Tagged: மேட்டூர் திவிக

தோழர் ஃபாரூக் படுகொலை கணடித்து ஆர்ப்பாட்டம் மேட்டூர் 27032017

திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் கழகத்  தோழர் கோவை பாரூக் படுகொலையைக் கண்டித்தும், வழக்கை சி.பி.சி.ஐ.டி -க்கு மாற்ற வலியுறுத்தியும் கண்டன  ஆர்ப்பாட்டம் மேட்டூர் பேருந்து நிலையம் எதிரில் 27.3.2017 மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் சி.கோவிந்தராசு தலைமை தாங்கினார். தி.வி.க. தோழர்கள் டைகர் பாலன், நங்கவள்ளி அன்பு, K.A. சந்திரசேகரன் திராவிடர் கழகம் மேட்டூர் நகரம், மா.சிவக்குமார் மேட்டூர் சட்ட மன்றத் தொகுதி செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, வீரசிவா மாநில இளைஞரணித் துணை செயலாளர் ஆதிதமிழர் பேரவை, கி.முல்லைவேந்தன் திராவிடர் பண்பாட்டு நடுவம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். படுகொலையை கண்டித்து வழக்கை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்ற வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. கழக தோழர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

மேட்டூர் செயலவையில் தீர்மானம் 7 தமிழர் விடுதலை: தமிழக அரசின் துரோகம்

மேட்டூர் செயலவையில் தீர்மானம் 7 தமிழர் விடுதலை: தமிழக அரசின் துரோகம்

மேட்டூரில் கூடிய செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். தண்டனைக் குறைப்புக்கான அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு வழங்கும் அரசியல் சட்டத்தின் 161வது பிரிவில் உச்சநீதி மன்றம் தலையிட முடியாது, மாநிலங்களுக்கு அந்த உரிமை உண்டு என்று ஏழு தமிழர் விடுதலை தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் தெளிவாக்கியிருக்கிறது, எனவே தான்  மாநில அரசுக்குரிய இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 தமிழர் விடுதலைக்கு – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் மனித உரிமை அமைப்புகள், தமிழின உணர்வாளர்கள்,   திரைப் படத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. 7 தமிழர் விடுதலைக்கு தனது ஆதரவை தமிழக முதலமைச்சர் ஏற்கெனவே சட்டமன்றத்தில் தெரிவித் துள்ளார்.  இவ்வளவுக்குப் பிறகும் ஆயுள் சிறைவாசியாக சிறையில் வாடும் நளினி தன்னை அரசியல் சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு...

மேட்டூரில் செயலவை கூடியது

மேட்டூரில் செயலவை கூடியது

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை 25.6.2016 அன்று பகல் 11 மணியளவில் மேட்டூர் பாப்பம்மாள் திருமண மண்டபத்தில் கூடி கழகத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள் – கழக வளர்ச்சி குறித்த திட்டங் களை விரிவாக விவாதித்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். தமிழக முழுதுமிருந்தும் கழகச் செயலவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். கொளத்தூர் குமார் – கடவுள் ஆத்மா மறுப்புகளைக் கூற, சேலம் மேற்கு மாவட்ட செய லாளர் கோவிந்தராசு அனை வரையும் வரவேற்றுப் பேசினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரையாக சென்னை யில் தலைமைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள், கழக அமைப்புகளை மேலும் வலிமையாக்கவும், பரவலாக்கு வதற்குமான திட்டங்கள், பெரியாரியலை சமகாலச் சூழலில் மேலும் வளர்த்தெடுப் பதில் கழகம் மேற்கொள்ளும் அணுகுமுறைகள் குறித்துப் பேசியதோடு, தீர்மானங்களையும் முன் மொழிந்தார். அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், முகநூல் பொறுப்பாளர்...

ஜூன் 25இல் மேட்டூரில் கழக செயலவை கூடுகிறது

ஜூன் 25இல் மேட்டூரில் கழக செயலவை கூடுகிறது

திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு 12.6.2016 காலை 10 மணியளவில் சென்னையில் கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் முன்னிலையில் கூடியது. கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் உள்ளிட்ட தலைமைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 24.1.2016 அன்று திருச்சியில் கூடிய கழகச் செயலவை கூட்டத்துக்குப் பிறகு கழக அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் கழகம் அறிவித்த போராட்டங்களை நடத்திய – நடத்தாத கழக அமைப்புகள் குறித்தும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா சேர்ப்பு பணிகளில் கழகத்தினர் செயல்பாடுகள் குறித்தும் அடுத்த செயல் திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஜூன் 25ஆம் தேதி மேட்டூரில் கழக செயலவைக் கூட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 16062016 இதழ்

மேட்டூரில் ஒரு நாள் பயிலரங்கம்

20-10-2016 அன்று காலை 11-00 மணியளவில்  மேட்டூர் பாப்பாயம்மாள் திருமண மண்டபத்தில், சேலம் மேற்கு மாவட்ட கழக சார்பில் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது. முற்பகல் அமர்வில் புலவர் செந்தலை கவுதமன்  ”திராவிடர் இயக்க வரலாறு” என்ற தலைப்பில் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் கருத்துரையாற்றினார். அதன் பின்னர் தோழர்கள் எழுப்பிய அய்யங்களுக்கு விளக்கம் அளித்தார். மதியம் 2-00 மணிக்கு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. மதிய உணவுக்குப் பின்னர் பிற்பகல் 3-00 மாணிக்கு தலைவர் கொளத்தூர் மணி “புதியக் கல்விக் கொள்கையும் பழைய குலக் கல்வித் திட்டமும் “ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். அய்யங் களைதலுக்குப் பின்னர் மாலை 5-30 மணியளவில் பயிலரங்கம் நிறைவுற்றது. பயிலரங்க ஏற்பாடுகளை மேட்டூர் நகரக் கழக செயலாளர் சுரேஷ்குமார், குமரேசன் ஆகியோர் சிறப்புற செய்திருந்தனர். வகுப்பின் துவக்கத்தில், திராவிடர் இயக்கத்தின் அடிவேரான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் அமைப்பின் தொடக்க நாளான 20-11-1916இன் நூற்றாண்டு நிறைவு...

“பெரியாரியல் பயிலரங்கம்.” – மேட்டூர் 20102016

முற்பகல் அமர்வில் புலவர் செந்தலை ந.கவுதமன் வகுப்பின் துவக்கத்தில் , திராவிடர் இயக்கத்தின் அடிவேரான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் அமைப்பின் தொடக்க நாளான 20-11-1916இன் நூற்றாண்டு நிறைவு நாளான அதே 20-11-2016இல் இப்பயிலரங்கம் நடைபெறுவது தனி சிறப்புக்குரியது என்பதை பெருமகிழ்வுடன் குறிப்பிட்டு வகுப்பினைத் தொடங்கினார். ”திராவிடர் இயக்க வரலாறு” என்ற தலைப்பில் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் கருத்துரையாற்றினார். அதன் பின்னர் தோழர்கள் எழுப்பிய அய்யங்களுக்கு விளக்கம் அளித்தார். மதியம் 2-00 மணிக்கு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டிருந்தது. மதிய உணவுக்குப் பின்னர் பிற்பகல் 3-00 மாணிக்கு தலைவர் கொளத்தூர் மணி “புதியக் கல்விக் கொள்கையும் பழைய குலக் கல்வித் திட்டமும் “ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். அய்யங்களைதலுக்குப் பின்னர் மாலை 5-30 மணியளவில் பயிலரங்கம் நிறைவுற்றது. பயிலரங்க ஏற்பாடுகளை மேட்டூர் நகரக் கழக செயலாளர் சுரேஷ்குமார், குமரேசன் ஆகியோர் சிறப்புற செய்திருந்தனர்.

திவிக செயலவையில் ஜாதி மறுப்பு திருமணம்

இன்று மேட்டூர் பாப்பம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திவிக செயலவையில் ஜாதி மறுப்பு திருமணத்தோடு நிகழ்ச்சி துவங்கியது