Tagged: பெரியார் முழக்கம் 07112013 இதழ்

‘அவாள்’களே கூறுகிறார்கள்!

‘அவாள்’களே கூறுகிறார்கள்!

கோயில்களில் கூட்டம் அதிகரித்து விட்டது. முக்கிய நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. மேலோட்ட மாக பார்க்கும்போது பக்தி நெறி செழித்திருப்பதுபோலத் தெரி கிறது. இது பொய்த் தோற்றம். இந் நாளில் இருக்கும் பக்தி வழுக்கல் நிலத்தில் வடித்த மாளிகை.- ‘தினமலர்-பக்திமலர்’ அக்.24 பெரியார் இயக்கம் தோற்று விட்டது என்போருக்கு ‘அவாள்’களே தரும் ஒப்புதல் வாக்குமூலம்! பெரியார் முழக்கம் 07112013 இதழ்

குரங்கிலிருந்து மீண்டும் மனிதன் தோன்ற முடியுமா?

குரங்கிலிருந்து மீண்டும் மனிதன் தோன்ற முடியுமா?

பூமியில் மனிதர்கள் ஒருக்கால் அழிந்துவிட்டால், மீண்டும் மனிதக் குரங்குகளில் இருந்து மனிதன் தோன்ற வாய்ப்பு இருக்கிறதா? இந்த இடத்தில் ஒருவிஷயத்தை முதலில் நாம் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். பரவலாக நம்பப்படுவது, கூறப்படுவதைப்போல நாம் மனிதக் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி அடையவில்லை. நமக்கும், மனிதக் குரங்குகளுக்கும் பொதுவான ஒரு மூதாதை 1 கோடி ஆண்டுக்கு முன்னால் இருந்திருக்கக் கூடும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு. அந்த பொது மூதாதையை யீயn யீசiடிச என்று அழைக்கிறார்கள். அல்லது மனிதன், குரங்கு பொது மூதாதை என்கிறார்கள். அறிவியல் ரீதியில் நாம் இன்னமும் மனிதர்களாக வகைப்படுத்தப்படவில்லை. நாம் மனிதக் குரங்குகள்தான். அதாவது, சமூகத்தில் வாழும் மனிதக் குரங்குகள். அதே  நேரம் நமது பொது மூதாதை இப்போது வாழ்கிறது என்று வைத்துக் கொண்டாலும்கூட, பரிணாம வளர்ச்சி அல்லது படிநிலை வளர்ச்சி என்பது தொடர்பற்ற மரபணுக் கலப்பு (ழுநநே அரவயவiடிn), சுற்றுச் சூழல் நெருக்கடிகளால் (நுnஎசைடிnஅநவேயட ஞசநளளரசநள) உருவாகும் இயற்கைத்...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

காமன்வெல்த் மாநட்டில் பிரதமர் பங்கேற்பதா இல்லையா என்பது இன்னும் முடிவாகவில்லை.                              – ப. சிதம்பரம் ஆமாம்! விமானத்துக்கு ‘டிக்கட்’ உறுதியானால் தான் போவார்! தீபாவளியில் ராக்கெட் பட்டாசு விட்டவர்களால் மட்டும் 157 தீ விபத்துகள் நடந்துள்ளன.   – தினமலர் செய்தி அதற்காக பட்டாசு வெடித்தவர்கள் மீது வெடி பொருள் தடுப்புச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் எதையும் காவல்துறை பயன்படுத்திட வேண்டாம்! பூமாதேவியின் பிரார்த்தனையை ஏற்று கண்ணபிரானால் தொடங்கி வைக்கப்பட்ட புனித  நாள், தீபாவளி.    – ‘தினமணி’யில் காஞ்சி ஜெயேந்திரன் அதுமட்டுமா? வரதராஜப் பெருமாளை ‘மோட்சத்துக்கு’ அனுப்பி ஸ்ரீ ஜெயேந்திரர் சிறைவாச°தலத்தில் அவதரித்த புனித நாளும் இதே தீபாவளித் திருநாள் தான்! டில்லியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளைப் பிடிக்க ஆட்கள் தேவை.     – மாநகராட்சி பத்திரிகை விளம்பரம் ஸ்ரீராமன் சேனையை இப்படியெல்லாம் அவமதிக்கலாமா? இராமபிரான் வரமாட்டான் என்ற துணிச்சல்; தானே? உலகத்திலேயே குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடக்கும் நாடான இந்தியா, அய்.நா.வில் கொண்டு வரப்பட்ட...

பெரியாருக்கு முன்பு, 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நடந்த நாத்திக இயக்கம்

பெரியாருக்கு முன்பு, 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நடந்த நாத்திக இயக்கம்

19 ஆம் நூற்றாண்டில் பெரியாருக்கு முன்பு தமிழ் மாகாணத்தில் நாத்திகர் இயக்கம் ஒன்று ‘இந்து சுயாக்கியானிகள் சங்கம்’ என்ற பெயரில் செயல்பட்டுள்ளது. இந்த அமைப்பு ‘தத்துவ விவேசினி’ என்ற தமிழ் இதழையும், ‘தி திங்கர்’ என்ற ஆங்கில இதழையும் நடத்தியுள்ளனர். இந்நூல் களைத் தேடிக் கண்டுபிடித்து, சென்னைப் பல் கலைக்கழகத் தமிழ்த் துறை பேராசிரியர் வீ. அரசு பதிப்பித்துள்ளார். ‘நியு செஞ்சுரி புக் ஹவு°’ இத் தொகுதிகளை வெளியிட்டுள்ளது. இது குறித்து ஆய்வரங்கம், சென்னை பல்கலைக்கழகத் தமிழ்த் துறை ஆய்வரங் கில் அக்.28, 29, 30 தேதிகளில் நடை பெற்றது. பல்வேறு வரலற்று ஆய்வாளர்கள் பங்கேற்று நூலின் உள்ளடக்கங்களை பல்வேறு தலைப்பு களில் ஆய்வு செய்தனர். ‘சென்னை லவுகிக சங்கமும்-பெரியாரும்’ என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி 29 ஆம் தேதியன்றும், ‘தத்துவ விவேசினியில் பெண்கள் பற்றிய பார்வை’ என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் 30 ஆம்...

வடகலை-தென்கலை அய்யங்கார் பார்ப்பனர்கள் ‘குடுமிபிடி’ சண்டை

வடகலை-தென்கலை அய்யங்கார் பார்ப்பனர்கள் ‘குடுமிபிடி’ சண்டை

வைணவத்தில் வடகலை அய்யங்கார் பார்ப்பனர்களுக்கும், தென்கலை அய்யங்கார் பார்ப்பனர்களுக்கும் இடையிலான மோதல் இன்றும் தீர்ந்தபாடில்லை. கடலூர் அருகே திருவந்திபுரத்தில் உள்ளது புகழ் பெற்ற தேவநாத சாமி கோயில். பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். இக் கோயிலின் வடக்கு பிரகாரத்தையொட்டி மணவாள மாமுனிகள் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் 10 நாட்கள் உற்சவம் நடத்தப் படும். இந்த உற்சவத்தின்போது காலையிலும் மாலையிலும் மணவாள மாமுனிகள் வீதி உலா புறப்படும், அந்த உலா தேவநாத சாமி கோயிலைச் சுற்றி வரும். மாமுனிகள் வீதி உலா வரும்போது தேவநாத சாமி கோயில் பார்ப்பனர்கள் சன்னதி கதவுகளை இழுத்து மூடி உள்ளே தாழ்ப்பாள் போட்டு விடுகின்றனர். மணவாள மாமுனிகள் சாமியும் அந்த சாமியோடு வருபவர்களும் தேவநாத சாமியைப் பார்க்கக் கூடாதாம். பார்த்தால் தீட்டாம்! இப்படி ஒரு தீண்டாமை பல ஆண்டுகளாக நிலவுகிறது. மாமுனிகள் தரப்பினர் எவ்வளவோ முயன்றும் கதவு மூடப்படுவதைத்...

உள்ளத்தை உலுக்கும் இசைப்பிரியா இறுதி நாள் காட்சிகள்: இலங்கைக்கு கடும் நெருக்கடி

உள்ளத்தை உலுக்கும் இசைப்பிரியா இறுதி நாள் காட்சிகள்: இலங்கைக்கு கடும் நெருக்கடி

விடுதலைப் புலிகள் தொலைக்காட்சியின் செய்தி அறிவிப்பாளர் இசைப்பிரியாவை இலங்கை இராணுவம் நிராயுதபாணியாக பிடித்து, சித்திரவதை செய்து, பாலியல் வன்முறைக்குள்ளாக்கி கொலை செய்தக் காட்சிகளை லண்டனிலுள்ள ‘சேனல்-4’ தொலைக்காட்சி வெளியிட்டவுடன், வழக்கம்போல, ‘போலி காட்சிகள்’ என்று இலங்கை அரசு மறுத்துள்ளது. இசைப் பிரியா – போரின்போதுதான் கொல்லப்பட்டார் என்று இலங்கை அரசு சாதித்தது. இலங்கை பாதுகாப்புத் துறை வெளியிட்ட போரில் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் இசைப் பிரியா பெயரும் இடம் பெற்றிருந்தது. ‘சேனல் 4’ தொலைக்காட்சிக்காக ‘ஸ்ரீலங்கா: கொலைக் களம்’ என்ற படத்தைத் தயாரித்த லண்டன் பத்திரிகையாளரும், படத் தயாரிப்பாளருமான கல்லம் மக்ரே, இதை மறுத்துள்ளார். ‘டைம்° ஆப் இந்தியா’ நாளேடு (நவ. 2) அவரது பேட்டியை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் உண்மையானவை என்பது இலங்கை அரசுக்கே தெரியும். இன்னும் இதுபோல் பல காட்சிகள் வெளிவர இருக் கின்றன என்று அவர் கூறியுள்ளார். இதைப் படம் பிடித்தவர்களே இலங்கை இராணுவத்தினர் தான். அவைகளை...

தலையங்கம்: நேர்மையற்ற வாதங்கள்!

தலையங்கம்: நேர்மையற்ற வாதங்கள்!

இலங்கையில் நடைபெறும் ‘காமன்வெல்த்’ நாடுகளின் மாநாட்டுக்கு இந்தியா சென்று, அந்த அரசின் மனித உரிமை மீறல்களை எடுத்துச் சொல்ல வேண்டும்; அதைப் புறக்கணிப்பது தவறு என்று ஒரு வாதம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. வெளியுறவுத் துறை அதிகார வட்டாரங்கள் இதில் மிகவும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த வாதங்களில் நேர்மையோ, உண்மையோ இல்லை. காமன்வெல்த் நாடுகளின் மாநாடு இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றியோ, போர்க் குற்றங்கள் பற்றியோ பேசுவதற்காகவோ கூடவில்லை. காமன்வெல்த் நாடுகளின் பெரும் தொழில் நிறுவனங்கள் இலங்கையில் தொழில் வணிக முதலீடுகளை செய்வது குறித்து விவாதிப்பதுதான் இந்த மாநாட்டின் முதன்மையான நோக்கம். நாட்டின் தiலைவர்கள் சந்திப்பைவிட அதைத் தொடர்ந்து நடக்கும் தொழிலதிபர்களின் சந்திப்புதான் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிப்பதால் இந்தியாவுக்கு எந்தப் பின்னடைவும் ஏற்பட்டுவிடப் போவதும் இல்லை. போர்க் குற்றம் இனப்படுகொலை குற்றங்களை சுமந்து நிற்கும் ஒரு நாட்டில் காமன்வெல்த் தலைவர்கள் கூடலாமா என்பது ஒரு...

நவம்பர் 7 – ஜாதி ஆதிக்க எதிர்ப்பு நாள் : தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம்

நவம்பர் 7 – ஜாதி ஆதிக்க எதிர்ப்பு நாள் : தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம்

நவம்பர் 7 ஆம் தேதி மாவட்டத் தலைநகர்களில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழக அரசே! நத்தம் காலனி, நாயக்கன் கொட்டாய், கொண்டாம் பட்டி கிராமங்களை எரித்த குற்றவாளிகள் மீதான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்று! வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப் பட்ட கிராமங்களிலேயே சிறப்பு நீதிமன்றம் அமைத்து, கிராமங்கள் எரிப்பு, இளவரசன் கொலை உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் விசாரணை செய்! பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஏக்கர் விவசாய நிலம் வழங்கு! அப்பகுதியிலேயே அவர்களின் வாழ்வாதாரத்திற்காக தொழிற்சாலை அமைத்திடு! பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மறு வாழ்வுப் பணிகளை நிறைவேற்று! அழிக்கப்பட்ட வீடுகளை உடனடியாகக் கட்டிக் கொடு! ஜாதி வெறியைத் தூண்டி, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஊர்க் கட்டுப்பாடுகளை விதித்து வரும் ஜாதியக் கட்டப் பஞ்சாயத்துக்காரர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு! வன்முறைத் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஜாதி ஆதிக்க...

சென்னை தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம்: சேலம் சிறையில் கொளத்தூர்மணி – கழகத் தோழர்கள்

சென்னை தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம்: சேலம் சிறையில் கொளத்தூர்மணி – கழகத் தோழர்கள்

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி, சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி யிலுள்ள தபால் நிலையங்களைத் தாக்கியதாக திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் உமாபதி, மயிலைப் பகுதித் தோழர்கள் இராவணன், மனோகரன், மாரி ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120(பி) (குற்றவியல் சதி) மற்றும் பிரிவு 285 (அலட்சியமாக தீப் பொருளை கையாளுதல்) மற்றும் தமிழ்நாடு அரசின் பொதுச் சொத்தை சேதப்படுத்தும் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அடுத்த நாள் கொலை முயற்சி என்ற மற்றொரு குற்றப் பிரிவு சேர்க்கப்பட்டது. வெள்ளிக் கிழமை மாநகர ஆணையர் ஆணையின் கீழ் தேசியப் பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து இதே கோரிக்கைக்காக சேலம் வருமானவரி அலுவலக வளாகத்தில் சாக்குப் பையில் கெரசினை நனைத்து வீசினார்கள்...

மோடியின் வரலாற்று உளறல்கள்

மோடியின் வரலாற்று உளறல்கள்

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக வலம் வரும் மோடி – அவ்வப்போது கூட்டங்களில் உதிர்த்து வரும் வரலாற்று உளறல்கள் பற்றிய ஒரு தொகுப்பு: தண்டியில் காந்தி உப்பு சத்தியாகிரகம் நடத்தியபோது, இங்கே வேதாரண்யத்தில் வ.உ.சி. தலைமையில் உப்பு சத்தியாகிரகம் நடந்தது.            – திருச்சிக் கூட்டத்தில் மோடி வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்துக்கு தலைமை தாங்கியது வ.உ.சி. அல்ல; இராஜ கோபாலாச்சாரி. குப்தர் வம்சம் பற்றி நாம் நினைக்கும்போது உடனடியாக சந்திரகுப்தரின் ராஜநீதிதான் நினைவுக்கு வருகிறது.   – பாட்னா கூட்டத்தில் மோடி சந்திரகுப்தர், குப்த வம்சத்தைச் சார்ந்தவர் அல்ல; அவர் மவுரிய வம்சத்தைச் சார்ந்தவர். மாவீரன் அலெக்சாண்டர் இராணுவம், உலகத்தையே படையெடுத்து வெற்றிக் கண்டது. ஆனால், பீகார் தக்சசீலாவில் பீகாரி களால் அதே இராணுவம் தோல்வி அடைந்து ஓடியது. அதுதான் பீகாரிகள் வலிமை.     – மோடி பாட்னா பேச்சு அலெக்சாண்டர் இராணுவம் கங்கையைக் கடந்து வரவே இல்லை. பீகாரிகளால் தோற்கடிக்கப்படவும் இல்லை. தக்சசீலாவும் பீகாரில் இல்லை; அது...