Tagged: வேத மரபு மறுப்பு மாநாடு
திராவிடர் விடுதலைக் கழகம் கடந்த 24.12.2016, பெரியார் நினைவு நாளன்று “திரு மூலர், வள்ளலார், பெரியார் வழியில் – வேத மரபு மறுப்பு மாநாட்டை” நடத்தியது. “வேத மரபை மறுப்போம்! வெகு மக்கள் உரிமைகளை மீட்போம்!” என்ற முழக்கத்துடன் கூட்டப்பட்ட அம்மாநாட்டில் தமிழ்ச் சூழலில் வேத மரபு மறுப்பு என்பது எத்தனை ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை விளக்கும் பல்வேறு தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நெறியாள்கை யில் காலையில் நடந்த கருத்தரங்கத்தில் “வள்ளலாரின் சன்மார்க்கத்தில் வேத மரபு மறுப்பு” என்ற தலைப்பில் பூங்குழலி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். வள்ளலார் கடவுள் மறுப்பாளர் அல்ல. ஆனால் கடவுள் மறுப்பாளரான பெரியாரே அங்கீகரித்து பதிப்பித்துப் பரப்பக் கூடிய அளவுக்கு வள்ளலாரின் ஆறாம் திருமுறையில் என்னதான் இருந்தது என்ற கேள்வி எழுந்தது. அதைப் புரிந்து கொள்வதற்கு முன் நாம் வள்ளலார் வாழ்ந்த காலத்தின் சமயச் சூழலைப்...
24-12-2016 அன்று சேலத்தில், சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில் ‘வேத மரபு மறுப்பு மாநாட்டில்’ கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்த ஒற்றை தீர்மானம் : வேதங்கள் – பகவத்கீதை – மனுஸ்மிருதி அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட வேத மரபு – பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழரின் திருக்குறள் மரபுக்கு எதிரானதாகும். வேதங்கள் உருவான காலத்திலிருந்து அதற்கு எதிர்ப்புகளும் தோன்றி விட்டன. பார்ப்பனீயம் இந்த எதிர்ப்புகளை சாதுரியமாக வீழ்த்தியிருப்பதை வரலாறுகள் உணர்த்துகின்றன. சார்வாகர் – சமணர் – புத்தர் – சித்தர்கள் – வடலூர் வள்ளலார் போன்று பலரும் போர்க் கொடி உயர்த்தி இருக்கிறார்கள். இறுதியாக வேதமதமாகிய பார்ப்பன மதம் பிரிட்டிஷ் ஆட்சியைப் பயன்படுத்தி ‘இந்து’ என்ற வலைக்குள் வெகு மக்களை நிர்பந்தமாக உள்ளிழுத்துக் கொண்டது. இதன் வழியாக சமூக அதிகாரங்களை தனது வசமாக்கிக் கொண்டு அதனூடாக தன்னை அரசியல் அதிகார...
திராவிடர் விடுதலைக் கழகம் இதுவரை நடத்திய மாநாடுகளி லிருந்து தனித்துவம் பெற்ற மாநாடாக வேதமரபு மறுப்பு மாநாடு இருந்தது. மாநாட்டு அரங்குகளில் வேத மரபை மறுத்த கபிலர், திருமூலர், வள்ளார் கருத்துகளும், நூற்றாண்டு காணும் எழுத்தாளர் விந்தன் எழுதிய ‘பெரியார் அறிவுச்சுவடி’யில் இடம் பெற்ற வாசகங்களும் பதாகைகளில் எழுதப்பட்டிருந்தன. இவர் களுடன் பெரியார், அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் கருத்துகளும் வைக்கப்பட்டிருந்தன. காலை அமர்வு நடந்த அரங்கிற்கு கபிலர், திருமூலர் அரங்கு என்றும், மாலை நடந்த திறந்தவெளி மாநாட்டு அரங்கிற்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார் அரங்கு என்றும் பெயர் சூட்டப்பட் டிருந்தது. இறை நம்பிக்கைக் கொண்ட வேத மரபுகளை எதிர்த்த பார்ப்பன எதிர்ப்பாளர்களின் பெயர்களும் படங்களும் கடவுள் மறுப்பு தத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெரியார் இயக்கத்தின் மாநாட்டு மேடைகளுக்கு சூட்டப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியாரின் கடவுள் மறுப்பு தத்துவத்தின் நோக்கம், ஒடுக்கப் பட்ட மக்கள் மீதான இழிவு ஒழிப்பு மற்றும் சமூக உரிமை...
வேத மரபுக்கு எதிராகப் போர்க்குரல்! இந்து மதத்துக்கு தாங்களே உரிமைக் குரியவர்கள் போல் வெகுமக்களை ஏமாற்றி வந்த பார்ப்பனிய மிரட்டலுக்கு பதிலடி தந்துள்ளது சேலம் மாநாடு. வேத மரபினை மறுப்போம், வெகு மக்கள் உரிமைகளை மீட்போம் என்கிற பார்ப்பன இந்துத்துவ எதிர்ப்பு இலட்சிய முழக்கத்தை முன் வைத்து சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில் வேத மரபு மறுப்பு மாநாடு டிசம்பர் 24, 2016 அன்று சேலம் போஸ் மைதானம் அருகில் உள்ள நேரு கலையரங்கத்தில் இசை நிகழ்ச்சி, கருத்தரங்கம், வீதிநாடகம், கழகத் தலைவருக்கு பிரச்சார ஊர்தி வழங்குதல், புரட்சி பெரியார் முழக்க சந்தா வழங்குதல் கழக கட்டமைப்பு நிதி மற்றும் பொது மாநாடு எழுச்சியுடன் நடைப்பெற்றது. முன்னதாக தந்தை பெரியாரின் 40ஆவது நினைவு நாளை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர்...
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வரும் 24.12.2016 சனிக்கிழமை காலை முதல் மாலை வரை வேத மரபு மறுப்பு மாநாடு சேலம், நேரு கலையரங்கம், போஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. கருத்தரங்கம்- பேரணி – கலை நிகழ்ச்சி – பொது மாநாடு என ஒரு நாள் முழுவதும் நடைபெற உள்ள மாநாட்டிற்கான பணியில் கழகத் தோழர்கள் இரவு,பகலாக பணி செய்து வருகிறார்கள். மாநாட்டு பணிக்கான நிதியை கழக ஆதரவாளர்களிடம் பொது மக்களிடம் அணுகி திரட்டியும் கழகத் தோழர்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தியும் பணியைத் தொடர்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் மத்திய பா.ஜ.க அரசின் திடீர் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மாநாட்டு பணிக்கான நிதி திரட்டும் பணி நெருக்கடியை சந்தித்துள்ளது. இம்மாநாட்டில் கழகம் வேத மரபிற்கெதிராக ஒரு புதிய அணிச்சேர்க்கையை முன்மொழிகிறது. இது பல்வேறு தரப்பினரின் வரவேற்பைப் பெற்றுள்ளது. வேத மரபிற்கெதிரான கடவுள் நம்பிக்கையுள்ளவர்களும் கூட பங்கேற்று தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து...
சேலம் மாநாட்டுச் சிந்தனை ட கீதையின் காலம் குறித்தும் – அது ஒருவரால் தான் இயற்றப்பட்டது என்பது குறித்தும் – குழப்பமான கருத்துகள் நிலவுகின்றன. ட “சாதியக் கட்டமைப்பின் இறுக்கம் நொறுங்கிக் கொண்டிருந்த கால கட்டத்தில் மீண்டும் சாதியக் கட்டுமானத்தை வலிமைப் படுத்தவே கீதை வந்தது என்கிறார், ஆய்வாளர் டி.பி.ஹில். ட பாரதப் போரில் அர்ச்சுணனுக்கு, தேரோட்டுபவனாக இருந்த கிருஷ்ணன், அர்ச்சுனனுக்கு கூறிய அறிவுரைதான் கீதை என்ற கருத்தை ஏற்க இயலாது. போர்க் களத்தில் போர்ச் சூழல் பற்றிய உரையாடல்கள் தான் நடந்திருக்க முடியுமே தவிர வேறு பல தத்துவங்கள் பற்றிப் பேச, போர்க் களம் உரிய இடமாக இருக்காது. எனவே கீதையின் உள்ளடக்கம், பிற்காலத்தில் விரிவுபடுத்தி எழுதப் பட்டது என்பது பல ஆய்வாளர் களின் கருத்து. ஆனால் பகவத்கீதை இறைவனால் ‘அருளப்பட்டது’ என்று பார்ப்பனர்கள் கூறு கிறார்கள். ட கீதை – ஒரு வரலாற்று நிகழ்வு என்பது சந்தேகத்துக்குரியது என்கிறார்...
சேலம் மாநாட்டுச் சிந்தனை ட பார்ப்பனியத்தின் உயிர்நாடி, வேத மதத்தின் அடிப்படைக் கருத்தியல்கள், உபநிடதங்களின் உள்ளுறை, தர்ம சாத்திரங்களின் தகிடுதத்தங்கள் ஆகிய அனைத்தும் கீதையில் உள்ளடங்கியிருப்பதை உணர்ந்து கொண்ட பார்ப்பனர்கள், எதிரிகளை சிதறடிப்பதற்கான ஆயுதமாக கீதையைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ட கீதை – புரட்சிகரமாக தோற்றம் காட்டக்கூடிய வெற்று முழக்கங்களை மிக சாமர்த்தியமாக முன்னிறுத்துகிறது. எனவே கீதைக்கு விளக்க உரை எழுதியவர்களும், இந்த முழக்கங்களை முன்னிறுத்துவதையே கலாச் சாரமாக்கிக் கொண்டார்கள். பிறகு இந்துத்துவமே முழக்கங்களில் உயிர் வாழும் ஒரு இயக்கமாகி விட்டது. ட “கதம்பக் குவியலான கீதைத் தத்துவம், புதிது புதிதான விளக்கங்களை நுழைப்பதற்கு இடமளிக்கும் வகையில்தான் அமைந்துள்ளது. ஆனால் சமூகத் தடைகளைக் கடந்து புதுவழியில் செல்வதற்கு அது வழிகாட்ட வில்லை” என் கிறார் வரலாற்று ஆய்வாளர் கோசாம்பி. ட கீதையின் முரண்பாடுகளைப் போலவே – இந்துக்களின் பண்பு நலனும் சொல் ஒன்று, செயலொன்றாகியது. உயர்ந்த தத்துவங்களைப் பேசும் அறிவு ஜீவி...
சேலம் வேத மரபு மறுப்பு மாநாட்டு சிந்தனை வேத மரபுகளை எதிர்த்தவர்களை பார்ப்பனர்கள் சூழ்ச்சிகரமாக வீழ்த்திய வரலாறு – கடந்த இரண்டு இதழ்களில் வெளி வந்தது. பவுத்தத்தை வேத மரபு வீழ்த்தியது எப்படி? ட பவுத்தத்தை முற்றிலுமாக ஒழித்து, மீண்டும் வேதத்தை அரியணையில் ஏற்றத் துடித்தார்கள் பார்ப்பனர்கள். இதற்கு – முதலில் கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களின் படைப்பு இலக்கி யங்களை எல்லாம் அழித்து ஒழிக்கும் வேலையைத் துவக்கினர். குறிப்பாக நாத்திகத்தை வலியுறுத்திய லோகாயதவாதிகளின் இலக்கி யங்களை முழுமையாக மீட்கவே முடியாதவாறு அழித்து ஒழித்து விட்டனர். இந்த லோகாயதர் களின் வேத-கடவுள் மறுப்பு சிந்தனைகளை எதிர்த்தும், இகழ்ந்தும் பார்ப்பனர்கள் எழுதிய நூல்களிலிருந்து தான் துண்டுதுண்டாக லோகாயத வாதம் பற்றிய கருத்துகள் காணக் கிடக்கின்றன. இதுபற்றி பிரபல ஆய்வாளர் பிரசாத் சட்போ பாத்யாயா இவ்வாறு கூறுகிறார்: “பிற சிந்தனை மரபுகளின் படைப்பிலக்கியங் களாவது ஓரளவுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் லோகாயதர்களின் உன்னதப் படைப் பிலக்கியங்களின்...
திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில்… ”வேத மரபு மறுப்பு மாநாடு” கருத்தரங்கம் – பேரணி – பொதுமாநாடு. நாள் : 24.12.2016 சனிக்கிழமை, இடம் : நேரு கலையரங்கம்,போஸ் மைதானம்,சேலம். ✪ கழகத்தலைவருக்கு ஊர்தி வழங்குதல், ✪ கட்டமைப்பு நிதி வழங்குதல், ✪ புரட்சிப்பெரியார் முழக்கம் சந்தா ஒப்படைத்தல். ✪ ”நிமிர்” – கழக மாத இதழ் வெளியீடு
வேத மரபை எதிர்த்த முன்னோடிகளில் ஒருவர் வைகுண்ட சாமிகள். கன்யாகுமரிக்கு அருகே பூவண்டன் தோப்பு எனும் கிராமத்தில் ஓர் ஏழை நாடார் குடும்பத்தில் 1809ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் ‘முடி சூடும் பெருமாள்’. ஆனால் அந்த காலத்தில் மன்னர்கள் அல்லது பார்ப்பன உயர்ஜாதியினர் வைத்துக் கொள்ளும் பெயர்களை ‘தாழ்ந்த’ ஜாதியினராக கருதப்பட்டவர்கள் வைத்துக் கொள்ளக் கூடாது. எனவே இப்பெயர் வைத்தமைக்காக பார்ப்பனர், உயர்ஜாதியினர் அரசு அதிகாரிகளிடம் புகார் செய்தனர். அவர்களும் பெயரை மாற்ற உத்தரவிட்டனர். வேறு வழியின்றி பெற்றோர்கள், பெயரை ‘முத்துக்குட்டி’ என்று மாற்றினர். 1833இலிருந்து பொது வாழ்வில் இறங்கினார். தொடக்கத்தில் விஷ்ணு பக்தராக இருந்த இவர், தனது பெயரை ‘வைகுண்டர்’ என மாற்றிக் கொண்டார். குமரிப் பகுதி அப்போது திருவாங்கூர் சமஸ்தானத்தின் நிர்வாகத்தில் இருந்தது. ஜாதி வெறியோடு ஆட்சி நடத்திய அரசர்கள், ஒடுக்கப்பட்ட ஜாதியினரை அடிமைகளாக நடத்தினர். அநியாயமாக வரி போட்டனர். மன்னனை எதிர்த்து துணிவோடு...
வேதங்களை பார்ப்பனர்கள் தங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அதை அச்சில் ஏற்றவில்லை. எனவே அதற்கு ‘கேளாக் கிளவி’ என்ற பெயரும் உண்டு. தங்கள் மூளைக்குள்ளே பரம்பரையாக வேதங்களை மனப்பாடம் செய்து வந்தவர்கள் கடவுள்களோடு பேசும் உரிமை தங்களுக்கும் தங்கள் வேதத்துக்கும் மட்டுமே உண்டு என்று சமூகத்தை நம்ப வைத்தார்கள். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தோன்றிய இந்த பார்ப்பன மேலாதிக்க சூழ்ச்சி இன்று வரை தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது? அர்ச்சர்கர் ஆகும் உரிமை; யாகம் நடத்தும் உரிமை; கும்பாபிஷேகம் செய்யும் உரிமை; மதச் சடங்கு, பரிகாரங்கள் செய்யும் உரிமை; ஆளுநர் குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர், உயர் அதிகாரிகளுக்கு எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கும் உரிமை அத்தனையும் இப்போதும் யாரிடம்? பார்ப்பன புரோகிதர்களிடம் தானே! இப்படி வேதத்தை கடவுளை அரசியல் தலைவர் களை வழி நடத்துதலை தங்கள் வசமாக்கிக் கொண்டவர்கள் ஒரு காலத்தில் படிப்பையும் இதேபோல்...
பூமியில் இருந்த கடவுள் களை விண்ணுலக கடவுள் களாக மாற்றிய பார்ப்பனர்கள், அந்த கடவுள்களிடம் நேரடி தொடர்புக்கு ‘மந்திர சக்தி’, ‘யாகம்’, ‘சடங்கு’களை சமூகத் தில் திணித்த வரலாற்றை கடந்த இதழில் எழுதியிருந்தோம். பார்ப்பனர்களின் சடங்குகளும் யாகங்களும் எல்லை மீறிய போது மக்கள் வெறுக்கும் நிலை உருவானது. அப்போது இந்த புரோகித சடங்குகளுக்கு எதிர்ப்புகள் உருவாகத் தொடங்கின. எந்த வகையான எதிர்ப்புகள்? சடங்கு, யாகங்களை கை விட்டு, காடுகளுக்குச் சென்று உடலை வருத்திக் கொண்டு, ‘ஆன்ம பலம்’ பெற்று வாழ்வின் துயரங்களுக்கு விடை காண முடியும் என்று நம்பிய சிலர், காடுகளுக்குப் போனார்கள். சடங்கு, யாகங்களை எதிர்த்தார்கள். யாகம் செய்வதைவிட ‘தியானமே’ சரியானது என்பது இவர்கள் கொள்கை. இதற்காக காடுகளுக்கு சென்றவர்கள் உருவாக்கிய சிந்தனைதான் ‘ஆரண்யகம்’, யாக மோசடிகளை புரோகித நயவஞ்சகத்தை ‘ஆரண்யகம்’ தோலுரித்தது. (யாகம் – சடங்குகளுக்கு எதிராக உருவானதே தியானம். இப்போது பார்ப்பனியம் ‘தியான’த்தையும், வேத மரபோடு இணைத்துக்...
டிசம்பர் 24, சேலம் மாநாட்டுக்கு, தோழர்கள் கட்டாயம் கழக சீருடையான கருப்பு சட்டை – நீலநிற ஜீன்ஸ் பேண்டுடன் வருமாறு கேட்டுக் கொள்கிறோம். சீருடையில், பெரியார் பெரும் படையின் பேரணியும், அணி வகுப்பும் மாநாட்டில் மிகவும் முத்தாய்ப்பானது என்பதை சொல்லத் தேவையில்லை. பெரியார் இயக்க வரலாற்றில் பல திருப்பங்களை ஏற்படுத்திய பெருமை சேலத்துக்கு உண்டு. இதே சேலத்தில்தான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், திராவிடர் கழகமாக பெயர் மாற்றமும், பண்பு மாற்றமும் பெற்றது. இந்த சேலத்தில்தான் வேத மத மறுப்பின் தொடர்ச்சியாக 1971ஆம் ஆண்டு பெரியார் நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நாட்டையே கலங்கடித்தது! பெரியார் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தோடு மாநாட்டின் தலைப் பிலும் கருத்தரங்க தலைப்புகளிலும் புதிய யுக்தியை கழகம் பின்பற்றி யிருக்கிறது. கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்காத வேத மத மறுப்பாளர்கள் பலரும் மாநாட்டில் பேசவிருக் கிறார்கள். மாநாட்டின் அரங்குகளுக்கும் வேத மரபு மறுப்பாளர்களின்...
பெரியார் நினைவு நாளில் டிசம்பர் 24இல் சேலத்தில் திராவிடர்விடுதலைக் கழகம் வேத மரபு மாநாட்டை நடத்துகிறது. “வேத மரபை மறுப்போம்; வெகுமக்கள் உரிமை மீட்போம்” என்பதே மாநாட்டின் முழக்கம். வேத பார்ப்பனிய மரபு சமூகத்தை ஒடுக்கி வந்த வரலாறுகளை பல்வேறு கருத்தாளர்கள் விரிவாகப் பேச இருக்கிறார்கள். வேதங்கள் கற்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதற்கு எதிர்ப்பான சிந்தனைகள் சமூகத்தில் உருவாகியே வந்திருக்கின்றன. ஆனால் பார்ப்பனியம் அந்த எதிர்ப்புகளை சூழ்ச்சியால், அழிப்பால், இருட்டிப்பால், ஊடுருவலால் வீழ்த்தியது என்பதே கொடூரமான வரலாறு. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ‘இந்து’ என்ற பெயரில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது பார்ப்பனியம். வேத பார்ப்பனிய மரபுகளால் அடிமைகளாக்கப்பட்டு, உருக்குலைக்கப்பட்ட மக்களை தனது கட்டுப்பாட்டில் உறுதிப்படுத்திக் கொண்டது. அதற்கு சட்டப் பாதுகாப்பையும் தேடிக் கொண்டது. இந்து மதம் என்ற பெயரில் நமது மக்கள் மீது பார்ப்பனியம் திணித்த அடக்குமுறைகளை எதிர்க்கும் போதெல்லாம், “பார், பார்- இந்துக்களின் விரோதிகளைப் பார்” என்று பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாத வெகுமக்களை...
டிசம்பர் 24இல் பெரியார் நினைவு நாளில், சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒரு நாள் மாநாடு. “சித்தர்கள்-வள்ளலார்-பெரியார்-அடிச்சுவட்டில்… ‘வேத மரபு’ மறுப்பு மாநாடு காலை முதல் இரவு வரை கருத்தரங்குகள் – பேரணி – பொதுக் கூட்டம் – கலை நிகழ்ச்சிகள். கழகத்தின் வளர்ச்சிக்கான கட்டமைப்பு நிதி – முதல் தவணை யாக கழகத் தலைவரிடம் வழங்கப்படுகிறது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு முதல் தவணையாக 5000 சந்தாக்கள் வழங்கப்படு கிறது. கழகத்தின் புதிய ‘மாத இதழ்’ வெளி வருகிறது. தமிழகத்தின் சிந்தனையாளர் கள் – பேச்சாளர்கள் – தலைவர் கள் பங்கேற்கிறார்கள். வேத மதமான பார்ப்பன மதத்தை பார்ப்பனர்கள் – பார்ப் பனரல்லாத மக்கள் மீது திணித்தார்கள். ‘இந்துக்கள்’ என்று பெயர் சூட்ட வைத் தார்கள். வேத மதத்துக்குள் வெகு மக்களை இழுத்துக் கொண் டவர்கள் அந்த மக்களின் சுய மரியாதையை மறுத்தார்கள். ஜாதிகளைத் திணித்து ஒடுக்கு முறை கட்டமைப்பை...