Tagged: மலேசியா

மலேசியா கூட்டங்களில் பெரியார் எதிர்ப்பாளர்களின் கலகம்: நடந்தது என்ன?

மலேசியாவில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் மார்க்ஸ் பங்கேற்ற கூட்டங்களில் பெரியார் எதிர்ப்பாளர்களும் திராவிட எதிர்ப்பாளர்களும் கலகத்தை உருவாக்கி கூட்டங்களை தடுத்து நிறுத்த முயன்றனர். நடந்தது என்ன என்பதை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர் களோடு அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற திராவிடர் விடுதலைக் கழக இணையதள பொறுப்பாளர் க. விஜய குமார் விளக்கு கிறார். உலகத் தமிழ் உணர்வாளர் மாநாட்டை யொட்டி மலேசியா முழுதும் 30க்கும் மேற்பட்ட பரப்புரைக் கூட்டங்களில் தமிழகத் திலிருந்து வந்த பெரியாரிய கருத்துரை யாளர்கள் பங்கேற்றுப் பேசினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் அ. மார்க்ஸ் இருவரும் கோலாலம்பூரை மய்யமாகக் கொண்ட சுற்றுப்புறங் களில் ஒவ்வொரு நாள் மாலையிலும் பேசினர். ஜூன் 26ஆம் தேதி பக்தாங் பெர்சுந்தைபட்டினம், 27- உலுசி யாங்கூர், 28-காப்பர், 29-கிளாங், 30-பெட்டாலிங் ஜெயா, ஜூலை-1 – டிங்களூர் தமிழ்ப் பள்ளி, 2-கோலாலம்பூர், து.சம்பந்தம் மண்டபம் ஆகிய இடங்களில் இந்த...

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு!

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு! 24/25/6/17 தேதிகளில் நடைபெறும் மலேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு  டத்தோசிரி டாக்டர் சுப்ரமணியம்  அவர்கள் மாநாட்டைத் துவக்கிவைப்பார்! இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் பேராளர்களாகப் பங்கேற்பு!   ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் பங்பெரும் மாநாட்டில் “திராவிட இனத்தின் மீட்சியே; தமிழ் இனம்! தமிழும் திராவிடமும் ஒன்றே!”யென கருத்தரங்கில் விவாதிக்கப்படும் ! இனத்தால் திராவிடன்,  மொழியால் தமிழன்,  உலகத்தால் மனிதன் என்ற கருப்பொருளால் முன்னெடுக்கப்படும் இம்மாநாட்டு வழி உலகம் தழுவி வாழ்கிற தமிழ் உணர்வாளர்களை ஒரே குடையில் கீழ் கட்டமைக்க முடியுமென்ற சிந்தனையின் வெளிபாடே இம்மாநாட்டுக்குரிய இலக்காகும். அதனால் இம்மாட்டையொட்டி நடைபெறும் இரண்டுநாள் கருத்தரங்கில் பேராசிரியர், சுப வீரபாண்டியன், பேராசிரியர் அ.மார்க்சு, கருத்தாளர் சு.அறிவுக்கரசு, திரைஇயக்குனர் வேலுபிரபாகரன், கருத்தாளர் வே.மதிமாறன், எழுத்தாளர் ஆதவன், கருத்தாளர் தோழி ஓவியா, கருத்தாளர் விடுதலை ராசேந்திரன், கருத்தாளர் இளபுகழேந்தி, எழுத்தாளர் மஞ்சை வசந்தன், கருத்தாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோருடன் கலந்து விவாதிப்பதுடன் அவர்களுக்கு...

ஈழத்தில் நடந்த இனப்படுகொலை” தொடர்பான மலேசியா கருத்தரங்கம்

ஈழத்தில் நடந்த இனப்படுகொலை” தொடர்பான மலேசியா கருத்தரங்கம்

மலேசியாவின், பினாங்கு மாநில துணை முதல்வர் முனைவர் பேராசிரியர் இராமசாமி அவர்களின் ஒருங்கிணைப்பில், பினாங்கு தமிழர் முன்னேற்ற இயக்கத்தின் சார்பாக, 21-11-2015 அன்று நடைபெறவிருந்த “ஈழத்தில் நடந்த இனப்படுகொலை” தொடர்பான கருத்தரங்கில் உரையாற்ற சென்றிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணியை, 20-11-2015 அன்று மலேசிய திராவிடர் கழகத்தின் சிலாங்கு மாநிலத் தலைவர் தோழர் பரமசிவம், செயலாளர் தோழர் பொன்வாசகம், பொருளாளர் தோழர் அன்பழகன், பெரியாரிய எழுத்தாளர் கவி ஆகியோர் அவர் தங்கியிருந்த அறைக்கு வந்து சந்தித்தனர். அடுத்து, அவரை தங்கள் மகிழுந்தில் அழைத்துக் கொண்டு, கி.பி. 11ஆம் நூற்றாண்டில் இராசராச சோழனும், இராசேந்திர சோழனும் கடல் வழியாய் வந்து கால்பதித்த கடாரத்துக்கு ( இன்றைய கெடா மாநிலம் ) அழைத்து சென்று , அங்கு நடக்கும் அகழ்வாய்வு இடங்களையும், புஜாங்க் பள்ளத்தாக்கு எனும் மலை, ஆறு, பள்ளத்தாக்காக உள்ள இயற்கை அழகு கொஞ்சும் பகுதிக்கும் அழைத்து சென்றனர். அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள...

ஈழம் தீர்வா?

ஈழம் தீர்வா?

“ஈழம் தீர்வா?” எனும் தலைப்பில் மலேசியாவில் உள்ள பினாங்கு மாகணத்தில் 21.11.15 அன்று நடைபெற்ற சர்வ தேச மனித உரிமை கழகத்தின் “இலங்கை மீதான போர் குற்ற அறிக்கையும் அதன் பிந்தைய நிலையும் ” எனும் கருத்தரங்கில் ”இலங்கையில் வாழும் தமிழர்களின் எதிர்காலம்” எனும் நான்காம் அமர்வில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் உரையாற்றினார். மேலும் அக் கருத்தரங்கில் மதிமுக பொது செயலாளர் வைகோ,இலங்கை வடக்கு மாகாண அவை உறுப்பினர் ஆனந்தி சசீதரன், பினாங்கு துணை முதல்வர் இராமசாமி உள்ளிட்ட பல்வேறு தமிழீழ ஆதரவு தலைவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

இலங்கை மீதான போர் குற்ற அறிக்கையும் அதன் பிந்தைய நிலையும் – மலேசியாவில் கழக தலைவர் உரை நிகழ்த்துகிறார் !

மலேசியாவிலுள்ள பினாங்கு மாநிலத்தில் இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச மனித உரிமைகள் கழகத்தின் ‘இலங்கை மீதான போர் குற்ற அறிக்கையும் அதன் பிந்தைய நிலையும்’ எனும் கருத்தரங்கில் பேசுகிறார். 21.11.2015 சனிக்கிழமை மாலை 03.30 மணிக்கு நடைபெறும் ”இலங்கையில் வாழும் தமிழர்களின் எதிர்காலம் ” எனும் நான்காம் அமர்வில் ”ஈழம் தீர்வா?” எனும் தலைப்பில் கழக தலைவர் உரையாற்றுகிறார். இந்த நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களும்,இலங்கை வடக்கு மாகாண அவை உறுப்பினர் ஆனந்தி சரீதரன் அவர்களும் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் திரு ராமசாமி அவர்களும் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகிறார்கள்.