை பின்பற்றும்...

தலையங்கம் – நகரமயமாகும் தமிழ்நாடு! 0

தலையங்கம் – நகரமயமாகும் தமிழ்நாடு!

இந்தியாவின் “சமூகப் பொருளாதார – ஜாதி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு” விவரங்கள் வெளியிடப்பட் டுள்ளன. இன்னும் ஜாதி கணக்கெடுப்புப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதன்படி கிராமங்களில் வாழும் மக்களில் 30 சதவீதம் பேர் நிலமற்றவர்களாக வாழ்க்கையைக் கடப்பதற்கு கூலி வேலை செய்யும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் 23.5 சதவீதம் பேர். கிராமங்களில் உயர்நிலைப் பள்ளியை நிறைவு செய்தவர்கள் 5.4 சதவீதம். 3.4 சதவீதம் மட்டுமே கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள். கிராமப்புறங்களில் 90 சதவீதக் குடும்பங்களில் ஊதியம் பெறும் ஊழியர்கள் எவரும் கிடையாது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ‘கல்வி’க்காக தனிக் கடவுளைக் கொண்டுள்ள நாடு இது. ‘பாரதப் பூமி’, ‘புண்ணிய பூமி’, ‘மகான்கள் அவதரித்த’, ‘வேதம் செழித்த’, ‘அவதாரங்கள்’ எடுத்த பூமி என்று பெருமை பேசப்படும் நாட்டின் நிலை இதுதான். மக்களை வறுமையில் மூழ்கச் செய்துவிட்டு, ‘இந்து’ தேசத்தை உருவாக்கிட துடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் என்ன...

தலையங்கம் – தீண்டாமையைத் திணிக்கும் ‘திருவிழா’ கலவரங்கள் 0

தலையங்கம் – தீண்டாமையைத் திணிக்கும் ‘திருவிழா’ கலவரங்கள்

  தலித் மக்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் ஜாதிவெறித் தாக்குதல் அதிகரித்து வருவது தமிழ்நாட்டுக்கே அவமானம்! ஆடி மாதம் வந்துவிட்டால் போதும்; கிராமத் திருவிழாக்களில் ஜாதி வெறியாட்டம் போடத் தொடங்கிவிடுகிறது. சங்கராபுரம் வட்டத்தில் சேஷ சமுத்திரம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்தும் அம்மன் தேர் ஊர்வலம், ஊர் பொதுச் சாலையில் வரக்கூடாது என்று ஜாதிவெறியோடு தேர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி, தலித் மக்கள் குடியிருப்புகளையும் எரித்ததோடு, பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினரையும் தாக்கியுள்ளனர். இந்தியாவின் ‘சுதந்திர’ நாளை தேசியக்கொடி ஏற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிற நேரத்தில் சமூகத்தின் ஒரு பிரிவு மக்களை நாட்டின் ‘குடிமக்களாகவே’ ஏற்க முடியாது என்று ஜாதி வெறியர்கள் ஆணவத்தோடு கொக்கலிக்கிறார்கள். இதில் மிகப் பெரிய கொடுமை, பா.ம.க. நிறுவனர், மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கைதான். தாழ்த்தப்பட்ட மக்களின் அம்மன்  தேர், பொது வீதியில் வரக் கூடாது என்று தடுக்கும் ‘தீண்டாமை-ஜாதி’ வெறியையோ, தேர் மீது பெட்ரோல் குண்டு வீசி எரித்ததையோ,...

தலையங்கம் – பார்ப்பனியத்தின் சதி வலை 0

தலையங்கம் – பார்ப்பனியத்தின் சதி வலை

‘இந்து’க்களை ஒரே அணியாக தமிழகத்தில் திரட்ட முடியாத நிலையில் வெவ்வேறு ஜாதிக் குழுக்களை தங்கள் கட்சிக்குள் கொண்டுவந்து சேர்க்கும் முயற்சிகளில் பா.ஜ.க. இறங்கியிருக்கிறது. இந்து மத அடையாளங்களுக்குள் முடங்கிவிடாமல் தமிழகத்தில் பல்வேறு படி நிலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஜாதிக் குழுக்கள் அந்த அடையாளத்தை முன்னிறுத்தி, தங்கள் உரிமைப் போரை முன்னெடுத்தன. இதுவே பெரியார் வலியுறுத்திய ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்ற கோட்பாடு. பார்ப்பன மேலாண்மைக்கும் ஆதிக்கத்துக்கும் அரணாக நின்ற ‘இந்து ஓர்மை’க்கு வேட்டு வைத்தது, இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம், பெரியார் போராட்டத்தால் அரசியல் சட்டத்தில் நிகழ்ந்த முதல் திருத்தத்தின் வழியாக ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ சமூக கல்வி அடிப்படையிலான இடஒதுக்கீடாக மாறி அது தமிழ்நாட்டில் ஆட்சிகளைக் கடந்து தீவிரமாக செயலாக்கம் பெற்றது. உரிமை மறுக்கப்பட்ட ஜாதிக் குழுக்கள் முன்னேறத் தொடங்கின. உண்மையில் ‘தலைவிதி’, ஜாதி தர்மம்’ என்ற பார்ப்பனக் கோட்பாடுகளை உடைத்து நொறுக்கிக் கொண்டு உருவானதே இந்த முன்னேற்றம்! இந்த நிலையில், இந்த ஜாதிக் குழுக்களை மீண்டும்...

தலையங்கம் – போராட்டக் களமாகும் தமிழகம் 0

தலையங்கம் – போராட்டக் களமாகும் தமிழகம்

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும் என்ற போராட்டம், அரசியல் கட்சிகளையும் தாண்டி மக்கள் போராட்டமாக உருவெடுத்து வருகிறது. சசிபெருமாள் என்ற காந்தியவாதி, கைபேசி கோபுரத்தின் மீது ஏறி நின்று நடத்திய போராட்டத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டத்தின் வேகம் அதிகரித்திருக்கிறது. மதுவிலக்கு குறித்து ஜூலை 19இல் தர்மபுரியில் கூடிய திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை நிறைவேற்றிய தீர்மானத்தின் ஒரு பகுதியை சுட்டிக்காட்ட விழைகிறோம். தமிழ்நாட்டில் ஒரு காலத்தில், ‘மதுக்குடி’ தனிப்பட்ட சிலரின் பழக்கமாக இருந்த நிலை மாறி, இன்று சமூகத்தையே சீர்குலைத்து வருகிறது. மாணவர்களையும் இளைஞர்களையும் போதை அடிமைகளாகவும் குடிநோயாளிகளாகவும் மாற்றிவருவது ஆபத்தான அறிகுறியாகும். மதுக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், விற்பனைக்கு கூடுதலாக இலக்கை நிர்ணயிப்பதும் ஒரு மக்கள் நலன் பேணும் ஆட்சிக்கான செயல் திட்டமாக இருக்க முடியாது. அதே நேரத்தில் முழுமையாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதிலும் பல ஆபத்துகள் இருக்கவே செய்கின்றன. கள்ளச் சாராயம் வர்த்தகமாகி, காவல்துறை-கள்ளச் சாராய வியாபாரிகள் இரகசிய...

தலையங்கம்-மனிதனுக்கு கீழோ-மேலோ எந்த ஜாதியும் இல்லை! 0

தலையங்கம்-மனிதனுக்கு கீழோ-மேலோ எந்த ஜாதியும் இல்லை!

உரிமைக்காக ஜாதி மாநாடுகள் கூட்டுவதை ஆதரித்த பெரியார், ஜாதி பெருமைக்காகக் கூட்டப்படுவதை அழுத்தமாகக் கண்டித்திருக்கிறார். “இந்த நாடு பல சாதி, பல வகுப்பார் அடங்கியதாக இருக்கிறது. எப்போது நமது நாட்டில் சாதி வகுப்பு ஏற்பட்டு அதனுள் உயர்வு தாழ்வு அமைக்கப்பட்டுப் போய்விட்டதோ அன்று முதலே தனிச்சாதி மாநாடு கூட வேண்டியது அவசியமேற்பட்டுவிட்டது. ஒவ்வொரு சாதியாரும் தனித்தனியாக மாநாடுகள் நடத்திக்கொண்டிருந்தால் எப்போதுதான் ஒன்று சேருவது என்று பலபேர் குற்றஞ் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சிலர் இத்தகைய மாநாடுகளை வகுப்பு மாநாடுகள் என்று சொல்லி மாநாட்டிற்கு வரமுடியாதென்று மறுக்கவும் பார்த்திருக்கிறேன். இத்தகைய காரணங்களைக் கொண்டு வகுப்பு மாநாடு கூட்டுவோரைக் குறை கூற முடியாது. இத்தகைய மாநாடுகள் கூட்ட வேண்டியது மிகவும் அவசியமாகவே இருக்கிறது. ஒரு வகுப்பார் தாங்கள் தாழ்ந்த நிலைக்குள்ளாக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு வருவதை உணராதிருக்கும் வகையில் ஒருவித ஏற்பாடும் செய்யாமல் தான் இருப்பார்கள். அவர்களுக்குத் தாங்களும் மனிதர்கள், தாங்களும் மற்றோருக்குச் சமமானவர்களே, தங்களைத் தாழ்ந்தவர்களெனக் கூறுவது...

தலையங்கம்-‘புண்ணிய’ முழுக்குகளில் பலியாகும் அப்பாவி உயிர்கள் 0

தலையங்கம்-‘புண்ணிய’ முழுக்குகளில் பலியாகும் அப்பாவி உயிர்கள்

மதத்தை மக்களிடம் நிலைநிறுத்துவதற்கு மதவாதிகள் உருவாக்கிய சடங்குகள், அதன் மீது திணிக்கப்பட்ட நம்பிக்கைகள் மக்களின் சிந்தனைகளை முடக்கிப் போட்டு விட்டன. இந்த நம்பிக்கைகள்தான் மக்களை விழாக்களில் இலட்சக்கணக்கில் கூடுவதற்கு தூண்டுகின்றன. பெரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் திறன் மிக்க நிர்வாகக் கட்டமைப்புகள் இல்லாதபோது அப்பாவி பக்தர்கள் உயிர்ப்பலியாகி விடுகிறார்கள். காதைக் கிழிக்கும் அளவுக்கு மதங்களையும் அதன் மீதான அரசியலையும் நீட்டி முழங்கிக் கொண்டிருப்பவர்கள், மத உணர்வில் வீழ்ந்துபட்ட பக்தர்கள் இப்படி உயிர்ப்பலியாகும் போது வாயை இறுக மூடிக் கொண்டுவிடுகிறார்கள். மதத் திருவிழாக்களில் கூட்ட நெரிசலில் சிக்கி, அப்பாவி மக்கள் பலியாகும் அவலம் தொடர்கதையாகிவிட்டது.ஆந்திராவில் கோதாவரியாற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் ‘கோதாவரி புஷ்கரம்’ விழாவில் முழுக்குப் போட வந்த மக்களில் 29 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த துயர செய்தி அண்மையில் வெளி வந்திருக்கிறது. இந்த ‘புண்ணிய முழுக்குப்போடும் விழாவுக்கு கட்டுக்கடங்காத வகையில் கூட்டத்தைக் கூட்டச் செய்ததில் சாமியார்களுக்கு ஜோதிடர்களுக்கு...

தலையங்கம்-பெண்களும் நீதிமன்றங்களும்

தலையங்கம்-பெண்களும் நீதிமன்றங்களும்

பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுக்குள்ளான ஒரு நபரை சிறையிலிருந்து விடுவித்து, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சமரசம் செய்து கொண்டு வாழ்க்கையை தொடர்ந்திட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் பிறப்பித்த ஆணை பலரையும் வியப்படையச் செய்தது. இந்த ஆணை கடும் விமர்சனங்களை எதிர் கொண்டது. இதைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து வந்த ஒரு பாலியல் வன்முறை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு நேர் எதிராக இருந்தது. இத்தகைய வழக்குகளை சமரசத் தீர்வு மய்யங்களுக்கு அனுப்பக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டது உச்சநீதிமன்றம். இதனால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, தான் பிறப்பித்த ஆணையைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். பிணையில் விடுவிக்கப்பட்ட குற்றவாளி, மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டுவிட்டார். இதேபோன்று, உயர்நீதிமன்றத்தில் மற்றொரு நிகழ்வு கடும் எதிர்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. ஆம்பூரைச் சார்ந்த பவித்ரா என்ற பெண், காணாமல் போனார் என்பதால், ஆம்பூரில் இஸ்லாமியர்களுக்கும் காவல்துறைக்குமிடையே பெரும் கலவரமே நடந்து முடிந்துள்ளது. அந்தப் பெண்ணின் கணவர் தந்த...