Tagged: படத்திறப்பு

மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட #எழுத்தாளர் கவுரி லங்கேஷ் நினைவேந்தல் படத்திறப்பு சென்னை 17092017

மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட #எழுத்தாளர் கவுரி லங்கேஷ் நினைவேந்தல் படத்திறப்பு நாள் : 17.09.2017, ஞாயிற்றுக்கிழமை, மாலை 6 மணிக்கு. இடம் : திராவிடர் விடுதலைக் கழகம், தலைமை அலுவலகம், மயிலாப்பூர், சென்னை – 04 கண்டன உரை : #தோழர் விடுதலை க இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக தோழர் செந்தில் இளந்தமிழகம் தோழர் பிரவீன் மே 17 இயக்கம் தோழர் செல்வி மனிதி கோழையே உன்னிடம் தோட்டாக்கள்… என்னிடம் அழியா வார்த்தைகள்… எதற்கும் அஞ்ச மாட்டேன்…நான் #கவுரி_லங்கேஷ் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

படத் திறப்பு படையலுக்கு அல்ல; பாடம் கற்க!

படத் திறப்பு படையலுக்கு அல்ல; பாடம் கற்க!

“படத் திறப்பு படையலுக்கு அல்ல; பாடம் கற்க” என்று தோழர் ‘ஏ.ஜி.கே’ வின் முழக்கத்தை முன் வைத்து அவரது படத்திறப்பு நிகழ்ச்சி செப்டம்பர் 4ஆம் தேதி பகல் 11 மணியளவில் அவரது சொந்த கிராமமான நாகை அந்தணப் பேட்டையில் நடந்தது. முன்னதாக அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த நினை விடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது. தோழர் ஏ.ஜி.கே. எனும் அ.கோ. கஸ்தூரிரங்கன் படத்தை தோழர் தியாகு திறந்து வைத்தார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், தோழர் மணியரசன் மற்றும் பல்வேறு இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள், முடிவெய்திய தோழர் ‘ஏ.ஜி.கே.’ அர்ப்பணிப்பு, போர்க் குணம், மனித நேயம், போராட்ட வடிவங்கள், கீழத் தஞ்சை மாவட்டத்தில் ஜாதி – பண்ணையடிமை ஆதிக்கத்தை ஒழிப்பதில் ஆற்றிய பங்களிப்பு குறித்து விரிவாகப் பேசினர். ஏ.ஜி.கே. அவர்களின் மகள் வழக்கறிஞர் கல்பனா நன்றி கூறினார். மன்னை காளிதாசு, மயிலாடுதுறை இளையராசா, சாக்கோட்டை...

தோழர் மாதவன் இல்லம் படத்திறப்பு நிழற்படங்கள்

படத்திறப்பு ! திருப்பூர் மாஸ்கோ நகர் மாதவன் அவர்களின் மறைந்த தந்தையார் படம் கழக தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. திருப்பூர் கழக தோழர்கள் மாஸ்கோ நகர் மாதவன், நாகராஜ் அவர்களின் தந்தையார் திரு.சின்னராசு அவர்கள் கடந்த 27.03.2016 அன்று முடிவெய்தினார். மறைந்த திரு.சின்னராசு அவர்களின் படத்திறப்பு 03.04.2016 அன்று மாலை சாமுண்டி நகரில் உள்ள தோழர் மாதவன் இல்லத்தில் நடைபெற்றது. அன்னாரின் படத்தை கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்தார். இப்படத்திறப்பு நிகழ்வில் கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன்,அமைப்புச் செயலாளர் தோழர் ரத்தினசாமி,பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி,மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு, மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி,மாநகர செயலாளர் தோழர் நீதிராசன்,தோழர் அகிலன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை சதாசிவம் படத்திறப்பு

பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை சதாசிவம் படத்திறப்பு

‘சமத்துவ சமூகம் அமைப்பதற்கு பெரியாரியல் ஒன்றே தீர்வு’ என வாழ்ந்து காட்டியவர் பட்டுக்கோட்டை வளவன் என்கிற சதாசிவம் என்று படத்திறப்பில் தூத்துக்குடி பால்பிரபாகரன் குறிப்பிட்டார். பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை வளவன் என்கிற சதாசிவம் அய்யா அவர்களின் படதிறப்பு நிகழ்ச்சி பேராவூரணி ‘மெய்ச்சுடர்’ இதழ் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருக்குறள் பேரவை தலைவர் தங்கவேலனார் தலைமை வகித்து உரையாற்றினார். திராவிடர் விடுதலைக்கழக தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், ‘மெய்ச்சுடர்’ இதழ் ஆசிரியர் வெங்கடேசன், இசிஐ ஆயர் ஜேம்°, தமிழக மக்கள் புரட்சிக்கழக பொதுச் செயலாளர் ஆறு. நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் பெருந்தொண்டர் சதாசிவம், படத்தினை திராவிடர் விடுதலைக்கழக பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் திறந்து வைத்து நினைவஞ்சலி உரையாற்றினார். அவர் தனது உரையில், “பட்டுக்கோட்டை வளவன் அய்யா அவர்கள் திருக்குறள் மீது ஆழ்ந்த பற்றுதல் கொண்டவராகத்தான் இருந்தார். அந்த திருக்குறள் போதித்த சமத்துவ சமூகம் அமைவதற்கு பெரியாரியல் ஒன்றே...