Tagged: மக்கள் கண்காணிப்பகம்

மக்கள் கண்காணிப்பகம் நடத்தும் “பொது விவாதம்”

மக்கள் கண்காணிப்பகம் நடத்தும் “பொது விவாதம்” நாள் : 07.04.2017. வெள்ளி. நேரம் : மாலை 6 மணி. இடம்: தர்மபுரி கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மற்றும் தோழமை அமைப்பின் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று ஆந்திரமாநில செம்மரக்கட்டை தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால் கடத்தப்பட்டு சுட்டுபடுகொலை செய்யப்பட்ட அப்பாவி20 தமிழக கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான ஆதரவு மற்றும்பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் 20 தமிழர்கள் படுகொலையான வழக்கில் தமிழக அரசு தலையீடு செய்யக் கோரியும் புலம் பெயரும் தமிழக கூலிதொழிலாளர்களின் பாதுகாப்பைஉறுதிப்படுத்தக் கோரியும் 07.04.2017 தர்மபுரியில் பொதுஉரையாடல் நடைபெற உள்ளது.  

மதுரையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் 01092016

1-9-2016 அன்று பிற்பகல் 2-00 மணிக்கு மதுரை ஓபுலா படித்துறையில், மக்கள் உரிமைக் காப்பாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில், மனித உரிமைக் காப்பாளர் ஹென்றி திபேன் மீது பொய்வழக்கைப் பதிவு செய்த காவல்துறையைக் கண்டித்தும்,  வழக்கைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மதுரை மாவட்டம், மொட்டமலையைச் சேர்ந்த அலைகுடிகளான குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கூலிவேலை செய்துவந்தவர்களை சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்து, 63 நாட்கள் சட்டவிரோதமாக அடைத்துவைத்து சித்திரவதை செய்துவருவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போட்டு விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தனர் தோழர் ஹென்றி திபேனும், உதவும் குரல் அமைப்பினரும். தொடர்ந்து சட்ட்விரோதமாகக் காவலில் வைத்ததோடு, சித்திரவதை செய்தும், பெண்களைப் பாலியல் துன்புறுத்தலும் செய்த காவல்துறையின்ர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தக்கலையிலும், மதுரையிலும் அர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. அவ்வார்ப்பட்டத்தின்போது காவல்துறையினரை மிரட்டியதாக, பிணையில் வர முடியாத பிரிவுகளில் எட்டு நாட்கள் கழித்து தோழர் ஹென்றி திபேன் மீது பொய்வழக்கில் புனைந்ததைக் கண்டித்து...

ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி 20 தமிழக கூலி தொழிலாளர்களின் முதலாம் ஆண்டு, தோழமை உறுதி ஏற்பு தினம்

ஆந்திர படுகொலை, ”முதலாம் ஆண்டு தோழமை உறுதி ஏற்பு தினம்.” 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ம்தேதி ஆந்திர மாநில செம்மரகட்டை தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால்,கடத்தி சுட்டு படுகொலை செய்யப்பட்ட அப்பாவி 20 தமிழக கூலித்தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான ஆதரவு மற்றும் பாதுகாப்பிற்கான ”முதலாம் ஆண்டு தோழமை உறுதி ஏற்பு தினம்.” நாள் : 07.04.2016, காலை 09.30 இடம் : சாரண சாரணியர் இயக்க கூட்ட அரங்கு, திருவண்ணாமலை. தலைமை : வழக்கறிஞர் ஹென்றி டிபேன், நிர்வாக இயக்குனர்,மக்கள் கண்காணிப்பகம், உரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம், பேராசிரியர் கல்வி மணி, இருளர் பாதுகாப்பு நலச்சங்கம், அ.மார்க்ஸ்,எழுத்தாளர், பேராசிரியர் சரஸ்வதி PUCL, மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். நிகழ்சி ஏற்பாடு : மக்கள் கண்காணிப்பகம், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம்.