Tagged: ஹைட்ரோ கார்பன்

நெடுவாசல் மீட்போம்! இரயில் மறியல் போராட்டம் மதுரை 08032017

நெடுவாசல்மீட்போம் ! நாளை மதுரையில் ரயில் மறியல் போராட்டம். நாள் : 08.03.2017 நேரம் : காலை 10:30 மணி. இடம்: ரயில் நிலையம்,மதுரை. “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கை விடக் கோரியும் காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும் தொடர்ந்து தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழர் விரோதி மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும் திராவிடர்விடுதலைக்கழகம் ஒருங்கிணைப்பில் பல்வேறு தோழமை அமைப்புகள் பங்கேற்கும் ரயில்மறியல் தொடர்புக்கு: மா.பா.மணிகண்டன், மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம், மதுரை மாவட்டம். 9600 40 8641  

நெடுவாசல் போராட்ட களத்தில் கழக தோழர்கள்

நெடுவாசல் போராட்ட களத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களோடு திருச்சி,பேராவூரணி கழக தோழர்கள். காணொளி இணைப்பு செய்தி மனோகரன் முத்துக்கண்ணன்

பேச்சுரிமையை மறுக்கும் தமிழக அரசு !

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இன்று 01032017 அன்று மன்னார்குடியில் ஹைட்ரோ கார்பன் காஸ் திட்டத்தை கைவிடக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், மேகதாது அணை கட்டுமானத்தை தடுக்க கோரியும் மத்திய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது இந்த நிலையில் திடீரென 27022017 நள்ளிரவு சுமார் ஒரு மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து மன்னார்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கடிதம் கொடுத்து உள்ளார் . நீதிமன்ற அனுமதிக்கு வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் விரோத அரசுகளின் முகமூடிகள் மக்கள் மன்றத்தில் தோலுரிக்கப்படும் . செய்தி மன்னை காளிதாசு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் 01032017

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் 01032017

மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் ! ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், மேகதாது அணை கட்டுமானத்தை தடுக்க கோரியும் திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மத்திய அரசி வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாள் : 01.03.2017 மாலை 6 மணிக்கு இடம் : மன்னார்குடி, பெரியார் சிலை அருகில். தலைமை : இரா .காளிதாசு மாவட்ட செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம் சிறப்புரை : தஞ்சை விடுதலைவேந்தன் தலைமை கழக பேச்சாளர் ம தி மு க