நீட் தேர்வை திணித்து தமிழக கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து, அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான பா.ஜ.கவின் தமிழக தலைமையகம் கமலாயத்தை முற்றுகையிடும் போராட்டம்.. நீட் தேர்வை ரத்து செய் மாணவி அனிதாவின் கொலைக்கு நீதி வழங்கு! நேரம்:மாலை 3.00 மணி நாள்:02.09.2017 திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை நீட் தேர்வினை திணித்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெறுகிறது காலை 10 மணிக்கு, கோவை இரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 4 மணிக்கு, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 3 மணிக்கு, சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை மாலை 5 மணிக்கு, மன்னார்குடி பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
காவிரிப் பிரச்சினையில் பா.ஜ.க.வின் துரோகத்தைக் கண்டித்து சென்னை மாவட்ட திரவிடர் விடுதலைக் கழகம், அக்.7ஆம் நாள் பகல் 11 மணியளவில் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தியது. கழகத் தோழர்கள் 65 பேர் கைதானார்கள். ஒரே நாள் இடைவெளியில் இந்தப் போராட்டத்துக்கான ஏற்பாடுகளை கழகத்தினர் செய்தனர். தியாகராயர் நகர், பா.ஜ.க. அலுவலகம் அருகே தோழர்கள் திரண்டனர். மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். போராட்டத்தை விளக்கி கீழ்க்கண்ட வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் நகர் முழுதும் ஒட்டப்பட்டிருந்தன. “துரோகம் செய்யாதே! பா.ஜ.க. அலுவலகம் முற்றுகைப் போராட்டம்! அன்று வழக்கைக் காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது மோடி ஆட்சி. இன்று உச்சநீதிமன்றம் வாரியம் அமைக்க ஆணை பிறப்பித்தும் ஏற்க மறுக்கிறதுஅதே மோடி ஆட்சி.” என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. பா.ஜ.க.வின் துரோகங்களை அம்பலப்படுத்தும் பதாகைகளை ஏந்தி தோழர்கள் முழக்கமிட்டனர். பா.ஜ.க. அலுவலகம்...
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என கூறி தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் மதவாத பா.ஜ.க வை கண்டித்து முற்றுகையிட்ட கழக தோழர்கள் 54 பேர் கைது ! 07.10.2016 காலை மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி தலைமையில் பாஜகவை கண்டித்து முழக்கமிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தமிழக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற கழக தோழர்கள் கைது செய்யப்பட்டனர். கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், மாவட்ட செயலாளர் உமாபதி,தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார்,காஞ்சீபுரம் ரவிபாரதி,மாவட்ட பொறுப்பாளர்கள் வேழவேந்தன்,ஏசுகுமார், பிரகாசு உள்ளிட்ட தோழர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழர்க்கு எதிரான பா.ஜ.க வின் போக்கை கண்டித்து சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில். உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க ஆணை பிறப்பித்தும், அதை மதிக்காமல் ஏற்க மறுக்கும் மத்திய பா ஜ க அரசை கண்டித்து சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகம் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக முற்றுகைப் போராட்டம் . தமிழக விவசாய் மக்களை விட கர்நாடக தேர்தலையே முக்கியமாக கருதும் மதவாக பாஜக அரசை கண்டித்து சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமையில் நடைபெறும் முற்றுகை போராட்டத்திற்கு தோழர்கள் தவறாமல் கலந்துக்கொண்டு மதவாத பாஜக விற்கு எதிரான பதிவை வலுப்படுத்த வேண்டும் . திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்