வினாக்கள்… விடைகள்…

மனித உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய அமைப்புகள் எங்கள் நாட்டில் இருக்கின்றன. புகார் தெரிவித்தால் அரசு விசாரிக்கும்.

– ராஜபக்சே பேட்டி

அப்படியா? இராணுவத்துக்கே மனித உரிமைப் பிரிவு என்று பெயர் மாற்றம் செய்து விட்டீர்களா? சொல்லவே இல்லை!

இலங்கை தமிழர் பகுதியை பார்வயிடச் சென்ற ‘சேனல்-4’ தொலைக்காட்சிக் குழுவினர் ரயிலை சிங்களர்கள் மறித்து குழுவினரை திருப்பி அனுப்பினர்.  – செய்தி

ஓகோ! ராஜபக்சே கூறிய மனித உரிமைக் குழு, இது தானா? இப்பத்தான் விளங்குது!

கேரள முதல்வர் உம்மன்சாண்டி – மக்கள் சந்திப்பு திட்டத்தின் வழியாக மாவட்டந் தோறும் சென்று மக்களை சந்தித்து வருகிறார்.       -செய்தி

முதலமைச்சரை மக்கள் நேரிலேயே பார்க்கலாமா? என்ன சொல்றீங்க? நம்பவே முடியவில்லையே; எங்க தமிழ்நாட்டு மக்களும் கேரளாவுக்கு வந்து முதலமைச்சரை நேரிலேயே பார்க்க அனுமதிப்பீங்களா… ப்ளீ°…..

பாட்னாவில் மோடி கூட்டத்தில் நடந்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக நான்கு இந்து இளைஞர்களை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.         – செய்தி

சரி விடுங்க! இ°லாம் மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறிய முன்னாள் இ°லாமிய பயங்கரவாதிகள் என்று அறிவிச்சுடலாம்!

மோடியின் பாட்னா கூட்டத்தில் குண்டு வெடித்த உடனேயே பங்கஜ் என்ற பா.ஜ.க.வைச் சார்ந்தவரை போலீ° கைது செய்தது. அவர் தற்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை.   – பாட்னா இணையதள செய்தி

அவரை எதுக்கு இப்ப தேடுறீங்க? வழக்கு உச்சநீதி மன்றம் போய் – நீதிமன்றம் ஒரு விசாரணைக் குழு போடும்போது, தேடிக்கலாம், விடுங்க!

இந்தி திரைப்படத்துக்கு ‘ராம் லீலா’ என்று பெயர் சூட்டியுள்ளது இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்துகிறது.                 – லக்னோவில் எதிர்ப்பு

திரைப்படத்துக்கு மட்டுமல்ல; இனி மனிதர்களுக்கே எந்த இந்துக் கடவுள் பெயர்களையும் எவரும் சூட்டக் கூடாதுன்னு ஒரு வழக்குப் போட்டு தடை வாங்கிடுங்க. இதே தொல்லையாப் போச்சு…

உலகத்திலுள்ள மொத்த கொத்தடிமைகளில் 50 சதவீதம் பேர் இந்தியர்கள்.  – ஆய்வில் தகவல்.

உடனடித் தேவை -கொத்தடிமைகள் (அப்படியே நீடிக்க) பாதுகாப்புச் சட்டம்!

சென்னை மாநகராட்சியில் 299 சாலைகள் அமைப்பது உட்பட 844 பணிகள் தொடங்குவதற்காக அமைச்சர் வளர்மதி தலைமையில் பூமாதேவிக்கு பூமி பூஜை போடப்பட்டது.         – செய்தி

பூஜை போட்ட பூமியில் கற்களைக் கொட்டி தார் ஊற்றி புல்டோசரை ஓடவிடுவது ‘தெய்வ நிந்தனை’ அல்லவா?

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் வாழும் தேவாலா, மூச்சுக்குன்னு குடியிருப்புக்கு 65 ஆண்டு களாக மின் இணைப்பே இல்லை. இலவச தொலைக் காட்சிப் பெட்டி, காட்சிப் பொருளாக இருக்கிறது. – செய்தி

அப்படின்னா, பொழுது சாஞ்சா, தொலைக் காட்சிப் பெட்டியையும் பார்க்க முடியாதுங்களே…

இரயில்வேயில் தட்டச்சர் தேர்வுக்கு விண்ணப் பித்தவர்கள் கையோடு தட்டச்சு எந்திரங்களையும் கொண்டுவர ரயில்வே வாரியம் உத்தரவு.     – செய்தி

தேர்வானவர்கள் தங்களுக்கான மேசை, நாற்காலி களையும் அவர்களேதான் கொண்டுவர வேண்டுமா?

பெரியார் முழக்கம் 21112013 இதழ்

You may also like...