பா.ஜ.க. மாறிவிட்டதா?
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றிருப்பவர் வர்ணாஸ்ரம வெறியில் ஊறிப் போன முரளி மனோகர் ஜோஜி. அவர் பத்திரிகையாளர்களிடையே தங்களின் அடிப்படைக் கொள்கைகளில் சமரசத்துக்கு இடமில்லை என்று கூறியிருக்கிறார். அயோத்தியில் ராமன் கோயிலைக் கட்டுவது; இஸ் லாம், கிறிஸ் தவர்களுக்கான மதச் சட்டங்களை ஒழித்து பொதுவான சிவில் சட்டத்தை உருவாக்குவது; காஷ்மீருக்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமையான 370 ஆவது பிரிவை ரத்து செய்வது – இந்த மூன்று கொள்கைகளும் தேர்தல் அறிக்கையில் நிச்சயமாக இடம் பெறும் என்று கூறிவிட்டார். அதேபோல், பசு பாதுகாப்பு, கங்கை நீரை தூய்மையாக்கும் திட்டம், சேது சமுத்திரத் திட்டததைக் கைவிடுவது என்பதிலும், சமரசத்துக்கு இடமில்லை என்கிறார். உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் வாக்காளர்களை ஏமாற்ற மோடி, இராமன் கோயில் பிரச்சினையை பேசாமல் தவிர்த்தாலும் ஜோஷி உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார். – இரா பெரியார் முழக்கம் 23102013 இதழ்