Tagged: பேராவூரணி

மாணவி அனிதாவிற்கு நீதி வேண்டி பேராவூரணி வேதாந்தம் திடலில் உண்ணாவிரதம் 10092016

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் 150 மருத்துவ மாணவர்களுக்கான சேர்க்கையில் 15 மாணவர்கள் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் – மருத்துவர் ஜெயராமன் தகவல். “நீட் தேர்வுக்குப்பின் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு நடத்தும் மருத்துவக்கல்லூரிகளில் 85 விழுக்காடு மாணவர்களுக்கான சேர்க்கையை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிறைவு செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள 150 மாணவர்களுக்கான இடங்களில் 15 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள். எல்லா மாநிலங்களிலிலும் நீட்டை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று இங்கு பொய் பரப்புரை செய்யப்படுகிறது. சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ள ஆந்ரா மாநிலத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலூர் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி நீட் தேர்வை புறந்தள்ளிவிட்டது. தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரி என்ற அடிப்படையில் 24 மருத்துவக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. தமிழக ஏழை எளிய மாணவர்கள் சேர்ந்து படிக்க...

காவிரி உரிமைக்கு பேராவூரணியில் கழகம் ஆர்ப்பாட்டம்

காவிரி உரிமைக்கு பேராவூரணியில் கழகம் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், கர்நாடக தமிழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கன்னட வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பேராவூரணி-சேதுபாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பேராவூரணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். கழகப் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன், தமிழக மக்கள் புரட்சி கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு. நீலகண்டன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஆயர் த.ஜேம்ஸ், தி.வி.க காளிதாஸ், சிபிஐ ராஜமாணிக்கம், சித்திரவேல், சிபிஎம் ஆர்.எஸ்.வேலுச்சாமி, மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு தா.கலைச்செல்வன், த.ம.பு.க மூர்த்தி, சம்பத், ஆயில் மதி, மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், கு.பாரி, திருக்குறள் பேரவை கொன்றை சண்முகம், மதிமுக பாலசுப்பிரமணியன், குமார், கண்ணன், தேமுதிக சீனிவாசன், பழனிவேல், த.ம.மு.க ஆசீர்வாதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 29092016 இதழ்

” ஜாதிய வறட்டு வன்மமே ஆணவ படுகொலைகளுக்கு அடிப்படை காரணம் ” – பேராவூரணி ஆர்ப்பாட்டத்தில் தோழர் எவிடென்ஸ் கதிர்

” ஜாதிய வறட்டு வன்மமே ஆணவ படுகொலைகளுக்கு அடிப்படை காரணம் ” பேராவூரணியில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக்கழக ஆர்பாட்டத்தில் தோழர் எவிடென்ஸ் கதிர் பேச்சு பேராவூரணி  ஜாதி மறுப்பு திருமணம்செய்த சங்கர் உடுமலைப்பேட்டையில் ஜாதிய வெறியர்களால் ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் பேராவூரணி அண்ணா சிலை அருகில் திராவிடர் விடுதலைக் கழக தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில் மார்ச் 25ம் தேதி மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர் தோழர் எவிடென்ஸ் கதிர் பங்கேற்று கன்டன உரையாற்றினார், அவர் தனது உரையில், ”ஜாதி மறுப்பு திருமணம் செய்த தோழர் சங்கர் தனக்கும் தன் மனைவியாகிய கௌசல்யாவிற்கும் கௌசல்யா உறவினர்களால் பலமுறை கொலை மிரட்டல் விடப்பட்டபோது இதுகுறித்து மடத்துக்குளம், குமரலிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களில் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு, புகார் மனு அளித்திருந்தார். ஆனால் புகாரை பெற்றுககொண்ட மேற்கண்ட...

உடுமலை சங்கர் படுகொலையை கண்டித்து பேராவூரணியில் கண்டன ஆர்ப்பாட்டம் 25032016

இன்று (25.03.2016) மாலை 5 மணிக்கு பேராவூரணியில் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஜாதி மறுப்பு திருமணம் செய்த உடுமலை சங்கர் ஜாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டத்தை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தோழர் எவிடன்ஸ் கதிர்,தோழர் ஆறு.நீல கண்டன் ஆகியோர் கண்டன உரையாற்றுகிறார்கள்.

நவீன துரோணாச்சாரிகளால் காவு வாங்கப்பட்டவர் ரோகித் வெமுலா பேராவூரணி ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி பால்பிரபாகரன் பேச்சு

நவீன துரோணாச்சாரிகளால் காவு வாங்கப்பட்டவர் ரோகித் வெமுலா பேராவூரணி ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி பால்பிரபாகரன் பேச்சு

அய்தராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் பயின்ற முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா மரணத்திற்கு நீதி விசாரணைகேட்டும், நாகை மாவட்டம் வழுவூர் திருநாள் கொண்டச்சேரி தலித் முதியவரின் உடலை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டும், நீதிமன்றத்தை அவமதித்த நாகை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும். விழுப்புரம் தனியார் கல்லூரியில் மரணமடைந்த மூன்று மாணவிகளுக்கு நீதி கேட்டும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் பேராவூரணி அண்ணா சிலை அருகில் பிப்ரவரி 2ம் தேதி மாலை 5 மணியளவில் திராவிடர் விடுதலைக்கழக தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் தின் நோக்கங்களை விளக்கி திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, தஞ்சை மாவட்ட முன்னாள் அமைப்பாளர் பாரி, திராவிடர் விடுதலைக் கழக பாடகர் பள்ளத்தூர் நாவலரசன், தமிழக மக்கள் புரட்சிக்கழக மாவட்ட செயலாளர் வி.சி.முருகையன், மெய்சுடர் இதழ் ஆசிரியர் வெங்கடேசன், தமிழக மக்கள் புரட்சிக்...