காவல்துறை வளாகங்களில் வழிபாட்டு தலங்களுக்கு தடை

காவல்துறை வளாகங்களில் – கோயில், மசூதி, சர்ச் போன்ற வழிபாட்டுத் தலங்கள் இருப்பது கவனத்துக்கு கொண்டு வரப்பட் டுள்ளது.

“அரசு அலுவலகங்களில் வழிபாட்டுத் தலங்களை அனுமதிக்கக்கூடாது என்று அனைத்து காவல்துறை பிரிவுக்கும் அறிவுறுத்தப்படுகிறது” என்ற சுற்றறிக்கை 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி அனைத்து காவல்துறை நிர்வாக அலு வலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. காவல்துறை இயக்குநர் அலுவலகத்தி லிருந்து அனுப்பப்பட்ட இந்த சுற்றறிக்கை யில் இயக்குனர் கே. இராமானுஜம் கையெழுத்திட்டுள்ளனர்.

காவல்துறை வளாகத்தில் இடம் பெற்றுள்ள காவல் நிலையங்களுக்கும் இது பொருந்தும். வழிபாடுகள் எதுவும் நடக்கக்கூடாது என்பது காவல் நிலையங் களில் நடக்கும் ஆயுத பூஜைகளுக்கும் பொருந்தும். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் காவல் நிலையங்களில் பூஜைகள் போடுவதை தடைசெய்து தீர்ப் பளித்துள்ளது. இப்போது அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலும் 7 மாதங்களுக்கு முன்பு காவல்துறை இயக் குனராலேயே சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. சுற்றறிக்கையின் நகல் வெளியிடப்பட்டுள்ளது.

பெரியார் முழக்கம் 21112013 இதழ்

You may also like...