Tagged: பெரியார் முழக்கம் 21112013 இதழ்

நான் பலி கடா ஆகிறேன்-தமிழனுக்காக

நான் பலி கடா ஆகிறேன்-தமிழனுக்காக

“இருந்தால் என் வைப்பாட்டி மகனாக இரு; இழிமகனாக இரு; இல்லாவிட்டால் நாட்டைவிட்டு, இந்து மதத்தை விட்டு வெளியேறு அல்லது ஜெயிலில் இரு” என்றால், “இது உங்கப்பன் உங்க அம்மா சம்பாதித்த நாடா? அவர்கள் பிறந்த நாடா? என் நாட்டில் உனக்கு என்ன வேலை? வெளியேறு, வெளியேறு, மான வெட்கங் கெட்டவனே, வெளியேறு” என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. சமுத்திரம் எனக்கு முழங்கால் அளவு தண்ணீர்தான். அட முட்டாள்களா! உங்களுக்கும் சேர்த்துத்தானே பாடுபடுகிறேன். விஷமப் பிரச்சாரம் செய்யும் உங்களில் ஒருவன் வாயில்கூட ‘நான் ஏன் சூத்திரன்’ என்பது வருவதில்லையே. டில்லியோடு எழவு எடுப்பதற்கு முன் உங்களோடு எழவு எடுக்க வேண்டியிருக்கிறதே! தமிழன் யோக்கியதை எனக்குத் தெரியும். 75 வருடமாய் தெரியும். தமிழனுக்கு ஆக நான் பலிகடா ஆகிறேன். மானமுள்ளவர்கள் வாருங்கள். முடியாத யோக்கியர்கள், யோக்கியர்களுக்குப் பிறந்தவர்கள் வாலை அடக்கிக் கொண்டு யோக்கியமாய் வாழுங்கள். – தந்தை பெரியார் பெரியார் முழக்கம் 21112013 இதழ்

கழகப் பொறுப்பாளர்களுக்கு பெரியாரியல் பயிற்சி வகுப்புகள்

கழகப் பொறுப்பாளர்களுக்கு பெரியாரியல் பயிற்சி வகுப்புகள்

மதுரை மண்டலம் மதுரை மண்டலத்திலுள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டக் கழகங்களில் உள்ள கிளை, நகர, ஒன்றிய, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான ‘பொறுப்பாளர் பயிற்சி வகுப்பு-நிலை 2’ வரும் 30, டிசம்பர் 1 ஆகிய நாட்களில் திண்டுக்கல் கருந்திணையில் நடைபெறும். சேலம் மேற்கு சேலம் மேற்கு மாவட்டத்திலுள்ள கிளை, நகர, ஒன்றிய, மாவட்டப் பொறுப்பாளர் களுக்கான ‘பொறுப்பாளர் பயிற்சி வகுப்பு-நிலை 2’ வரும் டிசம்பர் 7, 8 ஆகிய நாட்களில் மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் நடைபெறும். தொடர்புக்கு :              அ. சக்திவேல் பேசி: 94425 13177 கோவை மண்டலம் கோவை மண்டலத்திலுள்ள கோவை மாநகரம், புற நகரம், திருப்பூர் மாவட்டக் கழகங்களில் உள்ள கிளை, நகர, ஒன்றிய, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான ‘பொறுப் பாளர் பயிற்சி வகுப்பு-நிலை 2’ வரும் டிசம்பர் 14, 15 ஆகிய நாட்களில் உடுமலையில் நடைபெறும். அனைத்துப் பயிற்சிகளிலும் கழகப் பொறுப்பாளர்களும், கழகத்தின் முன்னணி அமைப்புகளின்...

மரண தண்டனை எதிர்ப்பு இயக்கம் வலுக்கிறது

மரண தண்டனை எதிர்ப்பு இயக்கம் வலுக்கிறது

மரண தண்டனை கூடாது என்று முதன்முதலில் இத்தாலியில் 1764இல் செசரே பெக்காரியா என்ற சட்ட வல்லுநர், “குற்றங்களும் தண்டனைகளும்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் வலியுறுத் தினார். அக்கட்டுரையில், “காட்டுமிராண்டி நிலையிலிருந்து நாகரிகச் சமூமாக மாறுவதற்கான வழிமுறைகளில் மரணதண்டனை ஒழிப்பு என்பது முதன்மையானதாகும். ஒருவருடைய உயிரைப் பறிக்க எப்படி எவருக்கும் உரிமையில்லையோ, அதே போல, உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் இல்லை” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் மரணதண்டனை தேவையா? இல்லையா? என்ற விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. மரண தண்டனை அதிகமாக நிறைவேற்றப்படும் அமெரிக்காவில்தான், பள்ளிச் சிறுவர்கள் கூட துப்பாக்கியால், உடன் படிக்கும் மாணவர்களைச் சுடுவதும், கொலைகளும் மிகுதியாக நடக்கின்றன. இந்தியாவில் பிரித் தானிய ஆட்சியில் 1860இல் உருவாக்கப் பட்ட குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் சில குறிப்பிட்ட குற்றங் களுக்கு மரண தண்டனை என்பது ஏற்படுத்தப் பட்டது. உலகில் போர்ச்சுக்கல் நாடுதான் 1976இல் முதன்முதலாகச் சட்டப்படி மரண தண்டனையை...

குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம்

குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம்

தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் சார்பில் விடுமுறைக் காலங்களில் குழந்தைகள் பழகு முகாம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அடுத்தகட்டமாக வரும் அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களான டிசம்பர் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் திண்டுக்கல்லில் முகாம் நடைபெற உள்ளது. 3 நாட்களுக்கான பயிற்சி, உணவு, தங்குமிடம் மற்றும் சுற்றுலா அனைத்திற்கும் சேர்த்து கட்டணம் ரூ.750. டிசம்பர் 24 இரவே பெற்றோர்கள் குழந்தைகளை திண்டுக்கல் பயிற்சி மய்யத்திற்கு அழைத்து வந்துவிட வேண்டும். பெற்றோர்கள் மய்யத்தில் தங்க இயலாது. நகைகள், செல்போன்கள் அனுமதிக்க இயலாது. – ஆசிரியர் சிவகாமி / பேசி: 9842448175 மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அறிவியல் மன்றம் பெரியார் முழக்கம் 21112013 இதழ்

தொண்டினால் கிடைக்கும் புகழ்

தொண்டினால் கிடைக்கும் புகழ்

“சிலர் புகழ் வேண்டாம், எனக்கு அதில் ஆசையே கிடையாது” என்று கூறுவார்கள். இது பகட்டுப் பேச்சேயன்றி நடைமுறையில் சாத்தியமானதல்ல; அது மட்டுமல்ல, புகழை விரும்பாதவன் மனித உணர்ச்சியோடு இருப்பவன் என்று கூறிவிட முடியாது. புகழ் நிலைத்திருக்க முடியும் என்றால் ஒரு நல்ல பாடகன் என்பவனின் புகழ் அவனோடு மறைந்துவிடும். அல்லது அவனைவிடப் பாடுபவன் தோன்றினால் அவன் உயிர் நாளிலேயே அவன் புகழ் அழிபட்டுவிடும். அதே போன்றுதான் ஒவ்வொரு தனிப்பட்ட புகழும். ஆனால், பொதுக் காரியத்துக்காக அதனால் மக்களுக்கு என்றும் நன்மையைப் பயக்கக் கூடியதாகச் செய்யப்படும் காரியங்களையும் அக்காரியவாதிகளின் புகழையும் என்றும் மறைக்க முடியாது. அவ்விதமான பெரியோர்கள் முதலில் ஏச்சுக்கும், தொல்லைக்கும் ஆளவார்கள். பின்னர்தான் நிலையாக விளங்கும். – காயல் பட்டினத்தில் ‘சீதக்காதி’ நினைவுநாள் விழாவில் பெரியார் பேருரை – 24.4.47 பெரியார் முழக்கம் 21112013 இதழ்

மயிலாடுதுறையில் ‘புத்தகச் சோலை’ புதிய கட்டிடம் திறப்பு

மயிலாடுதுறையில் ‘புத்தகச் சோலை’ புதிய கட்டிடம் திறப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தைச்சார்ந்த தோழர் ந. விஜயராகவன், ‘புத்தகச் சோலை’ என்ற புதிய புத்தக விற்பனை நிலையத்தை மயிலாடுதுறையில் தொடங்கியுள்ளார். புத்தகச் சோலையின் புதிய கட்டிடத் திறப்பு விழா 17.11.2013 ஞாயிறு காலை 10.30 மணியளவில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். நாகை மண்டல கழக அமைப்புச் செயலாளர் நா. இளையராசா வரவேற்புரையாற்ற, பெரு வணிகரும் பெரியாரியலாளருமான சா.மீ.சு. முத்துச் செல்வன், வே. மோகன்தாசு, நா.க. உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றினர். “ஒரு பெரியாரியல்வாதியாக நான் இருந்ததால்தான் கடும் நெருக்கடிகளை துணிவாக எதிர்கொண்டு இந்த நிறுவனத்தை என்னால் தொடங்க முடிந்தது” என்று உரிமையாளர் ந. விஜயராகவன் தனது ஏற்புரையில் குறிப்பிட்டார். மோ.சுகந்தி விஜயராகவன் நன்றி கூறினார். கழகத் தோழர்கள், நண்பர்கள் ஒத்துழைப்பு ஆதரவுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த புத்தகச் சோலைக் கட்டிடம் கம்பீரமாக முகப்பில் பெரியார் படத்துடன் தோற்றமளிக்கிறது. இரண்டடுக்கு மாளிகையாக எழுந்து நிற்கும் இந்த...

தலையங்கம்: இடித்தது சுற்றுச் சுவரை மட்டும் அல்ல!

தலையங்கம்: இடித்தது சுற்றுச் சுவரை மட்டும் அல்ல!

ஈழப் போரில் சிங்கள இராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள், தாயகத்தின் விடுதலைக்காக இராணுவத்தை எதிர்த்துப் போராடி களப்பலியான மாவீரர்கள் நினைவாக தஞ்சையில் கடுமையான உழைப்பினால் கட்டி எழுப்பப்பட்ட முள்ளி வாய்க்கால் முற்றம் – தமிழினத்தின் வரலாற்றுச் சின்னம்! இழிவையும், மடமையையும், மக்கள் பொதுப் புத்தியில் ஏற்றிக் கொண்டிருக்கிற கோயில்கள் அல்ல இவை. இந்த முற்றம், தமிழர்களின் உள்ளத்தில் விடுதலை வேட்கையை கனலாக மூட்டி நிற்கிறது. தமிழ்நாட்டில் இத்தகைய எழுச்சியூட்டும் முற்றங்கள் தான் கோயில்களுக்கு மாற்று என்று நாம் கருதுகிறோம். இந்த முற்றத்தைக் கட்டி எழுப்ப எத்தனையோ தமிழர்கள் தங்களை அர்ப்பணித்து உழைத்திருக்கிறார்கள். தங்கள் ஆற்றல்களை பங்களிப்புகளாக வழங்கியிருக்கிறார்கள். அது செங்கல்லும் சிமெண்டும் கலந்த கட்டிடம் மட்டுமல்ல; உணர்வுகளைச் சுமந்து நிற்கும் பாசறையும்கூட! அத்தகைய முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கப்பட்டு, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை நெஞ்சில் ஈரமின்றி அதன் சுற்றுச் சுவரையும் அழகு மிளிர உருவாக்கப்பட்டிருந்த...

உங்கள் வரவேற்பு, பாராட்டு எனக்கு வேண்டாம்

உங்கள் வரவேற்பு, பாராட்டு எனக்கு வேண்டாம்

‘இந்த ஊருக்கு சுமார் 20, 25 வருடங்களுக்கு முன்பு (அதாவது 1922, 23) இரண்டு மூன்று தடவை வந்திருக்கிறேன். அப்போது காங்கிர°காரனாய் வந்தேன். அதன் பிறகு இப்போதுதான் வர வாய்ப்புக் கிடைத்தது. இதுவும் நீங்கள் ஒரு வருஷ காலமாய் எங்களை அடிக்கடி வந்து அழைத்ததன் பயனாக இன்று வர முடிந்தது. நாட்டின் அரசியல், சமுதாய இயல், பொருளாதார இயல், கிராமங்களுக்குத் தெரிவதில்லை. ஒவ்வொரு கிராமத்தையும் அங்குள்ள செல்வாக்குள்ள யாரோ ஒருவர் இருவர் அடக்கி ஆண்டு தங்கள் நலனுக்கு ஏற்ற வண்ணம் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எங்கள் வரவு மிகவும் கஷ்டமாகவும் அதிருப்தியாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. இந்த வெறுப்பு நான் ஊர்வலம் வந்தபோது நன்றாய்த் தெரிந்தது. எப்படியெனில் பல சுவர்களில் என்னைப் பற்றி நீங்கள் புகழ்ந்து எழுதி வரவேற்புக் கூறியிருக்கிறீர்கள். ஆனால் சில சுவர்களில் ‘சாமி இல்லை என்னும் பாவி இராமசாமி ஒழிக’ என்று எழுதப்பட்டிருந்ததையும் நான் பார்த்தேன். இதன் காரணம் என்ன?...

காவல்துறை வளாகங்களில் வழிபாட்டு தலங்களுக்கு தடை

காவல்துறை வளாகங்களில் வழிபாட்டு தலங்களுக்கு தடை

காவல்துறை வளாகங்களில் – கோயில், மசூதி, சர்ச் போன்ற வழிபாட்டுத் தலங்கள் இருப்பது கவனத்துக்கு கொண்டு வரப்பட் டுள்ளது. “அரசு அலுவலகங்களில் வழிபாட்டுத் தலங்களை அனுமதிக்கக்கூடாது என்று அனைத்து காவல்துறை பிரிவுக்கும் அறிவுறுத்தப்படுகிறது” என்ற சுற்றறிக்கை 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி அனைத்து காவல்துறை நிர்வாக அலு வலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. காவல்துறை இயக்குநர் அலுவலகத்தி லிருந்து அனுப்பப்பட்ட இந்த சுற்றறிக்கை யில் இயக்குனர் கே. இராமானுஜம் கையெழுத்திட்டுள்ளனர். காவல்துறை வளாகத்தில் இடம் பெற்றுள்ள காவல் நிலையங்களுக்கும் இது பொருந்தும். வழிபாடுகள் எதுவும் நடக்கக்கூடாது என்பது காவல் நிலையங் களில் நடக்கும் ஆயுத பூஜைகளுக்கும் பொருந்தும். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் காவல் நிலையங்களில் பூஜைகள் போடுவதை தடைசெய்து தீர்ப் பளித்துள்ளது. இப்போது அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலும் 7 மாதங்களுக்கு முன்பு காவல்துறை இயக் குனராலேயே சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. சுற்றறிக்கையின் நகல் வெளியிடப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் 21112013 இதழ்

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

மனித உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய அமைப்புகள் எங்கள் நாட்டில் இருக்கின்றன. புகார் தெரிவித்தால் அரசு விசாரிக்கும். – ராஜபக்சே பேட்டி அப்படியா? இராணுவத்துக்கே மனித உரிமைப் பிரிவு என்று பெயர் மாற்றம் செய்து விட்டீர்களா? சொல்லவே இல்லை! இலங்கை தமிழர் பகுதியை பார்வயிடச் சென்ற ‘சேனல்-4’ தொலைக்காட்சிக் குழுவினர் ரயிலை சிங்களர்கள் மறித்து குழுவினரை திருப்பி அனுப்பினர்.  – செய்தி ஓகோ! ராஜபக்சே கூறிய மனித உரிமைக் குழு, இது தானா? இப்பத்தான் விளங்குது! கேரள முதல்வர் உம்மன்சாண்டி – மக்கள் சந்திப்பு திட்டத்தின் வழியாக மாவட்டந் தோறும் சென்று மக்களை சந்தித்து வருகிறார்.       -செய்தி முதலமைச்சரை மக்கள் நேரிலேயே பார்க்கலாமா? என்ன சொல்றீங்க? நம்பவே முடியவில்லையே; எங்க தமிழ்நாட்டு மக்களும் கேரளாவுக்கு வந்து முதலமைச்சரை நேரிலேயே பார்க்க அனுமதிப்பீங்களா… ப்ளீ°….. பாட்னாவில் மோடி கூட்டத்தில் நடந்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக நான்கு இந்து இளைஞர்களை தேசிய புலனாய்வு அமைப்பு கைது...